ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறிலங்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வளர்ந்துள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் வகையில், நீர்மூழ்கி உள்ளிட்ட ஈரானியப் போர்க்கப்பல்களின் அணியொன்று நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. போர்க்கப்பலான ஐஆர்என்எஸ் பன்டர் அப்பாஸ், பயிற்சிக் கப்பலான ஐஆர்என்எஸ் அல்போர்ஸ், கனரக தரிக் வகை நீர்மூழ்கியான யூனெஸ் ஆகியவற்றைக் கொண்ட ஈரானியக் கடற்படை அணியே மும்பைத் துறைமுகத்தில் இருந்து நேற்று கொழும்பு வந்துள்ளன. இவை வரும் திங்கட்கிழமை வரை கொழும்பில் தரித்து நின்று விட்டு ஓமான் நோக்கிப் புறப்படவுள்ளன. இந்த ஈரானியக் கடற்படை அணியின் தளபதியான கப்டன் பப்ரக் பெலூச், நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். http://www…
-
- 1 reply
- 447 views
-
-
தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில் இலங்கை பணியாளர்கள் 75 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் அவசியம் ஏற்படில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மஷார் தன்னை பதவியிலிருந்து கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவத…
-
- 1 reply
- 412 views
-
-
மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ்க் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன் நாம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றோம். மாகாணசபை என்ற கனவுக் குழந்தை இன்று நனவாகியுள்ளது. இதனை பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதே முக்கிய பொறுப்பாகும். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகா…
-
- 0 replies
- 293 views
-
-
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13-ம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை ஆற்றிய ஜனாதிபதி …
-
- 0 replies
- 384 views
-
-
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியா ஊடாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.டெல்கியில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று போதைப் பொருள் கடத்தல் காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 9 கிலோகிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்த. அவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பாரிய அளவில் போதைப் பொருட்களை விநியோகிக்கும் குழுக்களுடன் இணைந்து, இந்தியா மற்றும் இலங்கைக்குள் போதைப் பொருட்களை கொண்டுவரும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்கியில் இருந்து தென்னிந்தியா ஊடாக, இலங்கைக்கு இவ்வாறு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்ற…
-
- 0 replies
- 591 views
-
-
வடக்கில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கப்பல் , விமானப் போக்குவரத்தை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் . வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் . வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்கள் , வங்கிகள் , வடமாகாண வணிக அமைச்சருடனான சந்திப்பு நடைபெற்றபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது . இச்சந்திப்பில் வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் வர்த்தகர்கள் பல்வேறு வகையான வருமான இழப்புக்களை சந்தித்து வருகின்றார்கள் . இந்த இழப்புக்களை ஈடுசெய்ய முடியாத நிலை அரசியல் பொருளாதாரம் நிதி நிறுவனங்களின் நடைமுறைகளாலும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்டுள்ளது . யுத்த காலத்தில் இத்தகைய இழப்புக்கள் ஏற்படவில்லை . ஆனா…
-
- 0 replies
- 320 views
-
-
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது .மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது . மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மனித புதைகுழிகள் தோண்டும் ; பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை மாலை தோண்டப்பட்ட போது மூன்று மனித மண்டையோடுகளும் , ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னா…
-
- 0 replies
- 437 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருகோணமலை நகரில் காணாமற் போனோரின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் காடையர்கள் குழு நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் குறித்த ஆவணம் ஐ . நாவிடம் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது . கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்திடம் காணாமல்போனோரைத் தேடியறியும் குழு இந்த ஆவணத்தைக் கையளிக்கவுள்ளது . இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் இந்த ஆவணம் , ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் , ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன் , ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படும் . காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் இந்தத் தகவலை நேற்று உற…
-
- 0 replies
- 288 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் நம்பகமாகச் செயற்படத் தயாராக இருந்தால், அதனுடன் பேச்சுக்களை நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காண முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாம் எப்போதுமே பேச்சுக்களுக்கு தயாரில்லை என்று கூறவில்லை. அர்த்தமுள்ள வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு. சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருதொகுதி யோசனைகளை முன்வ…
-
- 0 replies
- 348 views
-
-
2002ல் இந்திய எண்ணெய் வள நிறுவனத்தின் சிறிலங்காவில் இயங்கும் Lanka IOC [the Indian Oil Company's local unit Lanka IOC] இடம் வழங்கப்பட்ட சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தின் துறைமுக மாவட்டமான திருகோணமலையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க 99 எண்ணெய் சேகரிப்புக் குதங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் இந்த எண்ணெய் சேகரிப்புக் குதங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியுள்ள அதேவேளையில், இந்த எண்ணெய் சேகரிப்புக் குதங்களை மீண்டும் இந்திய நிறுவனத்திடமிருந்து மீட்டெடுத்து சிறிலங்கா அரச சொத்தாக மாற்றுவதற்கான…
-
- 0 replies
- 177 views
-
-
அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை கொண்டு, புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வோதயாவின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் சந்தித்த தலைவிதியை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியை ஒருவரை கொண்டு விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி அமைப்பை மீண்டும் ஏற்படுத்த போவதாக நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். வெள்ளை வான் நாடகம் வேறொரு வகையில் முன்னெடுக்கப்படலாம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். 13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகள் தலைமையிலான அரசாங்கங்களும் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட)இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13-ம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பிபிசி…
-
- 0 replies
- 290 views
-
-
அரசாங்கத்திடம் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை யென்றால், வட பகுதியிலுள்ள இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைத்து, பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகாரிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாமேயென வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். மொராட்டுவவிலுள்ள சர்வோதய அமைப்பின் தலையகத்தில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்ற அவ்வமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் ஏ.ரி .ஆரியரட்ண தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது, போர் முடிவுக்கு வந்து ஜந்து வருடங்களின் பின்னரும், பிரிவினைவாத சிந்தனையை முறியடிப்ப…
-
- 0 replies
- 286 views
-
-
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த 10ஆம் திகதி திருகோணமலை நகரில் காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவினரால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அங்கு வந்த சில பெரும்பான்மையினக் குழப்பவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய சுந்தரம் மகேந்திரன் காயமடைந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற வேளை, அனுமதி பெறாமல் ஆர…
-
- 0 replies
- 170 views
-
-
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டிய போது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதலில் இரண்டு மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்…
-
- 3 replies
- 461 views
-
-
-யு.நாதன் மாதகல் சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் 25 அடி உயரமான சிவபெருமான் சிலையொன்று நிரமாணிக்கப்பட்டு வருகின்றது. அந்த ஊர் மக்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தச் சிலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், அதற்கான வர்ணம் பூசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விரைவில் இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/--main/93986-25-.html
-
- 2 replies
- 644 views
-
-
டெல்லி: இந்திய- இலங்கை மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அமைச்சர் சரத்பவார் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் டெல்லி வருகை தர இருக்கிறார். இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "எமது 170 மீனவர்களும் 32 படகுகளும் தமிழ் நாட்டிலும் எஞ்சியவர்கள் ஆந்திர மாநிலத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள இலங்கை மீனவர்களை சட்டப்படி விடுவிப்பதற்காக மாநில அரசாங்கம் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி நடைமுறை வழக்கத்திலில்லை. ஒன்றிணைந்த விசாரணைக் குழுகூடி ஆராய்வதன் மூலமே சிறை வைக்கப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டு முதலமைச்…
-
- 2 replies
- 659 views
-
-
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார். வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும…
-
- 6 replies
- 870 views
-
-
மலேசியா , கெடா , கூலிமில் தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் வி.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட தமிழ் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன் என்று போலீஸ் விளக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, அதனைப் “பயங்கரவாதத்தின் புகழ்பாடும்” நிகழ்வு என வருணித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் அபு பக்காரையும் சாடினார். அந்நிகழ்வை “பயங்கரவாதத்தின்மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களைத் தூண்டும் ஒரு செயல், ஒரு முயற்சி” எனப் போலீஸ் கருதுவதாக காலிட் கூறினார் என்று பெர்னாமா செய்தி ஒன்று குறிப்பிட்டிருந்தது. “அவர் என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்துதான் செய்கிறாரா? இவ்விவகாரத்தில் அவர் எல்லைமீறிச் சென்று விட்டதாக த…
-
- 1 reply
- 612 views
-
-
கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார். எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருட…
-
- 2 replies
- 742 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணின் சுமார் 3 இலஞ்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் வைத்தியசாலை ஊழியர் போல நடித்த ஒருவரால் ஏமாற்றி திருடிச் செல்லப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமை காலை யாழ். போதனா வைத்திய சாலைக்கு இரத்தப் பரிசோதனை செய்யவந்த பெண்ணிடமே தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இரத்தப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லமுற்பட்ட இந்தப் பெண்ணிடம் அங்கிருந்த ஒருவர் தான் வைத்தியசாலையில் பணியாற்றுபவர்போல் பாசாங்கு செய்து கதைகொடுத்துள்ளார். அவருடைய செயற்பாடுகள், கதைகளை நம்பிய அந்தப் பெண் பரிசோதனைக்காக உட்செல்லும் போது தன்னிடமிருந்த 6 பவுண் தங்கச் சங்கிலியை சுழற்றி அவரிடம் கொடுத்துள்ளார். சிகிச்சை முடிந்து வெளியில் வந…
-
- 0 replies
- 337 views
-
-
தேசிய நல்லிணக்கத்துக்கும் தேசிய அபிவிருத்திக்கும் அதே நேரம் எமது நாட்டுக்கே உரிய வகையிலான தீர்வொன்றினைப் பெற்றுக் கொ ள்ளும் பொருட்டு எம்மோடு கைகோர்க்குமாறு சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்றக் குழுவினருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபை குழுவினருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாவிலாறு நீர்த்திட்டத்தினால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே துன்பகரமான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஒன்று ஏற்பட்டது. எனவே அத்தகையதோர் நிலைமை மீண்டும் எழாதிருப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெ…
-
- 1 reply
- 619 views
-
-
இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வரலாறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக ச…
-
- 12 replies
- 1.2k views
-
-
கல்முனை தமிழ் பிரதேசத்தில் உள்ள உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு காட்டிவருவது தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் சதி நடவடிக்கை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதால் முஸ்லீம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள், அப்படி இருக்கும் போது முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே உப பிரதேச செயலகமாக நீண்டகாலமாக தனித்தியங்கும் கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரச சேவையினை விரிவு படுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே அப்பிரதேச செயலகத்த…
-
- 3 replies
- 983 views
-
-
சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் முத்தரப்பு பேச்சுக்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளன. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள,சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, “இந்தியக் கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்கள் கடந்த 18ம் நாள் திருகோணமலைக்கு வந்தன. இவை திருகோணமலையில் தரித்து நின்று முத்தரப்பு பேச்சுக்களில் பங்கேற்றன. இந்த பேச்சுக்களின் முடிவில், மேலதிக நடவடிக்கை குறித்த திட்டம் ஒன்று வரையப்படும். இந்த முத்தரப்பு பேச்சக்கள், முக்கியமாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பது, கடற்கொள்ளையை தடுப்பது குறித்தே நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாத…
-
- 1 reply
- 328 views
-