ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து பொ.ஐங்கரநேசன் தென் இலங்கையின் சிநோட்ரோ நிறுவனத்தால் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது:- முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், முத்தையன்கட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.03.2014) நிகழ்ந்த வயல் விழாவில் பங்கேற்பதற்காக நான்…
-
- 1 reply
- 240 views
-
-
ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல – மங்கள சமரவீர:- ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல் மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் இயலமை போன்றவற்றை மூடி மறைக்கவே இவ்வாறு முயற்சிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எதிரானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கத்தைச் சேர்ந்த…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது – ராஜித சேனாரட்ன இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என மீன்பிடி மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொறிமுறைமையின் கீழ் பொருளாதாரத் தடை விதிப்பது கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளை விதிக்க பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சீனாவிற்கும் ரஸ்யாவிற்கும் வீட்டோ அதிகாரம் காணப்படுகின்றது. எனவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்புக்களின் போது சீனாவும் ரஸ்யாவும் அதனை எதிர்த்து வாக்களிக்கும் என அவர் தெரிவித்துளளார். …
-
- 0 replies
- 298 views
-
-
புதுடெல்லி: இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்ற உறுதியை அவர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் நேற்றும், இன்றும் கூட இலங்கை கடற்படையினரால தாக்கப்பட்டு சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், த…
-
- 2 replies
- 458 views
-
-
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது! – சர்வதேச சமூகத்தைக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித். [Thursday, 2014-03-06 07:55:13] நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல் இடம்பெற்றதாகத் தெரிவித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் ஆர…
-
- 6 replies
- 489 views
-
-
சிறிலங்காவின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களில், சீனாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடக்கிற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பையும் சீனாவே ஏற்றுக் கொண்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான மேர்ச்சன்ட் குழுமம், 1 பில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளது. போரினால் பாதிக்கப்பட வடக்கையும், சுற்றுலா நகரான கண்டியையும் கொழும்புடன் இணைக்கும் வகையில் சுமார் 300 கி.மீ தூரத்தைக் கொண்டதாக இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 48 கி.மீ தூர நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான சாத்திய வள ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான புரிந்த…
-
- 4 replies
- 715 views
-
-
தமிழீழத்தின் காவலர்கள் என்ற பெயரிலான சுவரோட்டிகளை அரசுக்கு எதிராக வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பளைப்பகுதியில் இருவர் கைது. "அன்பான தமிழ் மக்களே இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில் அகிம்சைப் போராட்டத்திற்கான காலம்:- தமிழீழத்தின் காவலர்கள்" என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ள துண்டுபிரசுரங்களே கிளிநொச்சி மற்றும் பளை பகுதிகளில் வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த துண்டுப்பிரசுரங்கள் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்டவை எனவும்,இவற்றை அரசுக்கு எதிராக வெளிட்டார்கள் என்ற குற்றத்தின் அடிப்படையில் இருவர் தற்போது பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=19765271020634339…
-
- 1 reply
- 642 views
-
-
மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் 9 மாதக் கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்த கவணனுக்கு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிறேமசங்கர் மரணதண்டனையினை விதித்து தீர்ப்பழித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாவற்குழிப் பகுதியில் இருந்து சுரேஷ் சுஜா என்ற 9 மாத கற்பிணி உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கொலையினையடுத்து அவருடைய கணவரான ரவீந்திரன் சுரேஷ் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டவரிடம் நடாத்திய விசாரணையில், தனது மனைவியின் …
-
- 0 replies
- 555 views
-
-
திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னிரன்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை நகரில் காந்தி சிலைக்கு அருகாமையில், பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்திருந்த மாணவர்கள் உட்பட ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை வரையில் பேசப்பட்டு வருகின்றது. திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலேயே மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழனன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 12 சந்தேக நப…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் சர்வதேச சமூகத்துக்கு இல்லை! – கொதிக்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன். [Thursday, 2014-03-06 07:16:30] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை முன்வரைவு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்திவரும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர். பாரதூரமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொ…
-
- 1 reply
- 371 views
-
-
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோம். ஆனால் அது போர்குற்றம் என்றார்கள். இன்று போர்குற்றம் என்ற சொல்லையே காணவில்லை. வெறும் மனிதஉரிமை மீறல் என்று வந்து நிற்கின்றது. அடுத்த ஆண்டு சிறீலங்கா என்ற சொல்லை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறிலங்கா என்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு நாட்டின் பெயரை போட்டுப்பாருங்கள். இது அநேகமான அனைத்து நாடுகளிற்கும் பொருந்தும் தீர்மானம். இந்த இலங்கையை பாராட்டி வழங்கப்படும் இந்த சான்றிதழை வரவேற்கும் எம்மவர்களை என்னவென்றுசொல்வது? இதில் நீர்த்துப்போக என்ன உள்ளது? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்துடன் தீர்வென்றால் அதனை தலைவர் எப்பொழுது வாங்கித்தந்துவிட்டிருப்பார். இதில் எங்கேயும் தமிழர்களிற்கான…
-
- 26 replies
- 2k views
-
-
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்! – கனேடிய எதிர்க்கட்சி கோரிக்கை. [Thursday, 2014-03-06 07:46:06] ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப் பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சு மீதான விமர்சனத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பான எதிர்கட்சி எம்.பி. போல் டி…
-
- 0 replies
- 249 views
-
-
'பலம்வாய்ந்த ஆசிரியர் சங்கமாயின் எனக்கெதிராக எதுவும் செய்ய முடியுமா? சவால் விடுகிறேன்' உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழகம் மிக மோசமான நிலைக்கு சென்றமைக்கு கடந்த 30 வருட கால குழுக்களின் நடவடிக்கைளே காரணம் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்துள்ளார். அந்த நிலை மீண்டும் தலைதூக்காத வகையில் செயற்பட வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதை நிலை மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள மருத்துபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் …
-
- 2 replies
- 470 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமாம்! – பிரதிஅமைச்சர் சரத் வீரசேகரவின் ஆசை. [Thursday, 2014-03-06 07:59:22] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென பிரதி அமைச்சர், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கல்கிரியாகம பாதுகாப்புப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. தமிழ் மக்களின் நலன்களுக்காக அந்தக் கட்சி எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுக்கு நட்பான வகையில் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=105038&category=TamilNe…
-
- 0 replies
- 204 views
-
-
வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது! – ஜெனிவாவில் அரசாங்கம் அறிவிப்பு. [Thursday, 2014-03-06 07:50:38] வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் கிடையாது.எனவே விசாரணை நடத்தப்பட மாட்டாது என ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தெரிவித்துள்ளார். எந்தவொரு சாட்சியமும் இல்லாத சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது எவ்வாறு? இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முன்வைக்க நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். எனினும் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த அ…
-
- 0 replies
- 429 views
-
-
ஜெனிவா பிரச்சினையை ஜனாதிபதி வெற்றிகரமாக தீர்ப்பாராம்! – அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். [Thursday, 2014-03-06 07:37:59] ஏனைய பிரச்சினைகளை வெற்றிகரமாக முகம் கொடுத்தது போன்று ஜெனீவா பிரச்சினையையும் ஜனாதிபதி சர்வதேச அணுகுமுறை மூலம் தீர்வு காண்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனீவா மாநாடு குறித்து வினவப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அது குறித்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப் பட்டாலும், அரசாங்கத்தினால் அதனை நிராகரிக்க முடியும். பொருளாதாரப் பிரச்சினையையோ யுத்தத…
-
- 0 replies
- 204 views
-
-
நடேசன், புலித்தேவன் படுகொலைகள் குறித்து புதிய சாட்சியங்கள்! – அவுஸ்ரேலிய அமைப்பின் அறிக்கை கூறுகிறது. [Thursday, 2014-03-06 07:21:53] விடுதலைப் புலிகளின் அரசியல துறை பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த மாதம் விடுத்திருந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இதற்கான ஆதாரங்களை முன்வைத்திருப்பதாக தெ…
-
- 1 reply
- 1k views
-
-
வன்னியினில் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு படையினருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலையடுத்து முழுவீச்சினில் வீடுவீடாக படையினர் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுமக்களது வீடுகளுக்குச்செல்கின்ற படையினர் அவர்கள் வசமிருக்கும் குடும்பப்பதிவு அட்டைகளை பரிசோதிப்பதுடன் பெண் பிள்ளைகள் பற்றிய தகவல்களை சேகரித்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன தமிழ்பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்தையன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக படைய…
-
- 9 replies
- 941 views
-
-
மக்கள் வாழ்வதற்கு பெரும் சிரமங்களை அனுபவித்து வரும் நிலையில் அரசாங்கம் அதில் அக்கறை இன்றி தொடர்ந்தும் செயற்படுமாயின் இடி அமீன், மார்க்கோஸ் போன்றோருக்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி.யான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏற்றுமதிகள், இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில் . ஐ.தே.க எப்போதுமே திறந்த பொருளாதாரத்தை வரவேற்கிறது. திறந்த பொருளாதாரத்தின் காரணமாகத் தான் இன்று அரசாங்கத்தின் அமைச்சர்களும்,…
-
- 0 replies
- 217 views
-
-
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் உட்பிரவேசித்ததால் இரண்டு கடைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மேலும் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். (இரண்டாம் இணைப்பு) யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேரு…
-
- 1 reply
- 452 views
-
-
சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே ஆபத்து ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கே அரசாங்கம் ஜெனிவா அமர்வை பயன்படுத்த முனைகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தம்மை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதெல்லாம் முட்டாள்தனம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, எவரையேனும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல ம…
-
- 0 replies
- 228 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்க வேண்டும் என்று, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்தில், அந்த நாடு வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து, இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அத்துடன், அவுஸ்ரேலியாவின் பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, ஆதரவு கோரியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், “சிறிலங்காவில் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் ஏற்படவில்லை, பரந்தளவிலான பிரச்சினைகளுக்குப் பதி…
-
- 0 replies
- 299 views
-
-
ஏப்ரல் 24ல் இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டின் அரசியலில் ஈழத்தமிழர் விவகாரமும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் இந்திய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைகாணப்படுகிறது. காங்கிரசின் முன்னால் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துள்ளது. இதேபோன்று தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு மிகப் பெரிய திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், 1988ல் தனியாகப் போட்டியிட்டது போ…
-
- 0 replies
- 506 views
-
-
இன்று காலை பளையில் இடம்பெற்ற விபத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காலை இடம் பெற்ற விபத்தில் பளை மத்திய கல்லூரியின் மாணவன் பாதசாரிகள் கடவையில் கடக்க முற்பட்ட வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியது. இதனால் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்ததுடன் மாணவன் படுகாயங்களுக்குள்ளானார். பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பாதசாரிகள் கடவையில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதால் ஏ 9 வீதிய…
-
- 0 replies
- 364 views
-
-
நந்திக்கடலுக்கு அருகே உரப்பையில் கட்டப்பட்ட மண்டையோடு! – நெற்றிப் பொட்டில் குண்டு துளைத்த துவாரம். [Thursday, 2014-03-06 07:32:48] News Service முள்ளிவாய்க்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடலுக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளன. பச்சை உரப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவரினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து எச்சங்கள் இருப்பதை ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், தகவலை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டன. இவை உரப்பைகளில் கட்டப்பட்ட நிலையிலேயே இ…
-
- 0 replies
- 791 views
-