Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய சுற்றுலாத்துறையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை, சனத் ஜயசூரியவின் பெயரை பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=3149

  2. இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம்வெளியிட்டுள்ளது. . தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார். . சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார். . இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சின…

    • 4 replies
    • 457 views
  3. யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடனும் தொடர்புடைய குற்றவாளிகள் 190 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இனந்து கருணரத்ன தெவித்துள்ளார். யாழ். ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளக்கும் இடையே நடைபெறும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்றது. இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பபணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபூர் உதவில், பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகரோ ஆகியோர் கலந்து கொண்டார்கள். இங்கு கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர்…

  4. பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா [Wednesday, 2013-02-20 07:38:52] தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா ம…

  5. பாலச்சந்திரன் கொலை தொடர்பாக இந்திய ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா ருடேயில் இடம்பெற்ற விவாதம்... காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6546:2013-02-22-13-00-45&catid=1:latest-news&Itemid=18

  6. தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன் முள்ளிவாக்கால் பகுதியில் சிங்கள படையினர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட காணொளி சனல்-4 தொலைக்காட்சியில் வெளியானது தமிழின அழிப்பின் உண்மைகள் வெட்டவெளிச்சமாகி நிக்கின்றது. தமிழின படுகொலையினை மேற்கொண்ட சிங்கள அரசிற்கும் அதன் படைகளுக்கும் கர்நாடக தமிழர்கள் கடும் கண்டனத்தினை தெரிவிக்கின்றோம். இந்த தருணத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்காக தமிழகத்து தமிழ் உணர்வாளர்கள், தமிழ்அமைப்புக்கள், கட்சிகள், ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்பதை பணிவன்புடன் வேண்டி நிக்கின்றார்கள் கர்நாடக தமிழர்கள். கர்நாடக தமிழர்களின் சார்பாக பொங்குதமிழ் குழு இந்த கண்டனத்தினை வெளியிடுக…

  7. புலிகளின் பெண் பேராளி சாந்தினியை இலங்கை கடற்படையின் இசைக் குழுவில் இணைப்பு:- 22 பெப்ரவரி 2013 ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவிப்பு:- முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் பேராளியான எஸ். சாந்தினியை இலங்கை அரசாங்கம், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு பின்னர், இலங்கை கடற்படையின் இசைக்குழுவில் இணைந்து கொண்டுள்ளது. வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் பயிற்சிகளை பெற்ற இவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் தலையீட்டின் அடிப்படையில் சர்வதேச பாடசாலை ஒன்றில் உயர்க்கல்வியை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் இசைக்குழுவில் இணைத்து கொள்ளப்பட்டுள்ள சாந்தனி நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆசிர்வாதம் …

  8. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபா கரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படை யினரால் பிடித்துவைக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதான ஆதாரங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இக்காட்சியைப் பார்த்தவர்கள் நெக்குருகிப் போயுள்ளனர். என்னே! கொடுமை. ஒரு சிறுவனுக்கு இப்படி யயாரு தண்டனையா? என்ற கேள்வி உலகம் முழுவதிலும் ஒலிப்பதை உணர முடிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக 12 வயதுச் சிறுவனை சுட்டுக்கொல்வது என்பது இந்த நாட்டில் நடந்திருக் கக்கூடிய அதி உச்சமான கொடூரத்தனங்களில் ஒன்றாகும். 12 வயதுச் சிறுவன் யாருமற்றவனாக நிற்கின்றான். அவனைப் படையினர் அழைத்துச் செல்கின்றனர்.கூடவே சாப்பிடுவதற்கும் பிஸ்கட் கொடுக்கப்படுகிறது. சிறுவன் பாவம் என்று …

  9. ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த மறுத்த முதல்வருக்குப் பாராட்டு - பழ. நெடுமாறன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது தமிழக மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும். எனவே இலங்கை வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபெறக்கூடாது என ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருந்தும் எவ்விதப் பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்…

  10. இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் (போரற்ற பகுதி) என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தாயும் குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடப்பது, மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதைந்த நிலையில் சி…

  11. சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள 'நோ பயர் சோன்' என்ற ஆவண திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நேரடி ஒளிபரப்பை காண்பதற்கு இங்கு அழுத்தவும்

  12. கிழக்கு முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று சொல்வதற்கு எந்த தகுதியுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழுப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு முதலமைச்சரின் தந்தையான முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ரவிராஜ் மற்றும் மகேஸ்வரன் உட்பட பல அரசியல் முக்கிஸ்தர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு யார் காரணம். அத்துடன் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலரத்தின்போது சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் மிகவும் கஷ்டப்பட்ட…

    • 0 replies
    • 557 views
  13. ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க By V.Priyatharshan 2013-02-22 13:09:21 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சருடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதான அதிகாரிகளும் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏற்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

  14. சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சாட்சியம் 01 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண் “கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர். எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்த…

  15. புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ் அரசியல் கைதி தியாராஜா பிரபாகரன் மகசீன் சிறையிலிருந்து கோரிக்கை பிப் 22, 2013 ஜெனீவா மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடரில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உறுப்பு நாடுகள் குரல்கொடுக்க வேண்டுமெனவும், அதற்கு ஏற்றவாறு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதி தியாராஜா பிரபாகரன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் ஆரம்பித்தார். ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் சுழற்சி முறையில் அதில் பங்குகொள்கிறார்கள். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது…

  16. இலங்கைப் படையினர் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் மனித உரிமை கண்காணிப்பகம் 22 பெப்ரவரி 2013 இலங்கைப் படையினர் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை கடுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மூன்றாம் தர துன்புறுத்தல்களை படையினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளுமாற வலியுறுத்தி இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவத…

  17. நாளை மாலை இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது. நாளை மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது. மனிதநேயமுள்ள அனைவரையும் இப்போராட்டத்தில்…

  18. திருச்சி: திருச்சி ஹோட்டல் ஒன்றில் கருணா தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு இலங்கைத் தமிழர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா, சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார். அங்கேயே அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இந்த ஹோட்டலுக்கு அருகில் இலங்கைத்தமிழர்கள் முகாம் உள்ளது. அவர்களுக்கு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, சிங்கள அரசிடம் சென்று, ஈழத்தமிழர்களின் துரோகி என்றழைக்கப்படும் கருணா வந்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து முகாமில் இருந்த இலங்கைத்தமிழர்கள் ஆவேசத்துடன் எஸ்.ஆர்.எம்.…

  19. ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும்'' என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தில்லியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு இல்லத்துக்கு ஜப்பான் துணைத் தூதர் ஒசூகா வியாழக்கிழமை வந்தார். அப்போது பாலுவுடன், "டெசோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடனிருந்தார். "டெசோ' அமைப்பின் நோக்கம் குறித்தும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பு நடத்திவரும் பிரசாரம், போராட்டங்கள் குறித்தும் ஒசூகாவிடம் பாலுவும், தி…

  20. இலங்கைப் படையினர் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை கடுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மூன்றாம் தர துன்புறுத்தல்களை படையினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொள்ளுமாற வலியுறுத்தி இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை கண்காணிப்பகம் தயாரித்துள்ளது.2006…

  21. தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான அறிமுக பொதுக்கூட்டத்திற்கு கனேடிய - அமெரிக்க தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் தமிழீழத் தேசியத் துக்க நாளான மே-18ம் நாளில் - ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறையவுள்ளார்கள். தென்னாபிரிக்க விடுதலைக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் முரசறைந்த தென்னாபிரிக்க விடுதலை சாசனம் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் முரசறைந்த பாலஸ்தீன விடுதலை சாசனம் ஆகியன உலக வரலாற்றில் முக்கிய பதிவுகளாகவுள்ளன. இந்நிலையில் உலகத் தமிழர்களால் முரசறை…

  22. வரும் மார்ச் மாதம 4ம் நாள் சுவிற்சலாந்தில் உள்ள ஜநா முன்றலில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கவுள்ளார்கள். பெப்ரவரி 25ம் நாள் முதல் மார்ச் மாதம் 22ம் நாள் வரை ஜநா மனிதவுரிமை சபையின் 22 வது கூட்டத்தொடர் நடைபெறவிருகின்றது. 20ம் கூட்டத்தொடரில் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரானது என வர்ணிக்கப்பட்ட தீர்மானம் ஆனது சிறிலங்கா அரசானது தன்னை தானே விசாரனை செய்யுமாறு வேண்டியதுடன் ஒரு கால அவகாசத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசானதோ தனது இனவெறியில் இருந்து சற்றும் இறங்கிவரவில்லை போரில் வெற்றிகொண்டதென்ற மமதையில் நின்று தமிழ் மக்கள் மீது தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகின்றது…

  23. முள்ளிவாய்க்காலில் யாழ் சுமந்த பையன் - தீபச்செல்வன் 22 பெப்ரவரி 2013 2009ம் ஆண்டு மே வரை இலங்கையில் கண்மூடித்தனமான யுத்தம் நடந்தது. யுத்தத்தின் இறுதியில் மக்களின் கைகளில் ஏதுவும் இருக்கவில்லை. கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படும் பொழுது எல்லாவற்றையும் கைவிட்டு உயிரை மட்டுமே பிடித்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள் மக்கள். யுத்தம் எல்லாவற்றையும் நிலை கொள்ளச் செய்யுமளவில் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு சிலர் மாத்திரம் கையில் கிடைத்த எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு யுத்த களத்தை ஊடறுத்துச் சென்றார்கள். இலங்கை அரசு பிடித்த வீடியோக் காட்சிகளில் ஒரு சிறுவன் மாத்திரம் தனது தோளில் யாழை சுமந்தவாறு சென்று கொண்டிருந்ததை பிபிசியின் சிங்களச் செய்தியாளர் பிரியத் லியனகே அவத…

  24. உகண்டாவும், கென்யாவும் சிறிலங்காவைக் காப்பாற்றப் போகின்றனவாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்ற, உகண்டாவும், கென்யாவும் உதவும் என்று சிறிலங்கா வந்துள்ள அந்த நாட்டு பிரதிநிதிகள் இருவர் தெரிவித்துள்ளனர். கென்யாவின் மருத்துவ சேவைகள் அமைச்சர் பேராசிரியர் அன்யங் நயொங்கோவும், கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நசேரேகோவுமே சிறிலங்காவுக்கு தமது நாடுகள் உதவும் என்று கூறியுள்ளனர். இந்த இருநாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, உகண்டா அத…

  25. ஊடக அறிக்கை – சேவ் தமிழ்ஸ் தோழர் சரவணக்குமார் கைது குறித்து மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கத்தைச் சார்ந்த ஐந்து தோழர்கள் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் நேற்று காலை (21 பிப்ரவரி 2013) சந்திக்கச் சென்றனர். அவர்களுக்கு கொண்டு செல்வதற்காக முன் தினம் இரவே தோழர் சரவணக்குமார் சென்னையில் இனிப்புகளை வாங்கி வைத்திருந்தார். அந்தப் பையில் தவறுதலாக அவருடைய மொபைல் போன் பேட்டரியையும், சார்ஜரையும் வைத்திருந்திருக்கிறார். அடுத்த நாள் சிறைக்கு செல்லும்போது அந்த பையை அப்படியே எடுத்து சென்றுவிட்டார். முதல் நுழைவாயிலில், ’உள்ளே சோதனை நடத்தப்படும்’ என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.