Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெற்ற மகனின் உயிர்காக்க ஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமில்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபது வயதுப் பெண், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு திண்ணக் கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. அவள்தான் காஞ்சிபுரம் செங்கொடி. இருபத்து ஏழு வயது நிரம்பிய தமிழ் உணர்வாளர். கூடப் பிறந்தால்தான் தொப்புள் கொடி உறவா... இல்லையில்லை... தமிழர் என்ற அடையாளத்துக்குள் வரும் அத்தனை பேரையும் தன் தொப்புள் கொடி உறவாக மதித்த இளம் பெண். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உயிரைக் காக்க தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் (ஆகஸ்ட் 28, 2011) அந்த கன்னித் தாயின் உயிர்த்…

  2. புயலடிக்கின்றது என்று கரையொதுங்கியவன் எங்கள் நாட்டினை 1505 களிலேயே ஆகிரமிக்கத் தொடங்கினான் கறுவாப்பட்டைக்கும் ஏலக்காயுக்கும் ஏலம்போனது எமது நாடு 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாட்களின் பின் இலங்கையின் ஆட்சியாளர்களினால் இன்றுவரைக்கும் நிலக்கொள்ளைகள் நின்றுவிடாது தொடர்ந்து கொண்டே உள்ளது சீறீலங்கா ஆட்சியாளர்களே ஆக்கிரமிப்பாளர்களாக மாறி தமிழர் நிலங்களை ஏப்பமிட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்த விடயம் இந்த நிலக்கொள்ளையில் நாம் விடுபட்டுக்கொள்வதினை விடுத்து மீண்டும் மீண்டும் நாம் ஏமார்ந்துபோகக்கூடாது குறிப்பாக இளையவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் 16-02-2014 அன்று சுழிபுரம் மேற்கு கிராமத்திலே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சில விமர்சனங்களும் ஆலோசை…

  3. நவரத்தினம் கபில்நாத் 'கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள்' என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை இரவு போடப்பட்டுள்ளன. சிவசேனா, (பிற மதத்தவரின் கருத்தில் சாத்தானின் பிள்ளைகள்) என உரிமைகோரப்பட்டுள்ள இத் துண்டு பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை. இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை. இந்துக்கள் பிற மத கடவுள்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை. உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக…

  4. சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவி நிதியை இந்தியா அதிகரித்துள்ளது. 2014-15ம் நிதியாண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கு 500 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரத்தினால், நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்ட அறிக்கையிலேயே, இதுகுறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில், வெளிநாடுகளுக்கான பொருளாதார ஒத்துழைப்புக்காக, இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு, நிதி அமைச்சினால், 8335 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 7038 கோடி ரூபாவாக இருந்தது. இந்த ஆண்டு சிறிலங்காவுக்கான நிதி உதவி 900 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள…

  5. உள்நாட்டில் தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்கள் அனைத்துலக சமூகத்திடம் தீர்வு கேட்டு நிற்பதில் தவறேதும் இல்லை என்று வட்க்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லாதபோது, அது தொடர்பாக அனைத்துலக விசாரணை கோருவதில் என்ன தவறு உள்ளது? சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எங்களோடு பேச்சு நடத்துகின்றபோது, எங்களுக்கு பலவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு கடைசியில் எதுவுமே கிடைக்க…

  6. ஆணைக்குழுவின் மொழி பெயர்ப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றது. அத்துடன் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்படுவர்களுக்கு உரிய காலத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை என்று அமர்வுகளின் அவதானிப்பாளர்களாகச் செயற்பட்டு வரும் மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம் பெற்ற காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகளின் அவதானிப்பாளர்களாக இருந்த மன்னார் பிரஜைகள் குழுவினர் நேற்றைய அமர்வுகளின் முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அங்கு அவர்கள் தெரிவித்தவை வருமாறு: காணாமற்போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.ஆனாலும் அவர்கள் எப்போது விசாரிக்கப்படுவார்…

  7. ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு பாதகமாகவே அமையும் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டோம். இப்போது நவநீதம்பிள்ளையின் அறிக்கை எங்களுக்கு பெரிய விடயமல்ல என்று ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். யார் எவ்வாறான தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடுகளுக்கு இடமில்லை. சர்வதேச சக்திகள் இலங்கையை சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்த …

  8. சர்வதேசத்தின் அவசரத்திற்காக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அதேபோல் இலங்கையை சீண்டிப்பார்க்கும் செயற்பாட்டினை சர்வதேசம் உடனடியாக கைவிட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் எம்மால் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பரிந்துரையொன்றினை சமர்ப்பித்துள்ளார். இது த…

  9. ஒருவர்: அண்ணே இளநீர் என்ன வெல..? இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா... ஒருவர் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீங்க..? ஐந்து ரூபாய்க்கு தாங்க.. இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்சி, கொக்ககோலா விக்கும்... அங்க போயி இருபது ரூபா பெப்சிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....

  10. இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள். இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன். இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான். ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை…

  11. கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு 2011 இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறைய…

  12. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினாலும், பௌத்த பிக்கு ஒருவராலும் 39 சிங்கள குடும்பங்கள் குறியேற்றப்பட்டுள்ளன. இவ்வேளை 1990ம் ஆண்டுக்கு முன் இப்பகுதியில் 5 சிங்கள குடும்பங்களே இருந்துள்ளன. இவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் பகுதியில் குடியேறியுள்ளனர். இவர…

  13. (ஆதவன்) காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹமவின் பங்கேற்பின்றி யாழ்ப்பாணத்தில் அந்த ஆணைக்குழுவின் விசாரைணகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்.மாவட்டத்தில் இன்றுடன் நான்காவது நாளாக தொடந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணைகளின் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது 10.55 மணியளவில் 17 ஆவது நபரின் விசாரணைகள் முட…

  14. (க.கிஷாந்தன்) நுவரெலியா ராகலை தோட்டத்தின் லயன் குடியிருப்பொன்றிலுள்ள வீட்டின் மேல் நேற்று இரவு 11 மணியளவில் விண்கல் ஒன்று வீழ்ந்ததில் குறித்த வீட்டின் சமயலறைப்பகுதி சேதடைந்துள்ளது. டீ.எம். கருணாரத்ன வினுடைய வீட்டின் மீதே விண்கல் விழுந்துள்ளது. பாரிய சத்தம் கேட்டதை உணர்ந்த வீட்டு உரிமையாளர்அதனை அவதானித்த போது வீட்டின் சமையலறைப் பகுதி தீப்பற்றி எரிவதை கண்டுள்ளார். இதன்போது விண்கல்லை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக ராகலை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து பொலிஸார் உடனடியாக குறித்த வீட்டிற்கு விரைந்துசென்று நிலைமைகளை அவதானித்தனர். இதேவேளை, குறித்த பொருள் விண்கல்லா? அல்லது வேறேனும் பொருளா ? என ஆராய்வதற்காக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி மொரட்டுவை ப…

  15. ஒரே ஆண்டில் 13 ஆயிரம் பேர் இலங்கையில் புற்றுநோயால் மரணம்! – சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல். [Monday, 2014-02-17 07:37:33] இலங்கையில் புற்றுநோய்கள் காரணமாக 14 ஆயிரம் பேர் 2013 ஆம் ஆண்டில் மாத்திரம் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2500 பேர் வாய்ப்புற்று நோய் காரணமாக மரணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது அதேநேரம், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: ஒருவர் ஒரு வெற்றிலைக் கூறை மெல…

  16. தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சடலம்! – போர்க்காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். [Monday, 2014-02-17 07:46:34] துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பொலிஸ் புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று காலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம, வயல்வெளி பகுதியில் நேற்றுக் காலை இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜே.வி.எம். சமரகோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்த…

  17. புலம்பெயர் தமிழர்கள் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்! – கோத்தபாய குற்றச்சாட்டு. [Monday, 2014-02-17 17:55:22] வெளிநாட்டுப் பிரஜைகள் மிக இலகுவாக இலங்கைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக நடமாடுவதாகவும், இந்த சுதந்திரத்தை புலம்பெயர் தமிழர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியிருப்பவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வீசா காலம் முடிவடைந்த பின்னர் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ அதேவிதமான நடவடிக்கை இலங்கையிலும் எடுக்கப்படும். …

  18. ஆங்கிலேயர் காலத்துக்குப் பிந்திய இனப்படுகொலைகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை. [Monday, 2014-02-17 07:28:54] இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றி மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்ற இனப்படுகொலைகளை விசாரிப்பதாக சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுச்சபை கோரியிருக்கிறது.அந்தக் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக…

  19. ' 'மின்சார கதிரை கதை' வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்படும் பொய் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டராநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபகர் விஜய குமாரதுங்கவின் 26ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க குமாரதுங்க. விஜய குமாரதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர். இதேவேளை சர்வதேச அழுத்தத்தின் ஊடாக மின்சார கதிரையில் அமர்த்துவதற்கான முயற்சி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் வினவினர். சர்வதேசம் தொடர்பில் தனக்கு நன்றாக தெரியும் எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா சர்வதேசத்துடன் மிக பெரிய …

  20. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தமது பிள்ளையை தேடிச் சென்ற தனது கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றதாக யாழ். அரச செயலகத்தில் பெண்மணி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது. அதில் சாட்சியமளித்த ஐயம்பிள்ளை புரணம் என்ற பெண் தனது சாட்சியத்தில், மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்த தன்னுடைய மகன் ஐயம்பிள்ளை நிரூபன் (வயது 20) என்பவரும் அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி மானிப்பாய் கஜபா முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட…

  21. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- 'ஜனாதிபதி ஆணைக்குழு முன்பான சாட்சியங்களில் இராணுவத்தினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கடத்தல் முறைப்பாடுகளே அதிகம்' இலங்கை அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகிவருகின்றன. இன்று யாழ். அரச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளில் சில வருமாறுஇ யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனுவேற்பிள்ளை என்ற தந்தை தனது மகன் மனுவேற்பிள்ளை சுதர்சன் (வயது 31) கடத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளித்தார். 2006-09-11 அன்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஐவர் எமது வீட்…

  22. மாகாணசபையை எவ்வாறு இயக்குவது என்று உதய கம்மன்பிலவிடம், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணசபைக்கு ஏன் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நான், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லையென்பது பிரச்சினையல்ல, இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டேன். மேற்கு மாகாணசபையில், உதய கம்மன் பில எவ்வாறு பணியாற்றுகிறார் என்ற உதாரணத்தையும் சுட…

  23. -சுமித்தி தங்கராசா 'எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்' என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தந்தையொருவர் தெரிவித்தார். இதேவேளை, 'எனது மகன் காணாமல் போகவில்லை. அவரை இராணுவத்தினர் கைது செய்தனர். எனவே அவரை காணாமற் போனவர் என்று கூறாதீர்கள்' என்றும் ஆணைக்குழுவினருடன் மேற்படி தந்தை முரண்பட்டுள்ளார். காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை கடந்த வெள…

  24. காணாமற்போனவர்கள் தொடர்பாக, சுதந்திரமான, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா சென்று திரும்பியுள்ள அவர், தனது பயணம் குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிடுகையில், ஜெனிவாவில் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புக்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் குறித்தும், காணாமற்போனவர்கள் தொடர்பாக உள்ளூர் விசாரணை என்ற பெயரில் நடக்கும் கண்துடைப்பு நடவடிக்கை தொடர்பாகவும், விபரமாக எடுத்துக் கூறியுள்ளேன். வடக்கு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு அமைய, அதன் பிரதிநிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜெனி…

  25. ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், எதிர்தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பிக்க, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் தயாராகி வருவதாக,சிறிலங்கா அரசாங்க வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான, மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் கலந்தாலோசித்து வருகின்றன. சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்துலக விசாரணை நடத்த வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலேயே, இந்த எதிர்த் தீரமானத்தைக் கொண்டுவருவது குறித்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்தச் செய்தியில் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.