Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 23 MAY, 2024 | 11:39 AM உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 76 ஆவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, இலங்கை சுற்றுலா சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கலாச்சார வளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லாத செயற்பாடுகள் பிரிவுகளில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் பயணம், சுற்றுலா சமூக பொருளாதார தாக்கம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு 74-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 119 நாடுகளில் தரவரிசையில…

  2. 23 MAY, 2024 | 03:17 PM திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் நிதர்சன் ஆதித்யா (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியின் சகோதரனான நிதர்சன் அதிரேஸ் (வயது 4) படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். …

  3. 23 MAY, 2024 | 02:50 PM வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது. எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை. எனவே, திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழிய…

  4. 23 MAY, 2024 | 05:04 PM கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெர…

  5. படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு செப்டம்பரில் மீண்டும் மனித உரிமை பேரவை ஆணைவழங்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 23 MAY, 2024 | 04:32 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் ம…

  6. 23 MAY, 2024 | 06:15 PM மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மன்னார் மெசிடோ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மன்னார் நடுக்க…

  7. பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்! பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன் அமைப்பினர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தவுள்ளதாக த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்…

    • 1 reply
    • 280 views
  8. மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024 மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இத…

  9. Published By: DIGITAL DESK 7 22 MAY, 2024 | 03:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ம…

  10. Published By: DIGITAL DESK 7 22 MAY, 2024 | 08:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும். அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது என ஆளும் கட்சி உறுப்பினர் எம்.முஷாரப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்த…

  11. வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை வெடிபொருள்கள் இருக்கின்றன என்று காரணம் கூறுகின்றது இராணுவம் (புதியவன்) வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குள் வெடிபொருள்கள் இருக்கின்றன என்று தெரிவித்து அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இருந்தபோதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை. இராணுவ முட்கம்பி வேலி…

  12. மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் ! 22 MAY, 2024 | 03:32 PM நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று (22) காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளது. எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்த…

  13. குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில தாய்மார்கள்; போது தாங்கள் எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார். தன்னை போதைப்பொருள்குற்றவாளி மாகந்துரே மதுசுடன் சிறையில் ஒன்றாக தடுத்துவைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். நான் அவருடன் ஒன்…

  14. 22 MAY, 2024 | 08:07 PM நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை …

  15. நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் Published By: VISHNU 22 MAY, 2024 | 07:34 PM நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றிய நிலையின் காணப்படுகிறது. 22 ம் திகதி புதன்கிழமை பிற்பகல் எடுக்கப்பட்ட இப் படங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் எவ்வாறு வற்றியுள்ளது என்பத்தை காட்டியது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றியுள்ளதன் காரணமாகப் பழைய தெல்தெனிய நகரின் சில பழைய பகுதிகளைக் காட்டுகிறது. க…

  16. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆம் 22 திகதி புதன்கிழமை இன்று மீண்டும் ஆரம்பமானது. 22 திகதி புதன்கிழமை ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட…

  17. 22 MAY, 2024 | 04:19 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராகப் புதன்கிழமை (22) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார். சிரேஷ்ட சட்…

  18. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது சுகப்பிர…

  19. பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் .சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அத்துடன், தற்போது கடலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302226

  20. வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் புதன் கிழமையான இன்று தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளின் உள் வீதி ,வெளி வீதி உலா இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது. https://thinakkural.lk/article/302196

  21. ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் தற்போதைய தலைவர் ஜூன் மாதம் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் குழுவின் ஆதரவையும் பொன்சேகா பெற முடிந்துள்ளதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பின்கதவு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வட்டாரங்…

  22. Published By: VISHNU 21 MAY, 2024 | 11:55 PM இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard), நினைவேந்தல் த…

  23. மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும் அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன Published By: VISHNU 22 MAY, 2024 | 01:43 AM (செங்கடகல நிருபர் எம்.ஏ.அமீனுல்லா) இலங்கையின் விகாரைகளில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும், அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை எனவும், ஒரு நாடு என்ற வகையில் எமது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளில் நிலவும் பலவீனங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவு…

  24. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை : ஆய்வில் தகவல்! இலங்கையின் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்வதாக நாட்டு மக்கள் கருதுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த் பொலிசி (Institute for Health Policy) நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை தவறான திசையில் செல்வதாக 75 சதவீத இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை விட இலங்கை மக்களின் நிலைப்பாடு பாரிய அதிகரித்த போக்கை காட்டுவதாகவும் தெரியவந்த…

  25. பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு! நேற்றைய மத்தியகுழுக் கூட்டத்திலும் முடிவில்லை (ஆதவன்) எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது. அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்…

    • 1 reply
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.