Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த…

  2. இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது. வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டா…

  3. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த…

  4. Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 11:03 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183756

  5. நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் adminMay 17, 2024 வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்ப…

  6. “பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவிப்பு! ஊடகப்பிரிவு- உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால்…

  7. Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 04:47 PM (நா.தனுஜா) தமிழரசுக்கட்சி வழக்கு விவகாரம் தொடர்பில் கேட்டறிந்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தமிழ்க்கட்சிகள் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (16) மாலை யாழில் உள்ள தனியார் உணவு விடுதியொன்றில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகள…

  8. தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன - யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் 16 MAY, 2024 | 05:19 PM பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புகளிடம் இருந்து எந்த‌ நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன‌ என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கில் இறுதிப் போர் நினைவேந்தல் மீதான‌ அரச அடக்குமுறை தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று (16) வெளியிட்டுள்ள அற…

  9. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார். மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதியின் அடாவடித்தனம் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர். …

  10. Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 03:46 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை …

  11. இலங்கையில் அதிகரிக்கும் 'பிரஷர்' இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம்திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உயர் இரத்த அழுத்த அபாயத்தைத் தடுப்பது குறித்து சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் …

  12. Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 10:20 AM தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த செய்தி குறிப்பில், தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம். ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர…

  13. Published By: VISHNU 16 MAY, 2024 | 01:17 AM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்…

  14. Published By: VISHNU 16 MAY, 2024 | 01:40 AM முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அவரக்ளினால் குறித்த குடிநீர் திட்டத்திற்கான பெயர்பலகை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், சம நேரத்தில் ஏனைய அதிதிகளினாலும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது நிகழ்வில் வடமாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர்,அமைச்சின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்த…

  15. தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.…

  16. சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர். அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆ…

  17. 15 MAY, 2024 | 04:43 PM சிறியஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இராணுவம் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகுறித்து இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம் ஆனால் சிறிய அளவில் என தெரிவித…

  18. (எம்.மனோசித்ரா) ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு 011 240 1146 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. …

  19. 15 MAY, 2024 | 02:11 PM நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த "உப்புக் கடலை உரசிய நினைவுகள்" என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சிவகுரு ஆதீன முத…

  20. Published By: DIGITAL DESK 7 15 MAY, 2024 | 09:34 AM யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார். இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர், ப…

  21. Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 11:27 AM அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனுராதபுரம் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த கபிலகுமார டிசில்வா கடத்தப்பட்டு இரகசியமறைவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையை மிக நீண்டகாலமாக பாதித்துவரும் பலவந்த காணாமல் போகச்செய்தல் மீண்டும் தலைதூக்குகின்றது என்ற அச்சத்தின் மத்தியில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்…

  22. பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறு சுமந்திரனை கேட்கவேயில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் May 15, 2024 “ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய். அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – “இன்று ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சுமந்திரனிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியிருக்கின்றா…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! Vhg மே 15, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது. எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின…

  24. Published By: VISHNU 14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…

  25. த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.