ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மற்றுமொரு ‘அறகலய’வின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், பாராளுமன்ற வளாகத்தை எரிப்பதில் முடிவடையக்கூடிய நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் தொடக்கமாக இருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார். “வேலைநிறுத்தம் செய்பவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் ஊதிய உயர்வைச் சந்திக்க நிதியை உருவாக்க, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன…
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல், இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அதிபர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்க…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 02:16 PM சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவ…
-
- 7 replies
- 529 views
- 1 follower
-
-
08 JUL, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் (08) நாளையும் (09) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால், விவசாய ஒழுங்குமுறை, நில அளவையாளர், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பல்வேறு அரச துறையினர் வேலை நிறுத்தப் போட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Virakesari.lk
-
- 5 replies
- 513 views
- 1 follower
-
-
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமை…
-
-
- 11 replies
- 1k views
-
-
10 JUL, 2024 | 03:40 PM தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தைச் செலுத்தாத கம்பனிகளுடன் அரசு செய்துள்ள குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188131
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 03:35 PM திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அண்மையில் நடேஸ் குமார் வினோதி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்டார். இதனை கண்டித்து அப் பகுதியினர் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கொலையினை மேற்கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் பிணை வழங்கக் கூடாது போன்ற விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
1990 சுவசெரிய அறக்கட்டளை 95 புதிய ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் TATA Sons (Pvt) Ltd இலிருந்து பெறப்பட்ட 297 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி “1990 Suva Sariya Foundation” தொடங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது இச்செவைக்கு 450 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 பேக்-அப் ஆம்புலன்ஸ்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் TATA Sons (Pvt) Ltd நிறுவனம் 50 ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகவும், Asia Development Bank 45 ஆம்புலன்ஸ…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும் முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தலை நடத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்தும் காலப் பகுதி தொடர்பாக இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழ…
-
- 2 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUL, 2024 | 02:58 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தேன். அங்கே வடக்கு மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தங்களின் பிரச்சினைகளை முன்வை…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 10 JUL, 2024 | 09:32 AM 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்திற்கு பின்னர் எக்கா…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 03:39 PM ரொய்ட்டர்ஸ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணைமுறிபத்திர உரிமையாளர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளை அடுத்த சில வாரங்களில் இலங்கை பூர்த்தி செய்யும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளான இந்தியா, சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவில் தங்களுக்குள் போட்டியிடும் இரு பெரும் நாடுகளும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளதுடன் முக்கிய முதலீட்டாளர்களாக காணப்படுகின்றநிலையில், இலங்கையில் புவிசார் அர…
-
-
- 3 replies
- 321 views
- 2 followers
-
-
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு maheshJuly 10, 2024 வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள் புடைசூழ மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவே…
-
- 0 replies
- 264 views
-
-
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் - பாதை திறந்த முதல் நாளில் சுமார் 7000 பேர் பயணம் PrashahiniJuly 10, 2024 வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை (11) மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது. அதேவேளை களுதாவளையிலிருந்து ஒருநாள் பாதை திறப்பை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. …
-
- 0 replies
- 152 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் படுகொலைகள்; 29ஆவது நினைவேந்தல் நேற்று உணர்வுபூர்வம்! நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின், 29ஆவது ஆண்டு நினைவுதினம் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை நினைவுகூரப்பட்டது. பங்குதந்தை சந்திரபோஸ் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவாலயத்தின் அருகில் அமைக்கபட்டுள்ள நினைவுதூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பகீரதன், ஜெயந்தன், றமணன், அனுசன் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் ந…
-
- 0 replies
- 310 views
-
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார். https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
-
- 9 replies
- 924 views
- 2 followers
-
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்…
-
- 5 replies
- 527 views
- 1 follower
-
-
08 JUL, 2024 | 06:44 PM (நா.தனுஜா) பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது த…
-
- 3 replies
- 443 views
- 1 follower
-
-
09 JUL, 2024 | 12:34 PM இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கிடைக்கப் பெறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கூறி வாட்ஸ் அப் , முகநூல் மெசன்ஜர் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கு பல குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறான குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் எமது சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் தரவுகளை வேறு தரப்பினர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாற…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் (06) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/305450
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 10:40 AM (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவுமென ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச்செயலணியில் முக்கிய அரச நிறுவனங்களும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற கட்டமைப்புக்களும் உள்ளடங்குவதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணையை இலகுபடுத்தல், அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தல் மற்றும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான …
-
- 1 reply
- 202 views
- 2 followers
-
-
08 JUL, 2024 | 06:35 PM (நா.தனுஜா) இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையிலான குழுவினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் இந்தியாவின் ஆளுந்தரப்பான பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார். அதன்படி இலங்கைத் தமிழரச…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடல். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல் அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இடைப்பட்ட …
-
-
- 50 replies
- 4.1k views
-