Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பு யுத்தம் தொடர்பிலான உண்மை ஆதாரங்கள் அண்மை நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் புலத்திலும் தாயகத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பிரித்தானியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மா.வை.சேனாதிராஜா சுரேஸ்பிரேமச்சந்திரன் எஸ்.சுமந்திரன் ஆகியோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை சமகால அரசியல் கருத்துப் பகிர்வை' நடாத்தவுள்ளன. இக் கருத்துப் பகிர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26 பெப்) மாலை 6:30 மணியிலிருந்து இரவு 9:00 மணிவரை ஹறோவில் நடைபெறவிருக்கின்றது. http://www.eeladhesam.com/i…

  2. சம்பூரில் இலங்கை அரசுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க இலங்கை மு…

  3. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் ஈரானுக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கிழக்கு முதலமைச்சரின் ஈரானுக்கான விஜயம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த இரத்து செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுபலசேன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் முறையிடவே முதலமைச்சரி…

  4. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று அமைவதென்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதும் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படாத நிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உயர்மட்டக் குழுவொன்று அமைவதில் சந்தேகமே' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக கூறப்படும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையகத்தில் நடைபெற்றபோது உயர்மட்டக்குழுவும், மாவட்ட குழுவும் அமைப்பது சம்பந்தமாக ஆராய…

  5. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு செல்வதற்காக கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 193 புள்ளிகளைப் பெற்று முதன்மை மாணவனாக தெரிவு செய்யப்பட்டார். ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் இருந்து 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsI…

  6. இலங்கை எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணிந்து செயற்படவேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார். இலங்கை, இந்தியாவுக்கு அடிபணிந்து செல்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இலங்கை சுதந்திர நாடு என்ற வகையில் அது எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியத் தேவையில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கை தம்மை தாமே ஆட்சிசெய்யும் சகல அதிகாரங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இலங்கை, இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளுடன் சிறந்த உறவையும் கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் அரசாங்கத்துக்கு எதிராக அஹிம்சை மற்றும் போராட்டக்குணம் அவசியம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில…

  7. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனை கொடூரமாக கொலை செய்த ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் முன்பு இன்று(22.02.13) மாலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக, புனங்குடி அனீஃபா, இயக்குனர் புகழேந்தி, மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி : “ இலங்கையில் இனவெறி கொண்ட ராஜபக்சே அரசு தமிழீழ மக்களை போர் என்ற பெயரில், கொடூர கொலை செய்து அழித்தது. தற்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்…

  8. மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தமது பிரதேச பெண்கள் அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதை தவிர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாக கூறகின்றது. இதற்கான காரணங்களை அறிந்து ''கூட்டு ஸக்காத் நிதி'' மூலம் அவர்களுக்கு உதவுதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாக சம்மேளனத்தின் செயலாளர் அப்துல் கபூர் கூறுகின்றார். சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக் என்ற பணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையே, இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டி தம்மை தூண்டியதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தமது பிரதேசத்திலிருந்து பணிப்பெண்கள் செல்வது தற்போது குறைந்திருந்தாலும் முதற்கட்டமாக அரபு நாடுகள…

  9. சர்வதேச அனர்த்தக்குழு இலங்கைக்கு எதிராக அறிக்கை 24 பெப்ரவரி 2013 சர்வதேச அனர்த்தக்குழு இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இலங்கையில் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அனர்த்தக்குழு தனது 37 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட வேண்டுமென பொதுனலநாய நாடுகள் அமைப்பிடம், சர்வதேச அனர்த்தக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறும் இடத்திற்கு மாற்றப்பட வேண்டு…

    • 2 replies
    • 433 views
  10. எந்தவொரு பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என அரச தரப்பு மீண்டும் பாராளுமன்றத்தில் பேசும் போது அதனை மறுக்காமல் மௌனமாயிருந்த முஸ்லிம் கட்சித்தலைமைகளின் கோழைத்தனமான நடவடிக்கை கண்டிப்புக்குரியதென உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, நாட்டில் எத்தனை பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த போது அவை தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே தவிர உண்மையானவை அல்ல என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாகூறியிருப்பதன் மூலம் தமிழ் ஊடகங்களையும் அவமதித்திருப்பதாகவே தெரிகிறது. பள்ளிவாயல்கள் …

    • 0 replies
    • 433 views
  11. கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கு பற்றுவதற்காக நேற்றுச் சனிக்கிழமை காலை குறிகாட்டுவான் துறைமுகத்தைச் சென்றடைந்த மக்கள் நீண்டநேரமாக கால் கடுக்க வெயிலில் காத்திருந்தனர். அந்தவேளையில் அங்குவந்த அமைச் சர்டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் அங்கு கூடியிருந்த மக்களையும் கவனிக்காமல் வடதாரகை படகில் ஏறிகச்சதீவுக்குச் சென்றனர். அதன் பின்னர் குறிகாட்டு வானுக்கு வந்த யாழ். மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியான யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் மக்களைப்பற்றி கவனத்தில் எடுக்காமல் தன்பாட்டில் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினதும் பொறுப்பற்ற செயலினால் குறிகாட்டுவானில் கச்சதீவு செல்வதற்காக திரண்டி…

  12. எழுத்து எங்களுக்கு ஆயுதம்: 24 பெப்ரவரி 2013 கணையாழி விருது நிகழ்வில் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் விருதுகளுக்காகவும் புகழுக்காவும் நாங்கள் எழுதுவதில்லை என்று தெரிவித்த ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் எழுத்து எங்கள் இனம்மீதான அழிப்புக்கு எதிரான ஆயுதம் என்று தெரிவித்தார். கணையாழி இதழின் சார்பில் கணையாழி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற்ற பொழுதே தீபச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்: ஈழம் இன்று எப்படியொரு நிலையில் இருக்கிறது? என்பதைப் பற்றிய ஒரு கவிதைக்காகவே இந்த நிகழ்வு வழங்கப்பட்டிருக்கிறது என்றார் தீபச்செல்வன். இந்த விழாவில் தீபச்செல்வன் (கவிதை)…

  13. விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க யாழ். பல்கலைக்கக வளாகத்தில் பரசூட்களில் இறங்கிய இந்திய அமைதிப் படையினரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றமை மனித உரிமை மீறலாகத் தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். 1987 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பரசூட்டில் தரையிறங்கியபோது கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவுத் தூபி பலாலி படைத்தளத்தில் அமைக்கப்பட்டு அங்கு இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் கூறியதாவது; புலிகளுக்கு…

  14. 19ம் நூற்றாண்டில் கிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத…

  15. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்து அவர்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சியான அக்கினிப்பரீட்சை நிகழ்ச்சியில் புலம்பெயர் ஈழத்தமிழரான பரமேஸ்வரன் பங்கேற்கின்றார். இன்று இரவு 9மணிக்கு புதியதலைமுறை தொலைக்காட்சியில் இந்நிகழ்வு ஒளிபரப்பப்பட இருக்கின்றது. நேரடி ஒளிபரப்பை காண்பதற்கு இங்கு அழுத்தவும் http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19121:-9-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

    • 3 replies
    • 729 views
  16. -சுமித்தி தங்கராசா 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவுத் தூபியில் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா மற்றும் அவரது துணைவியார் சாளினி காந்தா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில், யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பரசூட்டில் வந்து தரையிறங்கிய 1300 இந்திய அமைதிப்படையினர், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்ட…

  17. ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக் கப் போவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் விரும்பியோ விரும்பாமலோ விடுப்பதுதான் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய ஒரே வழியாகும். அதேநேரம் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்ற இந்தியப் பிரதமரின் அறிவிப்பு இலங்கை அரசுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத் திருக்கும் எனக் கூறவும் முடியாது. சீனாவுடன் உறவை பேணுகின்ற இலங்கை அரசு, நீண்டகாலத்திற்கு இந்தியாவுடனான உறவை தக்கவைத்துக் கொள்வது முடியாத காரியமே. அந்த வகையில் இலங்கை அரசு சீனாவை நட்பாக்கி இந்திய நட்பை இழந்துபோகின்ற ஒரு காலகட்டமாக இதைப் பார்க்க முடியும். எதுவ…

    • 0 replies
    • 328 views
  18. மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் 24 பெப்ரவரி 2013 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் நாளை தினம் சுவிஸ்சர்லாந்தில் ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை இலங்கையிலிருந்து ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார். அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது. ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர…

    • 2 replies
    • 456 views
  19. -யொஹான் பெரேரா ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி படுமோசமாக சித்திரிப்பதனால் அது பக்கச்சார்பான அறிக்கையாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. நவனீதம்பிள்ளை நிலைமையை மிகைப்படுத்தி கூறியுள்ளதனால் இந்த அறிக்கை நீதியானது அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி முறையான விசாரணைகள் இடம்பெறாதது இலங்கையின் பிழை எனவும் அரசாங்கம் சர்வதேச சமுதாயத்துக்கு வழங்கியிருந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 285 இல் 133 மட்…

    • 12 replies
    • 1.3k views
  20. சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நேரம் உலகத்துக்கு வந்து விட்டது. இந்த அனைத்துலக முயற்சியில், இந்தியாவும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் ஹெரால்ட்’ ஆங்கில நாளிதழ், ‘அதிர்ச்சியளிக்கும் படுகொலை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் மொழியாக்கம்- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா ஆயுதப்படைகள், மோசமான மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை இழைத்த - பெரும் பழிக்கான ஆதாரங்கள் மீண்டும் வெளிக்கிளம்பியுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனாக 12வயது பாலச்சந்திரன், சிறிலங்காப் படையினரால், அருகில…

  21. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு விசாரணைகளுக்கு மேலதிகமாக இவ்வாறு விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இலங்கையில் அழுத்தங்கள் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனிக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்பத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.யுத்த வலயத்தில் உட…

  22. ஜெனீவா பீதியில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது அரசு! [sunday, 2013-02-24 07:38:43] அடுத்த சில வாரங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கையின் புலனாய்வு பிரிவினர் உடன்டியாக செயற்பாட்டுக்கு வரும் வகையில் நேரடியாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். முக்கியமாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தின் போது, இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்த சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து அரசாங்கம் இந…

  23. மாத்தளை மனித புதைகுழி குறித்து விசாரணை நடாத்துமாறு ஐ.நா கோரிக்கை 24 பெப்ரவரி 2013 மாத்தளை வைத்தியசாலையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பாரியளவிலான எலும்புக் கூடுகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.மாத்தளையில் சுமார் நூறுக:கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையொடுகளும் அண்மையில் மீட்கப்பட்டிருந்தன. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான முறையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த விசாரணைகளை உரிய முறையில் நடாத்தத் தேவையான சகல வளங்களையும் நிதி உதவிகளையும் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.மிகவும் விரிவான முறையில் விசாரணை நடாத…

  24. வடக்கு கிழக்கில் உள்ள தனியார் காணிகளின் உரிமைகளை சட்டரீதியாக உறுதிப்படுத்த தவறும், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்த காணிகளை மீண்டும் வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த காணி உரிமைகளை வழங்க வேண்டுமாயின் அவர்கள் இலங்கைக்கு வந்து அந்த உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளது. இதற்கான 2013 கீழ் 1 என்ற புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள மொத்த காணிகளின் அளவு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேயராகும். இவற்றில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.