ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143522 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான மோதில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினர் நினைவு நிகழ்வு பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினர் நினைவுத்தூபி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் இந்தியாவின் தென்பிராந்திய கட்டளை அதிகாரி லெப்.ஜெனரல் அசோக் சிங் மற்றும் அவருடைய துணைவியால், மற்றும் மேஜர் ஜெனரல் சோனி அவருடைய துணைவியார், ஆகியோருடன் இந்தியத் துணைத் தூதரக அதிகாரி வெ.மகாலிங்கம் ஆகியோருடன் இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப்பெரேரா. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103298/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 358 views
-
-
ஆதவன் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரனை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் தானியல் றெக்சியன் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் அவரது வீட்டில் இருந்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மேற்படி கொலைச் சம்ப…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழக அரசு விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேரும் எந்தவிதமான இழப்பீடும் கோரமுடியாது என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் நளினி மற்றும் முருகனின் வழக்கறிஞர் பா புகழேந்தி. சட்டத்தின் பார்வையில் இவர்கள் ஏழுபேருமே இன்னமும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளே என்றும், இவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு என்பது அவர்கள் இதுவரை அனுபவித்த தண்டனைக்காலமே போதும் என்கிற கோணத்தில் எடுக்கப்பட்டிருப்பதே தவிர, இவர்கள் நிரபராதிகள் என்கிற கோணத்தில் எடுக்கப்படவில்லை என்பதே சட்டத்தின் நிலைமை என்றும் கூறினார் புகழேந்தி. எனவே குற்றத்திற்காக சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரமுடியாது என்றார் அவர். இந்த …
-
- 0 replies
- 430 views
-
-
தலைகளுக்கு மேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடுபொடியாக்கிய தாய் நீங்கள்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு [Thursday, 2014-02-20 11:46:51] முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வ்p ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்துள்ள அத்துடன் மேலும் எடுக்கப்பபோகின்ற உடனடி நடவடிக்கைகளை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது. மேற்படி நடவடிக்கைளை எவ்வித தாமதமும் இல்லாமல் எடுத்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழகம்ää தமிழீழம் மட்டுமல்லää உலகெங்கும் பரந்து வா…
-
- 0 replies
- 277 views
-
-
பெப்ரவரி 26 - சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி மாபெரும் எழுச்சிப்போராட்டம். [Thursday, 2014-02-20 12:40:44] பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம் பிரான்சு நாட்டில் பிரான்சு வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் (Place de la Invalides- metro invalides metro ligne 8-13, RER C : Invalides;) மாலை 3 மணிக்கு நடாத்த பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ளது. 2009, மே 27 முதல் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக வாரந்தோறும் புதன்கிழமைகளில் தொடர் போராட்டங்களை நடாத்தி பிரான்சு அரசுக்கு வாராந்த அறிக்கைகளை அளித்து வரும் மக்கள் பேரவை இந்த போராட்டத்தை ஜெனிவா ஐக…
-
- 0 replies
- 236 views
-
-
24ம் திகதி சிட்னியில் இலங்கை புகலிடக் கோரிக்கையளர்கள் மாபெரும் ஒன்று கூடல்! [Thursday, 2014-02-20 12:08:09] அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் தற்போதைய கடும்போக்கு தன்மையால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையளர்கள் நடாத்தும் மாபெரும் ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 24 02 2014 அன்று சிட்னியில் உள்ள பெண்டிஹீல் யாழ் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. முதலாவதாக தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்களை வலவந்தமாக நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாகவும் வழக்குகள் அனைத்தும் தோல்வி அடைந்தவர்களின் பிரச்னை தொடர்பாகவும் தற்போது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தி உள்ள THV எனப்படும் தற்க்காலிக விசா தொடர்பாகவும் இதனால் ஏற்ப்படும் பதிப்புகள் சம்பந்தமாகவும்…
-
- 0 replies
- 260 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம சேவகர் பிரிவுகளில் தமிழ் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு இளங்கலை இராணுவத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பரப்புரைகளும் மேற்கொள்ள்ளப்பட்டுவருகிறது. அந்த சுவரொட்டியில் கீழ் வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் சொந்த பூமியில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு, இலங்கை இராணுவத்தின் மகளீர் படைப்பிரிவில் நீங்களும் இராணுவ வீரராகலாம், நீங்கள் 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும், நல்ல உடல் கட்டு உடையவராக இருக்க வேண்டும், உயர்தரம் வரை கல்வி கற்றிருக்க வேண்டும், உணவு, தங்குமிடம், மருத்துவம்,…
-
- 0 replies
- 231 views
-
-
இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். அதை விட என் முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார். என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாந்தனின் சகோதரனான மதி சுதா தெரிவித்தார் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தமிழக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நாளை நான் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இந்நாளாகதான் இருக்கமுடியும். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த …
-
- 0 replies
- 338 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த 23 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலைச் செய்வதற்கு அஞ்சா நெஞ்சம் வேண்டும். இரும்பையொத்த உறுதி வேண்டும். இனிய இதயம் வேண்டும். இந்த திறமைகள் கைவரப்பெற்றவராகவே நாங்கள் ஜெயலலிதா அம்மையாரைப் பார்க்கின்றோம். இந்த விடயத்தில் அவர் ஒரு அற்புதமான பிறவி என்றும் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான வேiளியில், இவர்களின் விடுதலையை வலியுறுத்தி த…
-
- 0 replies
- 260 views
-
-
மேற்குலக நாடுகளுக்கு எதிராக சிறிலங்கா மேற்கொண்டு வரும் பரப்புரைகளினால், சிறிலங்காவின் சுற்றுலாத்துறைக்கு பெரும் அடி விழலாம் என்று சுற்றுலாத்துறை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா, பிரித்தானியா தலைமையிலான மேற்குலக நாடுகள், சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தநிலையில், சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும், அதிகாரிகளும், மேற்குலகிற்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அடுத்தமாதம் நடக்கவுள்ள தென், மேல் மாகாணசபைத் தேர்தல் பரப்புரைகளில், மேற்குலக நாடுகளுக்கு எதிரான கருத்துகள் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், சில நாடுகளேனும், சிறிலங்காவுக்குப் பயண…
-
- 0 replies
- 410 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை விதித்து, இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுவிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இவர்களை விடுவிப்பது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், குற்றவாளிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை குறைத்தல் என்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருந்து குற்றவாளிகள்…
-
- 0 replies
- 531 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்புப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை, இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்று கூறப்பட்டுள்ளது. அவரது கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது அல்ல என்றும், அதனை தொடரக்ககூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவையில், ராஜிவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.onlineuth…
-
- 0 replies
- 308 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அரசு திட்டமிட்ட முறையில் நாளுக்கு நாள் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பல தசாப்த காலப் போராட்ட வரலாற்றில் தமிழர்களிடையே மீதமாக எஞ்சியிருப்பது கல்வி மாத்திரமே. இவ்வாறான கல்வியைச் சீரிய ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வன்மைப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருப்பதன்மூலமே நவீன காலத்துக்கு ஏற்றாற் போல் எங்களை நாங்கள் தயார் படுத்திக்கொள்ளாம். அப்போது தான் சமூகத…
-
- 0 replies
- 208 views
-
-
மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாது அவதியுறும் நிலையில் அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி பேசுகின்றது! – சரத் பொன்சேகா [Wednesday, 2014-02-19 12:11:32] கள்ள அரசியல்வாதிகளினால் போர் வெற்றி ஈட்டப்படவில்லை எனவும் ஆயிரக் கணக்கான படைவீரர்களினாலேயே போர் வென்றெடுக்கப்பட்டது என்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டின் முதல் நான்கரை மாதங்களிலேயே உச்சக்கட்ட போர் இடம்பெற்றது. அந்தக் காலத்தில் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு ஆட்சியாளர்கள் கோரினர். ஐரோப்பாவின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். போர் நிறுத்த யோசனையை நான் நிராகரித்தேன், படைவீர்ர்…
-
- 4 replies
- 501 views
-
-
முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு. அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு. fb
-
- 82 replies
- 5.3k views
-
-
இன்றைய நாள் என்னுடைய வாழ்வில் எல்லையற்ற சந்தோசம் நிறைந்த நாள் என்று சாந்தனின் இளைய சகோதரன் தில்லையம்பலம் சுதாகரன் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இன்று புதன்கிழமை காலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எமது செய்திப்பிரிவுக்கு சாந்தனின் சகோதரர் தன்னுடைய மனநிலை தொடர்பில் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் முழுமையான வடிவம். வணக்கம்..! இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த சந்தோசத் தடைகளும் இல்லை. இதே தான் ஏனைய ஐந்து பே…
-
- 5 replies
- 867 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை ஆகிறார்கள். இதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், ‘’பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்? ராஜீவ்காந்தி என் தந்தை என்பதற்காக கூறவில்லை. நாட்டிற்காக சொல்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116763 ====================================== ஈழத்தில் ராஜீவின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள்.. தொடர்பில் ராகுல் காந்தியை விசாரிக்க.. சர்வதேச நீதிமன்றத்தில் அவரை சரணடைய சர்வதேச பொலிஸுக்…
-
- 6 replies
- 782 views
-
-
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இந்திய வீட்டுத் திட்டத்திற்காக 15 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 441 குடும்பங்கள் விண்ணப்பித்திருந்து அவர்களின் விபரங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இருந்தும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் கூடிய புள்ளிகள் பெற்ற 8 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 150 குடும்பங்களே இத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, அனலைதீ…
-
- 0 replies
- 381 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது. காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 175 பொதுமக்கள் சாட்சி யமளித்திருந்தனர். சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 13 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளித்திருந்தனர். இவ்வாறு சாட்சியமளித்த மக்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியத்தை முன்வைத்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் ஆணைக்குழுவ…
-
- 0 replies
- 292 views
-
-
ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னர் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. சுமார் 25 வருடங்களாக சிறைவாசம் இருந்த இந்த அரசியல் கொலை குற்றவாளிகளுக்கு இன்று தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும் நிவாரணம் வழங்கி இருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வரவேற்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை முன்மாதிரியாக கொண்டு, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் குற்ற தண்டனை கைதிகளுக்கும், நீதிமன்ற விசாரணை கைதிகளுக்கும், போலிஸ் விசாரணை கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென இலங்கை அரசை நாம் க…
-
- 1 reply
- 436 views
-
-
இன்று காலை புதுதில்லியில் இருந்து சென்னை வந்த வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: “1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 இல், பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில், குற்றம் அற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன் பேரறிவாளர் ஆகிய ஆகிய மூவர் உட்பட, 26 பேர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நால்வருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. பின்னர் நளினியின் கருணை மனு மீது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடைசியாக, மேற்கண்ட மூவருக்கும் தூக்கு உறுதி செய்யப்பட்டது. 98 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்குப் பின்னர், இவர்கள் மூவரும் கடந்த 16 ஆண்டுகளாகச் ச…
-
- 2 replies
- 767 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படது. இதில்…
-
- 68 replies
- 4.4k views
-
-
விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமாம் - பொதுபல சேனா போர்க்கொடி! [Wednesday, 2014-02-19 12:27:02] அரசாங்கத்தின் மீதுள்ள பழிவாங்கல்களுக்காக தாய் நாட்டையே காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டினையே விக்னேஸ்வரன் செய்கின்றார். சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. வட மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் போதுமான அதிகாரங்கள் வழங்கப்பட்டும் பிரச்சினைக்கு தீர்வுகாண இவர்கள் முயற்சிக்கவில்லை. நாட்டை பிரித்து தனி ஆட்சி நடத்தவே கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் முயற்சிக்கின்றனர் எனவும் அவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியா…
-
- 2 replies
- 572 views
-
-
டலஸ் அழப்பெருமாவும் பான் கீ மூனும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை! - [Wednesday, 2014-02-19 12:06:42] இலங்கை இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெருமவிற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலானர் பான் கீ மூனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய முனைப்புக்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இளைஞர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச சவால்களில…
-
- 0 replies
- 213 views
-
-
மேல்மாகாண சபை தேர்தலில் மனோ கணேசனுக்கு ஆதரவு: டெலோ அமைப்பு அறிவிப்பு [Wednesday, 2014-02-19 11:56:12] எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பது என்று டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தின் போது டெலோ அமைப்பு மனோ கணேசனுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இந்த முடிவை ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் ஹென்றி மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 217 views
-