Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுப்பதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது! வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வெளியிடப்படும் தொடர்ச்சியான அறிக்கை எமக்கு கவலைத் தருகின்றது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது இவரும் ஒரு ஆயுதக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களும் பட்ட துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும் இன்னும் தீராத நிலையிலும், இந்த 22வது ஆண்டிலும் பொறுமையாக இருந்ததுடன், தற்போதைய சமாதான சூழலையடுத்து தமது சொந்த மண்ணுக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர வருகின்ற பொழுது அதெற்கெதிராக செயற்படுவதை இனியும் பார்த்…

    • 0 replies
    • 295 views
  2. அடுத்த பிரதமருக்கு நானே தகுதியானவன் என்று மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாள் நாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர், அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அடுத்த பிரதமராக நியமிக்க கூடிய வகையில் தகுதியான நபரொருவர் இல்லை.எனது சகோதரி,சகோதரன் மற்றும் மைத்துனன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். என்னால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியலில் பணியாற்ற முடியும் நானே நம்பிக்கைகுறிய மனிதன் என்றும் அவர் சொன்னார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59840-2013-03-01-14-05-10.html

    • 6 replies
    • 599 views
  3. ஐ.நாவில் சர்வதேசத்தின் கேள்விகளுக்கு மஹிந்த சமரசிங்க பதிலளிக்கவில்லை! - லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து!! 'ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை எந்தப் பயனுமற்றதாகும். சர்வதேச சமூகம் சிறிலங்கா மீது தொடுத்திருக்கும் கேள்விகளுக்கு அரசு சரியான பதிலளிக்கவில்லை என்பது அமைச்சரின் உரையினூடாகத் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அரங்கில் சிறிலங்கா அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது' என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார் '2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஜெனிவா கூட்டத் தொடரில் என்ன கூறினா…

  4. சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்ற ஒளிப்படங்கள் வெளிவருவதன் பின்னணியில், ராஜபக்சக்களுக்கு எதிராகச் செயற்படும் ஐதேக ஆதரவு இராணுவ அதிகாரிகளே இருப்பதாக, சிறிலங்கா அதிபர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அவர் எச்சரித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் போது கவனமாக இருக்கும் படியும், அவர்களில் பெரும்பாலானோர் பலமான ஐதேக குடும்பங்களில் இருந்து 1977ம் ஆண்டுக்குப் பின்னர், படைகளில் இணைந்து கொண்டவர்கள் என்றும் சிறிலங்கா அதிபர் எச்சரித்துள்ளார். இதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் அவரது குடும்பப் பின்னணியையும் உதாரணத்துக்கு எடுத்…

  5. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின், அது தொடர்பாக ஜெனிவா மனித உரிமை மாநாட்டிற்கு சென்று முறையிடுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார். இதேவேளை, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தமக்கு விடுக்கப்பட்டுள்ள உயர் அச்சுறுத்தல் தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். நான் கட்சிக்காக சிறை உணவினையும் உட்கொண்டவன். கட்சி காரணமாக ஏராளமான வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தேன். முன்னர் எனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற…

  6. அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா அழைப்பு வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது. விஜய குமாரணதுங்கவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க…

    • 6 replies
    • 754 views
  7. இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் - வெளிவிவகார அமைச்சு 01 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என ஏற்கவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சு இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இந்தியா இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனீவா அமர்வுகளில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல நாடுகளின் ஆதரவினை பெற்று…

    • 8 replies
    • 811 views
  8. சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா 'Procedural Resolution' கொண்டுவரவுள்ளதா? [ வெள்ளிக்கிழமை, 01 மார்ச், 2013, ] அமெரிக்க அரசானது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவதுProcedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும்... வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப் பாவித்து இப் பிரேரணையை ரத்துச் செய்ய முடியாது. இவ்வாறானதொரு பிரேரணையை, அமெரிக்க மார்ச் மாதம் கொண்டுவரவுள்ளதாக, அமெரிக்காவில் இர…

    • 1 reply
    • 596 views
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன. வன்னியில் திறந்தவெளியில் இயங்கும் பள்ளிக் கூடம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவித்தது. புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசசிங்க, மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உ…

    • 0 replies
    • 444 views
  10. தமிழீழப்பகுதியில் சிங்களப்பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான நாளாந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மார்ச் 1 ந்தேதி மதியம் 11 .00 மணியிலிருந்து 2 .30 மணிவரை Bellamy / Ellesmere சந்திப்பில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மிகுந்த குளிர் நிலையிலும் அங்கு கூடிய மக்கள் தமிழரின் தேசியக் கொடிகளைத் தாங்கியபடி, சிறிலங்காவே இனப்படுகொலைகள…

  11. http://www.youtube.com/watch?v=3d-GTtjNSnk&feature=player_embedded 250 இந்திய இராணுவ வல்லுனர்களை அனுப்பி ஈழத்தமிழர் படு கொலை செய்தது அம்பலம் -

  12. உண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் செயல்படுதல் என்பதை நோக்காக கொண்டும் மனித உரிமை பேரவையில் கொண்டுவருகின்ற எந்தவொரு யோசனைக்கும் ஆதரவளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னாபிரிக்காவின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு ஐக்கியப்படுத்தப்பட்டமைக்கு 'உண்மை' மற்றும் 'மீள் கட்டுமானம்' முக்கியமானதாக அமைந்தது என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றோம். யுத்தம் தொடர்பில் உண்மையை மூடிமறைக்கின்ற கருத்துக்கள் இலங்கைக்குள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. எனினும், உண்மையான நில…

  13. -நவரத்தினம் கபில்நாத் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று பிற்பகல் இரு சாராருக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினால் குழப்பமான சூழல் வவுனியா நகர்ப்பகுதியில் ஏற்பட்டது. வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற இருந்த நிலையில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினை சேர்ந்தோர் இதில் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது புதிய நிர்வாகிகள் தெரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு முறையில் ஏற்பட்ட குழப்பமான சூழலே இம்முரண்பாட்டுக்கு காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் ஒரு அங்கத்தவர் ஒரு வாக்கே அளிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. இருப்பினும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணி;ப்பாளரினால் ஒருவர் …

  14. ஈரானுடன் சிறிலங்கா உறவுகளை வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடும் கவலை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடமே, இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஈரானிடம் இருந்து, தமது நாடு கடுமையான பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்ற பீரிசுக்கு, ஈரானுடனான நட்புறவைச் சுட்டிக்காட்டி நெதன்யாகு கண்டித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜெரூசலேம் செல்வதற்கு முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், …

  15. பிலிப்பைன்ஸில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வீசிய போபா எனும் சூறாவளியினால் அழிவுக்குட்பட்ட வீடுகளை திருத்துவதற்காக இலங்கை 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை நிதிக்கான காசோலையை பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத்தூதுவர் பெனட் கூரே பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளிவிவகார செயலாளரிம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மணிலாவிலுள்ள வெளிவிவகார திணைக்களத்தில் வைத்து கையளித்தார். இந்த சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக பாதிப்பட்டது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59816--25-.html

  16. விஸா இல்லாமல் வந்து விசாரணை நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: கெஹலிய ஆவேசம் வீஸா இன்றி இலங்கைக்கு வந்து எமது நாடு குறித்து விசாரணை நடத்த எந்த நாட்டிற்கும் முடியாது. நாட்டின் இறைமைக்கு மாற்றமாக அவ்வாறு வர இடமளிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். அரசாங்கத்திடம் சரணடைந்த 75 புலி உறுப்பினர்களை படையினர் பாலியல் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ள குற்றஞ்சாட்டினை முற்றாக மறுத்த அவர் இது இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய் அறிக்கை எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற…

  17. -சுமித்தி தங்கராசா அரசியல் வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பு படைப்பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளிக்கும் நிகழ்வு யாழ். உரும்பிராய் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், அரசியல் வாதிகள் தங்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் நன்மைகளை கருதுவதில்லை. மக்களாகிய நீங்கள் அரசியல் வாதிகளிடம் ஏமாறாமல் அவர்களின் செயற்பாட்டினை உணர்ந்து நடந்து கொள்ள வேணடும். அது உங்களின் பொறுப்பாகும் என்றார். அதேவேளை, எமது…

  18. ஸ்ராலின் கிராட் வெற்றி எவ்வாறு உலகப்பபோருக்கு முடிவு வந்ததோ அவ்வாறே தமிழீழத்தின் வெற்றி உலக ஆதிக்க சக்திகளுக்கு முடிவுகட்டும் வெற்றியாகட்டும்.மாந்தகுல வாழ்வை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கும் வெற்றியாகட்டும். http://www.sankathi24.com/news/27532/64//d,fullart.aspx

  19. பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் வடக்கு கிழக்கு நிலைமைகள், மனித உரிமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இடம்பெயர் மற்றும் மீள்குடியேற்ற மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் அலிஸ…

    • 0 replies
    • 416 views
  20. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வொஷிங்டனில் நேற்று (28) செய்தியாளர்களைச் சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீண்ட அறிக்கை இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினர் சார்பிலோ, அவர்களின் நலன்சார்ந்தோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இவற்றை நிராகரித்துள்ள நிலையில், அந்த அறிக்கையுடன் அமெரிக்கா இணங்கிப் போகிறதா, என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார் அதற்குப் பதிலளித்த பற்றிக் வென்ட்ரெல் தெரிவித்ததாவது..…

  21. இராயப்பு ஜோசப் ஆண்டகையும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் கொழும்பில் உள்ள புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர். கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணை நிலைமைகள் என்பன குறித்து இவர்கள் கேட்டறிந்துள்ளனர். அதேவேளை, புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியையும் அவர்கள் சந்தித்துள்ளனர். கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி விளக்கமறியலில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருப்பவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்படும் நிலையில் உ…

  22. சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மறைமலைநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை வைகோ அணிவித்தார். இதனைதொடர்ந்து மற்ற மாணவர்களும் பாலசந்திரனின் முகமூடியை அணிந்து கொண்டனர். அப்போது அந்த மாணவர்களிடம் வைகோ ஆவேசமாக பேசியதாவது:- இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர். பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடிய…

  23. செனல்4 விவரணம் காட்சியிடுவதனை தடுக்க முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் செனல்4 ஊடகமொன்று விவரணமொன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவரணத்தை வெளியிடக் கூடாது என இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன கூட்டாக இணைந்து இந்த விவரணத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பேரவை அமர்வுகளுக்கு சமாந்திரமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணை நிகழ்வுகளை நடாத்தத் தடை விதிக்க முடியாது என மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEdi…

  24. இலங்கை விவகாரத்தில் ஐ.நா உரிய முறையில் கடமையாற்றத் தவறியது – நவனீதம்பிள்ளை 01 மார்ச் 2013 இலங்கை விவகாரகத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பானது திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை 2012ம் ஆண்டுக்கான அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றவில்லை …

    • 1 reply
    • 707 views
  25. முள்ளிவாய்க்கால் படுகொலையின் நடந்து நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் ஒருமுறை ஐ.நா. மனித உரிமை தொடரில் போர்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது

    • 0 replies
    • 461 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.