ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர். இனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள். இந்த மாதிரி நிகழ்வுகளைக் காணும்போது எனக்கு வன்னியில் உணவின்றி செத்த குழந்தைகளின் நினைவே வந்து தொலைக்கிறது. அந்த துயர சம்பவத்தை நினைவூட்டியமைக்கு மன்னிக்கவும். அதுமட்டுமா போராடியவர்கள் இன்று ஊனமுற்று இருப்பவர்கள் தங்கள் வாழ்வுக்கு உதவும்படி கையேந்துகிறார்கள். எமக்காகப் போராடிய அந்த உள்ளங்களுக்கு உதவாமல் இப்படியான களியாட்டங்களை செய…
-
- 50 replies
- 3.6k views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை (28) காலை 8.30 மணிக்கு குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது. இதன்போது, மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணா, அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவல, தொல்பொருள…
-
- 0 replies
- 447 views
-
-
அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் தாய் நாடு பற்றி அன்பாக பேசினாலும் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற காலத்தின் பின்னர், 16 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடம் இருந்து உயிர் தப்பிய சுமார் 80 ஊடகவியலாளர்கள் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 வருடங்கள் பழமையான வெள்ளையர்களின் குற்றவியல் சட்டத்தை 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நீக்காமல் போயிருந்தால், நாட்டில் உள்ள ஊடவியலாளர்களில் 50 வீதமானோர் சிறைகளில் இருந்திருப்பர். இந்தளவுக்கு இன்றைய அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 327 views
-
-
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் நடந்த பாரிய, உள்ளக இடமாற்றங்களாக இவை கணிக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீ…
-
- 1 reply
- 508 views
-
-
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார். சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிக…
-
- 0 replies
- 416 views
-
-
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த தமது உறவினர், குளியாப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுபற்றி குளியாப்பிட்டி பொலிஸாரிடமிருந்து ஏறாவூர் பொலிஸாருக்கு ஊடாக தமக்கு தகவல் அனுப்பப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியைச் சேர்ந்த யூ.எல். சலீம் என்ற 27 வயதுடைய இளைஞனே குளியாப்பிட்டி அக்கரவத்த நூறு ஏக்கர் தோட்டம் எனும் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வீடுகளுக்கு மாபிள்களைப் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் நாரம்மல பகுதியிலேயே மாபிள்களைப் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும்போது காணாமல் போயிருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 271 views
-
-
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக்காணியொன்றிலிருந்து எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தோட்டக் காணியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அறிந்த அயலவர்கள், சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் வைத்தியலிங்கம் செல்வகணேசன் (வயது 42) என்பவரது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். குறித்த சடலம் ரயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சடலத்திற்கு அருகில் அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பொலிஸார் மீட்டுள்ளதோடு இது …
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது - தினேஸ் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் விடுத்திருந்த திறந்த அழைப்பை நிராகரித்திருப்பதாக ஆளும்கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம…
-
- 0 replies
- 479 views
-
-
-ஆர்.ரஸ்மின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் ஏற்பாடு செய்த 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை இன்று 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளிவாயல் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது 'ஸலாதுல் இஸ்திஹார்' மழை வேண்டி தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன், குத்பா பிரசங்கம் மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பனவும் இடம்பெற்றன. இந்த தொழுகையில் வடமாகாண சபை உறுப்பினர் யாஸின் ஜவாஹிர் (ஜனோபர்) மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் பிரதம இமாம்களும், ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை இல்லாமையால் கடும் வரட்சி காணப்படுவதுடன், முறிப்…
-
- 0 replies
- 462 views
-
-
மோதலின்போது உயிர் மற்றும் பொருள் இழப்புகளை கணக்கிடுவதற்கான அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு மாற்றாக வடக்கிலும் கிழக்கிலும் தனியான கணக்கெடுப்பை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. தனது கட்சியினர் அரசாங்கத்தின் கணக்கெடுப்பை நம்பகமானதென அங்கீகரிக்கவில்லையென இரா.சம்பந்தன் கூறினார். அந்த வகையில் அரசாங்கம் எவரையும் தவறாக வழிநடத்துவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அவர் கூறினார். அரசாங்கம், ஜெனீவாவில் சில பிரச்சினைகளை தாண்டுவதற்காக இதை செய்யக்கூடும். ஆனால் எமக்கு இது எமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பானதாகும் என அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதனால் உண்மையை நிலைநிறுத்த தனது கட்சி விரும்புகின்றதென அவர் க…
-
- 0 replies
- 359 views
-
-
எங்களின் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று அரசாங்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் தீர்வினை மேற்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்கும் திறனை அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது குறித்து வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு நான்கு வருடங்களே கடந்துள்ளன. இந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் அளப்பரியவை. இந்த விடயத்தை பாராட்டாமல், இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வ…
-
- 2 replies
- 686 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைப்பது என ஜனாதிபதி முடிவு செய்திருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முரளிதரன் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக க…
-
- 3 replies
- 510 views
-
-
தன்னால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் ஆர்.விஜயலக்ஸ்மிக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை விசாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, சிறிலங்கா காவற்துறையிடம் கோரியதையடுத்து ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழிக்கும் நோக்குடன் முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி ஒருவரைத் தனது தரகராக நியமித்துள்ளது" என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 அன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போதும் பின்னர் டிசம்பர் 21 அன்று சர்வோதயப் பணியாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போத…
-
- 0 replies
- 504 views
-
-
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது மிகப் பலமான அழுத்தங்களை மேற்கொள்கின்றது. இவ்வாறு அனைத்துலக தொலைக்காட்சி சேவையான Al Jazeera தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்ததன் மூலம் 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் தொடர்ந்தும் முன்னாள் …
-
- 0 replies
- 401 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது! வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முத…
-
- 5 replies
- 681 views
-
-
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு நேற்றுக் காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 39 replies
- 2.9k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பாணந்துறையில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் இராபோசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார். சந்திரிக்காவுக்கு ரணிலுக்கும் இடையிலான சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல், அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன் போது பேசப்பட்டுள…
-
- 2 replies
- 535 views
-
-
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இந்த மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். புலம்பெயர் எழுச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதில் பங்கேற்க லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், க…
-
- 3 replies
- 669 views
-
-
இலங்கையிலிருந்து ஆண்கள் வெளிநாடுகளில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாயப்பு வாரியத்தினால் வட்டியின்றி கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுவேலைக்கு பணிப்பெண்களாக செல்வதை குறைப்பதும், அதற்கு மாறாக ஆண் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஊக்குவிப்பதும் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப் பெண் வேலைக்காக செல்லும் போது சகல செலவுகளும் அவர்களின் வெளிநாட்டு எஜமானர்களால் பொறுப்பேற்கப்படு…
-
- 3 replies
- 656 views
-
-
நுரைச்சோலை அனல்மின் நிலையம் அடிக்கடி செயலிழந்ததன் காரணமாக, 920 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கத்தின் ஆலோசகர் பந்துல சந்ரசேகர கூறுகிறார். அந்த அனல்மின் நிலையம் செயலிழந்தன் காரணமாக நாளொன்றிற்கு 72 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுரைச்சோலை அனல் மின்நிலையம் கடந்த 13ம் திகதி தொடக்கம் மீண்டும் செயலிழந்துள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் திருத்தப் பணிகள் காரணமாகவே நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் தொழிற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொறியிலாளர் செனுஜித் தசநாயக்க தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100049&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 371 views
-
-
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் விடுத்திருந்த திறந்த அழைப்பை நிராகரித்திருப்பதாக ஆளும்கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தமிழோசையிடம் தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கருதுவது 'சிறுபி…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கைத் திருநாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு துரித மற்றும் சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் நிதானத்து டன் பயணித்துவருவதனால், வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களைத் தாய்நாட்டிற்கு திரும்பி வருமாறு அரசாங்கம் வலியுறுத்திக்கேட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கையில் பணியாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் அமைந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றுகையில், இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென அறிவார்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களுக்கு உத…
-
- 6 replies
- 760 views
-
-
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அபாய நிலைமையை அமைச்சரவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தாமல் அவற்றை வெளிவிவகார அமைச்சர் மூடி மறைக்கின்றார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டினார். ஜெனிவாத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்படும் சவால்கள் மற்றும் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்…
-
- 0 replies
- 446 views
-
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் பிரிவு ஒன்றினை அமைப்பதற்காக மத்திய அரசாங்கத்தினால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முதற்கட்டமாக சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை அமைப்பதற்கு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அருகாமையில் மாநகரசபைக்கு சொந்தமான காணி ஒன்றினை ஒதுக்கித்தருமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மருத்துவபீடம் கோரிக்கை விடுத்திருந்தது இதற்கு அமைவாக அமைச்சருடைய வழிகாட்டலில் யாழ். மாநகரசபையினால் குறித்த கட்டடம் அமைப்பதற்கு தேவையான 4 பரப்பு காணி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் ஒதுக்கிக் கொடுக்கப்படவுள்ளது. இதேவேளை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாநகர சபை…
-
- 2 replies
- 511 views
-
-
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் இம்முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இடம்பிடிக்கின்றமையின் காரணமாக எமக்கு வலுவான நிலைமை மனித உரிமை பேரவையில் காணப்படுகின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தயார் நிலை குறித்து கருத…
-
- 10 replies
- 815 views
-