Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணுவ பயிற்சியொன்றின் போதே இராணுவ வீரர் உயிரிழந்தார் என்றும் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கையின் நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு வீரரே இவ்வாறு உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/106672-2014-04-1…

  2. குமரன் பத்மநாதன் மற்றும் அண்மையில் நந்தகோபன் போன்ற புற தலைவர்களை கைது செய்தது எமக்கு கிடைத்த மிகப்பெரியதொரு வெற்றி. அதேபோல் இலங்கைக்கு எதிராக 15 அமைப்புகளையும் 425 உறுப்பினர்களையும் தடை விதித்து இலங்கையில் அவர்களின் செயற்பாட்டினை கட்டுப்படுத்தியமை அரசாங்கத்தின் சிறந்ததொரு செயற்பாடாகும் என ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேசத்தின் செயற்பாடுகளை மிக மோசமாகவும் எம்மை அழிக்கும் வகையிலும் அமையப் பெற்றுள்ளன. சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் இயங்குவதே இதற்கு பிரதான காரணமாகும். எனினும் சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்து தீவிரவாதிகளுக்கு ப…

  3. இலங்கையை கண்டித்து பிரிட்டனில் இன்னொரு அறிக்கை news 2013ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் கவலை தரும் விதத்திலேயே அமைந்திருந்தது என்று பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை சாடியிருக்கின்றது. சர்வதேச அரங்கில் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்தம் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், அக்கறைக்குரிய நாடு சிறிலங்கா என்ற தலைப்பில் இலங்கையில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மீறல்கள் குறித்து தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ""வடக்கில் தேர்தலை நடத்தியமை, உட்கட்டுமானங்களை மீள உருவாக்குதல் போன்று போருக்குப் பின்னரான விவகாரங்களில் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் பல விடயங்களிலும் ஒட்டு மொத்தப் பார்வை…

    • 1 reply
    • 632 views
  4. அண்ணன் வழியில் தம்பியும் புகுந்தார்:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியர் வி.எஸ். சிவகரன் என்பவருக்கு வடமாகாண சபை உறுப்பினர்; றிப்கான் பதியூதீன் இன்று (10) மாலை அலுவலகத்திற்கு சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக புதியவன் ஆசிரியர்; இன்று மாலை 5.30 மணியளவில் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். மன்னார் பிரதான வீதி சின்னக்கடை என்ற முகவரியில் புதியவன் நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த பத்திரிகையில் நேற்று(09) புதன்கிழமை காணி அபகரிப்பு தொடர்பான எவருடைய பெயரும் குறிப்பிடாமல் ஆதாரபூர்வமான செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. குறித்த செய்தி தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் …

  5. தமிழ்க் கூட்டமைப்பை தடைசெய்து சுரேஸ், சுமந்திரன், அனந்தியை கைது செய்ய வேண்டும்: ஹெல உறுமய மகிந்தவிடம் கோரிக்கை ஏப் 11, 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக சிறிலங்காவில் தடை செய்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி சுமந்திரன், எழிலனின் மனைவி அனந்தி ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்திருக்கின்றது. உருத்திரகுமாரையும் நெடியவனையும் விநாயகத்தையும் அடேல் பாலசிங்கத்தையும் உயிருடனோ பிணமாகவோ சிறிலங்காவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இந்தக் கட்சி அரசாங்கத்தைக் கோரியுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கின்ற மேற்படி ஜாதிக ஹெல உறுமய கட்சி தொடர்ந்து இன…

  6. வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் வறுமை நீடித்து வருகின்றது – பிரித்தானியா 11 ஏப்ரல் 2014 வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் வறுமை நீடித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மிலேனிய அபிவிருத்தி இலக்குகளில் பலவை பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும், வறுமை நீடித்து வருவதாக பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அலன் டொன்கன் (Alan Duncan) தெரிவித்துள்ளார். பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கில் வறுமை நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏனைய மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  7. சந்திரிகா மீது பிரசாரப்போர் தொடுக்க அமைச்சர்களைப் பணித்தார் மகிந்த! – மீள்அரசியல் பிரவேசம் குறித்து கலக்கம். [Thursday, 2014-04-10 21:03:35] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு எதிராக ஊடகங்கள் மூலம் தாக்குதல்களை தொடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தனக்கு நெருக்கமான அமைச்சர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகைக்கு வரவழைத்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் அரசியலுக்கு வரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதனால் குழப்படைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைச்சர்களான திலான் பெரேரா, மேர்வி…

  8. தடைப் பட்டியலில் இடம்பிடித்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது உறுதி! - பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிப்பு. [Friday, 2014-04-11 08:00:24] தடை செய்யப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் தாங்கள் நிரபராதி என கருதும் பட்சத்தில் சட்ட திட்டத்திற்கமைய உச்ச நீதிமன்றத்திற்கூடாக தமது நியாயங்களை நிரூபிப்பதன் மூலம் பட்டியலிலிருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்…

  9. (ஆதவன்) நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச்சம்பவத்தையடுத்து பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு வருகைதந்திருந்தனர். தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதில் பொலிஸாரினால் திருடர்கள் கொண்டு வந்த தாக மதுபான டின் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும் 1…

  10. வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தகவல்களை இலங்கைப் பாதுகாப்பு தரப்பு மறைத்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன. கைதான குறித்த பெண் போராளிகளுள் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாக இருந்தவரென தெரியவருகின்றது. இலங்கை அரசு இன்று (10.04.14) அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் இந்தப் போராளிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதுடைய சசிகரன் தவமலர் 16 வயது…

  11. யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்:- யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக குறித்த தொழில்நுட்பக் கல்லூரி அதிபரே மாணவர்களை பொறியினுள் தள்ளிவிடும் கைங்கரியத்தில் ஈடுபடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு கல்லூரி தரப்புகள் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்கல்லூரிப் பணிப்…

    • 2 replies
    • 490 views
  12. தமிழர்களைப் பார்த்து சிறீலங்கா மீண்டும் அச்சப்படத் தொடங்கியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் மீதிருந்த அதன் பயம் மெல்ல மெல்ல அகன்றுவர, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீதான அதன் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிட்டால், இலங்கைத் தீவை சிங்கள - பௌத்த மயமாக்கும் தனது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றிவிடலாம் என்று கனவுகண்ட ‘மகாவம்சச் சிந்தனை’வாதிகளுக்கு, அவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வலுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுந்துவருவது அச்சத்தைக் கொடுக்கின்றது. உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூத மக்கள் எவ்வாறு தமக்கான பலத்தைத் திட்டமிட்ட ரீதியில் ஒன்றுசேர்த்து இஸ்ரேல் என்ற தேசத்தைக் கட்டியெழுப்பினார்களோ, நாளை அதேபோன்று புலம்பெயர்ந்த தேசங்…

    • 2 replies
    • 615 views
  13. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். அவரை போன்று சேவை செய்வதற்கு நாங்கள் ஆசைப்படுகின்றோம். சிங்கள பகுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு முதலில் பேசுவது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றிதான் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்கள் இணைந்து வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்த திவிநெகும புத்தாண்டு சந்தையை, மத்தியமுகாம் பாமடியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுக…

  14. வவுனியாவை சிங்கள மயமாக்கும் நடவடிக்கை தொடர்கிறது- விஜயலட்சுமியின் அனுமதியுடன் று.மு.குமார பதவியேற்பு வவுனியா மாவட்டத்தினை முற்று முழுதாக சிங்கள மயமாக்கும் மஹிந்த அரசின் நடவடிக்கையின் ஓர் அங்கமாக வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமியின் அனுமதிக்கடிதத்துடன் சிங்களவரான று.மு.குமார என்பவர் இன்று பதவியை ஏற்றிருப்பதாக வவுனியா உள்ளுராட்சித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் காணி மற்றும் வனத் துறைகளைக் கையாளும் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரிகளில் பெருமளவானவர்கள் சிங்களவர்களாகவே தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக அரச அதிபர் மற்றும் காணி அதிகாரிகளாகவும் சிங்களவர்…

    • 0 replies
    • 479 views
  15. பயங்கவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கோபியின் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி கடந்த மாதம் திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கர்ப்பிணியான அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள…

    • 0 replies
    • 450 views
  16. மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/106472-2014-04-10-02-35-29.html

  17. மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடற் பாகங்கள் அகற்றப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். உடற்பாகங்கள் அகற்றப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். எவ்வாறாயினும், மேற்படி குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டி…

  18. இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள், நீதிமன்றங்கள் ஊடாகத் தமக்கெதிரான தடைக்கு சவால் விடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு. அண்மையில் இலங்கை அரசு 16 புலம்பெயர் அமைப்புகளையும், 424 தனிநபர்களையும் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதுடன், தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. ""2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னணியிலேயே குறித்த தடைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி, நீதிமன்றத்தி…

  19. கிழக்கிலும் புலம்பெயர்ந்தோர் விபரங்களை திரட்டும் பணியில் அரசு தீவிரம்: அரியநேந்திரன் எம்.பி குற்றஞ்சாட்டு [Thursday, 2014-04-10 10:48:11] புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அரியநேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது பற்றி மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கிலிருந்து 1983ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்கள் யார் என்ற விபரங்களைத் திரட்டி மீண்டுமொரு தடைப்பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்களின் ஊடாக புலம்பெயர்ந்தோரின் குடும்ப வ…

  20. இன அழிப்புகளுக்கு பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள்! தினமணியின் ஆசிரியர் தலையங்கம் [Thursday, 2014-04-10 10:41:55] இலங்கையில் நடைபெறும் இன அழிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாத இன அழிப்பு முயற்சி மியான்மரிலும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இலங்கையில் சிறுபான்மை இந்துக்கள், மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள். இதுதான் வித்தியாசம். இந்த இன அழிப்புகளுக்குப் பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள். என்ன அநியாயம் இது... பக்கத்து வீடு பற்றி எரியும்போது நாம் மட்டும் நிம்மதியாகத் தூங்க முடியுமா? இந்தியாவின் துரதிர்ஷ்டம், நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலுமே உள்நாட்டுப் பிரச்சினைகள். பிரதமர் மன்மோகன் …

  21. முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் கண் தொடர்­பான பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்: வைத்­திய கலா­நிதி சி.சிவ­மோகன் தெரிவிப்பு [Thursday, 2014-04-10 10:41:26] போருக்குப் பின்னர் முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் கண் தொடர்­பான பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இதே­ போல்­ போ­திய அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழு­கின்ற இப்­பி­ர­தேச மக்கள் தமது அடிப்­படைத் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு மிக நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்­டிய நிர்க்­க­தி­யான நிலைக்குத் தள்­ளப்பட்டுள்­ள­­னரென வட­மா­காண சபை உறுப்­பினர் வைத்­திய கலா­நிதி சி.சிவ­மோகன் தெரி­வித்தார். கடந்த 2009ஆம் வருடம் இலங்கை அரச படை­களின் துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு இலக்­காகி புதுக்­…

  22. தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ஐவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிபிசியில் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் இலங்கையில் பெண்கள் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர்,மார்ச் மாதம் மேலும் இரு பெண்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெண்கள் அமைப்பு க…

  23. தமிழர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட 65 பேரும் விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டி எழுப்ப முனைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 1கைது செய்யப்பட்ட 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வெளிநாட்டு பணம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=449732860610520764

  24. கிழக்கில் விடுதலைப் புலிகளாம் - ஒரு இலட்சம் ரூபா சன்மானத்தோடு சுவரொட்டிகள்! [Thursday, 2014-04-10 11:42:21] கிழக்கில் விடுதலைப் புலிகள், சன்மானத்தோடு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தேடப்படுவதாக பரபரப்பு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச் சுவரொட்டியில் தேடப்படுபவர்களை காட்டிக்கொடுத்தால் ஒரு இலட்சம் ரூபா சன்மானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.. 1 கோபி இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்றழைக்கப்படுவதுடன் வயது 31. 06.அடி உயரமுடைய பொது நிற தோற்றத்தையும் கொண்டவர். இவரது முகத்தில் இடதுபக…

  25. வடமாகாணசபையால் ஒன்றும் செய்யமுடியவில்லை: அல்ஜெசீரா குழுவினரிடம் ரவிகரன் தெரிவிப்பு [Thursday, 2014-04-10 11:09:26] கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல் ஃகொப்கின்ஸ் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார். கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில் அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தினால் வெளியிடப்படும் எனவும் அறிய முடிகிறது. காணிப்பிரச்சினை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை பெறவந்த அல்ஜெசீரா தொலைக்காட்சி பணிப்பாளர்கள் முல்லைத்தீவு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.