ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சைவதமிழ் கலாசாரம் அழிவடையாது பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம் நடாத்தும ஓம் நமசிவாய ஆன்மீகவங்கி பிரார்த்தனை ஊர்வலம் எதிர்வரும் 24ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 11 மணிக்கு வண்ணை சிவாலயத்தில் இருந்து ஊர்வலமாக கீரிமலை சிவாலயத்திற்கு கொண்டு சென்று சிவ ஆராதனையுடன் சிவார்ப்பணமாக்கப்படவுள்ளதென சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக விடுக்கபட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காலத்தின் வேகத்திற்கு மக்களும் தமது வாழ்க்கை நடைமுறைகளையும் விரைவுபடுத்தியுள்ளர்கள். அதனால் சமூகத்தில் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. அதுவும் நடைபெற்ற யுத்தத்தின் பிற்பாடு எமது பிரதேசத்திலும் நாடளாவிய ரீதியிலும் கல்…
-
- 3 replies
- 621 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவரது இறுதி அறிக்கையை வரும் மார்ச் 26– ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமை ஆணையத்தின் 25–வது கூட்டம் வரும் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று மற்றும் அங்கு காணப்படும் தற்போதைய சூழல்கள் குறித்து நவநீதம…
-
- 0 replies
- 489 views
-
-
இரவுப் பொழுதுகளில் பெண்கள் மீது பாலியல் சேஸ்டைகள் - வட்டுக்கோட்டையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமினை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்றிரவு ஆரம்பித்துள்ளனர். குறித்த படை முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள்; மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்றிரவும் அருகாகவுள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வசித்து வரும் வீடுகள் மீதே படைமுகாமில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து திரண்ட பொதுமக்கள் படைமுகாமை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில்; குதித்திருந்தன…
-
- 0 replies
- 706 views
-
-
-மாணிக்கப்போடி சசிக்குமார்,எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த அமைச்சில் வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த அதிகாரி இருக்க வேண்டும் எனறே கோரினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சபராஜ் இன் ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரிய நேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பின…
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் கடுமையான எதிர்ப்பை நேரில் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஜே ராப் வடக்கில் மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிட்ட கருத்துகள் மற்றும், இரணைப்பாலை. சென்.அந்தனீஸ் மைதானத்தை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதல் என்ற டுவிட்டரில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்டவற்றுக்கே சிறிலங்கா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனும், வெளிவிவகாரச் செயலருடனும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார் ஸ்டீபன் ஜே ர…
-
- 3 replies
- 381 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 6ம் திகதி கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுவும், அந்த குழுவுடன் சேர்ந்து இயங்கிய ஏனையவர்களையும் தேடி வருகின்றது. இந்த குழுவு…
-
- 5 replies
- 1.3k views
-
-
"எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது" யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. என்றார். யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க, சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்டார். யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபா…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/96424-2014-01-11-07-53-12.html
-
- 3 replies
- 507 views
-
-
அமெரிக்காவின் அதிகாரபூர்வ டுவிட்டர் குறிப்பாக வெளியான படம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார். இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பிரிவினைவாத சதித்திட்டத்திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்களும் பயங்கரவாதிகளே ஆவார்கள். இந்த இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள். எனவே இவ்விருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்தார். எந்தவொரு விசாரணைகளை நடத்தும் தகுதி எமக்கு உள்ளது. எனவே சர்வதேச விசாரணைகள் அவசியமில்லையென்றும் அவர் தெரிவித்தார். …
-
- 3 replies
- 629 views
-
-
ஓலிக்கீற்று : இலங்கையில் தொடரும் கொலைகள் - அவுஸ்ரேலிய வானொலி ஒலிபரப்பிய பெட்டகம்.. ஒலிக்கீற்றை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... http://mpegmedia.abc.net.au/rn/podcast/2014/01/sea_20140111_0805.mp3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=11069:2014-01-11-09-55-32&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 367 views
-
-
இரணைதீவுக் கடலில் 1998 செப்டெம்பர் 29 ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்தில் பயணம் செய்தவர்களை அடையாளம் காண்பதற்காக அந்த விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் யாழ்.சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இன்று காட்சிப்படுத்தப்பட்டன. (படங்கள்:- -சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்). http://tamil.dailymirror.lk/--main/96428-2014-01-11-08-30-01.html
-
- 0 replies
- 401 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரிய நேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம், இரா.துரைரத்தினம், ஜனா கருணாகரன், பிரசன்னா இந்திர குமார், எம்.நடராசா, கிருஸ்னப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இலங்கை சுதந்திரமடைந்த நாள…
-
- 0 replies
- 274 views
-
-
-எஸ்.கே.பிரசாத் 'ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வெள்ளிக்கிழமை (10) யாழில் நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தினத்தில் தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இங்கு தொட…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா காட்சிப்படுத்தல்களில் தமிழ் மொழிக்கு இடம்ளிக்கப்பட்டிருக்காமை தொடர்பில் பட்டம்பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்றுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து புலம்பெயர் உறவுகளும் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகியது. இரு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பட்டமளிப்பு விழா இன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்புக்காக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் இலட்சினையிலுள்ள ந…
-
- 0 replies
- 449 views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஏஎவ்பியிடம் கருத்து வெளியிட்ட கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், “சென்.அந்தனிஸ் மைதானம்- 2009 ஜனவரியில் இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம்” என்று டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து, சிறிலங்கா தொடர்பான வொசிங்டனின் கடுமையான மனிதஉரிமைக் கொள்கையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த டுவிட்டர் குறிப்பு அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், தம்மை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். அத…
-
- 0 replies
- 339 views
-
-
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக. ஐ.நா மற்றும் பிரான்சுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய தயான் ஜெயதிலக, இது தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுகையில், “இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்காப் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி, 'நடுநிலையற்றது'. விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம் இது. சாதாரண இராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக…
-
- 0 replies
- 271 views
-
-
ஓளிக் கீற்று பாடல் போட்டியில், விழுந்தால் எழுவோம் , என்னும் இங்கிலாந்து மாணவர் அமைப்பின் பாட்டிற்கு வாக்களியுங்கள் . பாடல் வரிகள் ,படமக்கப்பட்ட விதம், இசை, குரல் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன, கேட்டுப் பார்த்து விட்டு பிடித்தால் வாக்களியுங்கள், விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை, பலமா, பயமா கோழைகள் வெல்வதில்லை, பூமி எங்கும் போராட்டம் உயிர் ஒன்று தான் மிச்சம் தடுக்க யாருமில்லை..... நேற்றில் காயம் நாளை மாறும்,நானும் நீயும் நினைத்தால், தோல்வி தருவது பாடம், பாடம் தருவது ஞானம் இரண்டு கைகளும் நான்காக மாறும், நாங்கள் நினைத்தால்... விழுந்தால் எழுவோம் is one of participating songs for the Olikkeetru Awards talking place on the 12th of january 2014, in Pari…
-
- 0 replies
- 432 views
-
-
இந்திய-சிறிலங்கா உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா எதிர்பார்ப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் காபர் சௌத்ஏசியா இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக. தமிழர்கள் உள்ளிட்ட எல்லா சமூகத்தினரும் கௌரவமாக வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை மதிக்க வேண்டும் என்பதே எமது கரிசனை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puth…
-
- 2 replies
- 253 views
-
-
தமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர். தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இனரீதியான கற்கைகளுக்கான சர்வதேச மையத்தின் ஏற்பாட்டில் "வடக்கில் ஜனநாயகத்துவம்' என்னும் தலைப்பிலான கருத்துப் பகிர்வு நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: போரின் மாற்றங்களை வட மாகாணத்தில் நாம் உணரக்கூடியதாக உள்ளது. ஆட்சிமுறை, அபிவிருத்தி…
-
- 0 replies
- 169 views
-
-
பிரபாகரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். கொழும்பில் கொண்டாட்டம் தொடங்குகிறது. பிரபாகரனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. சாலைகளெங்கும் சிங்களக் கொடிகளை அசைத்தபடி இளைஞர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சிறுவர்கள் அதி நவீனப் பொம்மைத் துப்பாக்கியால் தங்களுக்குள் சுட்டுக்கொள்கிறார்கள். பட்டாசுகளின் வெடிச்சத்தங்கள் விண்ணைப் பிளக்கின்றன. Between tomorrow and yesterday என்னும் சிங்களப் படத்தின் தொடக்கக் காட்சி இதுதான். இந்த ஆண்டு வெளிவந்துள்ள இந்தப் படம் போருக்குப் பிறகான இலங்கையின் இன்றைய சிக்கலைச் சித்தரிக்கிறது. போரில் ஈடுபட்ட இருதரப்பையும் இப்படம் விமர்சிக்கிறது. இதன் இயக்குநர் நீலேந்திர தேசப்பிரியா. போர் முடிவடைந்த பிறகு தென்னிலங்கையைச் சேர்ந்த பலர…
-
- 1 reply
- 257 views
-
-
இறுதிப்போரின் பின்னர் காணாமல் போன ஒவ்வொருவரும் பற்றி தனித்தனியான விசாரணையினை தேவை, அது மிககடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் அவசியம் ! போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் சுதந்திரபுரம், புதுமாத்தளன் உள்ளிட்ட சில இடங்களில் சூட்டுத் தவிர்ப்பு வலயங்களை அறிவித் திருந்தது. இவற்றில் பெருமளவான மக்கள் மிக நம்பிக்கையுடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனா ல் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் கூறும் காரணம் புலிகள் அந்தப் பகுதியில் நின்றார்கள் என்பதே. அத்தகைய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமே சூட்டுத்தவிர்ப்பு வலயங்களை அறிவித்திருந்தது. எனவே மக்கள் அதற்குள் தஞ்சமடைகையில் புலிகள் அதற்குள் இருந்தார்கள் என்பதற்காக ஒரு சில புலிக…
-
- 4 replies
- 546 views
-
-
இலங்கையில் புதிதாக மத வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம். கே. பீ. திஸாநாயக்கவினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் உள் நாட்டு பத்திரிகைகளில் இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விகாரைகள், கோயிலகள், மசூதிகள், தேவாலயங்கள், தியான நிலையங்கள், ஜெப நிலையங்கள் ஆகியவை எவ்வித தர நிர்ணயங்களும் இன்றியும் அனுமதி இன்றியும் பரவலாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அரச மரம், சிலைகள், தர்மச் சக்கரம் ம…
-
- 0 replies
- 475 views
-
-
அம்பாறை மாவட்டத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கல்முனைக் காரியாலயம் நற்பிட்டிமுனை தாளவட்டான் வீதியில் அமைந்துள்ளது. இந்த காரியாலயத்திலுள்ள யன்னல் கண்ணாடி, நீர் விநியோக மீற்றர், நீர் தாங்கி என்பன கடந்த 06.01.2014ந் திகதி இரவு இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த காரியாலயம் இயங்கும் காணியும் வீடும் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கல்முனை பொலிசில் முறையிட்டபோது பொலிசார் அவ்விடத்திற்கு சென்று சேத விபரங்களை பார்வை இட்டதோடு தொடர்ந்து விசாரனை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக தெரிவித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.. …
-
- 3 replies
- 701 views
-
-
வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் வைத்து எடுத்து டுவிட் செய்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் மாற்ற மாட்டோம் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.…
-
- 0 replies
- 410 views
-