ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
Published By: VISHNU 12 JUL, 2024 | 01:51 AM (நா.தனுஜா) காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதே வேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தின் அழைப்பின்பேரில் தூதுவர் ஜுலி சங்குக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (11) மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் அதன் தவிசாளர் சட்டத்தரணி மக…
-
-
- 2 replies
- 360 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 11:51 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வந்து, இரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/188277
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 01:00 PM பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செ…
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் (Kilinochchi) 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டு நீர்பாசனமுறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுவரை காலமும் இறைப்பு முறை மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மரக்கறிச் செய்கை இதனையடுத்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைமை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 07:42 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த …
-
-
- 2 replies
- 315 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 11 JUL, 2024 | 03:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பு தொடர்பில் ரணில், வஜிர, ரங்கே பண்டார ஆகியோரால் பொருள் கோடல் செய்ய முடியாது. உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாகுவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார். பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய …
-
- 2 replies
- 455 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு ஏ-9 வீதியில் விபத்து : ஒருவர் பலி ; மூவர் படுகாயம்! 11 JUL, 2024 | 12:16 PM முல்லைத்தீவு ஏ9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹை-ஏஸ் ரக வாகனமானது முன்னே சென்றுகொண்டிருந்த பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
11 JUL, 2024 | 11:37 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.ஏ.பி.சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றது. வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.லக்மல…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 JUL, 2024 | 10:36 AM சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன. காற்றாலை மின்உற்பத்தி திட்டம் தொடர்பான இடம்குறித்து எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சக வட்டாரங்கள் சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் தயார் என குறிப்பிட்டுள்ளன. மன்னார் பூநகரியில் உருவாகவுள்ள அதா…
-
-
- 4 replies
- 553 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 02:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. நான் முகநூல் வீரனல்ல,செயல் வீரன்.முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!! மாவை சேனாதிராசா தெரிவிப்பு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படுவதற்குச் செல்வம் அடைக்கலநாதன் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனத்தாம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வழமைபோன்று நாடாளுமன்றக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் எந்த வகையிலும் பிரிவுக்கும், குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில்…
-
- 5 replies
- 689 views
-
-
Published By: VISHNU 10 JUL, 2024 | 10:56 PM தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார். காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய - ஆரியவன்ச சத்தம…
-
-
- 3 replies
- 306 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல், இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அதிபர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்க…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மற்றுமொரு ‘அறகலய’வின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், பாராளுமன்ற வளாகத்தை எரிப்பதில் முடிவடையக்கூடிய நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் தொடக்கமாக இருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார். “வேலைநிறுத்தம் செய்பவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் ஊதிய உயர்வைச் சந்திக்க நிதியை உருவாக்க, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன…
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 04:03 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்மொழிவுக்கு அமைய நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய இந்த பெண்நோயியல் வைத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை கட்டட தொகுதியானது போதிய ஆளணி வளம் இன்மையால் தொ…
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 03:40 PM தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தைச் செலுத்தாத கம்பனிகளுடன் அரசு செய்துள்ள குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188131
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 03:35 PM திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்டார். இதனை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 02:59 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து இருந்தேன். அதன் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்பட…
-
-
- 6 replies
- 470 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 01:00 PM கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்திலுள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/188116
-
-
- 10 replies
- 758 views
- 1 follower
-
-
1990 சுவசெரிய அறக்கட்டளை 95 புதிய ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் TATA Sons (Pvt) Ltd இலிருந்து பெறப்பட்ட 297 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி “1990 Suva Sariya Foundation” தொடங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது இச்செவைக்கு 450 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 பேக்-அப் ஆம்புலன்ஸ்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் TATA Sons (Pvt) Ltd நிறுவனம் 50 ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகவும், Asia Development Bank 45 ஆம்புலன்ஸ…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும் முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUL, 2024 | 02:58 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தேன். அங்கே வடக்கு மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தங்களின் பிரச்சினைகளை முன்வை…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 10 JUL, 2024 | 09:32 AM 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்திற்கு பின்னர் எக்கா…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு maheshJuly 10, 2024 வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள் புடைசூழ மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவே…
-
- 0 replies
- 264 views
-