ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 15 JUL, 2024 | 04:54 PM மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று திங்கட்கிழமை (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது. இதன்போது பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரையின் உருவப்படம் எரிக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ ஹட்டன் வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சுமார் மூன்று மணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு,பொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் வர்த்…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
15 JUL, 2024 | 12:06 PM தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று கலந்துரையாடியுள்ளார். மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்துக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். மன்னாரில் சஜித் - செல்வம் விசேட கலந்துரையாடல் | Virakesari.lk
-
- 0 replies
- 275 views
-
-
Published By: RAJEEBAN 15 JUL, 2024 | 04:39 PM இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் என இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும் எனவும் அந்த குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பிட்ட குழுவினர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய மக்கள் சக்தி என்பது 2022 ம் ஆண்டு மக்கள் போராட்டம் மூலம் வெளிப்பட்ட மக்கள் அபிலாசைகளுடன் தொடர்புபட்ட பிரதான இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்ற…
-
- 0 replies
- 135 views
-
-
15 JUL, 2024 | 11:36 AM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188483
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
15 JUL, 2024 | 10:57 AM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஆதரவாகவே நான் செயற்பட்டுள்ளேன். பொதுஜன பெரமுனவின் ஆதரவினால் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் கைகோர்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சி உறுப்புரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவேன். மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்க நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:25 PM (இராஜதுரை ஹஷான்) எவருக்கும் பயமில்லை, கடனில்லை என்று அரசியல் மேடைகளில் குறிப்பிடுபவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை மறந்து விட்டார்கள். தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முயற்சிப்பது பிறிதொரு விளைவுக்கான ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பதுளை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற புதிய கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, தவறான அரசியல் தீர்மானங்களினால் …
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 04:44 PM (ஆர்.ராம்) கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பதற்கு அவகாசமில்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அதாவது, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ள நிலையில் அவரால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது குறித்து சிந்திப்பதற்கான அவகாசமற்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொ…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடச…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 12:24 PM ஆர்.ராம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் உங்களுடைய நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை மையப்படுத்தி இனப்பிரச்சினைக்காள தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினை இந்தியா அழுத்தமளிக்க வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரியுள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இந்திய …
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இன்னும் தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு “இறுதி அறிவிப்பை” விடுத்துள்ளது. ஆணைக்குழு பாராளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றையதினம் (13.07.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறுகையில், "நாட்டில் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன. இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை. காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை. பொருளாதார முன்னேற்றம் மாறாக மக்கள் மீ…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை! ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்…
-
- 0 replies
- 171 views
-
-
02 JUL, 2024 | 12:46 PM யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://ww…
-
-
- 50 replies
- 3.8k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு! தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ம் மதியம் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/13921…
-
- 0 replies
- 273 views
-
-
13 JUL, 2024 | 05:22 PM (நா.தனுஜா) நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே அமைந்திருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கல், 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவரும் அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் க…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:49 AM மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்கள் என கூறப்படும் புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் போன்றவர்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் செலவுகளையும் அலைச்சல்களையும் குறைப்பதற்காக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று முன்னெடுக்கப்பட்டு வந்த சிகிச்சை நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இறுதி நிலை நோயாளர்களாக இருப்பவர்களை வைத்தியசாலைகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களும் கிளினிக் போன்ற செயற்பாடுகளுக்கு …
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:51 AM (நா.தனுஜா) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை அமெரிக்கத்தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மெத்தியூ ஹின்ஸன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருக்கும் நிலையில், இன்னமும் பதிலுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான தமது உடன்நிற்பை இது வெளிப்படுத்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலையீட்டுடன் நிதி ஒதுக்கப்பட்டதை அடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த மற்றும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன் …
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
14 JUL, 2024 | 09:56 AM அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பகுதியில் 10 போத்தல்கள் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று(13.07.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கை இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன் , கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணொரவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 06:06 PM தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், "எங்கே எங்கே உறவுகள் எங்கே", "கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே" என்று கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/188381
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 JUL, 2024 | 02:03 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர…
-
-
- 76 replies
- 5.9k views
- 1 follower
-
-
வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம் - ஜனா
-
- 0 replies
- 158 views
-
-
வெளிநாட்டவர்களுக்கான விசா விநியோகத்தில் சிக்கல் – ஹர்ஷ டி சில்வா! வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதால், விலைமனுக்கோரல் விடயத்தினை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரச நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச நிதி தொடர்பான குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆனால் அந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஜி.பி.எஸ…
-
- 1 reply
- 213 views
-
-
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெ…
-
-
- 1 reply
- 257 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 07:42 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த …
-
-
- 2 replies
- 315 views
- 1 follower
-