ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அங்கு அனுப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரம் தெரிவித்தார். காணாமற்போன 37 பேர் தொடர்பில் நேற்றைய தினம் (உதயனில்) வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: வன்னியில் நடைபெற்ற இ…
-
- 1 reply
- 534 views
-
-
90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விருப்பம் 90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை. மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பி…
-
- 0 replies
- 469 views
-
-
அமெரிக்கா நிராகரிப்பு அமெரிக்காவின் அனுசரணையுடன் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மீது, இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த பிரேரணையில் சர்வதேச மனித உரிமை குறித்த விசாரணை மற்றும் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு போன்ற ஏழு திருத்தங்களை இந்தியா அமெரிக்காவிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில், ஜெனீவாவுக்கான இந்தியாவின் தூதுவர் திலீப் சின்ஹா, அமெரிக்க பிரதிநிதியை தொடர்பு கொண்டு இந்த சீர்த்திருத்தம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார். எனினும் இந்த திருத்தங்களை ஏற்படுத்துவதால், அதனை சபையில் நிறைவேற்றிக் கொள…
-
- 8 replies
- 1.5k views
-
-
மக்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் சமூக பொருளாதார இலக்குகளையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று இந்த குழுவினை ஆரம்பித்துள்ளனர். இதில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை செபமாலை அடிககளாரும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் தலைவர் ரவிகரனும், சிறப்புப் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு இன்றைய காலகட்டதடதில் வவுனியா மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் தேவை மற்றும் அவசியம் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் இறுதி அம்சமாக பிரஜைகள் குழுவின் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி உட்பட காப்பாளர், உப தலைவர், செயலா…
-
- 0 replies
- 674 views
-
-
தமிழக மாணவர்களின் ஈழ ஆதரவு குரலுக்கு நன்றி தெரிவித்தும் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளார்கள். எதிர்வரும் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/28332/64//d,fullart.aspx
-
- 0 replies
- 363 views
-
-
கொழும்புக்கு புறநகரான கொட்டாவை - ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது, இந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை பலவந்தமாக மதமாற்றத்துக்கு உட்படுத்துவதாக, குறித்த பிரதேசத்தில் உள்ள பெந்தகோஸ் சபையின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்…
-
- 0 replies
- 544 views
-
-
மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்த அமைச்சர் பந்துல ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்துக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது பழைய தொழிலை ஞாபகப்படுத்தி இன்று அங்கு பாடம் நடத்தியுள்ளார். முன்னாள் தனியார் வகுப்பு ஆசிரியரான அவர் இன்றைய தினம் அங்கு இரு மணிநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் கற்பித்துள்ளார். ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயலத்தில் உயர்தரத்தில் கல்விபயிலும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பல்கலைக்கழம் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பென்றும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தான் வந்து பாடம் நடத்த தயாராக உள்ளதாகவும் இதன் போது அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார் . http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 547 views
-
-
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? - சரத் பொன்சேகா புதிய தகவல் [ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 08:59 GMT ] [ தா.அருணாசலம் ] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 20ம் நாள் மீட்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடல்களை மீட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது. ஆனால், பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் என்னவாயினர் என…
-
- 8 replies
- 2.8k views
- 1 follower
-
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்' என்று தம்பர அமில தேரர், பத்தேகம சமித தேரர் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.அஸாத் சாலி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் 30 வர…
-
- 2 replies
- 536 views
-
-
(கிறவுண்ட் வியூஸ் வலைப்பூவுக்காக -- டினோக் கொலம்பகே – 19 மார்ச், 2013)தமிழாக்கம் செய்யப்பட்டது முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கையினால் மேற்கொள்ளப்படும் நலிவான நல்லிணக்க முயற்சி, அகற்றப்படுவதற்கு அரிதான மிகப் பெரிய முட்டுக்கட்டையை எதிர்நோக்கியிருக்கிறது. வளர்ந்து வரும் சிங்கள பெளத்த தேசியவாதம், அதாவது BBS எனப்படும் பெளத்த படையணி எற்கனவே சிதைந்துபோயுள்ள சமூதாயத்தை மேலும் சின்னாபின்னமாக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் வர்த்தகர்களின் விலையுயர்வுகளினால் பாதிக்கப்படும் சிங்கள வர்த்தகர்களைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு பெளத்த படையணி முஸ்லிம் சமுதாயத்தை இலக்குவைத்து வீதிகளில் இறங்கியுள்ளது. “கோயில் காணியில்” பள்ளி…
-
- 2 replies
- 781 views
-
-
விட்டுக் கொடுத்தவன் தோற்றதாக வரலாறு இல்லை.அதேநேரம் விட்டுக் கொடுக்காதவன் வென்றதாகவும் சரித்திரம் இல்லை. இதைக் கூறும்போது விட்டுக் கொடுப்பதுதான் ஒரே வழியா என்று யாரும் கேட்டு விடாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்பதும் இறுக்கமாக நிற்கவேண்டிய இடத் தில் இறுக்குவதும் தேவையானவை. எனினும் இலங்கையின் கடந்த கால வர லாற்றை நோக்கும்போது இலங்கை அரசிட மும் விடுதலைப் புலிகளிடமும் விட்டுக் கொடுத்தல் என்பது அறவே இல்லாத விடயமாயிற்று. இதன் காரணமாகவே இலங்கை விவகாரம் இன்றுவரை குற்றத்தின் பக்கமாக பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லையயன்று கூறுவதற்குள் இலங்கை அரசுகள் மீதான நம்பிக்கையீனங்களும், ஆட் சியாளர்கள் காலத்திற்கு காலம…
-
- 0 replies
- 849 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறைக்கு விஜயம் செய்துள்ளார். சம்மாந்துறை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்விமைய கட்டிடத்தினையே திறந்துவைப்பதற்காகவே அவர் சம்மாந்துறைக்கு விஜம் மேற்கொண்டுள்ளனார். மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் நவீன 'ஈ' கல்விமைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம் நௌஷhட் அவர்களின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இங்கு விஜயம் செய்துள்ளார். இந்நிகழ்வில்…
-
- 0 replies
- 345 views
-
-
பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வாழ்வே மாயம் என்ற திரைப்படம் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தில் வருகின்ற வாழ்வே மாயம் ... வாழ்வே மாயம்... என்ற பாடலில் வருகின்ற ...வேசம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா... என்ற வரிகளின் அர்த்தம் இதயத்தை நெக்குருக்கும். அந்தளவுக்கு அந்தப் பாடல் வரிகள் ஆழ்ந்த அர்த்தம் உடையவை. இப்பாடல் வரிக்கு முன்னதாக இடம்பெறும் நாடகம் வரும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா... என்ற வரிகள் வெறும் பாடல் வரிகள் அன்று. ஒவ்வொரு மனிதர்களும் இதன் அர்த்தத் தைப் புரிந்து கொள்வது தர்ம வழியில் நடப்ப தற்கும் நாவடக்கத்திற்கும் அவசியமானது. மேற்குறிப்பிட்ட இரு வரிகளில் வேசம் கலைக் கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்…
-
- 0 replies
- 943 views
-
-
பொதுநலவாய நாடுகள் அமைச்சர்குள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறும் நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுற…
-
- 1 reply
- 693 views
-
-
''பலம் வாய்ந்த நாடுகளும் கடன்களைப் பெற்றே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்கின்றன. ஹம்பாந்தோட்டை லுகமவேரவிலிருந்து ஊவாவுக்கு உப்பு ஏற்றிச் சென்ற உப்பு வண்டிச் சில்லுகளின் சுவடுகள் இருந்த வீதிகள் இன்று கார்ப்பற் செய்யப்பட்டுள்ளன. காட்டு யானைகளின் அட்டகாசம் மட்டுமின்றி குடிநீர் கூட இல்லாத பிரதேசமாகவே இந்தப் பிரதேசம் இருந்தது. இன்று அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொண்டால் எதனையும் தாங்கிக் கொள்ளலாம்.' இப்படி சொல்லியிருப்பவர் இலங்கையின் அரசுத் தலைவர். அண்மையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மத்தளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். …
-
- 5 replies
- 742 views
-
-
By Farhan ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள் என்ற தலைப்பில் இல்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புதிய துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம். ஆனால் எங்களது நாட்டில் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த நிறுவனமும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று இஸ்லாமிய சரீஆ சட்டத்திட்குள் இயங்குகின்றது என்பதை இந் நாட்டில் எந்தவிதமான முக்கிய இஸ்லாமிய அமைப்புகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதே இன்று நாம் அறிந்திருக்காத ஒரு விடயம் என்பதை அறிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில் இலங்கையில் எங்களது பொதுவான விவகாரங்களை எ…
-
- 8 replies
- 632 views
- 1 follower
-
-
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டுமென ஹெல உறுமயவும், ஜே.என்.பி.யும் கோரிக்கை இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியும், ஜே.என்.பி கட்சியும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டுமென ஜே.என்.பி தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியர்கள் இலங்கையின் ஊடாக பாரியளவு பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை ரத்து ச…
-
- 3 replies
- 293 views
-
-
மத்திய அரசு எங்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காவிட்டால் "புலிகளின் பாதையிலேயே நாங்களும் பயணிப்போம்'' என்று தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாள்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழக மாணவர்களின் போராட்டம் இன்னமும் ஓயாமல் தொடர்கின்றது. மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்களின் ஆதரவும் பல்கிப் பெருகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையில் தனித் தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து மாணர்கள் தொடர்ந்து 12 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விருத்தாச்சலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐ.நாவில் நிறைவேற்றப்ப…
-
- 1 reply
- 546 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தமிழக தமிழர்களின் எழுச்சிபோராட்டங்கள் தொடர்பில் எதுவும் அறியக்கூடாது என்பதற்கா யாழில் உள்ள தொலைக்காட்சியில் தமிழக செய்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஆதாரவாகவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் எதுவும் அறியக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சிகளில் வெளியாகும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் சிறப்புக் கண்ணோட்டங்களை ஒலிபரப்பாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காட்டிக் கொடுப்பு மூலம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்து ஒட்டுக்குழு அமைச்சரின் காலில் துடைத்துவிட்டு டான் ரீ.வி என்று ஒரு தொலை…
-
- 1 reply
- 439 views
-
-
ஐந்து குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு தாய்நாட்டை பாதுகாக்கும் சங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் ஐந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கானும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=3645
-
- 1 reply
- 445 views
-
-
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மற்றும் 14 இராணுவ அதிகாரிகள் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது- 2009இல் நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் குறித்த நம்பகமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் கோரிக்கையை சிறிலங்கா தொடர்ந்தும் புறக்கணிக்கும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள்…
-
- 2 replies
- 578 views
-
-
'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்' ['crimes against humanity'] மற்றும் 'இனப்படுகொலை' ['genocide']போன்றவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? இவ்விரு பதங்களும் மனித உயிரினங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்குதலை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதா? இந்த விடயம் தொடர்பாக ஆராய்கின்ற புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ள பிரித்தானிய சட்டவாளரான பிலிப் சாண்ட்ஸ் [Phillipe Sands] அவர்களுடன் RFE/RL [Radio Free Europe/Radio Liberty] ஊடகம் மேற்கொண்ட நேர்காணலின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அனைத்துலக நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் தொடர்பில் வாதங்களை மேற்கொள்ளும் சாண்ட்ஸ் என்கின்ற இந்தச் சட்டவாளர் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழகம் கொந்தளிப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று ஓயாத மாணவர் அலை தாய்த் தமிழக மாணவர் சமூகமும்இ புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் மாணவர் இளையோர்களும் அணைத்து உறவுகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.. காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இதேநேரம…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழினப்படுகொலைக்கு விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு நீதிவழங்க கோரியும் தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த கோரியும் இத்தாலி பலேர்மா நகரில் உள்ள பன்னாட்டு மனிதஉரிமை அமைப்பிற்கு மக்கள் மனுகையளித்துள்ளார்கள். இத்தாலி பலெர்மோ மானகரில் 22.03.2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் 7:30 மணி வரை மாபெரும் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் மனுக்கையளிப்பும். சிறிலங்கா பேரினவாத அரசினாலும் இனவெறி அரசின் அடிவருடிகளாலும் தமிழினத்திற்க்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தி காரணமானவர்களுக்கு நீதி வழங்குவதுடன், உலகம் முழுதும் பரவி வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் தமிழீழத்திற்கான சர்வதேச கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பொன்றை நடாத்து என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ் …
-
- 0 replies
- 194 views
-
-
90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஸ்திரமாகக் …
-
- 0 replies
- 378 views
-