ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143519 topics in this forum
-
There is no Buddhism in the country Athuraliye Rathana Thera in an interview with Ceylon Today admits that the lifestyle of Buddhist monks had changed with time and gives the reasons for monks taking to politics. By Niranjala Ariyawansha Q: Has the bhikkhu's life pattern changed? A: Yes, the lives of bhikkhus have also changed like that of the laymen. We used to wake up early and sleep early as kids, but now we go to bed late and wake up a little late. The reason is the change in the life of the people. We return to temples late. People are too busy now and they come to hear sermons only in the night. Unlike in the past, when the people observed sil on fo…
-
- 0 replies
- 483 views
-
-
திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழிப் பகுதி முன்னர் இடுகாடாக இருந்ததென நிறுவ அரசாங்கம் முயற்சி:- 31 ஜனவரி 2014 மன்னார் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி இன்று வியாழக்கிழமை 18 ஆவது தடவையாக தோண்டப்பட்ட போது சிறு சிறு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக நிறுவ அரசும் பாதுகாப்பு தரப்பும் முற்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. மனித எச்சங்கள் மீட்கப்படும் இடங்களிற்கு அருகாக குடியமர்ந்துள்ள குடும்பங்களது வீடுகளிற்கு சென்ற படை அதிகாரிகள் குழுவொன்று அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக சாட்சியமளிக்க வற்புறுத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அருகாகவுள்ள தேவாயலயமொன்றை மையப்படுத்தி இடுகாடு இருந்ததாகவும் அந்த இ…
-
- 0 replies
- 405 views
-
-
இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையிலான குழுவினர் யாழ்ப் பாணத்துக்கு நேற்று வருகை தந்தனர். இந்திய அரசின் நிதியுதவியில் வடபகுதியில் வீட்டுத் திட்டம், கைத்தொழில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்தாய்வுக்காகவே இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்தைச் சந்தித்து, இந்திய வேலைத் திட்டங்கள் தொடர்பில் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர். சுமார் ஒரு மணி நேரம் வரையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றத…
-
- 1 reply
- 347 views
-
-
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஜெனிவாவுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று மாலை புதிய விளையாட்டுத் திடலைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. ஜெனிவாவில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இலங்கை தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. எப்படியிருப்பினும் நாடு சமாதானத்தின் பலாபலனை அனுபவிக்கிறது என்றார் ஜனாதிபதி. விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய ஒற்றுமைய…
-
- 3 replies
- 469 views
-
-
ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் ஐ.தே.க. சார்பில் கம்பஹாவில் போட்டி மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த அவர், எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவ…
-
- 0 replies
- 2.1k views
-
-
தாய்மார்களை கொச்சைப்படுத்தி முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் - மனோ முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக, இது போன்று கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், 'இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது' என பெற்ற பிள்ளைகளை இழந்த தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேச…
-
- 0 replies
- 446 views
-
-
இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் ; வாசு -சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பிற்பகல் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி…
-
- 10 replies
- 596 views
-
-
இலங்கை அரசால் இதுவரை நிறுவப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவின் விசாரணைகளும் சர்வதேச தரத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று சாடியுள்ள பிரிட்டன், சர்வதேச தரத்துக்கு ஏற்புடைய உள்ளக விசாரணைகளை இலங்கை ஆரம்பிக்குமானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுப்பிய கேள்வி யயான்றுக்குப் பதிலளிக்கும் போதே வெளியுறவு, பொது நலவாயப் பணியகத்தின் இணை அமைச்சர் ஹுகோ ஸுவைர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எந்தவொரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையும், நம்பகமானதாக சுதந்திரமானதாக வெளிப்படைத் தன்மை கொண்டதாக, சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். இன்று …
-
- 1 reply
- 467 views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில், ஜனாதிபதியும், ஜனாதிபதியின் செயலாளரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் அகதிகள் என்று எவருமே இல்லையயன்றும் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்நிலையில், இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர் எனவும் எஞ்சிய 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என்றும் அமெரிக்காவில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கடந்த திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் ஐ.நா மனித உரிம…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய முடியாது என மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு நொச்சிமுனை கிராமத்திலுள்ள மகளிர் செயற்பாட்டு அமைப்புக்கு சமையல் உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து எந்தவொரு பிரயோசனத்தையும் தமிழ் மக்கள் அடையவில்லை. கிளிநொச்சியிலுள்ள இரணைக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார். இரணைமடு குளத்தை அபிவிருத்தி செய்து அதிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தண…
-
- 0 replies
- 378 views
-
-
கனடா வந்த யாழ்ப்பாணப் பெண் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி ஜன 30, 2014 கடந்த 2012ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்து கடந்த வருட இறுதியில் கனடா வந்த 24 வயதான குடும்பப் பெண் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா வந்து மாதங்களே சில மாதங்களே ஆன நிலையில் இவர் நஞ்சருந்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது கணவர் தனது உறவுக்காரரான பெண் ஒருவரது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அவ் வீட்லேயே கணவருடன் குறித்த பெண்ணும் இருந்ததாகத் தெரிய வருகின்றது. கணவரது உறவுக்காரப் பெண் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர் என்பதும் அப் பெண்ணுக்கு 28 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொட…
-
- 1 reply
- 580 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையிலான உறவு தொடர்பில் விசரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக புலிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 2 replies
- 486 views
-
-
முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம் Tagged with: தமிழ் இனவாதிகள் அரசியல் முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்த…
-
- 0 replies
- 523 views
-
-
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் எழுச்சி சிங்கள இனவாத அரசுக்கு பாரிய நெருக்கடியாகவும் தலையிடியாகவுமே அமைந்துவருகின்றது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சியிலும் சிங்கள அரசின் கை ஓங்கியிருப்பதாக தெரியவந்திருக்கின்றமை மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இனவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளுக்கு நிகரான அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்தேறிவருகின்றமை பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரிவதில்லை. பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த றஞ்சன் என்றழைப்படும் ஸ்ராலின் சவர…
-
- 0 replies
- 811 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது. இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, '1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ஆம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி…
-
- 2 replies
- 495 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அஞ்சும் அரசு அதனை முறியடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. மனித உரிமைகள் சபையில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக உறுப்பு நாடுகளை வளைத்துப் போடும் நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்தியாவின் ஆதரவை நாடி இன்று புதுடில்லிக்கு விரைகிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இந்தியாவின் துணை இல்லாமல் ஜெனிவாவில் தீர்மானத்தை முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இலங்கை அரசு அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்குத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் தூதரகங்களை கொண்டிராத நாடுகளின் பிர…
-
- 1 reply
- 434 views
-
-
(ப.பன்னீர்செல்வம்) முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அல்ல பிரபாகரனை நினைவுகூருவதற்காகவே விக்கினேஸ்வரன் நினைவுத் தூபி நிறுவப் போகின்றார் எனக் குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். தனித் தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகளை வட மாகாண சபை மெது மெதுவாக நகர்த்தி வருகிறது. இது பயங்கரமானது என்றும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முள்ளிவாய்க்காலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட வேண்டுமென்றும்' வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/36106…
-
- 1 reply
- 488 views
-
-
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் இயத்தின் செயற்பாட்டாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியின் கீழ் பிரான்ஸிலுள்ள ஷெசி நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை, குண்டுத் தாக்கு…
-
- 0 replies
- 529 views
-
-
தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை நாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வேளையில் இந்த ஹேனமுல்லை முகாம் பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர்கள் என்னைச் சுற்றி ஓர் அரணாக…
-
- 0 replies
- 237 views
-
-
ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெனீவாவிற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாக…
-
- 0 replies
- 371 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 ஆவது தடவையாக இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது. இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் இரண்டு (2) மனித எச்சங்கள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது வரை மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழி தோண்டபபட்ட போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை. இதே வேளை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு சென்ற குற்ற புலனா…
-
- 0 replies
- 344 views
-
-
வன்னியில் உருவாக்கியது போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் பாதுகாப்பு துணை குழுக்களை அமைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. முன்னாள் போராளிகளை முகாம்களிற்கு அழைக்கும் படையினர் குறித்த சிவில் பாதுகாப்பு துணைகுழுக்களை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பது பற்றி பிரஸ்தாபித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு விசுவாசமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போதிய ஆட்கள் இல்லாதிருப்பதாகவும் அதனை கருத்தில் கொண்டே குறித்த சிவில் பாதுகாப்பு துணைக் குழுக்களை அமைப்பது பற்றி தமக்கு ஆலாசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக படை அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் போராளிகள் தரப்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. ஏற்கனவே வன்னி முழுவதுமாக சுமார் மூவாயிரம…
-
- 0 replies
- 298 views
-
-
கூட்டமைப்பினர் வடமாகாண சபையில் நிறை வேற்றியிருக்கும் தீர்மானங்களை முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெனீவா மாநாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானங்களுக்கு வந்துள்ளனர் எனவும் கட்டுமானம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபை இலங்கையின் இறைமையை மீறி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகிறது ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் தீர்மானங்களுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, மன…
-
- 0 replies
- 256 views
-
-
ஏழு பேர் கொண்ட இந்திய குழுவொன்று இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த குழுவினர் இன்று காலை 11மணியளவில் இந்திய தூதரக அலுவலகத்தில் இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடினர். யாழிற்கு வருகை தந்த குழுவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா மேத்தா, இந்திய வெளி விவகார அமைச்சின் மேலதிக செயலாளரின் நிதி ஆலோசகர் பினய் குமார், இந்திய வெளிவிவகார அமைச்சின் இயக்குனர் அனுராக் சிறிவஸ்ரவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கீழ் செயலாளர். ஜோன் மாய், இந்திய சிவில் பொறியியல் ஆலோசகர் மன்மோகன் வர்மா,அகமதாபாத் கட்டட ஆலோசகர் சா கீர்த்தி நட்வர்லால் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் மோகன் ஆகியோர் அடங்குகின்றனர். மேலும் இந்த உ…
-
- 0 replies
- 312 views
-
-
தெற்கு, மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், நாளை மறுநாள் (31) கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 2ம் திகதி வரை சிறிலங்காவிற்கு விஜயம் செய்வார். இவர், சிறிலங்காவில் அதிகாரிகளைச் சந்தித்து, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.…
-
- 0 replies
- 344 views
-