Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆதவன்) அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இர…

    • 1 reply
    • 300 views
  2. கடந்த ஆண்டு இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை அம்மையாரிடம் இலங்கையில், பௌத்த பேரினவாதிகள், அரச ஆசிர்வாதத்துடன் அழித்த, தாக்கிய பள்ளி வாசல்கள், கிருஸ்தவ தேவாலயங்கள், சிங்கள குடி அமர்த்தளுக்காக துரத்தி அடிக்கப் பட்ட முஸ்லிம் மக்கள் உட்பட்ட விடயங்கள் அடங்கிய 50 பக்க ஆவணம் ஒன்றை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இரகசியமாக கை அளித்திருந்தனர். இந்த ஆவணம், புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் கையில் சிக்கி விட்டதாகவும், அந்த ஆவணத்துடன் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் பிரச்சாரத்தினை மேற்கொண்டு, அரசு பெரும் செலவில், கடும் முயற்சி செய்து, தமக்கு சார்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்த நாடுகளை, தமது நிலைப் பாடினை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டன என்ற தகவலால் அரசு பெரும் கோபம் அடைந்…

  3. கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது: - இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை [Thursday, 2014-02-27 12:21:55] 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும்,இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உலகம் முழுதும் அறிந்த உண்மை.2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ந…

  4. யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” - நிலாந்தன் - சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, “நீ கதைக்கிறது ஒரு மெல்லிய ஆங்கிலம் கலந்த, சினிமாப் பாணியான தமிழ்” என்ற தொனிப்படக் கூறியிருந்தார். ஆம். அது சரிதான். “தொனி” தான் நாம் இப்போது பேசப்போகும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் தனித்த அடையாளங்களை சொல்லிக்கொண்டே போகும்போது முதலில் சொல்லத் தொடங்குவது அதன் வித்தியாசமான அழகான தமிழை உச்சரிக்கும் பாணியைத்தான். யாழ்ப்பாணத்து அன்ரிமார் “இஞ்சருங்கோ” என்று அழைப்பதில் தொடங்கி, அதன் காதல் இழைந்து கிடக்கும் தனித் தொனி தன்னை இழந்து வருகிறதா என்று கேட்டுக்கொண…

    • 1 reply
    • 876 views
  5. வெள்ளைக்கொடி சம்பவம்:கோத்தபாய, சவேந்திர சில்வாவுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டுகிறார் நவிபிள்ளை! [saturday, 2014-03-01 08:57:54] News Service வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்ற புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாட்சியாளர்களிடம் நவனீதம்பிள்ளை சாட்சியங்களை திரட்டி வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் என்பது இன்னமும் குறிப்பிடப்படவில்லை. எனி…

  6. இலங்கைக்கு எதிரான தீர்மானம் - வாக்களிக்காமல் நழுவுகிறது ஜப்பான்! [saturday, 2014-03-01 07:54:40] ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடுப்படும் போது, ஜப்பான் வாக்களிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாகவோ செயற்படாது என தெரிவிக்கப்படுகிறது. வாக்களிப்பு நடத்தப்பட்டால் வாக்களிப்பில் பங்கேற்காதிருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா குறிப்பிடுவதனைப் போன்று இலங்கையின் நிலைமைகள் பாரதூரமாக இல்லை என ஜப்பான் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=104661&amp…

  7. அனந்தியின் ஜெனீவாப் பயணம் மறைக்கப்பட்ட உண்மைகள்! பிப் 28, 2014 கடந்த மாதம் 27ம் திகதி வடக்கு மாகாண சபையின் அமர்வு இடம்பெற்றபோது ஜெனீவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடமாகாண சபை உறுப்பினர்களும் செல்லவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக இரு தினங்களின் பின்னர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கிய வட மாகாணசபை, ஜெனீவாவுக்குச் செல்வதற்குப் பொருத்தமானவர் அனந்தியே என்றும் தீர்மானித்திருந்தது. இந்நிலையில், திடீரென ஜெனீவாவிற்குப் புறப்பட்டுச்சென்ற அனந்தி அவர…

  8. மூங்கிலாறில் மற்றொரு மனிதப் புதைகுழி! – எலும்புக்கூடுகள் மீட்பு. [Friday, 2014-02-28 18:37:49] முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில், காணியொன்றிலிருந்து மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து நேற்றிரவு இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னர், மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  9. இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து, 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா என்கின்ற கேள்வியுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. 307 வருடகாலமாக தொடர்ந்து வந்த அரசியல் இணைப்பு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு எழுந்திருக்கின்றது. ஆம் என்று அம்மக்கள் வாக்களித்தார்களாயின் அது பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமையையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் அந்தஸ்தையும் பாதிக்கும் அளவிற்குப் போகலாம் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர். அந்த அளவுக்கு ஸ்கொட்லா…

  10. ஜெனிவா தீர்மானத்தால் இலங்கை தனிமைப்படுத்தப்படும்! - எச்சரிக்கிறது தேசிய சமாதானப் பேரவை. [Friday, 2014-02-28 07:38:52] யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் குற்றச் செயல்கள் தொடர்பாக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இணைந்து விசாரணைகளை நடாத்த கூட்டுப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க முடியும் என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகமும் அரசாங்கமும் முரண்பாடுகளை களைந்து செயற்பட வேண்டும். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் பாதிப்புக்களை எதிர்நோக்காமல் இருக்கக் டிய வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் ஏற்பட…

  11. மனிதஉரிமைகள் பெரிய விடயமே இல்லை, ஆனாலும் தலைவலியாக இருக்கிறதாம்! – அலுத்துக் கொள்கிறார் ஜனாதிபதி மகிந்த. [Friday, 2014-02-28 07:49:01] நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்திருப்பதை தவிர, ஏனைய மனித உரிமைகள் ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தம்மை அபிவிருத்தி குறித்து சிந்திக்கவிடாமல், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் வழங்கிக் கொண்டே இருக்கும் வகையிலான சூழ்நிலையில் சிக்கவைக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிந்த பின்னர் இலங்கை மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. தற்போது நாட்டின் அபிவிருத்தியே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால்…

  12. எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய தலமையில் நடந்த போராட்டம் நியாமானது: - இனமான நடிகர் சத்யராஜ் [Friday, 2014-02-28 13:45:14] " எமது மாவீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகக் கூடாது .எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் . எமக்கான நீதியை நாம் நிலை நாட்ட எமது உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என இனமான நடிகர் சத்யராஜ் தெரிவித்தள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104595&category=TamilNews&language=tamil

  13. ஜெயலலிதா ஒரு மனநோயாளி என்கிறார் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க! [Thursday, 2014-02-27 08:00:03] தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு மனநோயாளி எனவும் அதனாலே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாகவும் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஆளும்கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாடுகள் குறித்தும் இலங்கை தொடர்பில் அவர் கூறிவரும் கருத்துக்கள் குறித்தும் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க, அவருக்கு மனநல குறைபாட்டு பிரச்சினையுள்ளது. அதனாலே பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கச்சதீவு தொடர்பில் எதுவித முடிவும் எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது…

  14. கோபிதாஸ் மரணம் குறித்து சந்தேகம் கிளப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை! - எச்சரிக்கிறார் சிறைச்சாலை ஆணையாளர். [Friday, 2014-02-28 08:00:57] மகசின் சிறைக்கைதி கோபிதாசின் மரணம் தொடர்பாக, பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம எச்சரித்துள்ளார். வெலிக்கடைச் சிறையில் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்த விடுதலைப் புலிக் கைதி விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணத்தை சில தமிழ் அரசியல்வாதிகள் கொலையாக சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கப்பல் மூலம் புலிகளுக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டமைக்காக கோபிதாசுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. …

  15. ஜெனீவா கூட்டத்துக்கு இலங்கை அரசாங்க குழு அடுத்த வாரம் பயணம்! [Friday, 2014-02-28 07:56:25] ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இதே வேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச…

  16. ஜனாதிபதி மகிந்தவின் தனிப்பட்ட மருத்துவரைக் கொல்ல முயற்சி! – வாகனம் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு. [Friday, 2014-02-28 09:20:54] ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவரான, எலியந்த வைற்றின் வாகனம் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மிரிஹான பிரதேசத்தில் எலியந்த வைற்றின் உத்தியோகபூர்வ வாகனம் மீது மோட்டார் சைக்களில் சென்ற நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட போது மருத்துவர் காரில் பயணம் செய்யவில்லை. அவரது சாரதி மருத்துவரின் தயாரது வீட்டுக்கு பயணம் செய்து திரும்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரண…

  17. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117106

  18. விமா­னப்­ப­டையின் 14 ஆவது புதிய தள­ப­தி­யாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக இன்று தனது கட­மை­களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வு பெறும் விமா­னப்­படை தள­பதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம நேற்று தனது பத­வி­யினை புதிய தள­ப­தி­யான கோலித்த குண­தி­ல­க­விடம் கைய­ளித்­ததை தொடர்ந்தே இன்று அவர்உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். நேற்­றைய தினம் எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம தனது பத­வியை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­ல­க­வுக்கு கைய­ளிக்கும் நிகழ்­வா­னது விமா­னப்­படை தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. இதன் போது உத்­தி­யோக பூர்­வ­மாக தனது பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுக்­கொண்ட எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம விமா­னப்­படை தலைமை பொறுப்பை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த …

  19. -கெலும் பண்டார நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்பை வழங்கும் தென்னாபிரக்க தலைவர்கள், இலங்கையின் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்க மாட்டார்கள் என அந்நாட்டுக்கான விஜயமான்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள தூதுக் குழுவிடம் கூறியதாக இலங்கையின் அமைச்சரொருவர் கூறினார். தென்னாபிரிக்கா சென்ற அணியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு முயற்சியான்மைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ அவைத் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பைசர் முஸ்தபாஇ ஜனாதிபதி ஆலோசகர் அருன் தம்பிமுத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சியின் முடிவிற்கு பின்னரான நல்லிணக்கத்திலிருந்து நிறைய கற்க வேண்ட…

  20. -எஸ்.ரவீந்திரன் தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் நாயகம் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூ…

  21. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின், கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கான பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நியாயமற்ற கோரிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் அனைத்துலக வலைப்பின்னல், தமது நாடுகடந்த அமைப்புகளின் மூலம், சிறிலங்காவில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டையும், நல்லிணக்க செயல்முறைகளையும் சீர்குலைக்க தொடர்ந்தும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. …

  22. சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், நேற்று வொசிங்டனில் வெளியிடப்பட்ட நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள் -2013 என்ற அறிக்கையிலேயே, இதுகுறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 56 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், ஒவ்வொரு மனிதஉரிமை மீறல்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டு, அதற்கு ஆதாரமான சம்பவங்கள், சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவான அறிக்கையின் சுருக்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. “பலகட்சி ஆட்சிமுறை கொண்ட அரசியலமைப்பைக் கொண்டுள்ளது சிறிலங்கா குடியரசு. அதிபர் மகிந்த ராஜபக்ச 2010ம் ஆண்டு, இ…

  23. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னம…

  24. தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப்பகிர்வுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை! – என்கிறார் விமல் வீரவன்ச. [Thursday, 2014-02-27 08:38:57] 13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர். பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ. யினர் பலமாக இருந்த காலத்தில் 13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர். ]அரசாங்கத்தைப் பயமுறுத்தி, பிரிவினைவாதிகளுடன் இணைந்து ப…

    • 3 replies
    • 488 views
  25. சரணடைவு ஒன்றே இடம் பெறவில்லை என்று இராணுவத்தினருக்காக வாதாடும் சட்டத்தரணியை காணாமற் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் சட்ட அலுவலராக எப்படி நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது சட்டத்தின் கீழ் நோக்கத்தின் முரண்பாடு என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழு நம்பகத்தன்மையற்றது என்ற தீர்மானத்தைத் தாம் இயற்றியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கண்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் ஆகி யோரின் கலந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.