Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேல்மாகாண சபை தேர்தலில் மனோ கணேசனுக்கு ஆதரவு: டெலோ அமைப்பு அறிவிப்பு [Wednesday, 2014-02-19 11:56:12] எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பது என்று டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தின் போது டெலோ அமைப்பு மனோ கணேசனுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இந்த முடிவை ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் ஹென்றி மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.…

  2. பாதிப்பிற்குள்ளான வடக்கு பாடசாலைகளை மீளக்கட்டி வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்: [Wednesday, 2014-02-19 11:51:21] யுத்த பாதிப்பிற்குள்ளான வடக்கு பாடசாலைகளை மீளக்கட்டி வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வடமாகாணசபை அங்கீகாரம் வழங்கவுள்ளது. வன்னியிலுள்ள மூன்று பாடசாலைகளை சர்வதேச தரத்தில் புனரமைக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் முயற்சிக்கு இலங்கை அரசின் மத்திய அமைச்சரவை ஏற்படுத்தியிருக்கின்ற நெருக்கடிக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையில்; இன்று விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு நேற்றையதினம் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. முக்கியமா…

  3. பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், தற்போது வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103254/language/ta-IN/article.as…

  4. வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளை முழு வசதிகளையும் கொண்டதாக புனரமைக்க, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வைத்த திட்டத்தை, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி பெண்கள் பாடசாலை, மன்னார் மாவட்டத்தில், முசலி மகா வித்தியாயம் ஆகியவற்றை முழுவசதிகளுடன் புனரமைத்துத் தர அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் முன்வந்திருந்தது. வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் சிறிலங்கா கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட இந்த யோசனையை, சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீ்ர்மானம் கொண்…

  5. வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். திபெத்தில் சீனர்களின் குடியேற்றத்தைப் போன்றும் பலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றத்தைப் போன்றும் செயற்பட்டு வடக்கு கிழக்கில் சிங்களவர்களைச் குடியேற்றி சிறுபான்மையினரை இல்லாதொழிக்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவற்றுக்கு வெறுமனே கருத்துக்களை வெளியிட்டுக்…

  6. கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, தனது அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக புத்தளத்திற்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தது. கொழும்பு போன்ற இடங்களில் கடத்தப்பட்ட - காணாமற் போனோரின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இங்கு சாதாரண முறையில் பொலிஸில் முறையிட்டே காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் அது தெரிவித்தது. யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு நேற்றுமுன் தினம் கொழும்பு திரும்பியுள்ள காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத் தகட்ட நடவடிக்கை குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன், …

  7. எம்.,ஸட். ஷாஜஹான் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள வீடுகளுக்குள் திட்டமிட்ட முறையில் நுழைந்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளளைக் கோஸ்டியைச் சேர்ந்த பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள், வாகனங்கள், நகைகள்; உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குருநாகல், மினுவாங்கொடை, வலல்லவிட்ட, வெல்லவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். குறித்த சந்தேக நபர்களை நேற்று இரவு மினுவாங்கொட, ஆண்டி அம்பலம ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது…

  8. யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் 12 ஆயிரம் உறுப்பினர்களை கொலை செய்யாது அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் துரைமாருக்கு இது மறந்து போய்விட்டது. போரில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக எம்மில் சிலரே கூறுகின்றனர். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் ஒன்றில் எப்படி ஈடுபடுவது. போரில் மக்கள் கொல்…

  9. இராணுவத்தை ஆதரித்த மக்களையே சுட்டுக்கொன்ற அரசாங்கம் வடக்கில் என்ன செய்திருக்கும் என்று புரிகிறது! – விஜித ஹேரத். [Tuesday, 2014-02-18 07:54:02] மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் அழுத்தங்களை வெற்றிகொள்ள முடியும் என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாகும். தெற்கைச் சேர்ந்த மக்களை அரசாங்கம் சுட்டுக் கொலை செய்துள்ளது. இராணுவத்திற்கு ஆதரவளித்த வெலிவேரிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த அரசாங்கம், வடக்கு மக்களை எவ்வாறு நடத்தியிருக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. நாட்டில் ஜனநாயகத்தை நி…

  10. சம்பந்தன் ஏற்படுத்திய திருப்புமுனை சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார். இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வ…

  11. 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது தான் மட்டும்தான் என தெரிவிக்கிறார் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். மட்டக்களப்பு, அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமி மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதன்போது, அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமென்று நீங்கள் ஒருவர் மட்டும் மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்களென என்னிடம் அவர் கேட்டார். உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில…

  12. ஐநாவின் தீர்மானங்களில் இருந்து மீள தென்னாபிரிக்க கயிற்றை பற்றிக்கொண்டது இலங்கை:- விசேட தூதுவராக சிரில் றம்போஷ் நியமனம்- இலங்கையின் நல்லிணக்க செயன்முறை தொடர்பாக இணைந்து செயற்படுவதற்கான விசேட தூதுவராக சிரில் றம்போஷவை தென்னாபிரிக்கா நியமித்துள்ளது இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டை முன்நோக்கி கொண்டு சொல்லும் வகையில் இவரது நியமணம் அமைந்துள்ளதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது. வெள்ளையர் அரசாங்கத்துடன் 1991ஆம் ஆண்டு நிறப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்த பேச்சுவார்;த்தையில் ஆபிரிக்க தூதுக்குழுவிற்கு சிரில் றம்போஷ தலைமை தாங்கினார். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் தென்னாபிரிக்காவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இலங்கை தூதுக்குழுவினர் எதிர்வரும் 21…

  13. "கருணா குழுவினரால் கடத்தப்பட்ட அண்ணா எங்கு என்றே தெரியாது GTBC.FM விழுதுகளிற்கு தம்பி வழங்கிய செவ்வி-

  14. அரசியல் களத்திலிருந்து மனோவை அகற்றச் சதி? கொழும்பில் இ.தொ.கா.வை போட்டியிட வைத்து அரசாங்கம் ஒரு கணக்கு போடுகிறது என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது. பிரபல மலையக கட்சியின் தலைமையை எதிர்காலத்தில் ஏற்பதற்காக காத்திருக்கும் ஒரு இளம் ஊவா மாகாண அரசியல்வாதி, இந்தத் தகவலை வாய்த்தவறி கசிய வைத்துள்ளார். அந்தக் கணக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கு. ஒன்று இலங்கையில் தமிழர்களை ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்று திட்டவட்டமாக பிரிப்பது. இரண்டு, இந்த இரு பிரிவு தமிழர்களையும் ஒன்று சேர்க்கும் மையப்புள்ளியாக திகழும் மனோ கணேசனை அரசியல் சமன்பாட்டில் இருந்து அகற்றுவது. இன்றைய அதிகாரப்பூர்வ சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்று இரண்டு பிரிவுகள் இருப்பதாக சொல…

  15. (M.Z.Shajahan) நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல நகை மாளிகை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுவல் லங்கா நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது தலையில் ஒருவர் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கேட்டுள்ளார். மற்றைய நபர் பணத்தை எடுத்து…

  16. சனல் 4 தொலைக்காட்சியினால் அம்பலப்படுத்தப்பட்ட சிறீலங்காவின் போர்க்குற்றச் சாட்சியப்படத்தில் கைகள் கட்டப்பட்டு நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட நிலையினிலுள்ள மேலுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தமிழீழம் பருத்தித்துறையினைச் சொந்த இடமாகக்கொண்ட பேரம்பலநாதர் பிரதீபன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுவாகல் - முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டின் மே 18 ம் திகதி கடைசியாக அவரை சிலர் கண்டதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயிருந்த வேளை அவரிற்கு 30 வயதாகும். சுமார் நான்கரை வருட இடைவெளியின் பின்னதாக அவரது சகோதரி சனல் -4 வெளியிட்ட புகைப்படத்தின் அடிப்படையினில் தனது சகோதரனை அடையாளம் காட்டியுள்ளார். சனல் 4 போரின் பின்னராக முதலாவதாக 2010 மே 20 ம் திகதி வெளிக்கொணர்ந்த போர்க்குற்…

  17. ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் இல்லை! – நரேந்திரமோடி உறுதிமொழி. [Monday, 2014-02-17 17:36:48] தமது கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படாது என நரேந்திர மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகவும் வைகோ குற்றம…

  18. சிறிலங்காவில் இடம்பெற்ற மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் முன்னிலைப்படுத்துவது சிறிலங்கா அரசாங்கத்துக்கு புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், மத சிறுபான்மையினர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அவ்வப்போது கண்டித்து வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தீர்…

  19. பொருளாதார தடைகளை கண்டு இலங்கை அஞ்சாது! – மார்தட்டுகிறார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா. [Tuesday, 2014-02-18 08:05:04] மனிதஉரிமைகளைக் காரணம் காட்டி, ஒரு நாடும் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதித்தால்,அதனை கண்டு இலங்கை அஞ்சாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். போர் முடிந்த பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை உரிய வகையில் கட்டியெழுப்பியுள்ளது. எந்த ஒரு நாடும் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்தாலும் அதற்கு ஈடுகொடுக்க இலங்கை தயாராகவே உள்ளது.இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது. மேற்கத்தைய நாடுகளுக்கு ஜனாதிபதி அடிபணிய மறுப்பதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு ம…

  20. ஆணைக்குழுவிடம் பதில் கேள்வி எழுப்பி வாயை அடைத்த காணாமற்போனோரின் உறவினர்கள்! – சாட்சியப்பதிவுகளின் தொகுப்பு. [Tuesday, 2014-02-18 07:32:55] யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து எல்லா இடமும் ஆமியும் செக் பொயின்ட்டும் இருக்கும் போது புலிகளுடன் உங்கள் மகன் தொடர்புபட்டவரா என்ற கேள்வியை நீங்கள் எப்படி என்னிடம் கேட்பீர்கள் என தாயார் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சம்வம் ஒன்று இன்று இடம்பெற்றது. காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் கடந்த 4நாட்களாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. டி நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்ள பகுதிகளுக்கான பதிவுகள் நேற்று மாவட்டச் செயலகத்…

  21. சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமது மகனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிபதிகள் மற்றும் அதற்காக போராடியவர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இப்போது இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ள சாந்தனை தான் கடந்த 25 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் காட்டப்படும் அவரது புகைப்படத்தை மட்டுமே தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார். யாழ் ம…

  22. புலிகளை நினைவுகூர இடமளிக்க முடியாது! – நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு. [Tuesday, 2014-02-18 08:00:05] போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகில் எந்த நாடும் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிப்பதில்லை எனவும் அவரது கோரிக்கை புலிகளின் பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வமான அங்கீகாரம் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று கூறியுள்ளன. போரில் கொல்லப்பட்ட புலிகளை நினைவுகூர அரசாங்கம் இடமளிப்பதில்லை என மனிதஉரிமை ஆணையாளரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்த்…

  23. விசா மறுப்பு செய்தி பொய்; மீண்டும் ஜெனீவா செல்வேன்: அனந்தி -சுமித்தி தங்கராசா ஜெனீவா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டதான செய்திகள் பொய்யென மறுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவில் சட்ட அலுவலராக சட்டத்தரணி சமிந்த அத்துகோரல இருப்பது புரியாத புதிராக இருப்பதாகவும் இதனாலேயே காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் நாங்கள் கேட்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். காணாமற் போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் …

  24. புலிகளின் மருத்துவப் பொறுப்பாளரின் மனைவி: என் கணவரை விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை அடையாளம் காட்டமுடியும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் றேகானின் (றேகா) மனைவி துளசிகா, இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தனது கணவர் சரணடைந்த இராணுவ அதிகாரியினை அடையாளம் காட்டமுடியும் என தெரிவித்துள்ளார். அங்கு தனது சாட்சியத்தில், இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு மே மாதம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.