Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூங்கிலாறு எலும்புக்கூடுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லையாம்! - இலங்கை இராணுவம் கூறுகிறது. [sunday, 2014-03-02 09:22:44] உடையார்கட்டு, மூங்கிலாறு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை உழுத போது, 9 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக்கூடுகள் தங்களால் கொலை செய்யப்பட்டவர்களுடையது என்று சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.ஆனால் இராணுவத்துக்கும் இந்த மனித எலும்புக்கூடும் இடையில் எந்த வகையா…

  2. சரத் அமுனுகம யுத்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். யுத்தத்தில் தோல்வியைத் தழுவிய யதார்த்தை ஜீரணிக்க முடியாத சில புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 25 ஆண்டு கால யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும், தமிழ் புலம்பெயர் சமூகம் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிர…

  3. அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மையே! - ஒப்புக்கொண்டார் ரவூப் ஹக்கீம். [sunday, 2014-03-02 08:44:34] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவுகளில் எந்த விரிசலும் கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சில விடயங்கள் தொடர்பாக, முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும் இருவருக்கும் இடையில் விரிசல் எதுவும் கிடையாது. அமைச்சரவைக் கூட்டங்களில் ஜனாதிபதியுடன் வாதம் செய்வது புதிய விடயமல்ல. அவ்வாறான தர்க்கங்களை ஜனாதிபதி ஊக்கப்படுத்தியுள்ளார்.நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.அதன் போது ஜனாதிபதி உரத்த தொனியில் பேசினார்.…

  4. காணாமல் போதல்கள் தொடர்பிலான 80 வீதமான குற்றச்சாட்டுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 80 வீதமானவை புலிகளுக்கு எதிரானவை என தெரிவிக்கப்படுகிறது. வடக்;கைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே கடத்தல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரசாங்கப் படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது படையினரே அதிகளவில்…

  5. இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக இருக்க முடியுமென இலங்கை நம்புகின்றதென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் சனிக்கிழமை கூறினார். பௌத்த - இந்திய கற்கைக்கான சாஞ்சி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது தர்ம - தம்ம மாநாட்டுக்கு வெளியே இந்து பத்திரிகையாளருடன் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வைகோ தலமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்த பின்னர் இலங்கை பற்றிய பாரதீய ஜனதா கட்சியின் கருத்துக்களில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கின்றீர்களா என கேட்டதற்கு பதிலளித்துள்ள காரியவசம், 'வைகோ மேலும் தெளிவடைந்து இலங்கைக்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து விலகுவார் என நாம் நம்புகிறோம். அவர் வட பகுதிக்கு சென்று மக்களை சந்திப்பாரா…

  6. சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சனல் 04 தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பியதை எதிர்த்து சிறிலங்கா அரசாங்க ஆதரவானவர்களால் வெளியிடப்பட்டுள்ள 'அனைத்துலக பரப்புரை நடவடிக்கைக்குப்' பதிலடியாக கையேடு ஒன்றை வெளியிடுவதென சனல் 04 தொலைக்காட்சி சேவை அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துன்னது. சனல் 04 தொலைக்காட்சி சேவையானது சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்களைப் பதிவு செய்து 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற காணொலியை வெளியிட்டிருந்தது. போர் தவிர்ப்பு வலயம் என்கின்ற காணொலியில் ஒளிபரப்பப்பட்ட 'உண்மையில் அதிர்ச்சி கொள்ள வைக்கின்ற' மீறல் காட்சிகளை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் பார்த்த பின்னர…

  7. நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில், உரையாற்றவுள்ள ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சமந்தா பவர், சிறிலங்கா தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்கா விவிகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நாளை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறவுள்ளன. இதில் அமெரிக்கா சார்பில், ஐ.நாவுக்கான தூதுவரான சமந்தா பவர் உரையாற்றவுள்ளார். சிறிலங்காவுக்கு…

  8. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்கள் மனிதவுரிமைக் கவுன்சில் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கைக்கெதிரான முழு அறிக்கை இணைகப்பட்டுள்ளது. http://www.lankaenews.com/pdf/HC-Pillay-report-to-UNHRC-on-Sri-Lanka-A-HRC-25-23-AEV.pdf

  9. எனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார் விக்கி விரும்பாவிடின் அடுத்த நிமிடமே கொழும்பு திரும்பவும் தயாராம் தனக்கு எதிராகத் தமிழ்க் கூட்டமை ப்பிற்குள் சதி நடை பெறுவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராகத் தான் இருப்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பவில்லை என்பதை வெளிப் படையாகவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். இத்தகைய சுலபமான தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். …

  10. ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷவுடன் முரண்பாடு கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும் இருவருக்கும் இடையில் விரிசல் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டங்களில் ஜனாதிபதியுடன் வாதம் செய்வது புதிய விடயமல்ல எனவும், அவ்வாறான தர்க்கங்களை ஜனாதிபதி ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது எனவும், அதன் போது ஜனாதிபதி உரத்த தொனியில் பேசியதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அமைச்சரவை…

    • 3 replies
    • 471 views
  11. நவனீதம்பிள்ளைக்கும் ஜீ.எல். பீரிஸிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை- 02 மார்ச் 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிற்கும் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு சமாந்திரமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உத்தேச அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் பிரசூரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நவனீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில்…

  12. கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை நகர அபிவிருத்தி என்ற பெயரில் வீடுகளை உடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது: - மனோ கணேசன் [sunday, 2014-03-02 09:20:39] கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை வரையிலான கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் நகர அபிவிருத்தி செய்கிறோம், வீதிகளை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் கட்டிடங்களை உடைத்து ஊடுருவி செல்லும் பாதைகளை அமைக்க நகர அபிவிருத்தி சபை திட்டங்களை தீட்டி வருகிறது. நகர அபிவிருத்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களையும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களையும் குறிவைத்து அச்சுறுத்தி அகற்றும் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பிரதேச…

  13. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை த…

  14. மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

    • 22 replies
    • 2.7k views
  15. சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க செனட்டில் ஏற்கனவே, சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்குப் போட்டியாக, மற்றொரு தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், தீர்மான வரைவுக்கு, றிச்சர்ட் புர், றொபேட் கசே, பட்றிக் லேஹி, ஷெரோட் பிறவுண், பார்பரா பொக்சர், ஜோன் கோர்னின் ஆகிய செனட் உறுப்பினர்கள் அனுசரணை வழங்கியிருந்தனர். இந்தநிலையில், சிறிலங்காவில் ஈழப்போரின் போது ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு. தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க வலியுறுத்தி, 11 செனட் உறுப்பினர்கள் புதியதொரு தீர்மான வரைவை கடந்த விய…

  16. அரசாங்கத்தின் இணைந்திருக்க விருப்பமா - இல்லையா? – ஹக்கீமிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஜனாதிபதி. [saturday, 2014-03-01 19:25:45] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க விருப்பமா இல்லையா என்பதனை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கண்டிப்பாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆவணமொன்றை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட…

    • 2 replies
    • 546 views
  17. ஈபிடிபியையும் துரத்தும் அமெரிக்கா - தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு! [Friday, 2014-02-28 18:12:17] வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியுள்ளது. கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக்…

  18. அடேல் பாலசிங்கத்துக்கு எதிரான மகஜருக்கு இணையத்தில் ஆதரவு திரட்டப்படுகிறது! – போர்க்குற்றங்களில் ஈடுபட்டாராம். [saturday, 2014-03-01 08:52:20] விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, அவருக்கு எதிரான மகஜர் ஒன்றுக்கு இணையத்தில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அடேலை கைது செய்யுமாறு கோரி இவ்வாறு கையொப்பங்கள் திரட்டப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தின் ஊடாக இந்த மகஜருக்கான கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன.இந்த மஜகரில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் ஆயிரக் கணக்கில் கையொப்பமிட்டுள்ளனர். இந்த மகஜர் …

  19. வெள்ளைக்கொடி சம்பவம்:கோத்தபாய, சவேந்திர சில்வாவுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டுகிறார் நவிபிள்ளை! [saturday, 2014-03-01 08:57:54] வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்ற புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாட்சியாளர்களிடம் நவனீதம்பிள்ளை சாட்சியங்களை திரட்டி வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் என்பது இன்னமும் குறிப்பிடப்படவில்லை. என…

  20. இயக்கச்சியில் 36 ஏக்கர் காணியை விழுங்குகிறது 552 ஆவது படைப்பிரிவு தலைமையகம்! – பொதுமக்கள் முறைப்பாடு. [saturday, 2014-03-01 07:50:42] இயக்கச்சியில் 36 ஏக்கர் காணி 552 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரால், சுவீகரிக்கப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணி உரிமையாளாகளுக்கு இந்த காணி சுவீகரிப்புத் தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். ஏ 9 வீதிக்கு அருகாமையில் இயக்கச்சி ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பொது மக்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி, 552 ஆவது படைப்பிரிவு தலைமையகம் அமைப்பதற்கு சுவீகரிக்கவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஊடாக காணிச்சொந்தக்காரர்களுக்கு…

  21. கொழும்பில் இன்றும் நாளையும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்றும் நாளையும் விஜய் டிவியின் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற திவாகர், சோனியா, சையத் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் பங்கேற்கப் போவதாகவும், அவர்களுக்கு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விவரங்கள் வெளியில் தெரிய வந்ததும், தமிழர் அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டன, குறிப்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தே தீர வேண்டும் என எச்சரித்தார். ரோமாபுரி பற்றி எரிந்த போது நீரோ பிடில…

  22. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவுள்ள அமெரிக்காவின் செயலை ஒரு பாடசாலை மாணவனுடன் மல்யுத்த வீரர் ஒருவர் யுத்தத்திற்கு போவது போல உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'ஒரு தீர்மானம் தேவையற்றது. அவர்களிடம் சான்று இருப்பின் அவர்கள் அதை எம்மிடம் தந்திருக்க வேண்டும்' எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டு ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்ற நிலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிக…

  23. சிறிலங்கா அதிபருக்கான அழைப்பை பிரித்தானியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரபுக்கள் சபையில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மற்றும் அதுதொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்த விவாதம் இடம்பெற்றது. இதன்போது, தொழிற்கட்சியை சேர்ந்த பவுஸ்கஸ் பிரபு, சிறிலங்கா அதிபருக்கான அழைப்புக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவில், முதலாம் உலகப் போர் நினைவாக, கிளாஸ்கோ தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரார்த்தனைக்கு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பயங்கரமான மனிதஉரிமைகள் நிலை குறித…

  24. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 4ம் நாள் தொடக்கம், 6ம் நாள் வரை, நிஷா பிஸ்வால், பெங்களூர் மற்றும் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக, நிஷா பிஸ்வால், கடந்த ஜனவரி மாதம், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடே, அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட விகாரத்தை அடுத்து, ஏற்பட்ட சுமுகமற்ற சூழலால் அவரது பயணம் பிற்போடப்பட்டது. கடந்த ஆண்டு தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பதவியேற்ற பின்னர் நிஷா பிஸ்வால் இந…

  25. (ஆதவன்) அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இர…

    • 1 reply
    • 300 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.