ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலிகளை தாமே அழித்தோமென பலர் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை அதுவல்ல. விடுதலைப்புலிகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள் என்றே நான் கருதுகிறேன்" இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கூறினார். தமிழ் பேசு…
-
- 32 replies
- 2.2k views
-
-
இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளனையும் ஆக்கிரமிக்கச் சென்றனர் சிங்கள மீனவர்கள் - 30 ஜனவரி 2013 இறுதியுத்தம் நடந்த பகுதிகளில் ஒன்றான புதுமாத்தளனில் குடியேறி அப்பகுதி கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக நேற்று (29.01.13) தெற்கிலிருந்து ஒரு பகுதி சிங்கள மீனவர்கள் தமது குடும்பங்கள் சகிதம் சென்று சேர்ந்தனர். இதனால் புதுமாத்தளன் பகுதி மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஏற்பட்ட முறுகல் நிலையினையடுத்து 'எதிர்வரும் 3ம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் வருகை தந்து குடியேறி அப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோம்' என்று கூறி குறித்த சிங்கள மீனவர்கள் திரும்பிச் சென…
-
- 1 reply
- 522 views
-
-
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய உச்சி மாநாடு இரத்துச் செய்யப்படலாம்? 30 ஜனவரி 2013 முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி கவிழ்க்கக்கப்பட்ட பின்னர், கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக பொதுநலவாய நாடுகளின் அமைச்சுக்களின் செயற்பாட்டு குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்த குழுவில் கனடா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜமைக்கா, சியாரோ லியோன், தன்சானியா, ட்ரனிடா மற்றும் டொபேக்கோ, மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள்; அங்கம் வகிக்கின்றன. கனடாவின் குற்றச்சாட்டு காரணமாக இலங்கை, பொதுநலவாய நாடுகளின் அமைச்சு செயற்பாட்டு குழுவின் விமர்சனத்திற்கு உள்ளானதால், இந்த வருடம் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய உச்சி மாநாடு இரத்துச் செய்யப…
-
- 0 replies
- 568 views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தடவை ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அமெரிக்காவும் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. http://www…
-
- 23 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி ஆகிய இரு செனட்டர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செனட்டர்கள், நல்லிணக்க…
-
- 0 replies
- 582 views
-
-
முறிகண்டி சிங்கள மயமாகிறது - 10 ஆயிரம் வீடுகளில் படையினரின் குடும்பங்கள் ... 30 ஜனவரி 2013 வன்னியில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள புதுமுறிகண்டி பிரதேசத்தில் போர் வீட்டத் திட்டம் என்ற பெயரில் இராணுவ குடியிருப்பு அமைக்கப்பட்டு சிங்களக் குடும்பங்கள் எதிர்வரும் 11ம் திகதி முதல் குடியேற்றப்படவுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவசர அவசரமாக அப்பகுதிகிளில் புதிய பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் கட்டப்பட்டு வருகின்றது என்றும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பலனளிக்கவில்லை. முறிகண்டிப் பகுதியில் தமது காணிகளை அபகரித்த பொழுது அதற்கொதிராக கடுமையாக மக்கள்…
-
- 1 reply
- 517 views
-
-
அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன? ஜன 30, 2013 முப்பது வருடங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கின்ற நிலையில், இந்த மக்களை தொடர்ந்தும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவே சிங்கள அரசாங்கம் சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச நாடுகளிடமே இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்விற்கான பந்து தற்போது சர்வதேசத்திடமே இருக்கின்றது என்பதை பலரும் ஏற்கனவே தெரிவித்து வந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கருத்தை அமெர…
-
- 0 replies
- 554 views
-
-
மனோ கணேசனைப் புகழ்ந்த தினகரனின் ஆசிரியரை, விரட்டினார் புலிகேசி மகிந்தர் ஜன 30, 2013 கொழும்பிலிருந்து வெளிவரும் அரச ஆதரவுப் பத்திரிகையான தினகரன் வாரமஞ்சரியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனைப் புகழ்ந்து ஆசிரியர் தலையங்கம் எழுதியமைக்காக அந்தப் பத்திரிகை ஆசிரியரை சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணியிலிருந்து விரட்டியுள்ளார். மனோ கணேசனின் நண்பராக இருக்கும் குறித்த பத்திரிகை ஆசிரியர் தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 13 ஆம் திகதி குறித்த பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் மனோ கணேசனைப் புகழ்ந்து அவர் எழுதிவிட்டார் என்றே அவரை சிறீலங்காவின் ஜனாதிபதி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தினகரன் பத்திரிகை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து…
-
- 0 replies
- 551 views
-
-
செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 15:43 | சர்வதேச இனப்படுகொலை நாள் (International Holocaust Day) யூத இன மக்களின் இனப்படுகொலையை நினைவு கூறும் சர்வதேச இனப்படுகொலை நாள் இன்று பிரான்சில் Unesco வளாகத்தில் Unescoவின் எற்பாட்டில் அதன் தலைவர் திருமதி Irina Bokova தலைமையில் நடைபெற்றது. ஹோலோகாஸ்ட் பற்றிய சரித்திர அறிவியலில் இருந்து இனக்கொலையை தடுப்பது எப்படி?, நாம் கடந்து வந்த பாதையில் இருந்து எதை கற்று கொண்டோம்? என்ற தலைப்பில் யூத மக்களின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வழி உறவுகள், கல்விமான்கள், யூத இனப்படுகொலை அமைப்புகள், ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அதிகாரிகள் இந்த நினைவு நாளில் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபை சார்பில் திரு Adama Dieng (Special Ad…
-
- 0 replies
- 322 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக வரவு-செலவுத்திட்டத்தில் 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பரிந்துரைகள் மிகத்தெளிவாக அமுல்படுத்தப்படும். நாங…
-
- 1 reply
- 462 views
-
-
தேடப்படும் குற்றவாளி டக்ளஸை பிரதமஅதிதியாக அழைத்து கௌரவித்த இந்திய தூதரகம் Published on January 29, 2013-4:19 pm · இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கௌரவித்துள்ளது. சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, சிறுவனை கடத்தி கப்பம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் சமூகமளிக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக…
-
- 8 replies
- 852 views
-
-
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய நடுவண் அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தன்னினத்தின் துயர்துடைக்க தன்னை அழித்துக்கொண்ட இந்த வீரத்தமிழனை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
-
- 29 replies
- 3.5k views
-
-
கனடிய அரசு மீது சிறீலங்கா அரச பத்திரிகை மனிதவுரிமை குற்றச்சாட்டு! Jan 29 2013 13:07:42 சிறீலங்காவின் அரசு மேற்குலகின் ஆலோசக, மற்றும் விளம்பர நிறுவனங்களினைப் பணிக்கு அமர்த்தியுள்ளதா என்று நோக்குமளவிற்கு அதன் பத்திரிகைகள் செய்தி வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றன. சிறீலங்கா அரசின் பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை முதற்பக்கத்தின் முக்கிய செய்தியாக கனடாவைத் தாக்கி “லங்கா கனடாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது… பாராதூரமான மனிதவுரிமை மீறல்க் குற்றச்சாட்டுக்கள்” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. அண்மையில் கனடாவில் பூர்விகக் குடியினரால் நடத்தப்பட்ட போராட்டங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் கனடியப் பூர்வீகக் குடியினரின் சரத்துக்களை மதிக்காமல் செய…
-
- 1 reply
- 513 views
-
-
இரு தலைமைகளை உருவாக்கி முஸ்லிம் காங்கிரஸை உடைக்க அரசு சதி! - கட்சியின் அதியுயர்பீடப் பிரமுகர்கள் ஆவேசம்!! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் பாரிய பிளவொன்றை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஸ்துள்ள செயற்றிறன் ஊக்குவிப்பு அமைச்சராக சிறிலங்கா அரசால் அதிரடியாக நியமிக்கப்பட்டதையடுத்தே இக்குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்துள்ளது என அறியவருகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினதும் கட்சியினதும் எந்தவொரு அனுமதியின்றியும், ஆலோசனையின்றியும் சிறிலங்கா அரசு தன்னிச்சையாக பஷீர்…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் (ஈ.பி.டி.பி.) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்காக,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார். தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச் செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடுத்த ஆயிரம் (1000) கோடி ரூபா கோரும் மான நஷ்ட வழக்கு நேற்ற…
-
- 2 replies
- 565 views
-
-
புதுடில்லி: டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பாவெலை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவரிடம் டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை அவர் நான்சியிடம் அளித்துள்ளார். Dinamalar
-
- 6 replies
- 1.1k views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீ்ட்டுக்கள் வீதியில் மீட்பு! [Friday, 2013-01-25 08:11:31] கம்பஹா - நிட்டம்புவ, கலகெடிஹென பிரதேசத்தில் மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய இந்தியா சென்றுள்ளதால், இன்னும் அவர் ஓரிரு நாட்களில் நாடு திரும்பிய பின் தீர்மானம் எடுக்கப்படும் என செயலகம் குறிப்பிட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சீ்ட்டு தொகை, கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கலகெடிஹென மகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று மீட்கப்பட்டது. 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு நபர் ஒருவர் வழங்க…
-
- 2 replies
- 468 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர் படகு கவிழ்ந்ததில் இரண்டு இலங்கையர்கள் பலி:- 29 ஜனவரி 2013 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு கவிழ்ந்ததில் இரண்டு இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாவா தீவுக் கடற்பரப்பில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்த படகு அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் பயணித்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4 வயது சிறுவன் ஒருவனும், 10 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. படகு விபத்தில் சிக்கிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கற்பாறை ஒன்றுட…
-
- 0 replies
- 385 views
-
-
ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கறுப்பு ஜனவரி ஆர்ப்பாட்ட பேரணியும் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் பேரணியாக பொதுநூலக கேட்போர் கூடத்திற்கு சென்று அங்கு எதிர்ப்புக் கூட்டத்தையும் நடத்தினர். ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளிலான இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான, லசந்த விக்ரமதுங்க, சுகிர்தரன், சிவராம், நிமல்ராஜ், காணமல்போன பீரகீத் எக்னெலிகொட ஆகியோர் இதன்போது நினைவுகூறப்பட்டனர். 'பீரகீத் எக்னெலியகொடவ…
-
- 3 replies
- 430 views
-
-
மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க மற்றும் றெஹான் விஜயரட்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய ஆலோசனை பெற்றுக்கொள்ளவிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்தனர். இராணுவ மேஜரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றஞ்சாட்டின் பேரிலேயே அவர்களுக்கு எதராகவே வழக்குத்தாக்கல் செய்யப்படுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளவிருப்பதாக கொம்பனிவீதி பொலிஸார் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர். கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே இராணுவ மேஜரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதுடன் சந்தேகநபர்கள் எட்டு நாட்களுக்கு பின்…
-
- 1 reply
- 334 views
-
-
பஸ்ஸுக்குள் பாம்புகள் பயணிகள் பீதி செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 00:05 பயணிகள் போக்குவரத்து பஸ்ஸிற்குள் பாம்புகள் படையெடுத்தமையினால் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் பீதியடைந்த சம்பவம் ஒன்று கலகெதரவில் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து குருநாக்கல் நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பஸ்ஸில் பாம்பாட்டிகள் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுடைய பெட்டிகளில் 9 நாகப்பாம்புகளும் மலைப்பாம்புகள் இரண்டும் இருந்துள்ளன. அத்துடன் குரங்கொன்றும் இருந்துள்ளது. பாம்பாட்டிகள் போதையில் இருந்த சமையத்தில் பெட்டிக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து பஸ்ஸிக்குள் உலாவ ஆரம்ப…
-
- 1 reply
- 587 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுதின நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மதியம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவிருந்தவேளை திடீரென அம்மண்ட வாயிலை இராணுவமும், பொலிஸாரும் பூட்டித் தடைவிதித்தனர். எனினும், நினைவுதின நிகழ்வை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய முன்றலில் கூட்டமைப்பினர் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தவை வருமாறு: 'மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் தமிழ் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் 26 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வு நேற்று மதியம் 2 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற…
-
- 1 reply
- 738 views
-
-
இழக்கப்பட்ட உடைமைகள்... திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013 20:39 கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பழைய கடைகள் மற்றும் அவற்றோடு இணைந்த வீடுகள் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அகற்றப்பட்டன. கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு கட்டமாகவே அகற்றப்பட்டுள்ளன. (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ)
-
- 0 replies
- 506 views
-
-
கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் என சற்று முன்னர் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் படத்தினைப் பார்த்த இலங்கை தவஹீத் ஜமாஅத் தீர்க்கமாக முடிவு செய்துள்ளதாக அவ்வமைப்பின் துணைச் செயலாளர் ரஸ்மின் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் தவ்ஹீத் அமைப்பினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் போன்றோருக்கு இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் தணிக்கை குழுவினருடன் காண்பிக்கப்பட்டதனையடுத்தே மேற்கண்டவாறு ரஸ்மின் மௌலவி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், படம் முழுக்க முஸ்லிம்களை தீவ…
-
- 1 reply
- 578 views
-
-
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின் ரிட்மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ கூறியதாவது: "விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல் பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத் தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்…
-
- 5 replies
- 563 views
-