Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம் , பிரான்சு நாடாளுமன்றத்தில்! [Tuesday, 2014-02-11 13:27:50] சிறிலங்கா அரசபடைகளால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்ககைகள் மற்றும் போர்க்குற்றங்களை மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி, உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய NO FIRE ZONE(சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம்) ஆவணப்படம், 07-02-2014 ஆம் திகதி பிரான்சு நாடாளுமன்றத்தில் காட்சிப் படுத்தப்பட்டது. பிரித்ததானியாவின் சானல் 4 தொலைக்காட்சிக்காக இந்தப் படத்தை இயக்கிய திரு.CALLUM MACRAE அவர்களும் இந்நிகழ்வின்போது நேரடியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். …

  2. யாழ்.மாவட்­டத்தில் தங்­கி­யி­ருந்து யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்­வி­கற்கும் வெளி­மா­வட்­டங்­களைச் சேர்ந்த மாண­வி­களின் விப­ரங்­களை இரா­ணு­வத்­தினர் என தம்மை கூறும் நபர்கள் திரட்டி வரு­கின்­றனர். யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வெளி­மா­வட்­டங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான மாண­விகள் கல்வி கற்று வரு­கின்­றனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் பல்­க­லைக்­க­ழ­கத்தை அண்­டி­யுள்ள தனியார் வீடு­களில் தனி­யா­கவும் குழுக்­க­ளா­கவும் தங்­கி­யுள்­ளனர். இவ்­வாறு தங்­கி­யி­ருக்கும் மாண­வி­களின் விப­ரங்­க­ளையே இரா­ணு­வத்­தினர் எனத் தம்மை இனம் காட்­டிக்­கொள்ளும் நபர்கள் திரட்­டி­வ­ரு­கின்­றனர். இச் சம்­பவம் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி …

  3. 1987ம் ஆண்டிலேயே ஜெனிவாவில் இந்தியாவுக்கு எதிராக தாம் தூதரகங்களில் பரப்புரைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சரும், மனிதஉரிமைகளுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க. அடுத்தமாதம், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் இடையில், பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. வரும் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா குழுவுக்கு யார் தலைமையேற்பது என்பது தொடர்பாக கடும் பனிப்போர் நிலவுகின்ற நிலையில், இருவருமே அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தனது கடந்தகால…

  4. வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. 'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் போட்டுக் கொடுத்து…

  5. தெற்கிலுள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக கூறி, அவர்களைத் தவறான வழியில் திசைதிருப்ப அனைத்துலக சக்திகள் ஜெனிவாவில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலி, உடுகமவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போது வெளிநாட்டு செய்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருகின்றன. இவர்கள் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகக் கூறி வருகின்றனர். வடக்கு மக்களின் மனிதஉரிமைகள் தொடர்பாக மட்டும் குரல் எழுப்பினால் தெற்கு மக்களின் ஆதரவை பெறமுடியாமல் போகும் என்பதால், அவர்கள், இப்போது தெற்கு மக்களின் மனிதஉரிமையும் மீறப்படுவதாக ஒரு புரளியை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றின் ஆதரவை பெற்ற…

  6. வடக்கு மாகாணசபை, தனியான வீதி போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மான வரைவு விரைவில், வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது. இந்த தீர்மான வரைவைத் தயாரிப்பதற்காக, வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு, பல்வேறு தனியார் போக்குவரத்து சங்கங்களுடன் கலந்துரையாடி அவற்றின் அலோசனைகளைப் பெற்று வருகிறது. தற்போது, தீர்மான வரைவைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும். ஒருமாதத்துக்குள் இந்தப் பணி முடிவடையும் என்றும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தீர்மான வரைவுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அதிகாரிகள், மன்னார்…

  7. அமெரிக்க நாடாளுமன்றத்தில், சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு, சிறிலங்கா மீதான நடவடிக்கை எடுப்பதற்கு ஒபாமா நிர்வாகத்துக்கு மேலதிக அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் செனெட்டர் றிச்சர்ட் புர் மற்றும் ஜனநாயக் கட்சியின் செனெட்டர் பொப் கசே ஆகியோர் இணைந்து, சிறிலங்காவில் பொறுப்புக்கூறுவதற்கான அனைத்துலகப் பொறிமுறையை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மான வரைவை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பித்துள்ளனர். இந்த தீர்மான வரைவு, செனெட் வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான வரைவு நடைமுறையில் சிறியளவு தாக்கத்தையே…

  8. சிறிலங்காவின் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் சிறுவர்கள் தமது கல்வியை இடைநிறுத்துவது அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வடக்கின் எதிர்கால அபிவிருத்தியில் பொருளாதார அழுத்தம் மற்றும் வறுமை போன்றன தாக்கத்தைச் செலுத்தும் நிலையில் தற்போது மாணவர்கள் இடைவிலகுகின்ற எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வடக்கில் வாழும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடைவிலகுவதே தற்போது அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. போரால் முற்றாகப் பாதிக்கப்பட்ட வடக்கில் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ள…

  9. டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் 48 வைத்தியசாலை ஊழியர்கள் 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். இதனால் பல மணி நேரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.இதன் பின்னர் வைத்தியர் ஏனைய ஊழியர்களின் உதவியுடன் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/?q=node/361377

  10. வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் ஹகோலியங் ஸு இன்று வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது தமது வடபகுதிக்கான விஜயத்தின் நோக்கம் வடமாகாணத்தில் பாரியளவான அபிவிருத்தி வேலைதிட்டத்தை முன்னெடுப்பது என தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி பணிகள் தற்போது தேவைப்படுகிறது எனவும் வடமாகாண முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ…

  11. எந்தக் காரணத்துக்காகவும் படையினரைக் காட்டிக் கொடுக்காது அரசாங்கம்! – அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு. [Monday, 2014-02-10 07:48:26] ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யத் தயாராக இருப்பதாக, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மை அமர்வுகளில் பங்கேற்குமாறு பணித்தால் தாம் பங்கேற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கியமான அமர்வுகளில் மஹிந்த சமரசிங்க இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும், தேவை ஏற்பட்டால் பிரதிநிதிகள் குழுவிற்கு…

  12. புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம். [sunday, 2014-02-09 07:39:16] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரதிநிதியான, ஸ்டீபன் ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது இலங்கை அரசாங்கத்துக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாத முற்பகுதியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனத்தில்(ஐஓஎம்) , விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புக்கு…

  13. இலங்கைப் பெண்கள் முழுஉரிமைகளுடன் வாழ்கின்றனர்! – பெங்களூர் மாநாட்டில் சிராந்தி ராஜபக்ச பெருமிதம். [Monday, 2014-02-10 07:25:19] பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைககளை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இலங்கை அரசியலமைப்பின் படி ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான சிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறீ சிறீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் மாநாடு, இந்தியாவின் பங்களுர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆறாவது முறையாக நடத்தப்படும் இந்த மாநாடானது இம்முறை 'பரிபூரணமாக அபிவிருத்தி' என்ற தொ…

  14. ஜெனிவாவில் ஆதரவு கோரி சவூதி சென்றார் அமைச்சர் பௌசி! [Monday, 2014-02-10 07:42:55] ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைப் பெறுவதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வரும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று சவூதி அரேபியாவுக்குப் பயணமானார். சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் உட்பட முக்கியஸ்தர்களை சந்திக்கும் அமைச்சர் பெளஸி போருக்குப் பின்னர், இலங்கையின் நிலைமை மக்களின் புனர்வாழ்வு, மீள்நிர்மாணப் பணிகள் சமாதான சூழ்நிலை பற்றியும் விளங்குவர். ஜெனீவா மாநாட்டில் குவைத்தின் ஆதரவையும் கோரி அமைச்சர் பெளஸி, கடந்த வாரம் குவைத்தில் தலைவர்களை சந்தித்துப் பேசி விட்டு வெள்ளியன்று மாலையே இலங்கை திரும்பியிருந்தார். http://www.seit…

    • 2 replies
    • 346 views
  15. எச்சரிக்கை……...! வடக்கில் சிறுவர்கள் மத்தியில் பரவுகிறது தொழுநோய் – கிழக்கிலும் நிலை மோசம்!! [Monday, 2014-02-10 07:14:02] இலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு கூறுகிறது. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. எனினும், ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்துள்ளது. க…

  16. இளவயது கர்ப்பம் வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது! [Monday, 2014-02-10 12:48:10] இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு மக்களின் கலாசாரத்தை சீர்குலைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இந்நிலையில் ‘இளவயது கர்ப்பம்’ வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக தற்போது வலுபெற்றுவருகின்றது. இந்தப் பிரச்சினை யாழ் மாவட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் செய்திச் சேவை ஒன்று ஆராய்ந்தது. மிக அண்மைக் காலமாக வட மாகாணத்தில் பெண் பிள்ளைக…

  17. யாழ்.குடாநாட்டுப் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சமூக விரோதக் குழுவான டில்லுக் குழுவினரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படிக் குழுவினரில் கொக்குவில், தலையாழி, கேணியடி, பிடாரி கோவிலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதிற்கும் 25 வயதிற்கும் உட்பட்ட 9 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இராணுவச் சீருடைய, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும் தொகையான ஆயுதங்களும் மீட்கப்படுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை முளாய்ப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இச் சம்பவத்தில் அதிகமானவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். மேற்படிச் சம்பவ…

  18. முருகதாசன் நினைவு நாள் பிப் 12ல் ஐநா அலுவலகம் முற்றுகை: - மே 17 இயக்கம் அறிவிப்பு [Monday, 2014-02-10 20:33:10] மக்களை காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஐநா சபையானது அதன் அதிகாரிகளான பான்–கீ–மூன்,விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ் போன்றவர்களின் சுயநலத்தால் தமிழீழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாயினர்.இதனை ஐநாவின் அதிகாரியான சார்லஸ் பெட்ரி தனது உள்ளக ஆய்வறிக்கையிலேயே தெளிவாக 2012 நவம்பரில் சொல்லியிருந்தார். இந்த பெட்ரி அறிக்கையை மறைக்க நடந்த பல்வேறு சதிகளை உடைத்தெறிந்து கடந்த வருடம் இதனை சர்வதேச அரங்கில் கொண்டுவந்தோம்.அதனடிப்படையில் ஐ.நா அதிகாரிகளின் இந்த துரோகத்தினை கண்டித்து உலகமெங்கும் உள்ள ஐநாவின் அலுவலகங்களை…

  19. அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த ராஜபக்ச By ADMIN - Mon Feb 10, 3:40 am ‘ஜெனீவாவின் புதிய தீர்மானம்! அவுஸ்திரேலிய அகதிகள் – பாலா விக்கியுடன் நேர்காணல்! இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு! “ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை “ கவிதை: “தலைமுறை ஒன்று விஞ்சிய தீக்கனல்” //அகரமுதல்வன் rajapaksaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். கொமன்வெல்த் நாளை முன்னிட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேயில், ஒரு மணிநேர பிரார்த்தனை இடம்பெறவுள்ளது. இதில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், கொமன்வெல்த் அமைப்பின் தல…

  20. புலிகளின் தலைமையை கப்பல் மூலம் காப்பாற்ற முயன்றது அமெரிக்கா! – அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட தகவல். [Monday, 2014-02-10 16:23:37] போரின் இறுதிக்கட்டத்தில், சர்வதேசம் தலையிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பாக, மாத்தறை கொட்டுவேகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய மகிந்த சமரசிங்க, போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் இருந்த சில வெளிநாட்டுத் தூதுவர்கள் பாரிய அழுத்தங்களை பிரயோகித்தனர். அப்போதிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியை சந்தித்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு தாம் ஆதரவு வழங்க விருப்பம் வெளியிட்டார். அதுகுறித்த கலந்துரையாடலுக்கான அழைப்பும் எனக்கு கிடைத்தி…

  21. கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவையே! – ஐதேகவும் சொல்கிறது. [Monday, 2014-02-10 16:37:22] மாகாணசபை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவையே. யுத்தம் முடிந்த பின்னர், அரசாங்கம் தமிழரின் கோரிக்கைகளை செயற்படுத்தியிருந்தால் இன்று சர்வதேச பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாட்டில் 30 சதவீதமான சிறுபான்மை மக்களை பாதுகாக்க முடியாது அரசாங்கத்தினால் எவ்வாறு ஜனநாயக ஆட்சியினை நடாத்த முடியும்? அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இலங்கைக்கே அவமானமாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகா…

  22. இலங்கை நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்யப்படும்! – ஐ.நா துணைப்பொதுச்செயலர் சூ. [Monday, 2014-02-10 07:52:45] இலங்கை நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என ஐக்கிய நாடுகள் துணைப் பொதுச்செயலாளர் ஹவோலியாங் சூ தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சூ,இலங்கையின் மனிதஅபிவிருத்தி நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அபிவிருத்தி பங்குதாரர்கள் உள்ளிட்ட பலரையும் சூ சந்திக்கவுள்ளார். வட மாகாண மக்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  23. கொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்றுக் காலை, இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிலோன் டுடே பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான அனந்தபாலகிட்னர் தலைமையில் சங்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் புதிய நிர்வாகசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு. தலைவர் - ஏ.என்.எஸ்.திருச்செல்வம், (பிராந்திய ஊடகவியலாளர்) செயலாளர் - கே.ஜெயந்திரன், (பிரதி ஆசிரியர் - சிறப்பம்சங்கள், தினக்குரல்) பொருளாளர் - வஸ்தியாம்பிள்ளை ஜோன்சன் (மித்திரன் ஆசிரியர்) உப தலைவர்கள் - செ.பேரின்பராஜா, (பிராந்திய செய்தியாளர்…

  24. போர்க்கால இறப்புகள், இழப்புகள் குறித்து முறையான பதிவுகள் இல்லை! - வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன். [Monday, 2014-02-10 07:21:36] போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற இறப்புகள், இழப்புகள் தொடர்பாக இன்றுவரை சரியான புள்ளிவிவர அறிக்கைகள் இடப்படவில்லை என வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்- தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு…

  25. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான, ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் சிறிலங்காவும் மும்முரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே, சிறிலங்கா அமைச்சர்கள் பலரும், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ், இந்தியாவிடம், ஆதரவு கோரிய நிலையில், சீனா செல்லவுள்ளார். தற்போது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மொராக்கோவுக்கு அமைச்சர், ஜோன் செனிவிரத்னவும், அல்ஜீரியாவுக்கு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மேற்காசிய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.