ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
Thirumurugan Gandhi 3 மணி நேரம் முன்பு நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று அதே போல தமிழீழ தேசியத் தல…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஜெனிவாவில் பிரசாரங்களில் ஈடுபடுவதென, தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனீவாவினில் பரப்புரைகளை செய்ய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அங்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. வடமாகாணசபையின் எதிர்காலம் மற்றும் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது செயற்பாடுகள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் …
-
- 0 replies
- 287 views
-
-
-எஸ்.கே.பிரசாத், குணசேகரன் சுரேன் மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வட மாகாண சபையின் இன்று பிரேரணையொன்றை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தபுதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜக்கிய நாடுகளின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரேரணையொன்றை முன்வைத்தார். குறித்த பிரேரணையை சமர்ப்பித்து அங்கு உரையாற்றிய அனந்தி, "மூன்றாவது முறையாக ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளதனால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்பு என்பதனை நிரூபிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்களின் புள்ளிவிபரங்களில் காணாமல் போனவர்களின் நிலையை ஆராயும் வகையிலும் அரசின் தற்போதைய நீதியற்ற கணக…
-
- 1 reply
- 231 views
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் இன்று மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டார். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், குணசேகரன் சுரேன், எஸ்.ஜெகநாதன்) http://tamil.dailymirror.lk/--main/98150-2014-01-27-10-02-14.html
-
- 0 replies
- 214 views
-
-
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீன் பிடித்தல் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய - இலங்கை மீனவப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது. தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பிலும், மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும் மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 17க்கும் மேற்பட்டோர்…
-
- 0 replies
- 246 views
-
-
அண்டைநாடான சிறிலங்காவுடன் பலமானதும், பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடியதுமான உறவைத் தொடர்வதே, இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை என்று இந்தியத் தூதுவர் ஜஸ்வந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று நடந்த 65வது இந்திய குடியரசு தின நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் அமைதி, அபிவிருத்தி, நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவுக்கு முக்கியமான பொறுப்புகள் உள்ளன. எமது இருதரப்பு உறவுகள், கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக வலுவாக கட்டப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டில் 4 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. சிறிலங்காவின் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய…
-
- 1 reply
- 409 views
-
-
பல்கலைக்கழக மாணவி இலங்கையில் பாலியல் வன்புணர்வு! அவுஸ்ரேலியாவின் எச்சரிக்கை பலித்தது. [Monday, 2014-01-27 07:18:51] News Service இலங்கையின் தென்பகுதியில் மற்றுமொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அம்பலங்கொடை பகுதியில் வைத்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செல்லும் தங்களின் பிரஜைகள் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://seithy.com/breifNe…
-
- 3 replies
- 596 views
-
-
ஜெனீவாவில் வரும் பிரேரணையைத் தடுக்க நடத்தப்பட்ட 90 சந்திப்புக்கள்!! இலங்கைக்கு எதிராக இந்த முறை ஜெனீவால் தாக்கல் செய்யப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு 90 கூட்டங்களை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் இணைந்து, கடந்த வாரங்களில் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்துக்கான விஜயங்களை மேற்கொண்டனர். இதன் போது அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உறுப்பினர்களைச் சந்தித்து, இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட்டுள்ள விதங்கள் உள்ளிட்ட பல்வேறு விளக்கமளிப்புகளை முன்வைத்தனர். அத…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கை தமிரசுக்கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டம் சுமார் ஆறு மாதங்களின் பின்னர் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையினை வலியுறுத்தி ஜெனீவாவில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பரப்புரைகளை செய்ய பயணிப்பதென தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. பலத்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய கூட்டம் பரஸ்பர வாதப் பிரதிவாதங்களிடையே அமைதிக்கு திரும்பியிருந்ததாக கூறப்படுகின்றது. வடமாகாணசபையின் எதிர்காலம் மற்றும் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மானிப்பாய் தொகுதி தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் கௌரிகாந்தனை கட்சியிலிருந்து நீக்குவது பற்றியும் தீர்மான…
-
- 0 replies
- 210 views
-
-
மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணை கடுமையானதாக இருக்கும் என்றும் அது வெற்றி பெறுவதற்கு உலக நாடுகளின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் என்றும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலை வரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை கடுமையாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தப் பிரேரணை வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடியதாக அமைய வேண்டும் என நாம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் …
-
- 0 replies
- 274 views
-
-
அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு இன்று மதியம் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர், இதன் போது மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இது வரை வழங…
-
- 0 replies
- 248 views
-
-
ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக இருக்கும் போது சர்வதேச சமூகத்திடம் அது பற்றி கூறாமல் வேறு யாரிடம் கூறுவது இந்த நிலைமையில் இருந்து நாட்டை காப்பற்ற சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதம் இயக்கங்கள் நாட்டில் இல்லை. அவ்வாறு இருப்பதாக பிரசாரம் செய்து வரும் பொதுபல சேனாவின் பின்னால் இருப்பது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பதை முழு உலகமும் அறியும், ஹலால் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருந்து வருகிறார். நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் எதுமில்லை. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே இவர்கள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 266 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது. வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு சபையினால் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அனந்தி சசிதரனினால் ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்புக்கு ஒப்பான செயற்பாட…
-
- 0 replies
- 297 views
-
-
வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர். அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய …
-
- 0 replies
- 171 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே; பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த நிறைவின் பின்னர் குறித்த தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலக் தமிழர் பேரவைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரபல ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது. உலகின் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரே தளத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதற்காகவே உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டது எனவும், 14 அமைப்புக்கள் இதில் அங்கம் வகிப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் காலப் போக்கில் உலகத் தமிழர் பேரவை அ…
-
- 2 replies
- 568 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக 3ஆவது தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக, அமெரிக்கா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளமை குறித்து தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிரான 3ஆவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன், இந்தமாதம் முதல் வாரத்தில் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் நாம் ஜெனீவாவில் தோன்றவுள்ள சவால்களுக்கு முகம்…
-
- 3 replies
- 451 views
-
-
சலுகை அரசியலை நம்பும் இந்தியா!! ஈழப்போராட்டத்தில் முடிவில்லாத துரோகங்களைச் செய்து கொண்டிருக்கின்ற இந்திய மத்திய அரசு சலுகைகள் மூலம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களது மனங்களை வென்றுவிடலாமென நம்புகின்றது. ஆனால் சலுகை அரசியலை நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் நிராகரித்து விட்ட போதும் அதனையே இந்திய அரசு முன்னெடுத்து செல்கின்றது. இந்திய குடியரசு நிகழ்வு யாழ்பபாணத்தினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை துணை தூதுவரலாயத்திலும் மாலை விடுதி ஒன்றிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாலை நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோருடன் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருகை தந்திருந்த ஆளுநரைத் தர்மசங்கடத்துடன் வரவேற்றிருந்தார் முதலம…
-
- 0 replies
- 339 views
-
-
கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயதுடைய புண்ணியதரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலைச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபரான இவர், குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்தச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=102266&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 350 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் கமராவில் அவர்களின் திருமுகங்கள்.. யாழில் இந்தியாவின் 65ஆவது குடியரசுதின விழாவில் எதிரும் புதிருமானவர்கள் சந்தித்து கைகுலுக்கிய போது.. அவர்களின் திருமுகங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் கமராவில் அகப்பட்டுக் கொண்டன. முதலில் எழுந்திராத சீ.வீ பின் இந்தியத் தூதரின் அறிமுகத்தோடு எழுந்து எங்கோ பார்த்து ஆளுநர் சந்திரசிறிக்கு கைகொடுக்கும் காட்சி: ஆளுநர் சந்திரசிறி - யாழ் கட்டளைத் தளபதி உதயபெரேரோ - இந்திய துணைத்தூதர் - முதலமைச்சர் விக்னேஸ்வரன்: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102241/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 572 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அல்லது 2013ல் ஐ.நா மனிதஉரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்னர் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவே? அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? ஜனாதிபதியுடன் வடமாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன் பின்னர் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கு இரா.சம்பந்தன் பதிலளிக்கையில்- வடமாகாண சபையின் சீரான இயக்கத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவி…
-
- 0 replies
- 207 views
-
-
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கும் அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி யோசப் பொன்னையாவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்குமிடையில் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக ஆயர் இல்ல செய்தித் தொடர்பாளர் எஸ்.மைக்கல் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது. அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள், மட்டக்களப்பு மாவட்ட பொருளாத…
-
- 0 replies
- 223 views
-
-
உலகெங்கும் பல நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் தென்னாபிரிக்கா மியன்மார் மொறிசியஸ் கயானா சேசில்ஸ் ரியூனியன் போன்ற நாடுகளில் தமிழ்ப் பெயர்களோடு மட்டும் தான் நமது தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மூத்தவர்கள் சிறிது தமிழ் மொழியை கற்றிருந்தாலும் வயதில் இளையோருக்கும் அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை. இதனால் அந்தந்த நாடுகளில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பது சிறிது சிறிதாக அற்றுப்போய் வருகின்றது. இவ்வாறான ஒரு பாரிய பிரச்சனையை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில் தமிழர்களின் பிரச்சனையாக பார்த்த அவர் தமிழ் நாட்டிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மேற்படி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தமிழ்ந…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கை சென்று அங்கே, பல வாக்குறுதிகளை அள்ளி விசிவிட்டு வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கரூன் தற்போது மெளனம் காத்து வருகிறார். ஆனால் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மாநாட்டில், பிரித்தானியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக , சில அரசியல்வாதிகள் அவ்வப்போது பேசிவருகிறார்கள். இன் நிலையில் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) கமரூனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஒரு கையொப்பமிடும் பத்திரத்தை வெளியிட்டுள்ளார்கள். (இப் பத்திரம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது). இதனை நீங்கள் நிரப்பி உங்கள் உள்ளூரில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினரிடம் கொடுத்தால், அதனை அவர்கள் உங்கள் MP யிடம் கையளிப்பார்கள். இதனூடாக உங்கள் லோக்கல் MP, பிரித்தானிய நாடாளுமன்றில் டேவிட் கமரூனைப் பார்த்த…
-
- 0 replies
- 294 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு விரைவில் இந்தியா அரசாங்கத்துடன் பேச்சு நடத்த புதுடில்லி செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னர், கூட்டமைப்புடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் தற்போதைய நிலைமை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு போன்றன தொடர்பாக ஆராயவே இந்த சந்திப்புக்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படலாம் என அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்…
-
- 0 replies
- 307 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதுடன், அதனூடாகத் தனது மக்களுக்குச் சேவையாற்றும் விருப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தனது காலத்தினுள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார் அருண் தம்பி முத்து. …
-
- 0 replies
- 398 views
-