ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த யுத்த சூனிய வலயம் என்ற ஆவணப்படத்தை திரையிட்ட மனித உரிமை செயற்பாட்டளர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய - கோலாலம்பூர் பகுதியில் குறித்த ஆவணப்படத்தை திரையிட்ட மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் மீதே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=93214&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 502 views
-
-
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெள்ளி க்கிழமை மாலை நடைபெறவுள்ளது. பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 03 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் முதலிய கிரியைகளுடன் ஆரம்பமானது. மகாபாரதக் கதையினை நினைவு கூரும் முகமாக 18 தினங்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவத்தில் இன்று வியாழக்கிழமை அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை செல்லும் காட்சியும், இதில் பண்டிமறித்தல், கமலகன்னி, ஏலகன்னி மறித்தல், அரவாணை களப்பலிகொடுத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை ஆலய முன்றலில் பஞ்ச பாண்டவர்கள், திரௌபதை மற்றும் தேவாதிகள் சகிதம் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. மறுநாள் சனிக்கிழமை தீக்குழிக்கு…
-
- 0 replies
- 394 views
-
-
12 தங்க கட்டிகளை தம்வசம் வைத்திருந்து சிறீலங்காவினை சேர்ந்த இருவர் இந்தியாவின் - கோவா சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளனர். கோவா வானூர்தி நிலையத்தில் இருந்து டுபாய் செல்ல தயாரான நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோனையின் போது அவர்களின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்த தங்க கட்டிகளின் சந்தை பெறுமதி மூன்று கோடி ரூபாய்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33347/64//d,fullart.aspx
-
- 0 replies
- 362 views
-
-
2001 ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் காவலரண் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அருங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். கடந்த 13 வருடங்களாக தேடப்பட்டு வந்த இந்த காவல்துறை கான்ஸ்டபிள் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது காவல்துறை சீருடை துப்பாக்கி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பொருட்களுடன் குறித்த காவல்துறையினன் தப்பிச் சென்றிருந்தார். அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களுடன் தப்பிச் சென்றமைக்கு எதிராக காவல்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகாத …
-
- 0 replies
- 429 views
-
-
எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வழிவிட்டு சுயேட்சைக் குழு. 08 தேர்தலிலிருந்து விலக முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கி.சிவாஸ்கரனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழு இல.8 இல் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது இக் குழு தேர்தலிலிருந்து விலக முடிவு செய்து ள்ளது. இவ் விடயம் தொடர்பாக இ.சிவாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறுவது உறுதி என்பதை அரசாங்கம் உள்ளி ட்ட சகலரும் உணர்ந்துள்ளமையை மக் கள் சந்திப்பினூடா…
-
- 2 replies
- 474 views
-
-
மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களை நீங்கள் புலிகள் என்றே அடையாளப்படுத்து வீர்களானால், நாங்கள் புலிகளாகவே இருக்கத் தயார் என்று உறுமினார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். பருத்தித்துறை முனை கடற்கரையில் நேற்றிரவு இடம் பெற்ற கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணமெங்கும் கோட்டைகள் போன்று இராணுவ முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எங்கும் இராணு வத்தின் பிரசன்னம் தான். தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக புலிகளாக அடக்கி, ஒடுக்கு, வாய்மூடி அடிமைகளாக வைத்திருப்பதற்காகவே பெருந்தொகையான இராணுவத்தினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள். 6300 ஏக்கர் நிலங்களை …
-
- 0 replies
- 413 views
-
-
யாழினை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்கு முற்பட்டதாக கூறப்படும் இருவர் கஹதுடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு ஒருவகை போதையூட்டக்கூடிய பொருளை உண்ணக் கொடுத்து கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு இளைஞன் வருகை தந்துள்ளார். அங்கிருந்து வெளிநாடு அனுப்பிவைப்பதாக கூறி மற்றுமொருவர் அவரை கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள உணவகமொன்றிற்கு அழைத்துச் சென்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போதையூட்டக்கூ…
-
- 0 replies
- 363 views
-
-
30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது எனவே ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பெரும் திரளான மக்கள் இதில் கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு http://www.sankathi24.com/news/33344/64/30/d,fullart.aspx
-
- 0 replies
- 413 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையின் முகப்பு அட்டையில் ஈழப்பெண்கள் [ வியாழக்கிழமை, 19 செப்ரெம்பர் 2013, 09:18 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, To Walk the Earth in Safety என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், சிறிலங்காவின் வடக்கில் மிதிவெடி அகற்றும் தமிழ்ப் பெண்களின் ஒளிப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரப் பிரிவின் ஆயுதங்களை அகற்றும் பணியகத்தினால் To Walk the Earth in Safety என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஆயுதங்களை அழிப்பது மற்றும் செயலிழக்கச் செய்வது தொடர்பான அமெரிக்காவின் பங்களிப்பை விபரிக்கும் இந்த அறிக்கையின் முகப்பு அட்டையில், மிதிவெடிகளை அகற்றும்…
-
- 0 replies
- 391 views
-
-
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பிரித்தானிய கிளையினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுதக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மோசமான 14 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அமைச்சுக்களும், படைத்தரப்பும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்சம், தரகு போன்றவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 82 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, அல்ஜீரியா, அங்கோலா, கமரூன், கொங்கொ, எகிப்து, எரித்திரியா, ஈ…
-
- 0 replies
- 310 views
-
-
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் கோயில் பூசகர்ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். 69 வயதுடைய இவரை யார் கொலைசெய்தது, கொலைக்கானகாரணம் இதுவரை அறியப்படவில்லை.இக் கொலைச்சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96725/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 396 views
-
-
(இலங்கைக் கடற்படையினர் வரவேற்கும் பெயர்பலகை நாட்டப்பட்ட இடத்தில் தீவைக்கப்பட்ட முச்சக்கர வண்டி) வடமாகாண சபைத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்து விட்ட போதும் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் இன்று அதிகாலை தாக்குதலிற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் பயணித்த ஓட்டோ வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான இரு வேட்பாளர்களும் யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர்கள் இருவரும் நேற்றிரவு வேலணை மண்கும்பான் பகுதியில்…
-
- 0 replies
- 350 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தியபோதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=7130
-
- 8 replies
- 1.4k views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும், காணி, காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஆளும்கட்சி இலகுவாக வெற்றிபெறும். ஆனால் வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து நிச்சயமாக எதுவும் கூறமுடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சுயநிர்ணய உரிமையை கோரியிருப்பதாகவே நான் கருதுகின்றேன். இருப்பினும் அனைத்துலக அழுத்தம் காரணமாக அவர்கள் சுயாட்சியை நோக்கி தமது செயற்பாடுகளை நகர்…
-
- 0 replies
- 452 views
-
-
யாழ்ப்பாணத்தில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து அனைத்துலக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் வாக்களிப்பு நிலையங்களை அடைவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக, அனைத்துலக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் யாழ்ப்பணத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்துள்ள வாக்களிப்பு நிலையங்களைப் பார்வையிட்டதுடன், அங்கு வாக்களிக்கச் செல்வதற்கு வாக்காளர்களுக்கு வசதியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கருத்து வெளியிட்ட அனைத்துலக தேர்தல் கண்…
-
- 0 replies
- 456 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில், போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால், பண்ணைப் பாலத்தில் வைத்து வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூட்டு சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் வேட்பாளர்களே இந்த தாக்குதலில காயமடைந்த நிலையில், யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியும் பண்ணைப் பாலத்தில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வேலணை மண்கும்பான் பகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரைகளை மேற்கொண்டு விட்டு, யாழ்.நகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள், முச்சக்கர வண்டி மீது கற…
-
- 0 replies
- 502 views
-
-
செப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வேண்டியும் பி. ப. 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கனடிய மண்ணில் மக்கள் எழுச்சியோடு கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. எம் இனத்துக்காக நாம் இருக்கின்றோம் என்ற உணர்வு கொண்ட மக்களின் விடுதலை தாகம் தமிழீழ தேசம் விடியும் வரை ஓயாது எந்நாளும் என்பதை உணர்வு கொண்ட மக்கள் இந்த போராட்டங்களில் நிரூபித்து வருகின்றனர். உறுதி மொழி எடுத்து இனிதே இப்போராட்டம் நிறைவெய்தியது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்! மேலதிக தொடர்புகளுக…
-
- 0 replies
- 233 views
-
-
தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை - இராணுவத் தளபதி 19 செப்டம்பர் 2013 தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனரே தவிர அவர்கள் தேர்தலில் நேரடியாவோ, மறைமுகமாகவோ பங்கெடுக்கவில்லை. போருக்கு பின்னர் வடக்கில் மீள்குடியேற்ற பணிகள், மறுசீரiமைப்பு பணிகள், நிர்மாணப் பணிகள், புனர்வாழ்வு பணிகள் போன்ற நலன்புரி நடவடிக்கைகளிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96715/language/ta-IN/artic…
-
- 0 replies
- 294 views
-
-
TNA தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனை கூறியிருந்தாலும் அரசியல் அமைப்பை தாண்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது - வாசுதேவ 19 செப்டம்பர் 2013 வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினாலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஏனைய மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதேவிதமான அதிகாரங்களே வட மாகாணசபைக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவி;த்துள்ளார். வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்…
-
- 0 replies
- 450 views
-
-
ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை 19 செப்டம்பர் 2013 ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பிரித்தானிய கிளையினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுதக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மோசமான 14 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அமைச்சுக்களும், படைத்தரப்பும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்சம், தரகு போன்றவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 401 views
-
-
தேர்தல்வன்முறை வாழைமரங்கள், தோட்டங்கள் அழிப்பு - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 19 செப்டம்பர் 2013 யாழ்ப்பாணத்தில் விசித்திரமான வகையில் தேர்தல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மக்களை பொருளாதார ரீதியில் தாக்;கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மர்ம மனிதர்களால் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் தோட்டங்களுக்குள் சிலர் புகுந்து அவற்றைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர். தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் வாழை மரங்களை வெட்டி அழித்ததுடன் பீற்றூட் நாற்றுக்களையும் பிடுங்கி எறிந்துள்ளனர். அத்துடன் மாடுகளை பட்டியிலிருந்து திறந்து தோட்டத்திற்குள் விட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியிலேயே இவ்…
-
- 0 replies
- 425 views
-
-
மந்தனா இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் இரவில் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் மந்தனாவையும், அவரது குடும்பத்தவரையும் கத்திமுனையில் மிரட்டிய பின்னணியில் அவர் இலங்கையை விட்டு வெளியேறியிருப்பது இலங்கைக்குள், “ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர்” தொடருவதை காட்டுவதாக ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு கவலை வெளியிட்டிருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல், தாக்குதல், மனித உரிமை, பெண்கள் சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்குப் பிறகு …
-
- 4 replies
- 637 views
-
-
சிறீலங்காவின் பதுளை லுனுகல பசறை பகுதியில் சிறியளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக பூகோளவியல் மற்றும் கனிமவள ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சில செக்கன்களுக்க நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் நில நடுக்கத்தில் எவருக்கும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.பிரதேச மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். http://www.sankathi24.com/news/33318/64//d,fullart.aspx
-
- 1 reply
- 489 views
-
-
மாகாண சபை எங்களுக்குத் தீர்வல்ல. இந்த மாகாண சபையால் நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் நாம் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டால் அரசாங்கமும் அதனுடன் ஒத்துப்போவோர்களும் அந்த இடங்களைப் பிடித்துக் கொள்வார்கள். அதனால் திரும்பவும் ஒரு சகதிக்குள் நாங்கள் தள்ளப்படுவோம்.” கிளி நொச்சி ராமநாதபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். $ http://www.thinakkathir.com/?p=52532#sthash.XWi82sUi.dpuf
-
- 0 replies
- 417 views
-
-
வடமராட்சிக் கிழக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 35 இலட்சம் பணத்தை வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தை சேர்ந்த ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தி பெற்றுக்கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை வங்கியில் அந்நிதி வைப்பிலிடப்பட்டதாகவும் ஈ.பி.டி.பியினர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அந்நிதியை அபகரித்து கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர். இந்நிதி குடத்தனையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சேகரிக்கப்பட்ட பணம் என தெரிவிக்கப்படுகிறது. …
-
- 7 replies
- 659 views
-