Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானுக்கு நபரொருவரால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில்; முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் செயலாளர் எனக் கூறப்படும் தௌபீக் என்பவரே – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5;.50 மணியளவில் தனக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்ததாக ஊடகவியலாளர் றம்ஸான் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று சனிக்கிழமை காலை – அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதோடு, அவரின் வாக்கு மூலமும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டது. இருந்தபோதும், எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளில…

    • 0 replies
    • 474 views
  2. அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன 02 அக்டோபர் 2011 அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வருடத்தில் இந்த அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார். சில அமைச்சுக்கள் புதிதாக இணைக்கப்படுவதுடன், சில அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கிரக நிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அடுத்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் ச…

  3. யாரும் காணாமல் போகவில்லை என்றால் உறவுகளைத் தேடி வீதிகளில் அலையும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது? - சம்பந்தன் [saturday, 2013-01-26 10:27:45] இலங்கையில் காணாமல் போனவர்களென்று எவரும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தமது உறவுகளைக் காணாது தெருவழியில் அலைந்து திரியும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது?. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியொருவர் இவ்வாறு கருத்துக் கூறுவதை என்னவென்று சொல்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணாமல் ப…

    • 4 replies
    • 575 views
  4. தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஹக்கீமின் குற்றச்சாட்டு கேலிக்கூத்து! – கைதிகளின் உறவினர்கள் ஆழ்ந்த கவலை!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு துளியளவேனும் அக்கறையில்லை என்பதையே அவரின் கேலிக்கூத்தான கருத்துகள் வெளிப்படுத்துகின்றன என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற குற்றவியல் நடைமுறைக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கைதிகள் தொடர்பில் இங்கு பேசினாலும் அவர்கள் குறித்தான தகவல்களை வழங்கத் தவறிவிட்டது என்று கூறினார். அமைச்சரின் மேற்படி கருத்தானது தமிழ் அரசியல் கைத…

    • 3 replies
    • 515 views
  5. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான காலகட்டத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பல வடிவங்களில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் தொடர்ச்சியைக் கருவறுக்க தோல்வி மனப்பான்மையை வளர்த்தெடுத்தல், தனி மனித பலவீனங்களைக் கையாண்டு போராட்ட சக்திகளிடையே சிதைவுகளை உருவாக்கல், மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களைக் கூறி அவர்களை போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தல், பலமான போராட்ட சக்தியாக எந்த அமைப்பையும் உருவெடுக்காமல் சிதைத்தல் என்பன போன்றவை பயன்படுத்தபட்டு வருகின்றது. அமைப்புகளை தொடர்ச்சியாக சிதைப்பததற்கும் பலவீனபடுத்தவும் மேட்கொள்ளபட்ட பல முயற்சிகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து தன் கவனத்தையும் மக்…

    • 0 replies
    • 990 views
  6. தமிழகத்தின் தொலைக்காட்சி ஒன்றில் வந்ததுபோல் தெரிகிறது. ஏற்கனவே இது இணைக்கப்பட்டிருந்தால் நீக்கி விடுங்கள்..! http://www.youtube.com/watch?v=ZhPtDsWG9ww

  7. வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார். இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பணம் கேட்டு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த…

  8. ஈழத் தமிழர்களின் நிலைமையை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் உலகில் மிகவும் பாவம் செய்த பிறப்புகள் என்று கூறும் அளவிற்கு ஈழத் தமிழ் இனத்தின் அவலநிலை உள்ளது. 30 வருட கால யுத்தத்தால் நொந்துகெட்ட தமிழினம் வன்னிப் போரில் பேரவலத்தைச் சந்தித்தது. 30 ஆண்டு கால யுத்தத்தில் நடந்த இழப்பு களின் பன்மடங்காகவும் பெருந்துயராக வன்னிப் போர் நடந்து முடிந்தது. எத்தனையோ குடும்பங்கள் தங்கள் உறவு களை இழந்த சோகத்தினின்றும் மீளமுடியா மல் தவிக்கின்றன. இவை ஒருபுறம் இருக்க யுத்தத்திற்குப் பின் பான தமிழினத்தின் வாழ்வு என்பதும் ஏக்கம் நிறைந்ததாக-நிம்மதியற்றதாகக் கடந்து போகிறது. இவை அனைத்திலும் ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமான உடைப்பு என்பது இங்கு நோக்குதற்குரியது. அதாவது உலகில் உள்ள சில இன மக்கள் உ…

    • 0 replies
    • 456 views
  9. பரீட்சை வினாத்தாள்களை 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் அச்சிட தீர்மானம் சனிக்கிழமை, 26 ஜனவரி 2013 22:00 பரீட்சை வினாத்தாள் அச்சிடும்போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக, அவ்வினாத்தாள்களை 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் அச்சிடுவதான புதிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் ஜனந்த புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதிலிருந்து ஊழியர்களை நீக்குவதற்காகவும் அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் அச்சிடுவதற்காகவும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார். இதன்மூலம், ஒரு நபராலேயே பரீட்சை வினாத்தாள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பொதியிடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்…

  10. அமைச்சு செயலர்களின் சொத்து விபரங்களை மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க உத்தரவு சனிக்கிழமை, 26 ஜனவரி 2013 20:00 அமைச்சுக்களின் செயலாளர்களது சொத்து விபரங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் பிரதான கணக்காய்வாளர்களாகவுள்ள அவ்வமைச்சுக்களின் செயலாளர்கள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57775------31---.html

  11. யாழ்.பல்கலை மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி சனிக்கிழமை, 26 ஜனவரி 2013 10:34 -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10…

  12. பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை முப்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்ற கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் 380 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவுதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றனர். கிராமப்புறப் பாடசாலைகள் பலவற்றில் இந்தப் பாடங்களை போதிப்பதற்கென ஆசிரியர்கள் முற்றிலும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பிரதேசத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இந்த நிலைமைகளை உறுதிப்படுத்திய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகு…

    • 11 replies
    • 570 views
  13. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை 25 ஜனவரி 2013 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பண்டாரநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புது டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதன் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷ் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், திடீரென இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திரிக்கா ஏன் சந்தித்த…

  14. சீனர்களுக்கான சிறப்புத் தேயிலையை, சீனாவே சிறிலங்காவில் உற்பத்தி செய்து கொள்ளவுள்ளது. சிறிலங்காவுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா முதலீட்டுச்சபை அனுமதி அளித்துள்ளது. எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சீனாவின் யுன்னான் டியன்ஹொங் குழுமத்தைச் சேர்ந்த யென்ஹொங் அனைத்துலக நிறுவனம் இந்த சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த கூட்டுமுயற்சி நிறுவனம், உயர்தரம் வாய்ந்த சீன சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்து, சீன சந்தைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யவுள்ளது. சீன சிறப்புத் தேயிலை, எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் மலையகத் தோட்டங்களில் பயிரிடப்படவுள்ளது. இந்தக் கூட்டுமுயற்சி, சிறிலங்காவுக்கு …

  15. ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக 'டெசோ' அமைப்பின் கூட்டம் எதிரிவரும் 4 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம். இந்திய அரசுக்கு இயலவில்லை இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்…

  16. -எஸ்.கே.பிரசாத் வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ளமையினால் குறித்த இளைஞனின் சடலத்தை மீட்க முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை, மூன்று இளைஞர்கள் குறித்தி பகுதிக்கு இரும்பு பொறுக்குவதற்காக சென்றுள்ளனர். இதன்போதே நிலக்கண்ணி வெடியொன்று வெடித்துள்ளது. இதனால் மேற்படி மூன்று இளைஞர்களில் ஒருவரான செல்வம் தவசீலன் (வயது 24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய…

  17. இராணுவ முகாம் அமைப்பதற்காக முள்ளிக்குளம் மக்களை காட்டுக்குள் துரத்திய படையினர்! [Friday, 2013-01-25 19:40:18] முள்ளிக்குளத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கும் பொருட்டு , அப்பகுதி தமிழர்களை வேறு இடத்தில் குடியமருமாறு இலங்கை கடற்படை அதிகாரிகள் எச்சரித்து அத் தமிழர்களை முறையற்ற விதத்தில் காடுகளுக்குள் துரத்தியுள்ளனர் இது தமிழர்கள் மீதான உளவியல் போரின் உச்சகட்டமாகும் , தமிழர்களின் நிலங்களில் இன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.http://seithy.com/breifNews.php?newsID=74605&category=TamilNews&language=tamil

  18. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்காவிடில் உங்கள் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள மன்மோகனிடம் பதிலளித்த நீங்கள் எங்களுக்கு போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தினை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் எனக் கூறியுள்ளார் அண்மையில் இந்தியா சென்ற மகிந்த அரசின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குழுவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குழுவிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது தெரிந்ததே. இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை வெளியுறவுச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் காந்தா ஆகியோர் …

    • 2 replies
    • 539 views
  19. ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -வாசுதேவ நாணயக்கார ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே. இதனை யாரும் மறுக்க இயலாது. எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் வாசுதேவ தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட …

    • 4 replies
    • 615 views
  20. தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் தம்மிடம் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமளித்ததாக இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இவ்வாறு விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இலங்கையில் பதவியேற்ற பின்னர் 2009ம் ஆண்டு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா தமக்கு ஊக்கமளித்தது. அதேநேரம் தற்போது இடம்பெயர்ந்தோர் விடயத்தில் அந்த நாடு தம்மை விமர்சிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி அமெரிக்கா தமக்கு மற்றும் நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்ன…

  21. 'அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் எடுத்துரைக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று ஜேர்மனிக்குப் பயணமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக ஒரு தீர்வைப்பெறவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை அந்நாட்டுப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கவுள்ளதாகவும், இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை நம்பி நாம் இனிப் பேச்சுக்கு செல்லமாட்…

  22. இலங்கையில், நான்கு ஆட்டோ டிரைவர்களால், 47 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து, டில்லியில் தொடர் போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கையிலும் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, இலங்கையின் கொழும்பு நகருக்கு அருகே, மிரிகானா என்ற இடத்தில், ஆட்டோ டிரைவர்களிடம் வழி கேட்ட, 47 வயது பெண், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக்கிடைக்கும் வரை போராடப்போவதாக, இல…

    • 0 replies
    • 356 views
  23. வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நான்காம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு ஜனவரி 29ம் தேதி(29.1.13)காலை 9 மணிக்கு சென்னை கொளத்தூரில் நடைபெறவுள்ளது. ஈழத்தமிழ் உறவுகளைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத்தியாகிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழின நலனில் அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகளும் இயக்கங்களும் நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்த உள்ளனர். இந்த நிகழ்வுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க இன்று(23.1.13)காவல்துறை முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஈடுஇணையற்ற உயிர்க்கொடையாலும் அளவிட இயலாத அறிவாற்றலாலும் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்த மாவீரன் முத்துக்குமாரின் நான்காவது நி…

  24. வௌ்ளத்தால் மூடப்பட்டது மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதி வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதி வௌ்ளாவெளி பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 240 மில்லியன் மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட வாகனம் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் வெல்லாவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் மண்டூர் வெல்லாவெளி வீதியில் கருத்த பாலத்துக்கு அருகே வீதியில் வெள்ளநீர் பாய்வதால் மத்திய முகாமிலிருந்து அநுராதபுரம் செல்வதற்காக இவ்வீதியால் வந்த வாகனமொன்று வெள்ள நீரில் அ…

  25. இலங்கைக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சிகளை கண்டுபிடிப்பதில் இவருக்கு நிகர் இவரே! மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அடுத்த சூழ்ச்சி இடம்பெறும் என ஐநாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் வருடாந்த கூட்டத்தில் இந்த சூழ்ச்சி செயற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்போது இலங்கை மீது போர் விசாரணை நடாத்த குழுவொன்றை அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சீர்குலைவை ஏற்படுத்த மேலும் சர்வதேச சூழ்ச்சிகள் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான பிரச்சினை அதன் ஒரு பிரதிபலன் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.