ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஜெனிவாவில் மஹிந்த அரசுக்கு பாரிய சவால்கள் - அநேக நாடுகள் இலங்கைக்கு ஆதரவில்லை! - ஐ.தே.க. எச்சரிக்கை!! ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் மஹிந்த அரசு பாரிய சவால்களை எதிர்கொள்ளப் போகிறது. அத்தோடு கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவளித்த நாட்டுகளின் 50 சதவீதமானவை இம்முறை ஆதரவளிக்கமாட்டா என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றும் ஒரு பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அந்தப் பிரேரணையில் உள்ளடங்கிய விடயங்கள் என்னவென்பது எமக்குத் தெரியாது. எனினும்…
-
- 1 reply
- 775 views
-
-
நவனீதம்பிள்ளையின் அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? 06 பெப்ரவரி 2013 எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கை தொடர்பான உத்தேச ஆவணம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த அறிக்கையை கொண்டு வரும் நோக்கில் இவ்வாறு உத்தேச ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான தொழில்நுட்ப சார் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தல…
-
- 1 reply
- 641 views
-
-
அமெரிக்காவின் சித்திரவதைத் திட்டங்களுக்கு சந்திரிக்கா அரசாங்கம் உதவியது? 06 பெப்ரவரி 2013 அமெரிக்காவின் சித்திரவதைத் திட்டங்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அசராங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினரால் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு இலங்கை உள்ளிட்ட 54 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசிய சிறைச்சாலைகள், பயங்கரவாதிகளை போக்குவரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு…
-
- 1 reply
- 601 views
-
-
அமெரிக்காவின் அழைப்பின் பேரிலேயே போர் தொடுத்தோம் என்கிறார் தினேஷ்! — 06/02/2013 at 10:30 am | no comments இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எதுவும் ஜெனீவாவில் எடுக்கப்படுவதற்கான எந்தக்காரணங்களுமில்லை. யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூகரீதியில் நாங்கள் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளோம் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க உலக வர்…
-
- 1 reply
- 826 views
-
-
ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார். இந்த அமைப்பினர் உறுப்பினர்களாக இருக்கும் மு.க. ஸ்டா லின், அன்பழகன், கி.வீரமணி, சுப வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலுக்குப் பிறகு கலைஞர், ‘’ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென் னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலு…
-
- 16 replies
- 1.3k views
-
-
மாத்தளையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் ஆணி, இரும்பு துண்டுகள் - ஜேவிபி அதிர்ச்சித் தகவல்! மாத்தளை கொலைக்கு முழு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் கை, கால் துண்டு துண்டாக காணப்படுவதாகவும் அது இயற்கை அல்ல எனவும் எலும்புக்கூடுகளில் ஆணி, இரும்பு துண்டுகள் அடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சாட்சி உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ´மாத்தளையில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தற்போது தோண்டி எடுக்கப்படுவது …
-
- 1 reply
- 625 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சே வின் இந்திய வருகையை கண்டித்து , தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகை இடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்து இருந்தது . தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டோர் அப்போது கைது செய்யப்பட்டு மாலையில் செய்யபட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சே 3வது முறையாக இந்தியாவுக்கு 8-ந் தேதி வருகை தர இருக்கிறார். அவரது இந்திய பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை…
-
- 1 reply
- 458 views
-
-
அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் வரும் எந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர்களின் படகையும் விசாரணையை நடத்தாமல் திருப்தியனுப்புவதற்கு இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்துகொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயலென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அகதிகள் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் நிழல் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். மேற்படி படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினரின் உதவிப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அவை சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை ம…
-
- 3 replies
- 625 views
-
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். http://www.virakesari.lk/article/local.php?vid=2777 வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளனர். அதன்பிரகாரம் ஹம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞான பிரிவிலும் ருசிரு கம்பீரா ஆராச்சி கணிதப் பிரிவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58…
-
- 45 replies
- 4.9k views
-
-
சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது. மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்…
-
- 2 replies
- 484 views
-
-
தமிழர்களுக்கான சுயாட்சி தீர்வை மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்: த ஹிந்து பிப் 5, 2013 தமிழர்களுக்கான சுயாட்சியை மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய சுதந்திரதின நிகழ்வில் இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் தாம் மனதில் ஒரு தீர்வை கொண்டிருப்பதாக 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததும் மஹிந்த தெரிவித்திருந்தார். அனைவருக்கும் சமஉரிமை என்ற அடிப்படையில் அந்ததீர்வை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் வித்தியாசமான சமூகங்கள் வாழும் வடக்கில் இன அடிப்படையில் சமய அடிப்படையில் தமிழர்களுக்கு சுயஆட்சியை ஏற்படுத்த முடியாது என்று மஹிந்த தற்போது கூறியு…
-
- 3 replies
- 757 views
-
-
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013 11:48 -ஹேமந்த் இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் பிரிவிலேயே நேற்று திங்கட்கிழமை காலை இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சியில் அமைந்திருக்கும் 571ஆவது படையணியின் தளபதி கேணல் அமரசேகர தலைமையில் வீடமைப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்குரிய போக்குவரத்துக்கான பாதையை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணியில் பிரதேச மக்களும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். இதனையடுத்து, கிருஷ்ணபுரத்தில் …
-
- 3 replies
- 627 views
-
-
சர்வதேச நாடுகள் தலையிடுவது விதிமுறை மீறலாம்- ராஜபக்ச சொல்கிறார் செவ்வாய், 5 பிப்ரவரி 2013( 09:05 IST ) ''இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடுவது விதிமுறைகளை மீறிய செயல்'' என அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் 65 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, ஐ.நா. அவையின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த ஒரு நாட்டுக்கும் உரிமை இல்லை என கூறினார். இம்மாத இறுதியில் ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் ராஜபக்ச இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடை…
-
- 5 replies
- 608 views
-
-
நாமால் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்குவேன் - ரோஹித்த அபேகுணவர்தன நாமால் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்குவதில் தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக துறைமுகம் மற்றும பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்து;ளளார். பாணந்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எமது அழைப்பின் பேரில் விகாரையின் கூரை மற்றும் ஆலயத்தை திறந்து வைக்க வந்துள்ளவரான நாமால் ராஜபக்ஷ எதிர்கால ஜனாதிபதியாவார். எதிர்காலத்தில் நாட்டை அவரிடம் ஒப்படைக்கவே நாம் செயற்பட்டு வருகிறோம். எதிர்கால ஜனாதிபதியை இந்த வைபவத்தில் கலந்து கொள்ள செய்துள்ளமையானது விகாரதிபதியின் புத்திசாலித்தனமான தீர்;மானமாகும். அன்று போல் அல்லாமல் போருக்கு பின்னர் இ…
-
- 3 replies
- 405 views
-
-
அமெரிக்கப் பிரேரணை; ஆதரிக்க இந்தியா முடிவு; கொழும்பு மீது கோபமே காரணம் இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு நாடு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்ப மாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணையை வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடி…
-
- 7 replies
- 2.4k views
-
-
இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் 50 நாடுகளைச்சேர்ந்த சுமார் 102இ000 படையினர் ஆப்கானிஸ்தானில் கடமையில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படை அறிவித்துள்ளது. பல வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2004 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறுவதற்கு தீர்மானித்திருந்தன. ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற படையில் 68,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58316-2013-02-05-04-13-55.html
-
- 1 reply
- 586 views
-
-
கல்கமுவவில் பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 304 views
-
-
வவுனியா முன்னாள் புளொட் உறுப்பினரின் சடலம் மீட்பு வவுனியாவில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சாளம்பைக்குளப் பிரதேசத்தில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முன்னாள் புளொட் உறுப்பினரான தாலிக்குளத்தைச் சேர்ந்த வடிவேலு செல்வகுமார் (வயது 51) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக வீட்டில் இருந்து சென்ற இவர் சாளம்பைக்குளம் வயல் பகுதியில் இருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டள்ளார். எனினும் இவரது மரணம் குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசார…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கை தமிழர் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - சோனியா காந்தி 05 பெப்ரவரி 2013 இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷூடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்து தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு சோனியா இவ்வாறு பதிலளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கி வருவதாக கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் பிரமர் மன் மோகன் சிங்கிற்கும், கட்சி;த் தலைவி சோனியா காந்திக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.இந்தக் கடிதம் தொடர்ப…
-
- 2 replies
- 660 views
-
-
16 வயதில் பல்கலைக்கழக அனுமதி - திஸாநாயக்க அறிவிப்பு [Friday, 2013-02-01 00:41:40] இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பாடசாலைகளுக்கான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளை பின்பற்றியே இந்த வரையறை மேற்கொள்ளப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய முறையின்படி 12 ஆம் தரத்தில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்கள் தமது 16 வது வயதில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=75024&category=TamilNews&language=english
-
- 3 replies
- 510 views
-
-
தற்போது பல்கலைக்கழக அனுமதியிலுள்ள மாவட்ட கோட்டா முறையை மாற்றி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய புதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தரப்படுத்தலை தமிழ் அரசியல்வாதிகள் முழுமையாக எதிர்த்தனர். இதுவே தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. இதனால் பலரும் கருகினர். தற்போது 40 சதவீதத்தினர் திறமை அடிப்படையிலும் 55 சதவீதமானோர் மாவட்ட கோட்டா முறையிலும் 5 சதவீதமானோர் பின்தங்கிய மாவட்ட கோட்டா அடிப்படையிலும் தெரிவாகினர். மாவட்ட கோட்டாவானது 1993 இல் நடந்த சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள…
-
- 7 replies
- 802 views
-
-
மகிந்தவை பார்வையிட்ட மீனவர்களிடம் தலா 5000 ரூபா அறவீடு – வடக்கு மீனவர்களின் பரிதாபம்:- 04 பெப்ரவரி 2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்வையிட்டமைக்கு யாழ்ப்பாணத்தினில் ஜயாயிரம் கட்டணம் அறவிடப்படுவதாக திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது. அண்மையில் தேசிய மீனவ சம்மேளனமொன்றை அமைப்பதற்கான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடந்திருந்தது. இதற்கென வடக்கிலிருந்து மட்டும் 600 மீனவ பிரதிநிதிகள் பேருந்துகளில் அடைக்கப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்து 200 பேரும் மன்னரிலிருந்து 200 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து தலா நூறு பேரும் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களை கண்ணீர் மல்க ஜனாதிபதி சந்தித்தத…
-
- 5 replies
- 614 views
-
-
பிரான்சின் செவாலியெர் விருது பெற்ற ஷெரீன் சேவியர் எந்தவகையில் நியாயமானவர்? சுயமாக விபரிப்பாரா! பிரான்சின் உயரிய விருதான செவாலியெர் விருதை நடிகர் திலகம் சிவாஜிக்கு வழங்கிய போது இவ் விருது பெறுமதி பெற்றது சில விருதுகள் சில நபர்களால் பிரபல்யம் அடைகிறது. சில நபர்களால் சில விருதுகளால் பிரபல்யம் அடைவதுண்டு. இதில் பிரான்சின் உயரிய விருதான செவாலியே சிவாஜிக்கு வழங்கிய போது உயர்வும் பெருமையும் பெற்றுக் கொண்டது. அதே விருது ஷெரீன் சேவியர் என்றதமிழர்களுக்கு உதவுவதாக கூறி தமிழ் இனத்தை இந்நிமிடம் வரைக்கும் அழித்துவருபவருக்கு வழங்குவதன் மூலம் செவாலியே விருது தன் உலக நன் மதிப்பைமுழுமையாக இழந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இறுதிக்கட்ட யுத…
-
- 1 reply
- 598 views
-
-
இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படாத நிலையில் நல்லிணக்கத்திற்கான எல்லா கதவுகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய சுதந்திர நாட்டின் யதார்த்தம். இந்நிலையில் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் தொடர்பாக கட்சியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்காக செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, மனோ கணேசன் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்றைய சுதந்திர தினத்தில் நாம் நமது நாட்டின் ஐக்கியம் தொடர்பாகவும், இனங்கள் மத்தியில் …
-
- 1 reply
- 572 views
-
-
'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய 02 பெப்ரவரி 2013 கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஏனையோருக்கும் பகிரங்க மடல்- வன்னியில் இருந்து அற்புதன்- எமது மின் அஞ்சலுக்கு வந்த இந்த மனக் குமுறல் எந்தவித மாற்றமும் இன்றி இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஆ.ர் அன்புடன் குளோபல் தமிழ் பொறுப்பாளரே பல சிரமங்களுக்கு மத்தியில் இதனை உங்களுக்கு அனுப்புகிறேன். எனது உணர்வுகளை வேதனைகளை வெளிக்கொணர்வதற்கு உதவிபுரிவீர்கள் என நம்புகிறேன். நன்றியுடன் அற்புதன் 'இறுதியுத்தத்தின்போது இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல' என்ற கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் கருத்து தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் அவர்களே, வன்…
-
- 28 replies
- 1.7k views
-