ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதியவர்களை வேலைக்கு நியமித்ததன் காரணமாக வேலை இழந்த பதினேழு பேரும் இன்று வெள்ளிக் கிழமை மீண்டும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை பல்கலைக்கழக வாசலில் ஆரம்பித்துள்ளார்கள். உண்ணாவிரதம் இடம் பெற்ற வேலையில் குறிப்பிட்ட உண்ணாவிரத்ததை நிறுத்தக்கோரி கோப்பாய் பொலிசாரும் மற்றும் தொழில் திணைக்கள அலுவலர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஊழியர்களுக்க வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறி பல்கலைக்கழக பதிவாளர்களினால் எழுத்து மூலம் 21.10 2013 ல் கடிதம் வழங்கிய போதிலும் இது வரையும் எந்த வகையான முன்னேற்றகரமான செயல்பா…
-
- 0 replies
- 278 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனாதிபதியின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது சரியா? பிழையா? என்று நாம் இங்கு பட்டி மன்றம் நடத்த வரவில்லை. மாறாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த காலசூழல் மிகவும் சரியானது என்பதை மட்டும் நாம் இவ்விடத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில், பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் கானதெ…
-
- 0 replies
- 457 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிராக தாம் முன்வைக்கவுள்ள பிரேரணையை தயாரிக்கும் பணிகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இலங்கையின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக, அமெரிக்காவின் உயர் பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை ராஜாங்க செயலாளர் டேசாய் பீஸ்வால், அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் இலங்கையின் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, இலங்கையின் கள நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதுடன், அரசாங்க மற்றும் எதிர்கட்சி…
-
- 0 replies
- 469 views
-
-
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78ஆவது வருடாந்த கூட்டம் ருவான்வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று…
-
- 2 replies
- 518 views
-
-
சட்டத்தைக் கொண்டு மட்டும் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பாடசாலைகளிலேயே மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டும் அரசாங்கத்தினால் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற சுனாமின நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100023&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 388 views
-
-
கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின் குழு தாக்குதல் நடத்தினர். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தின் முன்னால் சுனாமி நிகழ்வு தொடர்பில் ஏழு ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெனிபட் உட்பட்ட ஆறு பேர் கொண்ட குண்டர் குழு தாக்குதல் நடத்தியது. நடத்திய பிற்பாடு அரச கட்சியின் ஆதரவாளர்கள், தம்மீது தமிழ…
-
- 0 replies
- 444 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78வது வருடாந்த கூட்டம் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் கூறுகையில்; அடுத்த வருடத்தில் இடம்பெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்பதாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து…
-
- 0 replies
- 232 views
-
-
சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் யு32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கோவிலாக்கண்டி மேற்கு, தச்சன்தோப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் குணரத்தினம் (வயது 48) என்பவரே இவ்வாறு வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடக்கில் தொடரும் மர்மமான மரணங்கள் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுகின்ற நிலையில் இதுவும் கொலைய…
-
- 0 replies
- 248 views
-
-
அனுராதபுரம் - விகாரகல்மில்குளம் பிரதேசத்தில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ருவன்திகா மாரபன உத்தரவிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100022&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அவர் கூறினார். மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம். அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்…
-
- 0 replies
- 324 views
-
-
(ஆர்.ரஞ்ஜன், க.கிஷாந்தன்) மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது. மஸ்கெலியா பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது குறித்த மூன்று வழிபாட்டுத்தலங்களும் நீரினால் மூடப்பட்டது. தற்போது மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 140 அடியிலிருந்து 40 அடிக்கு குறைவடைந்ததால் மூன்று தேவாலயங்களும் தற்போது மக்களின் பார்வைக்கு தெரியவந்துள்ளது. தற்போது மக்கள் பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகிய வாழிபாட்டுத்தலங்களுக்கு ப+ஜை நடத்தி வழிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்த…
-
- 2 replies
- 363 views
-
-
-
- 0 replies
- 282 views
-
-
"வடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன. இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர்கள் நேற்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்…
-
- 1 reply
- 386 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி கொள்ளை என்ற போர்வையில் வீடு புகுந்தவர்களால் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சண்முகநாதன யதுசன் திட்டமிடப்பட்டே கொல்லப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்குத் தெரிய வந்துள்ளது. இவரது கொலை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் சாராசம் பின்வருமாறு: யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன் அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது …
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தொடர்புடைய பக்கங்கள் ஜனாதிபதியின் அழைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு நிபந்தனைகேட்க05:06 தொடர்புடைய விடயங்கள் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சம்பந்தன் இதனிடையே, இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும் அதன்மூலம் நியாயமான அரசியல்தீர்வை எ…
-
- 3 replies
- 617 views
-
-
டிசம்பர் 26: இன்று 9வது சுனாமி நினைவு தினம். 9 ஆண்டுகளுக்கு முன்பு... இதே தினத்தில், ஈழத்தின் வடக்கு, கிழக்கிலும், தமிழகத்திலும்... பல்லாயிரம் தமிழ்மக்கள் உயிரை... கண்ணிமைக்கும் நேரத்தில் பலிகொண்ட ஆழிப்பேரலை வந்த நாள். விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் போர் மும்முரமாக நடந்த நேரத்தில் இயற்கையும் தனது கோரத் தாண்டவத்தை தமிழ்மக்கள் மேல்... நிகழ்த்தியிருந்தது. இதில்.... பலியான அனைத்து தமிழ்மக்களுக்கும் நினைவு அஞ்சலிகள்.
-
- 16 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தற்கொலை செய்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை உளநல சிகிச்சைப் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பரீட்சையில் சித்தியடையாமை, இளவயதில் ஏற்படும் காதல் தோல்விகள், அதிகரித்த குடும்ப வன்முறைகள், குடும்ப வறுமை, அநாதரவான நிலைமை போன்ற காரணிகளால் குடாநாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து உளநல மருத்துவ சிகிச்சையாளர்கள் வரவழைக்கப்பட்டு பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை அவர்களுக்கான உளநல ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.c…
-
- 1 reply
- 388 views
-
-
-சுமித்தி தங்கராசா ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) கலங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 'ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை அக்கட்சி சார்ந்தவர்கள் அல்லது, கட்சி சாராதவர்கள் அநாமதேயமாக பாவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸிடம் கோ…
-
- 3 replies
- 654 views
-
-
-கெலும் பண்டார இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் க…
-
- 0 replies
- 384 views
-
-
அக்கரைப்பற்று மக்கள் இன்று வீதியில் சமைத்து உண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். ஆழிப்பேரலையில் அழிவுற்று ஒன்பது வருடங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டி முடிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகளைக் வழங்காமல் உள்ளதை எதிர்த்தும் அந்த வீடுகளை தங்களிடம் வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட இந்நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நாளை முதல் பெரியளவில் முன்னடுக்கப்படும் எனவும் மக்கள் கருத்துத் தெரிவித்தனர். குறித்த இடத்திற்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 448 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் தமக்கில்லை என்று ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் எமக்கில்லை. எமது கட்சியை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பார்த்தவரையில் மூன்று கூட்டமைப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்…
-
- 18 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களுக்கு கூட்டமைப்புத்தான் முக்கியமென்றால் அரசாங்கத்தை நாடவேண்டாம். சம்பந்தனிடமும் விக்கினேஸ்வரனிடமுமே அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ளட்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படாவிட்டால் வட மாகாண சபையினை கலைப்பதே ஒரே வழி முறையாகும். ஜனாதிபதி இதை செய்ய வேண்டும் எனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், யுத்த கால கட்டத்தின் போதும் யுத்தத்திற்குப் பின்னரும் அரசாங்கமே தமிழ் மக்களைப் பாதுகாத்து வருகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடக்கில் இருந்த…
-
- 2 replies
- 360 views
-
-
அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பௌத்த யாத்ரீகர்களை தம்பதிவவிற்கு யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்த முன்னாள் பௌத்த மத குரு ஒருவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராணுவ வீரரும், பிரபுக்கள் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமை புரித்து பின்னர் பௌத்த துறவியாக மாறி அதனையும் கைவிட்ட மேற்படி சந்தேக நபருக்கு எதிராக 172 முறைப்பாடுகள் அனுராதபுரம் பொலிஸில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரியவௌ பகுதியில் தலை மறைவாக இருந்த போது அனுராதபுரம் பொலிஸார் மேற்படி சந்தேக நபரையும் சாரதியையும் கைதுசெய்து அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே…
-
- 0 replies
- 266 views
-
-
உலகில் மிகப்பெரிய மிதக்கும் புத்தகச்சாலை எனக் கூறப்படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் புத்தகச்சாலை 09 மாடிகளை கொண்டதுடன் 132 அடி நீளமானது. இதுவரை 164 நாடுகளில் ஆயிரத்து 400 துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளதுடன் இதில் 45 நாடுகளை சேர்ந்த 400 பேர் தொண்டர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். ஜேர்மனியில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொண்டர் அமைப்பின் கீழ் இந்த கப்பம் செயற்பட்டு வருகிற மேற்படி கப்பலில் 5 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது. காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கு…
-
- 1 reply
- 386 views
-
-
இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் நிராகரிப்பதாக இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 'ஜனாதிபதியைச் சந்திப்பது குறித்தும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களே கூடி முடிவெடுப்பர்' என்று நேற்றைய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய…
-
- 40 replies
- 1.8k views
-