Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் அங்குரார்ப்பணத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் லோரன்ஸ், மாகாணசபை உறுப்பினர் அரவிந்தகுமார், அஷ்ரப் அசீஸ் ஆகியோர் உட்பட பல மலையக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பி. திகாம்பரம் புதுப்பிக்க இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கூடதலான மாதச்சம்பளம் பெற்றுக்கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிசங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை விடுத்து ஒவ்வொரு தடவையும் போன்று பேரம் பேச…

  2. இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் சுமார் 360 பேரே இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 40 பேர் நேற்று வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டனர் அந் நிகழ்வில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தப்படும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இவர்களுக்கான பயிற்சி காலம் நிறைவு பெற்றதும் குடும்பத்தினருடன் இணைப்பதற்கு நடவடிக…

    • 3 replies
    • 524 views
  3. போர்ட் லூயிஸ் - மொரீசியஸ் நாட்டில், தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம் தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார். கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார். மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டி…

  4. இலங்கை குற்றத் தடுப்பு பொலிஸாரும் சிவஞானம் சிறிதரனும் மூன்றரை மணி நேர விசாரணையும் ... 18 பெப்ரவரி 2013 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது மூன்றரை மணி நேர விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனினும் கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இவ்விசாரணைகளின் போது சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் மற்றும் ஜ.தே.க பிரதி தலைவர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோருடன் இளநிலை சட்டத்தரணியான சயந்தனும் நேரில் சமூகமளித்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். தனது அலுவலகத்தில் கைப்பற்ற…

    • 3 replies
    • 554 views
  5. பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது 18 பெப்ரவரி 2013 பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. தனிப்பட்ட ரீத…

  6. வட மாகாணத்தில் மீண்டும் வன்முறைகளைத் தூண்ட ஒரு சில சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். மக்களை பிழையாக வழிநடத்தி சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை காணப்படுவதாகவும், தம்மிடம் இனவாதமோ மதவாதமோ கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு கிடைக்காமல் செய்வதற்கு சிலர் இனவாத மதவாதக் கருத்துக்களைப் பயன்படுத்திக்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான சக்திகளின் பின்னால் மக்கள் செல்வதனால் எவ்வித பயனும் கிடையாத…

  7. பாதிக்கப்பட்ட மக்களின் விடிகுரலாக ஒலித்தமையே சிறிதரன் எம்.பி இலக்குவைக்கப்பட காரணம் – எதிர்க்கட்சி தலைவர்! பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலித்தமையே அவர் செய்த பிரதான பெரும் குற்றமாக உள்ளது. இதுதான் அவர் இலக்கு வைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளையும், படையினரின் காணி அபகரிப்பால் இருக்க இடமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தர். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இன்று நாங்கள் எதிர்க்கட்சி எதிர…

  8. நாட்டில் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை; ருவன் வணிகசூரிய தெரிவிப்பு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை …

    • 6 replies
    • 538 views
  9. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் தற்போது, ‘தூக்கும் பூதமான‘ இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த இந்தியா, தற்போது அதன் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதாக கொழும்புக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. ராஜபக்ச அரசுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் இன்னொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதும், சிறிலங்கா அதிபரின் 65…

  10. நேர்மையான அரசியல்வாதிகளை தற்போதைய சமூகத்தில் தேடித் தானும் கண்டுபிடிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகள் தற்போது இல்லை. விஜயகுமாரணதுங்க போன்ற அரசியல்வாதிகள் நேர்மையாக நாட்டுக்காக உழைத்தவர்கள் அவ்வாறு மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணமுடைய அரசியல்வாதிகள் தற்போது இல்லை. சுயலாப நோக்கங்களுக் காகவே பலர் இன்று அர சியலில் ஈடுபடுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=550951845818801125

    • 3 replies
    • 1.3k views
  11. மூடியை கழற்றும்போது வெடிக்கும் வகையில் மாக்கர் வகை பேனாவினால் தயாரிக்கப்பட்ட குண்டு உட்பட பல்வேறு வெடிப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய, பனாமுர வலகொட பகுதியில் வைத்தே குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற கைக்குண்டுகள் இரண்டு, 12 ரவைகளை கொண்ட துப்பாக்கி, 100 கிராம் சீ-4 வகை வெடிப்பொருள் உள்ளிட்ட வெடிப்பொருட்களும் அந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞனின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த பிரதேசத்திற்கு அடிக்கொரு தடவை சென்றுவருகின்ற பிரமுகரை இலக்கு வைத்தே இந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட…

  12. அரசாங்கம் இறுதி இரண்டு மாதங்கள் தற்போது நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் பொறுப்பேற்காமல், அதனை நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி ஜெயசுந்தரவிடம் சாட்டியுள்ளது. அதேபோன்று முதலீட்டுகளின் நெருக்கடி நிலையும் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமக்கு தெரிந்த அளிவில் தமது இறுதி இரண்டு மாதங்களை தற்போது தற்போது அரசாங்கம் கழித்து வருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த நிலைமையில் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாமல், அவர்கள் பிரச்சினைகளில் இருந்து மீ…

    • 2 replies
    • 753 views
  13. இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்தை தூண்டிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கமும் பொதுபலசேனா அமைப்புமே பொறுப்புக்கூற வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், பொது பலசேனா நேற்று ஞாயிற்றுக்கிழமை மஹரகமவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி ஹலால் சான்றிதழை இல்லாதொழிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோன்று குருநாகல் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் எவ்விதமான பொறுப்பும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றது. எனவே, இன்று நாட்டில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு ஆபத்தான சூழலே ஏற்பட்டுள்ளது. …

  14. -லஹிறு பொத்முல்ல ராஜபக்ஷ குடும்பத்தால் எழுதப்பட்ட ஒரு நாடகத்தில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நடித்துவருகின்றார். வீரவன்ஸ, அவர்களின் முறைகேடான செயல்களை மூடி மறைக்கவும் முயல்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 'நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணகர்த்தாவுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றம் கூறாமல், திறைசேரிச் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மீது இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக வீரவன்ஸ குற்றம் சுமத்துகின்றார்.' அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் வரையில் பொருளாதார அபிவிருத்தியும் முதலீடும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அமைச்சின் பகுதியாக இருந்தன. மத்த…

  15. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்; இராஜதந்திரிகளுக்கு வியாழக்கிழமை விளக்கம் -கெலும் பண்டார ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தல் பற்றி எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது என அமைச்சரொருவர் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாம் இராஜதந்திரிகளுக்…

  16. 'தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமைக்கு தனிச்சிங்கள சட்டமும் காரணம்' -எஸ்.கே.பிரசாத் இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். இதனால் அரசியல் யாப்பபை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின் யாழ்.அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'இலங்கை அரசியல் யாப்பில் உள்ள மொழி தொடர்பான விடயத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தினால…

  17. மகிந்தவிடம் ‘றோ‘ பணிப்பாளர் அலோக் ஜோசி பரிமாறிய இந்திய அரசின் ‘முக்கியசெய்தி‘ [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 11:17 GMT ] [ கார்வண்ணன் ] திருப்பதி சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி இந்திய அரசாங்கத்தின் ‘முக்கியமான செய்தி‘ ஒன்றைப் பரிமாறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் நோக்கம் குறித்து, அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது, இந்தியாவின் தேசிய நாளேடு செய்தி ஒ…

  18. செய்தி சேகரிக்கச் சென்ற பி.பி.சீ ஊடகவயிலாளர்களுக்கு மஹரகமவில் இடையூறு 18 பெப்ரவரி 2013 மஹரகம பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பி.பி.சீ ஊடகவியலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் கூட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக பி.பி.சீ ஊடகவியலாளர்கள் மஹரகமவிற்கு சென்றிருந்தனர். எனினும், குறித்த ஊடகவியலாளர்களை ஒரு கும்பல் அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கும்பல் ஊடகவியலாளர்களை தவறான வார்த்தைகளை திட்டி அச்சுறுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பி.பி.சீ ஊடகவியலளார்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நவமணி பத்திரிகையின் உடகவியலாரை அச்சுறுத்திய …

  19. பல விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும் இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கப் பணிக சிறப்பாகவே இருந்ததாகக் கூறுகிறார் அக்கால கட்டத்தில் அங்கு செய்தியாளராக பணியாற்றிய நிராஜ் டேவிட். நிராஜ் டேவிட் குறிப்பாக தெருக்களில் பிணங்கள் கிடந்த காலகடங்களில் அவற்றை எடுத்து புதைக்கும் பணிகளுக்காகக் கூட மக்கள் அந்த அமைப்பையே நாடியிருந்ததாகவும் அவர் கூறினார். எல்லை மோதல்கள், இன மோதல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபயத்தை தருகின்ற குரலாக செஞ்சிலுவைச் சங்க வாகனங்களின் சைரன் ஒலியே திகழ்ந்தது என்றும் அவர் கூறுகிறார். அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130217_nirajicrc.shtml செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு உலகி…

  20. 'அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு.' இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார். யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியின…

  21. ஊடகவியலாளர் பரான் சவுகரலிக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நவிபிள்ளை கோரிக்கை சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேக பாதுகாப்பு வழங்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பரான் சவுகரலி கடந்த 15ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்யப் போவதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்…

    • 2 replies
    • 1.1k views
  22. ஐ.நா. சபையின் சட்ட விதி 99இன் பிரகாரம் இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு எதிராக அரசினால் நடத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனுவொன்றைக் கையளித்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தலைமையில் மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள ஐ.நா நிறுவன அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை மனுவை மலேசியத் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாகக் கையளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து, தமிழ் அறவாரியத் தலைவர் சி.பசுபதி, டத்தோ ஹாஜி தஸ்லீம் முகமட் இப்ராஹி…

    • 0 replies
    • 583 views
  23. 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு 31ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் 31ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது. இதன்போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போதைய நிலையில் ம…

    • 4 replies
    • 582 views
  24. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் அன்பன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீசை முருகேசன், சரவணன், விஜயலட்சுமி, சங்கீதா மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=76257&category=TamilNews&language=tamil

  25. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளினது பிரதிநிதிகள், க்ளோபல் தமிழ் போராம்(Global Tamil Forum) ஒழுங்கு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உரிமையுடைய நாடுகளே இவ்வாறு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளன. பிரித்தானிய பாராளுமன்றில் இந்த மாதம் 27ம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மீன் சூகா, இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானப் ப…

    • 2 replies
    • 682 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.