ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அம…
-
- 6 replies
- 489 views
- 1 follower
-
-
மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ள நிலையில்,இந்த விமான சேவை வரவேற்பை பெற்றுள்ளதால், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://thinakkural.lk/article/3…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 SEP, 2024 | 06:22 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) வியத்மக என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டபய ராஜபக்ஷவை தலைவராக்கி அவரை விரட்டியடித்து, நாட்டை வீழ்த்தியவர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைந்துள்ளார்கள். அவருக்கும் கயிறு கொடுக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். போலியான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தபால்மூல வாக்களிப்பில் ஜனாதிபதி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதி…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 SEP, 2024 | 04:18 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ராஜபக்ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும். ரணில் - ராஜபக்ஷ என்று குறிப்பிடுவதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு …
-
- 4 replies
- 776 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 01:31 PM யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி…
-
-
- 8 replies
- 956 views
- 1 follower
-
-
13 OCT, 2023 | 01:05 PM 2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் கொலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் தாக்கல் செய்த பல மனுக்களை பரிசீலித்த பின்னரே, பிரிவு 12(1)இன் கீழ் இந்த மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பொது மன்னிப்பு தொடர்பான பல ஆவணங்களை உச்ச நீத…
-
- 3 replies
- 732 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 04 SEP, 2024 | 05:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும்…
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில் Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 11:19 AM சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொலைபேசி மற்றும் முகநூல் என்பன நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென செயலிழந்திருந்ததுடன், வைத்தியசாலை விடுதிக்கு முன்னால் அவரது கார் தரித்து நின்றமையாலும் பல்வேறு விதமான ச…
-
- 2 replies
- 419 views
- 1 follower
-
-
யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உரையாடல…
-
- 1 reply
- 320 views
-
-
Published By: VISHNU 04 SEP, 2024 | 04:09 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடித்த ஜனாதிபதி தற்போது அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அரசாங்கம் தெரிவித்துள்ள சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதமும் கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத…
-
- 1 reply
- 472 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 06:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் …
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
வவுனியாவில்(vavuniya) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச்(jaffna) இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குடும்பஸ்தர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலை இதனையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். …
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தித் திட்டம் - சஜித்! 04 SEP, 2024 | 10:50 AM மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி தொழிற்துறையை உருவாக்கி பலமிக்க அபிவிருத்தியை கொண்டு வர முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
ஒக்டோபர் முதல் நவீன கடவுச்சீட்டு – மக்களிடம் நெருக்கடி நிலைக்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி. கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையா…
-
- 0 replies
- 116 views
-
-
ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை…
-
- 0 replies
- 88 views
-
-
03 SEP, 2024 | 06:48 PM தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு …
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
16 JUL, 2024 | 01:56 PM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கம், பிரதேச செயலகம் நல்லூர், இலங்கை…
-
-
- 4 replies
- 430 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 05:27 PM சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன. …
-
-
- 10 replies
- 850 views
- 1 follower
-
-
03 SEP, 2024 | 11:49 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விர…
-
-
- 1 reply
- 573 views
- 1 follower
-
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித் பிரேமதாசா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397652
-
-
- 8 replies
- 1.1k views
-
-
கருத்துக் கணிப்புக்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1397921
-
- 0 replies
- 211 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் – திகதி அறிவிப்பு. ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பங்கேற்புடன் இந்த விவாதத்தின் முதல் சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சுமார் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் மார்ச் 12 இயக்கம் அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் நாள் விவாதத்தில் சஜித் பிரேமதாச,…
-
- 0 replies
- 373 views
-
-
தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா! ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம். தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ர…
-
- 0 replies
- 224 views
-
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 11:27 PM ரொபட் அன்டனி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார். பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார். பாத்பைன்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற…
-
-
- 1 reply
- 290 views
- 1 follower
-