Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாண முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபருக்கு முன்பாக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாண முதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயே பதவியேற்று வந்துள்ளனர். எனினும், மாகாண முதலமைச்சர்கள், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்ச முன்னிலையில், பதவியேற்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறத…

  2. இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது. கிழக்கு மாகாண சபையின் சின்னம் மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும், ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள். முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது.. பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி …

  3. எம்மினத்தின் குலக்கொழுந்துவிற்கு இன்று பிறந்த நாள் !!

  4. கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்துஇ பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இக் கொள்ளைச் சம்பவத்தில் தங்க ஆபரணங்கள் செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ரயிலில் ஒன்றாக பயணித்த நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33865/64//d,fullart.aspx

  5. மது போதையில் இருந்த சிறீலங்கா படையினரால் செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில் இளம் குடும்பப் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியானார். நேற்று திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் கீர்த்தனா என்ற 20 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே பலியானவராவார். இவரது கணவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவர்கள் திருமணமாகி ஐந்து மாதங்களேயாகின்றன என்று இவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கணவனும் மனைவியும் அவசர அலுவல் காரணமாக தங்கள் உந்துருளியில் யாழ்.நகருக்குச் சென்றுவிட்டு யாழ்.கே.கே.எஸ் வீதியூடாக வந்து தட்டாதெரு சந்தியிலிருந்து நல்லூர் வீதியால் திரும்பியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு பின…

  6. நஜீப் அப்துல் மஜீத், சிவனேசதுரை சந்திரகாந்தன், றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆதரவு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவதற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளினால்; நிறைவேற்றப்பட்டது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டே இந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தனி நபர் பிரேரணையை கடந்த் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரினார். அதன்பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்ப…

  7. வீரத்தமிழ் மறவன் மகன் உதித்த நாளில்,இன்று உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது அந்தப்பாலகனைப்போல் எத்தனை எத்தனை இளம்பிஞ்சுகளை, எம் தமிழ் மண்ணில் சிங்களகொடியர்கள் புதைத்துள்ளார்கள்.கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன.முள்ளிவாய்க்கால் போரில் பல குழந்தைகள் கொல்லப்பட்…

  8. சல்மான் குர்ஷித்துடன் 5 உடன்பாடுகளில் கையெழுத்திடத் தயாராகிறது சிறிலங்கா [ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 08:54 GMT ] [ கார்வண்ணன் ] பயணத்தின் போது, சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பான ஐந்து உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 7ம் நாள், கொழும்பு வரவுள்ளார். இதன்போதே, சம்பூரில் 500 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைப்பது தொடர்பான 5 உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன. தனிப்பட்ட பயணமாக அவுஸ்ரேலியா சென்றிருந்த சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி, அமைச்சின் செயலர் பெர்டினான்டோ, இந்த உடன்பாடுகளை இறுதி செய்வதற்காக, நாடு திரும்புகிறார். சம்பூர் மின் திட்டம்…

  9. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னாரில் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச்சொரூபம் ஒன்று திருட்டுப் போயுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாக சபையினர் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார், நானாட்டான் பகுதியில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச்சொரூபமே திருட்டுப் போயுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் குறித்த ஆலயத்திற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள், கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கல மாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்துள்ளதுடன், இந்தச் திருச்சொரூபத்திற்கு போ…

  10. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீதான விவாதமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வின் இரண்டாவது நாள் அமர்வு சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. இந்த பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதத்…

  11. இலங்கையிலும் மியன்மாரிலும் உள்ள பௌத்தர்கள் இனவாத வன்முறைகளை நிறுத்த வேண்டும் என திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். திபேத்திய பௌத்த ஆலயத்தில் பக்தர்களுக்கு போதனைகளை வழங்கும் முதல் நாள் நிகழ்வில் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏற்கனவே மியன்மாரில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன. இலங்கை மற்றும் மியன்மார் பௌத்த துறவிகள் பயங்கரவாதிகளாக கருதப்படுவது மிகவும் வருத்தமானது. பௌத்த துறவிகள் புனிதத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மதம் மீது நம்பிக்கை வையுங்கள். அதேபால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளியுங்கள். இது பல்வேறு மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கொண்டு வரும் என்றார். திபேத்திய ஆன்மீ…

  12. வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சியின் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெயரிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அய்யூப் அஸ்மினுக்கு ஒரு ஆசனமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மேரி கமலா குணசீலனுக்கு இரண்டாவது ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது. http://www.thinakkathir.com/?p=52774#sthash.aNhJqknR.dpuf

  13. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலுக்காக கடன்களை வழங்கி விட்டு அதனை அவர்கள் மீள செலுத்த தாமதித்தால் கடனை வழங்கிய அதிகாரிகள் கடனை பெற்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார். கணவனை இழந்த பெண்களுக்கும் தொழிலற்ற இளம் பெண்களுக்கும் சில நிறுவனங்கள் கடன்களை வழங்கி வருகின்றன. அதிக வட்டி காரணமாக கடனை செலுத்த முடியாது அவர்கள் சிரமபடுகின்ற போது அவர்களிடம் சில அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கமலதாஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்ப…

  14. 2013 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம், 4ஆம் மற்றும் 6 ஆம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளது. குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருண் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், தர்மகுலசிங்கம் மேர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7451 நடராஜா அருணுக்கும், ஏனைய பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கு நன்றிகள்..

  15. கடந்த ஒரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த யால தேசிய சரணாலயம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைப்பு வேலைகளுக்காக கடந்த ஒரு மாதகாலம் மூடப்பட்டு அனைத்து புனரமைப்புகளும் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் யால தேசிய சரணாலயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதோடு தேவையற்ற கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதேவேளை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவகையில் உயர்தரத்தில் யால தேசிய சரணாலயம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7450

  16. வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை முன்னாள் நீதியரசரும் வட மாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்டார். (படங்கள்:சுமித்தி தங்கராசா, ஜெகனாதன்) http://tamil.dailymirror.lk/--main/84240-2013-10-01-06-57-59.html

  17. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித உரிமைக்கு எதிரான நடந்துள்ள சம்பவங்கள் குறித்து தங்களது அறிக்கைகள் தாக்கல் செய்தது. உலகத்தின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனலின் இந்தியப் பிரிவு ஒரு அறிக்கையை 24.09.2013 செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. நன்றி: நக்கீரன் http://www.nakkheeran.in/ http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108122

  18. தொடரும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்!! யாழ்ப்பாணத்தினிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையான யாழ்.தினக்குரலினது அலுவல செய்தியாளர்கள் இருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் எனக்கூறிக்கொள்பவர்களினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகையினது ஆசிரிய பீடமே இம்முறைப்பாட்டை செய்துள்ளது. பல தடைவைகளாக குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த நபர்கள் இவ்விரு பத்திரிகையாளர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஆசிரிய பீடத்தை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்கள் தம்மை அடையாளப்படுத்துவம் வகையிலான ஆவணங்களை தமக்கு சமர்ப்பிக்கவில்லையென…

  19. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களில் 40 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்தவர்கள் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் தலைவர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார் 33 வீதமானோர் ஆண்களும் 7 வீதமான பெண்களும் இவ்வாறு எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சிகிச்சைக்காக வருவோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உல்லாசப்பிரயாணம் மேற்கொண்டவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். எச்.ஐ.வி தொற்று இருப்பதாக சந்தேகமுள்ளவர்கள் இரத்த பரிசோதனை மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இரத்த பரிசோதனை மூலமாக மட்டுமே அதனை அறிய முடியும் என்றும் அவர் த…

  20. 2001 ஆம் ஆண்டு வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்­லைத்­தீவு கடலில் கடற்­ப­டை­யினர் மீதான தாக்­கு­த­லுக்கு தலை­மைத்­துவம் வழங்­கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­ப ட்ட வழக்­கொன்றில் சந்­தேக நபர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இதற்­கான தீர்ப்­பினை வழங்­கினார். பருத்­தித்­துறை புலோ­லியைச் சேர்ந்த செல்­லப்பா இன்­ப­குமார் (வயது 37) என்­ப வர் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குறித்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்­டி­ருந்­தது. 2001 செப்­டெம்பர் மாதத்­திற்கும் நவம்பர…

  21. யாழ்.நகரப் பகுதியில் உள்ள நகை வியாபார நிலையம் ஒன்றில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தங்க நகைகளைக் கொள்ளையடித்த 2 பெண்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி யாழ்.நகரப் பகுதியில் உள்ள நகை வியாபார நிலையம் ஒன்றில் நகை வேண்டுவது போல் வந்த 2 பெண்கள் அங்கிருந்த 18 கிராம் நிறையுடைய 3 அட்டியலை திருடிச் சென்றுள்ளனர். இதன் பின்னர் மேற்படி நகை வியாபர நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் நகை திருடியவர்கள் தெளிவாக இனங்கானப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை குறித்த இரு பெண்களும் யாழ்.நகரப் பகுதி நகை வியாபாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு சிறீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.sankathi24.com/news/33834/64//d,fullart.aspx

  22. புத்தூர் கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராமா (வயது 65) விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33835/64//d,fullart.aspx

  23. கொழும்பு முகத்தவாரம் எலிஹவுஸ் பார்க் பிரதேசத்தில் நீர்வழங்கல் குழாயில் சீர்திருத்தப் பணியில் ஐவர் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/33837/64//d,fullart.aspx

  24. மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை(29-09-2013) மாலை இனம் தெரியர்தவர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரையுமான நேரப்பகுதிக்குள் குறித்த ஆலயத்தினுள் சென்ற இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிக்கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கல மாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து அச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடை கலட்டப்பட்டு அதே இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் சொரூபம் கொண்டு செல்லப்பட்டுள…

  25. வல்வெட்டித்துறைப் சந்தியில் முகாம் அமைத்திருக்கும் சிறிலங்கா படையினர் முகாமிற்குப் பின்புறமாக உள்ள மக்களைத் தாக்கி அங்கிருந்து கலைத்துவிட்டு புதிய முகாம் அமைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்குமாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். மேற்படிப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாமிற்குப் பின்னால் கடற்கரை உள்ளது. இக்கடற்கரையினை பெரும்பாலன மக்கள் போக்குவரத்திற்காகவும், கடற்றொழிலுக்குச் சொல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு வீதியினை அமைப்பதற்கும் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மிக விரைவில் அவ்வீதி அமைக்கப்படும். இந்நிலையில் நேற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.