Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் கோரிக்கையை தென்னாபிரிக்கா நிராகரித்ததாம்! – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார். [Tuesday, 2014-02-25 10:15:25] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவுவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தென்னாபிரிக்காவில் நிறுவுவதற்கு, ருத்ரகுமாரன் தென்னாபிரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதனை தென்னாபிரிக்கா ஏற்க மறுத்திருந்ததாக, தம்மிடம் குறிப்பிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விடுதலைப் புலிகளின்…

  2. எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது – கோதபாய 26 பெப்ரவரி 2014 எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளா கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சில நாடுகள் இலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியான முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் மேற்குலக நாடுகள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தது என அவர்…

  3. தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை தம்பாட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை காந்திஜி நாடகக் கலைஞர்களால் காத்தவராயன் சிந்து நடைக் கூத்து, பண்டார வன்னியன் தென்மோடி நாடகக் கூத்து என்பன மேடை ஏற்றப்படவிருந்தன. இவற்றை மேடையேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் தம்பாட்டி காந்திஜி நாடக மன்றக் கலைஞர்கள் ஈடு பட்டிருந்தனர். இதன்…

  4. * துணை ஆயுதக்குழுத் தலைவர்களான டக்ளஸ்தேவானந்தா, கருணா ,பிள்ளையான் மீது மோசமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. * இலங்கை இராணுவத்தினர், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். * உள்நாட்டு விசாரணைகள் கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயார். * 2006 இல் திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, மூதூரில் 17 தொண்டுப்பணியாளர்கள் படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றங்கள் குறித்த, பொறுப்புக்கூறும் விசாரணைகளில் பெரியளவில் எந்த முன்னேற்றமும…

  5. யாழ்ப்பாணம்: மரணதண்டனைக் கைதிகளிடம் காட்டிய மனிதநேயத்தையும், நியாய உணர்வையும் ஈழத்தமிழ் அகதிகள் விஷயத்திலும் அக்கறையுடன் காட்டுங்கள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அனந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் பல, நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்), அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக, தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்…

  6. மேர்வின் சில்வாக்கு புதைகுழி தயார் பிப் 26, 2014 தனக்கான புதைகுழியை சிறீலங்காவின் அடிதடி அமைச்சர் என வர்ணிக்கப்படும் மேர்வின் சில்வா தேர்வுசெய்து விலைக்கு வாங்கியுள்ளார். பொரளை கனத்தை மயானத்தில் அவர் தமக்கான இடத்தை முற்பணம் செலுத்தி கடந்த 19ம் திகதி புதன்கிழமை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குருனாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை உறுதிப்படுத்தியும் உள்ளார். http://www.sankathi24.com/news/38857/64//d,fullart.aspx

  7. வெற்றியை பெற்றுத் தந்த படையினர் கௌரவிக்கப்படுவது ஐ.நாவுக்கு எரிச்சல்! – என்கிறார் கோத்தபாய ராஜபக்ச. [Wednesday, 2014-02-26 07:39:40] யுத்தத்தில் வெற்றியை பெற்றுத்தந்த படையினர் கெளரவிக்கப்படுவதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விரும்பவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த படைவீர்ர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும். இவ்வாறு படையினர் கௌரவிக்கப்படுவதனை மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. போரின் பின்னர் முகாம்களை மூடி படையினரை செல்லா காசாக்க நாம் விரும்பவில்லை.போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் போன்றே படைவீர்ர்களின் மனோ நிலையை…

  8. லசந்தவைக் கொன்றது பொன்சேகாவே! – மோசமான சர்வாதிகாரி என்கிறார் அவரது முன்னாள் ஊடகப் பேச்சாளர். [Wednesday, 2014-02-26 07:09:37] முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, மோசமான சர்வாதிகாரி என்றும், அவரே சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தார் என்றும், ஜனநாயக கட்சியின் ஊடக இணைப்பாளரான சஞ்சீவ அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சஞ்சீவ அமரசிங்க, சரத் பொன்சேகா ஜனநாயக கட்சியை அடக்குமுறையுடன் கொண்டு செல்கிறார். 2009 ஜனவரியில் இடம்பெற்ற சண்டேலீடர் செய்தி ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் இவரே பொறுப்பு என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்ட…

  9. இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள், மாயாவிகளையும், பேசாமடந்தைகளையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல், வாய்திறந்து பேசக்கூடிய தலைமைக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார், இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன். இலங்கை மேல் மாகாணசபை தேர்தலுக்கான பிரசார கூட்டம் கொழும்பு பிரைட்டன் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மனோ கணேசன், “இந்திய வம்சாவளி தமிழர்களாகிய எம்மால் இந்த நாட்டில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகி விட முடியாது. இந்த பதவிகளை வகிக்க எமக்கு தகைமை இல்லை என்றோ, சட்டத்தில் இடமில்லை என்றோ அர்த்தம் கிடையாது. ஆனால், இந்த பதவிகளை ஒரு தமிழரோ, முஸ்லிமோ அல்ல, ஒரு சிங்கள கிறிஸ்தவர் கூட வகிக்க முடியாது என்பதே யதார்த…

  10. லண்டனில் இன்று மாபெரும் எழுச்சி போராட்டம். [Wednesday, 2014-02-26 12:13:56] இலங்கை தீவில் தமிழ் இன மக்கள் மீது மேற்கொள்ளபபட்டுவரும் இனப்படுகொலை நில அபகரிப்பு , போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிகரமான உரிமைப்போராட்டம். இன்று 26ம் திகதி (புதன்கிழமை) தாயகம் , தமிழகம், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தீவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் திட்டமிட்டு மேட்கொள்ளபபட்டுவரும் இனபடுகொலைகள், நிலஅபகரிப்பு, மற்றும் 2009ம் ஆண்டு 70000 அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தமை போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி மாபெரும் எழுச்சிப்போரட்டம் …

  11. சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் போராட்டத்தை ஆரம்பித்தது சிறிலங்கா கார்டியன்! [Wednesday, 2014-02-26 07:14:44] சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வலியுறுத்தி, சிறிலங்கன் கார்டியன் இணையத்தளம் கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுக்கான கடிதம் என்ற தலைப்பில் இந்த மனு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பமாகவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தை இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுத்தால் மாத்திரமே, இலங்கையை நீதி மற்றும் மறுசீரமைப்பின் பாதையில் கொண்டு செல்ல முட…

  12. -ர.ரஜீவன் யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் விடும் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளே பதில் கூறவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் நேற்று (25) தெரிவித்தார். யாழ். அனலைதீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் யாழ்.மாவட்டச் செயலாளர் ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிண்ஷக்ர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கஜதீபன், 'காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்…

  13. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் அதன் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2013ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் துறைசார்ந்த விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். நாடளாவிய ரீதியிலுள்ள அருங்கலைகள் சார்ந்த கைவினை கைப்பணியாளர்களின் ஆக்கங்கள் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில்; கண்காட்சிகளுக்கு வைக்கப்பட்டு, இதில் தெரிவுசெய்யப்பட்ட 334 கலைஞர்களுக்கு விருது…

  14. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா- எதிர்ப்பதா என்று ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று, சிறிலங்காவுக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிரோ ஹோபோ தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும். இதற்காக சிறப்புக் குழுவொன்று ஜெனிவாவுக்குச் செல்லும் . நாட்டின் நிலைமையையும் ஜப்பான், மதிப்பீடு செய்து வருகிறது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானியத் தூதுவர் நொபுஹிரோ ஹோபோ கடந்த வியாழக்கிழமை, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மற்றும், தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடியுள்ளார்…

  15. இந்தியாவில் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிறிலங்கா கௌரவத் தூதரகம் ஒன்றை இன்று திறக்கவுள்ளது. கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, சிறிலங்கா கௌரவத் தூதரகத்தை இன்று காலை திறந்து வைக்கவுள்ளார். கேரளாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை இது ஊக்குவிப்பதாக அமையும் என்று, சிறிலங்காவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள, ஜோமன் ஜோசெப்பின் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில், புதுடெல்லியில், பிரதான தூதரகத்தைக் கொண்டுள்ள சிறிலங்காவுக்கு, சென்னை மற்றும் மும்பையில் இரண்டு துணைத் தூதரகங்கள் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில், கௌரவத் தூதரகங்களையும் சிறிலங்கா கொண்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கௌரவத் தூதரகம் விரைவில்…

  16. (ஆதவன்) இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரர் யாழில் உறுதியளித்துள்ளார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றுகாலை வருகைதந்ந ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள், யாழ்.மாவட்ட இராணுவக் கட…

  17. இலங்­கையில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை, ஆயுத பயங்கரவாதத்தை உயிர்ப்­பிப்­பதில் பின்­னிற்­கப்­போ­வ­தில்­லை­யென்ற செய்­தியை ராஜீவ் காந்தி கொலை­யா­ளி­களை விடு­வித்­ததன் மூலம் தமிழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார். ஜெனீ­வாவில் இலங்­கைக்­கெ­தி­ரான நிலை­ப்பாட்­டையே இந்­தியா மேற்­கொள்ளும் என்றும் அவர் தெரி­வித்தார்.இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்; இந்­தி­யாவில் பொதுத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லை­யல் மத்­தியில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தமிழ் நாட்டு அர­சியல் ஆத­ரவு அதிக தாக்­கத்தை ச…

  18. பறக்கும் தங்கச்செம்பை படமெடுத்த மாணவன். கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருட்கலைத்திணைக்கள வளாகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த தங்கச் செம்பு தென்பட்டுள்ளது. கிருஷாந்த சாமல் பிரேமதிலக்க என்ற மாணவனும், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மாடுகளை அவிழ்ப்பதற்காகச் சென்ற போதே குறித்த மாணவன் இந்த தங்கச் செம்பை கண்டுள்ளான். அதனை கையில் எடுக்க அவன் முற்பட்ட போது அது சூரியன் உள்ள திசையை நோக்கி பறக்க ஆரம்பித்ததாகவும் அதன்போதே தன் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அதனைப் படம் பிடித்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளா…

  19. அமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றது – வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகரங்களில் தலையிடு செய்து பிராந்திய வலயத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே அமெரிக்காவின் பிரதான இலக்கு என அவா சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி செய்த காலத்தில் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி எடுத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற வானொலிச் சேவை ஆரம்…

    • 6 replies
    • 674 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த விடயமானது ஒரு மிகப்பெரிய தவறு எனவும், அமெரிக்கா மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி அழுத்தம் பிரயோகிக்கப் பட்டிருந்ததாகவும் 20;06 ஆம் ஆண்டு இலங்கை கண்காணிப்புக் குழுவுக்கு (ளுடுஆஆ) தலைமை வகித்த உல்ஃப் ஹென்றிக்சன் அவர்கள் தமிழ்நெற்றுக்காக கடந்த சனிக்கிழமை அன்று சுவீடனில் இருந்து வழங்கிய விசேட நேர்காணலின் போது கூறியுள்ளார். இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு ஆனால் அதில் தலையிடுவதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை எனவும் மேலும், இலங்கைக்குள் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதை சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகள் விரும்பவில்லை எனவும் அவர் தனது நேர…

    • 0 replies
    • 486 views
  21. எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார் . மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுகிய காலத்தினுள் பல அபிவிருத்திகளை செய்துவிட்டு தான் அரசியலிலிருந்து விலகுவதற்கு உள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் , இவ்வாறு விலகுவதற்கிடையில் தன்னைச் சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார் . தனது பிரதேசத்தையும் மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார் . களுவாஞ்சிக்குடி இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23 ) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது . இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் .…

  22. -எஸ்.கே.பிரசாத் பிரதமரும் பௌத்தசாசன அமைச்சருமான டி.எம்.ஜெயரட்ண தனது குடும்பத்தினர் சகிதம் இன்று (25) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆலயம் மற்றும் ஈழத்துச் சிதம்பரம் ஆகிய ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டார். http://tamil.dailymirror.lk/--main/101354-2014-02-25-13-04-59.html

  23. தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரியும், அது சம்பந்தமான வழக்கு ஐரோப்பிய நீதிமன்றத்தில் வரும்போது பிரித்தானிய அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று கோரியும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இலண்டனில் கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை நடந்தது. எங்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்றும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்றும் எமது தேசம் தமிழீழம் என்றும் கொட்டொலிகள் எழுப்பபட்டன. இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் தடைக்கெதிரான தொடர்ச்சியாக நடைபெற இருக்கும் போராட்டங்களின் ஆரம்பம் எனலாம். http://www.sankathi24.com/news/38836/64//d,fullart.aspx

  24. தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே: தமிழக முதல்வரக்கு கடிதம் எழுதிய அனந்தி [Tuesday, 2014-02-25 20:05:17] அண்மையில் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாகதாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்படவேண்;;டியவரே எனத்தெரிவித்…

  25. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும். வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும். தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.