Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா வெகு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இதன்போது விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன. இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண,எஸ்.கே.பிரசாத்) http://tamil.dailymirror.lk/--main/103428-2014-03-16-09-53-23.html

  2. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது தீர்மான வரைவில் சில சொற்பதங்கள் வலிமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருத்தப்பட்ட தனது இரண்டாவது தீர்மான வரைவை வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது. நாம் வலியுறுத்தியமைக்கு அமைவாக இந்த வரைவில் பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன. அனைத்துலக விசாரணையை அமெரிக்கா தட்டிக் கழிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தோம். அத்துடன், சிறிலங்கா அரசை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த சொற்பதங்கள் தற்பொழுது மாற்றப்ப…

  3. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு ஆதரவு திரட்டுவது மற்றும், தீர்மான வரைவு வாசகங்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, அமெரிக்கத் தூதுவர், மிச்சேல் ஜே சிசன், வொசிங்டனிலுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்ததுடன், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பல்வேறு நாடுகளின் பி…

  4. மீண்டும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா : சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடி! [saturday, 2014-03-15 09:41:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக ஊடகங்களின் கவனத்தில் சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. அனைத்துலக ஊடகங்களின் செய்தி வழங்கியான ஏபி(AP) மற்றும் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஆகியன செய்தி வெளியிட்டுள்ளன. 14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் சிறிலங்கா படையினால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIREஎனும் அனைத்துலக செய்திவழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றிருந்தது. …

  5. காணாமல் போன தனது அண்ணனை தேடி ஆர்ப்பட்டம் செய்து வந்த விபூசிக்கா பாலேந்திரா என்ற சிறுமியையும், அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திராவையும் கைது செய்து இலங்கை அரசு பாவச்சாதனை படைத்துள்ளது. இவர்களது கைது மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும், இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவிலை. கடந்த வருடம் அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொனும், வடக்குக்கு சென்ற போது அங்கு நடைபெற்ற காணாமல் போனோரது குடும்ப அங்கத்தர்களின் ஆர்ப்பாட்டங்களில் சிறுமி விபூசிக்காவும், அவரது தாயாரும் பிரதான பங்கு வகித்திருந்தனர். இதை தொடர்ந்து தன்னை மர்…

  6. அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தின் வலு குறைக்கப்பட்டுள்ளதா? 16 மார்ச் 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் வலு குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத நம்பிக்கைக்கு எதிரான ஒடுக்குமுறை என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவமயப்படுத்தலை நிறுத்தும் சொல்லுக்கு பதிலாக காணிப் பயன்பாடு மற்றும் காணி உரிமை என்ற வசனமும் சேர்க்கப்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த உத்தேச ஆவணமொன்று முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த 14ம் திகதி மேலும் சில திருத்தங்களுடன் உத்தேச ஆவணமொன்று வெளியிடப்பட்டுள்ளது.…

  7. இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் – அரசாங்கம் 16 மார்ச் 2014 இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் நபர்கள் தண்டிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரு தரப்பு மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் 25ம் திகதி இந்தப் பேச்சுவார்த்த…

  8. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் நடவடிக்கைகளே வெளிநாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக் காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னரே வெளிநாட்டுப் படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் படையினர் முகாமிற்குள் அடைபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளினாலேயே ஹெலிகொப்டரில் பருப்பு போன்ற பொருட்கள் போட நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை முடக்குவதற்கு பல்வேறு வழிகளில் முயற்ச…

  9. கடுவலை, ஜயந்திபுரத்தில் அதிவேகநெடுஞ்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் பாலத்தில் திருத்தவேலைகளை மேற்கொண்டிருந்தவர்கள் மீது அந்த கொங்கிறீட் பாலம் உடைந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103278-2014-03-14-15-11-09.html

  10. அண்மையில் வெளியான சணல் 4 இன் புதிய போர்க்குற்ற ஆதார காணொளியில் வரும் ஒரு சிப்பாயின் பெயரை லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் அடையாள்ம் காட்டியிருக்கிறது. இந்த காணொளி கஞ்சிக்குடிச்சியாறுப் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒரு பிரிவினரால் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமெராவிற்கு மிக அருகில் வந்து முகத்தைக் காட்டும் சிப்பயின் பெயர் பண்டார என்று கூறுவதுடன் அவனது விசேட் அதிரடிப்படை பயிற்சி விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது. இவனைப் போன்றே இப்படத்திலுள்ள ஏனையோரின் பெயர்களும் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் கூட, ராணுவப் பேச்சாளரின் " இது புனையப்பட்ட வீடியோ" என்று அசட்டுத்தனத்துடன் பொய்களைக்க் கூறுவதற்குப் பதிலடியாகவே தாம் இந்த ஒருவனது தகவல்களை மட…

  11. (2ம் இணைப்பு) காணாமல் போனோர்களுக்காக போராடியவர்களும் கடத்தப்பட்டமைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 15.03.2014 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரோன் அவர்களினது வாசல்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று 15.03.2014 மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடரும் இனஅழிப்பின், தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப்ப…

  12. காலிக்கும் மாத்தறைக்குமிடையிலான அதிவேக நெடுஞ்சாலை 30 கிலோ மீற்றர் நீளமுடைய 4 வழிப் பாதை கொண்டது. இந்த அதிவேக நெடுஞ்சாலையினூடாக மணிக்கு 100 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்க முடியும். பின்னதுவ இமடுவ கொக்மடுவ மற்றும் கொடகம ஆகிய பிரதேசங்களில் நுழைவாயிலைக் கொண்டுள்ள இந்நெடுஞ்சாலை 178 மீற்றர் நீளமான பாலத்தையும் கொண்டுள்ளது. கொட்டாவை முதல் கொடகமை வரையிலான தூரத்தை ஒரு மணி 20 நிமிடத்தில் பயணிக்க முடியுமென அமைச்சு குறிப்பிடுகிறது. இத்தூரத்தை சாதாரண பாதையினூடாக சென்றடைவதற்கு 4 மணித்தியாலம் எடுக்குமென சுட்டிக்காட்டும் அமைச்சு அம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் அமைச்சு குறிப்பிடுகிறது. இ…

  13. -ற.றஜீவன் யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் 16 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று இன்று (15) அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீன் திமிங்கல வகையினைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். மேற்படி மீனினை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவு பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர். அத்துடன், குறித்த மீனினை பாகங்களாக வெட்டி புதைப்பதற்கான நடவடிக்கையில் இன்பருட்டி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/--main/103316-2014-03-15-10-08-31.html

  14. திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள அபகரிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு, அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள ஒரு அபகரிப்பு தொடர்பானது கீழ் விவரிக்கப்பட்டுள்ள குற்றச்செயலை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த கிராமம் ஒன்றதான திரியாயில் அமையப் பெற்றுள்ள பிள்ளையார் கணபதி கோயில் மிகவும் புராதனமான ஒரு இந்து ஆலயமாகும். இக்கிராமத்தை விட்டு வெளியேறியோர் மீண்டும்…

  15. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104286/language/ta-IN/------.aspx#.UyO0sLx2xFU.facebook 12 வது நிமிடத்தில் அனந்தியின் உரை!!!ஐநாவின் ஐ.நா மனிதஉரிமை அவையில் அனந்தி சசிதரனின் இரண்டு உரைகள் சர்வதேச பிரதிநிதிகளின் மனதை தொட்டன:-

  16. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் மக்கள் 'துஆ' பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டுமென சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதியமைச்சர் அப்துல்காதர் ஜெனீவா மாநாடு தொடர்பாக முஸ்லிம்களுக்காக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்கள் அதிகாரத்திலுள்ள அரசுக்கும் நாட்டின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று புனித குர்ஆன் கூறுகிறது. எனவே நாட்டில் இனரீதியான பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் முஸ்லிம்கள் காரணமாக இருக்கக்கூடாது. நாம…

    • 10 replies
    • 889 views
  17. "உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள். "உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பே…

  18. எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி (பெரிய பிக்கு) வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரரை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே விஹாரையை சேர்ந்த மற்றொரு தேரரை (சின்ன பிக்கு) கைது செய்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸாரே குறித்த தேரரை விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேகநபரையும் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த தேரர் எல்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/103304-2014-03-15-08-44-26.html

  19. கைது செய்யப்பட்டுள்ள தாயையும் மகளையும் விடுவிக்க போராடும் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்புக்கள் ஆதரவு [saturday, 2014-03-15 10:57:29] கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவமும் பொலிசாரும் இணைந்து பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா (வயது 13) ஆகியோரது விடுதலையை நோக்கி நேற்று முற்றுகைக்குள் உள்வாங்கப்பட்டத்தில் இருந்து இராஜதந்திர ரீதியாகவும் உள்நாட்டு சட்ட ரீதியான நடவடிக்கை ரீதியாகவும் ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கி அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு ஐரோப்பிய மனித உரிமை அமைப்புக்களும் இராஜ தந்திரிகளும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். …

  20. காணாமல் போனோர்களுக்காக போராடியவர்களும் கடத்தப்பட்டனர்: - யேர்மனி , பேர்லினில் கவனயீர்ப்பு [saturday, 2014-03-15 10:17:09] சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் யேர்மனி பேர்லின் நகரில் எதிர்வரும் திங்கள் கிழமை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. தொடரும் இனஅழிப்பின் , தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப்போனார்கள் விபுசிகாவும் அவளது அம்மாவும்... இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். http://www.seithy.com/breifNews.php?newsID=105711&c…

  21. கடத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக் கோரி - ரொறன்ரோவில் இன்று கவனயீர்ப்பு பேரணி! [saturday, 2014-03-15 09:55:12] தனது சகோதரனை தேடி தினமும் அழுது கொண்ருக்கும் சிறுமி விபுசிக்காவையும் அவரது தாயையும் கடத்தி கைது செய்துதுள்ளது இன அழிப்பு அரசு. கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் வைத்து சிறீலங்காப் அரச படைகளால் நேற்றிரவு கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி (வயது 50) மற்றும் அவரது மகள் விபூசிகா (வயது 13) ஆகியோரை விடுதலை செய்யக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று 15/03/2014 மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை இலக்கம் 36 Eglinton Ave West (Yonge/Eglinton) இல் அமைந்துள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன்னால் நடைபெறவுள்ளது. …

  22. அடுத்த அரசாங்க குழு லலித் வீரதுங்க தலைமையில் ஜெனிவா செல்கிறது! [saturday, 2014-03-15 10:02:09] ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய உறுப்புரிமை நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பர். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட உத்தேச வரைபின் கேள்வி நேரம் இம்மாதம் …

  23. ஜெனிவா சென்றுள்ள அரச குழுவுக்குள் முரண்பாடு! – இவர்களா நாட்டைக் காப்பாற்றுவர் என்கிறது ஐதேக. [saturday, 2014-03-15 09:10:37] ஜெனிவாவுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசும், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் ஒருவருடன் மற்றவர் பேசிக் கொள்ளாத நிலையில், அவர்களால் எப்படி நாட்டை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல. “ அமைச்சர் பீரிஸ் ஜெனீவா சென்று பொய்யுரைத்துள்ளார். வெலிவேரிய சம்பவம் குறித்த கேள்விக்கு அவர், வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் தொடர்பான போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் போது கலகம் ஏற்படுவதனை தடுக்க இராணுவத்தை அனுப்பி வைத்தோம். இராணுத்தின் தன்னியக்க துப்பாக்கிகளை சிலர்…

  24. லண்டனில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் [saturday, 2014-03-15 09:06:47] சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 15.03.2014 இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு லண்டன் 10 DOWNING STREETல் நடைபெறவுள்ளது. இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு அழைக்கின்றார்கள் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். தொடர்புகளுக்கு :தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா. Mother & child arrested by Sri Lankan military for meeting David Cameron when he visited Jaffna. MASS RALLY outside 10 Downing St, Saturday 15th,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.