Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 05 JUN, 2024 | 08:36 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்…

  2. 05 JUN, 2024 | 07:17 PM ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை இன்று புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி), மாகாண காணி ஆணையாளர், யாழ். பிராந்திய பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் என பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி…

  3. யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது - தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோருகின்றனர் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 05:21 PM 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு …

  4. Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ பிள்ளைகளுக்கோ பயனற்றது. பொருத்தமற்ற கல்வி முறைமையினால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது : கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்க…

  5. 05 JUN, 2024 | 04:31 PM பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம்…

  6. அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம் 05 JUN, 2024 | 04:21 PM இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்து…

  7. வாகன புகை பரிசோதனை! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303182

  8. 05 JUN, 2024 | 02:20 PM ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் புதன்கிழமை (5) அதிகாலை தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று, மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் புறப்பட்டு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை அடைந்துள்ளனர். தாய், தந்தை, நான்கு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களான இந்த ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185358

  9. Published By: VISHNU 05 JUN, 2024 | 08:50 AM யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185338

  10. வெற்றிடங்களை நிரப்பினாலே தேசிய வைத்தியசாலையாக மாற்றலாம்! adminJune 5, 2024 யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் 04 வது தேசிய வைத்தியசாலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டிருந்தபோதிலும் அதன் தேவைகள் நிலைப்பாடு பற்றி சுகாதார அமைச்சிடம் அறிவித்திருக்கின்றோம். 1350 படுக்கைகளுடனான விடுதியும், 325 வைத்தியர்களும், 680 தாதியர்களுமாக மொத்தமாக 2,150 நபர்கள் கடமைபுரிந்து வருகின்றனர்.…

  11. கடந்த வருடம் போலி துவாரகா இந்த வருடம் போலி பொட்டம்மான். பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம். இது பற்றி மேலதிகமாக.... போலிகளை அம்பலப்படுத்துவோம்!

  12. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது. ஆகவே சட்டமூலத்தை நாளை (வியாழக்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை செயற்படுத்த தயாராகவுள்ளோம். திட்டமிட்டதற்கு அமைய சட்டமூலம் மீதான விவாதம் நாளை இடம்பெறும். பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. ஆகவே எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என மின்சாரத்து…

  13. Published By: VISHNU 04 JUN, 2024 | 06:19 PM ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்தார். 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் மனித உரிமைகள் செயற்பா…

  14. Published By: VISHNU 04 JUN, 2024 | 08:59 PM நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/185328

  15. பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை! உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை செய்யும் மாணவருக்கு அதை மீண்டு…

  16. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:51 PM இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வரு…

  17. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை ) 2…

  18. 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/1…

  19. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்ற…

  20. 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட…

  21. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவ…

  22. Published By: VISHNU 04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்ப…

  23. Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நி…

  24. Published By: VISHNU 04 JUN, 2024 | 03:03 AM யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்…

  25. திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024 திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.