Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையென்பது அம்பலமாகியுள்ளது. இன்று கள யதார்த்தத்தை பார்வையிட நேரில் சென்ற சட்டத்தரணிகள் குழு ஒன்றின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. தமது கட்சிக்காரரென அடையாளப்படுத்தப்பட்ட வலிவடக்கின் காங்கேசன்துறையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அழைத்துச்சென்ற சட்டத்தரணிகள் குழு அவரது காணியினை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தது. எனினும் அவர்களை உள்ளே செல்ல அனமதி மறுத்த படையினர் பின்னர் அதிகாரிகளை தமது காவல் நிலையத்திற்கு உடனடியாக அழைத்துள்ளனர். இதைய…

  2. இலங்கைக்கு எதிரான பிரிட்டனின் அறிக்கை தொடர்பில் பொது பலசேனாவின் அதிருப்தியை இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் உயர் அதிகாரிகளிடம் அவ் அமைப்பு நேரடியாக தெரிவித்துள்ளதோடு பொது பலசேனா முஸ்லிம் அடிப்படை வாதத்தையே எதிர்க்கின்றதே தவிர முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பற்ற தென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் மூவரடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை பொது பலசேனா தலைமையகத்தில் அதன் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன்போதே பொது பலசேனா சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அதன் நிறைவேற்றுக் குழு முக்கியஸ்தர் லிலந்த வீதானகே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், பொது பலசேனா ஒரு …

  3. நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என்று ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் தெரிவித்தார். ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் கடந்த திங்கட்கிழமையன்று மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் மட்டக்க…

  4. செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலைச் சம்பவத்தையடுத்து, பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீதான தீவிர கண்காணிப்புகளும் ஒழுக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர் ஒருவர் எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றை சரியான முறையில் பேணப்படுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் பல பாடசாலைகளில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன. சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் நேற்று முதல் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்குரிய நடைமுறைகளை மீறியவர்கள் மீது பாடசாலை ஒழுக்காற்றுக் குழுக்களினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிக தலைமுடி வைத்திருந்த ஆண் மாணவர்கள், சேட்டினை வெ…

  5. அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்…

  6. அரசாங்கத்தின் முக்கிய இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளமான www.news.lk இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளது. சுல்தான் பிரேய்ன் என்ற குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை, இணைய தளம் தாக்கப்படவில்லை எனவும் இணைய பெயார்வெல் காரணமாக இவ்வாறு இணைய தளம் முடங்கியதாகவும் n;தரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91082/language/ta-IN/article.aspx

  7. நாட்டை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக யுத்தம் நீடித்த போதிலும், தொடர்ந்தும் நாட்டை பாதுகாப்பதற்கு ஆயுதங்கள் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான ஆயுதங்களையும் ஏனைய உபகரணங்களையும் அரசாங்கம் தொடர்ந்தும் இறக்குமதி செய்வதாகத் n;தரிவித்துள்ளார். நாட்டை பாதுகாப்பதற்கு எவ்வாறான ஆயுதங்கள் தேவை அவற்றை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்பதனை நாடு சிந்திக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

  8. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் தேவைக்காக 12 இடங்களில் காணிகளை சுவீகரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு , காணி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது. வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 12 இடங்களில் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள இடங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து கருத்துக் கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரனா பொன். செல்வராஜா …

  9. உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப்பட்டதாகவே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்மாதிரிகளைத் தந்திருக்கின்றது. போராளிகளின் செயற்பாடுகளில் மட்டுமன்றி தேசப்பற்றாளர்களின் அர்ப்பணிப்பில் கூட பல முன்மாதிரிகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலொன்றே 'அணையாத் தீபம்' அன்னை பூபதியின் தியாகமும் எனலாம். அந்தவகையில் கடந்த திங்கள் கிழமை அன்று பெர்லின் நகரில் அணையாத் தீபம் அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவாக சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. சுடர்வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அன்னை பூபதி அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அகவணக்…

  10. எந்த ஒரு வெளிநாடு உதவி செய்தாலும் கூட எனது அரசை கவிழ்க்கவே முடியாது என்று கொழும்பு நகரில் இவ்வாறு கொக்கரித்தார். இந்த நாட்டில் சிலர் எமது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அரசை கவிழ்த்துவிட முடியும் என்று கனவு காண்கின்றனர். ஒரு அரசை கவிழ்க்கும் சக்தி எங்கள் கையில் மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்கனவே நாங்கள் நிரூபித்தோம். எங்கள் அரசை கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை. அத்தகைய சாதனைகளை நானும் எனது கட்சியும் தான் செய்ய முடியும். அதனால் தான் இன்றும் கூட எனது அரசு வலுவான அடித்தளத்துடன் ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த அரசியல்வாதிகள், இங்குள்ள நிலைமை குறித்து திருப்தி தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில…

  11. 'காணிகளை படைத்தரப்பிற்கு சுவீகரிக்கும் நடவடிக்கையினை தனிப்பட்ட ரீதியில் வன்மையாக கண்டிக்கிறேன்' நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழத்தொடங்கியுள்ள நிலையில் தமிழ் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து யாழ்;.மாவட்ட காணி மற்றும் காணி சுவீகரிப்பு அதிகாரி தனது சுவீகரிப்பு அதிகாரி பதவியை ராஜினாமாச்செய்து வெளியேறுகின்றார். சுமார் ஒரு மாத கால அவகாசத்தினுள் மாற்று ஏற்பாடுகளை செய்ய ஆலோசனை வழங்கி தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளன. தாம் ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே இப்பதவிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக கவலை வெளியிட்டுள்ள அவர் தமிழ் மக்களது காணிகளை படைத்தரப்பிற்கு சுவீகரிக்கும் நடவடிக்…

    • 1 reply
    • 594 views
  12. சர்வதேச அரங்கில் இலங்கை ஆதரவு வழங்கும் என பங்களாதேஷ் உறுதியழித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷாஹிடுல் ஹேக் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மனித உரிமைகள் தொடர்பில் நாம் எமது இலங்கை சகோதரர்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளையிட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உட்பட பலர் கல…

  13. துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் அரசுடன் பேச மறுக்கிறார் - ஜனாதிபதி மஹிந்த [Tuesday, 2013-04-23 10:06:17] பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். யுத்தத்த…

  14. தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிப்பதை தடுப்பது குறித்து கோத்தா முக்கிய ஆலோசனை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிப்பதைத் தடுப்பது குறித்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் உயர்மட்ட ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இது குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள படைத்தலைமையகம் ஒன்றில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், வரணியில் உள்ள 52வது டிவிசன் தலைமையகத்தில், வட…

  15. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பூரணமாக மீள்குடியேற்றப்படாமல் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என அரச அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றாமல் வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் பிரதிநிதிதித்துவம் இழக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர்;.எஸ்.ஹமீட் என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றிவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கொழு;மிபினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

  16. சித்திரை 24, 2013 மட்டக்களப்பு சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் கருணா குழுவின் முக்கியஸ்தராகவிருந்த சச்சு மாஸ்டர் என்பவரையும் மற்றுமொருவரையும் கொலைசெய்து மற்றுமொருவரை கொல்ல முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த ம.புவிதரன் என்பவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை, நிலாவெளியைச் சேர்ந்த மகேந்திரன் புவிதரன் என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விவரமாவது 2004 ஆம் ஆண்டு கருணா பிரிந்து வெளியேறிய பின்னர் அவருடன் இணைநது செயற்பட்ட புலிகளின் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு கோட்ட பொறுப்பாளர் சச்சு மாஸ்டர் என்ற கணபதிப்பிள்ளை மக…

    • 0 replies
    • 777 views
  17. பொதுபலசேனா அமைப்பினர் எமலோகத்தில் காரியாலயம் திறந்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும்அஞ்சப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படுகின்ற கல்முனை பிரதேசத்தில் பொதுபலசேனாவின் காரியாலயத்தினை அமைக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறான இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும், பொதுபலசேனா அமைப்பு ஒரு அரசாங்கமல்ல இவர்கள் எமலோகத்தில் அலுவலகம் திறந்தாலும் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளவோ, அலட்…

    • 4 replies
    • 401 views
  18. சவூதியில் பெண்கள் சித்திரவதை, சூத்திரதாரி கொழும்பில் கைது! செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 15:59 இலங்கைப் பணிப் பெண்களை சவூதி அரேபியாவில் புகலிட இல்லத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் கொழும்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார். சவூதியில் வசித்து வருகின்ற இவர் அடிக்கடி நாட்டுக்கு வந்து செல்பவர். இவர் பணிப் பெண்களை அடித்து துன்புறுத்திய காட்சிகள் இரகசிய கமராவில் பிடிக்கப்பட்டன. இக்காட்சிகள் தொலைக்காட்சிகள், இணையங்கள் போன்றவற்றில் வெளீவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இவர் கொழும்புக்கு வந்தபோது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளார். h…

  19. தமிழர்களின் குடியிருப்புக்களுக்கு தீ வைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை! [Tuesday, 2013-04-23 10:37:50] முள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் வதிவிடப் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவித்தது. முல்லைத்தீவு முள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ப…

  20. வலி, வடக்கில் பொதுமக்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக வலி, வடக்கு மீள்குடியேற்ற குழு, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் எதிர்வரும் 29ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலை 10 மணியளவில் வலி, வடக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இந்த தீர்மானம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த கூட்டத்தில் வலி, வடக்கு மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு, படையினரின் நில ஆக்கிரமிப்பிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் ஓரிரு நாட்கள் போராட்டம் நடத்தியும், நீதிமன்றத்தை நாடியும் எவ்விதமான பலனும் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அந்தப் போராட்டங்கள் முழுதாக ப…

  21. தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வரவேண்டும் என்றும், இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பதற்ற நிலை நிலவுவதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்றும், இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த அரசியல்வாதிகள், இங்குள்ள நிலைமை குறித்து திருப்தி தெரிவித்து உள்ளனர். அங்கு (தமிழ்நாட்டில்) இலங்கை அரசுக்கு எதிர்ப்பு கிள…

  22. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த ஒன்றுகூடல் இம்முறை தமிழீழ சுதந்திர சாசனத்தினை மையப்படுத்தி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 'ஸ்காபுறோ கொன்வென்சன் சென்ரில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், கனேடிய அரசியல் - சமூகப் பிரதிநிதிகள், கனேடிய தமிழ்சமூகத்தின் இன உணர்வாளர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், ஊடகர்கள் சமூக அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரையும் உள்ளிடக்கியதாக 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த மண்டபம் நிறைந்த பெருநிகழ்வாக இது அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரை காணொளிவழியே திரையிடப்பட்டிருந்தது. தமிழீழ சுதந்திர சாசனத்தை பற்றிய விளக்கமும், அதற்குரிய கேள்விகொத்தும் வருகை தந்தோ…

  23. கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார். அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும், தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2 ன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30000 திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது. மேற்படி காணிச…

  24. பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது, குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக…

  25. சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று (24) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர். இவர்கள் நேற்று (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததுடன் குண்டர்களால் தாக்குதலுக்கு இலக்கான உதயம் பத்திரிகை அலுவலகத்தையும் சென்று பார்வையிட்டுள்ளனர். இவர்களின் யாழ். விஜயத்தின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களையும் சந்தித்து வடபுல சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.