Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்த…

  2. இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேர் மட்டுமே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக மு…

  3. Published By: DIGITAL DESK 7 14 MAY, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

  4. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:02 PM இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வ…

    • 1 reply
    • 206 views
  5. ஆர்.ராம் தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…

  6. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து,…

  7. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:44 PM திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமி…

  8. Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:34 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள…

  9. இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்…

  10. நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301557

  11. யாழ்ப்பாணம் சென்ற உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் adminMay 14, 2024 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக யாழ் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத…

  12. Published By: VISHNU 14 MAY, 2024 | 02:42 AM மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம் திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர்…

  13. 13 MAY, 2024 | 08:08 PM மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்மொழிவுகள் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று (13) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்த…

  14. தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிக…

  15. 12 MAY, 2024 | 06:12 PM ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. …

  16. 13 MAY, 2024 | 09:50 AM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்ற…

  17. தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். திகதி: 12 May, 2024 12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப்போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டமக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள்- …

  18. 12 MAY, 2024 | 03:38 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின…

  19. Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 01:03 PM (நா.தனுஜா) மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதா…

  20. Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 01:30 PM (நா.தனுஜா) யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவரும் நிலையில், இனியேனும் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்…

  21. Published By: RAJEEBAN 12 MAY, 2024 | 01:46 PM அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர்இதனை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின்போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வேறுபல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்…

  22. பாசிக்குடா கடற்கரையில் அநீதியான முறையில் பணம் அறவீடு Vhg மே 11, 2024 மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரை வளாகத்தில் அநீதியான முறையில் கட்டணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் மற்றும் குளிக்கவும் என பல்வேறு விடயங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் தமது விடுமுறை நாட்களில் வருகை தருகின்றனர். இருப்பினும், குறித்த கடற்கரையை அடைவதற்கு இடிபாடுள்ள, குழியும் பள்ளமும் நிறைந்த, கரடுமுரடான பாதையொன்றே காணப்படுகின்றது. மேலும், கடற்கரையை சென்றடைவதற்குள் நான்கு மர்ம நபர்கள், பற்றுச்சீட்டு ஒன்றை வலுக்கட்டாயமாக கொடுத…

  23. யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்! adminMay 12, 2024 யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி ஆரம்பமானது. கு…

  24. மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை! adminMay 12, 2024 பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24) காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/202755/

      • Downvote
      • Thanks
      • Like
      • Haha
    • 33 replies
    • 2.3k views
  25. Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 09:39 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர்வர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.