ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143438 topics in this forum
-
வடபிராந்தியத்தின் இன்றைய நிலையை இவர்கள் விபரிக்கிறார்கள்.. புலம்பெயர் தேசத்து ஊடகங்களையும் சாடுகிறார்கள்..! http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dIOcX1krKdI[/xml]
-
- 8 replies
- 848 views
-
-
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ். மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து யாழ். நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். காலையில் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடி அவர் யாழ்.கடற்கரையோரங்களுக்கும் விஜயம் செய்துள்ளார். தொடர்ந்து மாலையில் யாழ். மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்தையும் சந்தித்துக் கல…
-
- 1 reply
- 698 views
-
-
ரிசானா நஃபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று அந்த ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தி…
-
- 5 replies
- 697 views
-
-
வடக்கில் பேச்சு சுதந்திரத்திற்கு இராணுவம் தடை: ஆயர் முறைப்பாடு வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர். . இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. . இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். . நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார். . கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் …
-
- 0 replies
- 602 views
-
-
அன்றாட நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு உள்ளது: பிரான்ஸ் தூதுவர். வியாழக்கிழமை, ஜனவரி 10, 2013 சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். சிவில் அதிகாரிகள் போன்று இராணுவத்தினரும் தகவல் திரட்டும் நடவ டிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் இதனை நான் அவதானித்துள்ளேன் என்று யாழ்.வந்துள்ள பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் தெரிவித்தார். . இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் ஏன் தலையீடு செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். . நேற்று யாழ்.மேலதிக அரச அதிபருடனான சந்திப்பின் போதே தூதுவர் இந்தக் கேள்வி யைத் தொடுத்தார். . யாழ். மாவட்டத்துக்கு நேற்றுப் புதன்கிழமை வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பல் வேறு தரப்பினரையும் …
-
- 1 reply
- 534 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குறைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களையும் அதனை தடுப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/56627-2013-01-10-10-08-42.html
-
- 3 replies
- 301 views
-
-
நான் புலியா? ஒரு தடவையேனும் விசாரணை செய்யவில்லையே : விக்கிரமபாகு நான் விடுதலைப்புலியா? நான் பிரபாகரனுடன் ஒன்றாகவா கைகோர்த்துக்கொண்டு திரிந்தேன். அவ்வாறு நான் விடுதலைப் புலியென்று கூறினால் ஒரு தடவையேனும் விசாரணை மேற்கொள்ளவில்லையே. அவ்வாறு துணிவு இருந்தால் என்னிடம் வந்து பொலிஸார் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். அரசாங்கம் என்னை புலியென்று கூறுகின்றது. நான் பிரபாகரனோடு கைகோர்த்துக்கொண்டு ஒன்றாகவா அலைந்து திரிந்தேன். அவ்வாறு நான் விடுதலைப் புலியென்றால்…
-
- 1 reply
- 522 views
-
-
By General 2013-01-10 10:20:21 அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தொலைபேசி கொடுப்பனவுகள், வாகனங்கள் மற்றும் அதற்காக வழங்கப்படும் எரிபொருள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று வெளியிட்டது. இதன்பிரகாரம் அமைச்சரொருவருக்கு மாதாந்த சம்பளமாக ரூபா 65 ஆயிரமும் பிரதியமைச்சர் ஒருவருக்கு ரூபா 63,500 உம், வழங்கப்படுவதோடு அதற்கு மேலதிகமாக தொலைபேசி கொடுப்பனவாக மாதமொன்றுக்கு ரூபா 50 ஆயிரமும் வாகனங்கள் அதற்கான எரிபொருளும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது. அமைச்சர் ஒருவருக்கும் பிரதியமைச்சர் ஒருவருக்கும் சம்பளத்திற்கு மேலதிகமாக இரண்டு அலுவலகத் தொலைபேசிகளுக்கான 20 ஆயிரம் ரூபாவும் கடமையின் நிமித்தம் 2 வீட்டுத் தொலைபேசிகளுக்கா…
-
- 2 replies
- 271 views
-
-
ரிசானா தூக்கிலிடப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் 10 ஜனவரி 2013 சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் ரிசானா நாபீக் தூக்கிலிடப்பட்ட சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அதனை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்ளவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ரிசானா நாபீக்கிற் மரண தண்டனை விதிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவு பொறுப்பாளர் கதரீன் அஸ்டன் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் ஓர் சிறுமி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவ…
-
- 0 replies
- 510 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சற்றுமுன் ஆரம்பமாகியது. குற்றவியல் பிரேரணை சட்டத்துக்கு முரணானது என்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தன. எனினும் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அனுமதியளித்தார். இதனையடுத்து கடும் ஆட்சேபத்தை வெளியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், சட்டத்துக்கு முரணான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 788 views
-
-
வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து படைச் சிப்பாயின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதாக மதவாச்சிப் காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (10-01-2013) காலை மீட்கப்பட்டுள்ளது. ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த 31 அகவையுடைய ஏ.எம்.பிரியந்த குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் இவர் பூநாவை பகுதியிலுள்ள படை முகாமொன்றில் கடமையில் இருந்தாரெனவும் மதவாச்சிப் காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் நாள் காணாமல் போயிருந்தாரெனவும் இது தொடர்பில் இவரது தாயார் இம்மாதம் 6ஆம் நாள் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் கூறினர். சடலம் பிரேத பரிச…
-
- 0 replies
- 817 views
-
-
திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சிறுப்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, பிரஜைகள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன குறித்த சட்டமூலத்திற்கு எதி…
-
- 6 replies
- 941 views
-
-
உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் - பத்திரிகைகளும் எரிப்பு 10 ஜனவரி 2013 யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக உதயன் வட்டாரங்கள…
-
- 4 replies
- 500 views
-
-
வெறும் வாயைச் சப்பிக் கொண்டிருக்கும் சில வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா? சாம்பிராணி இல்லாமலேயே சன்னதம் ஆடுகிறவர்கள் அயன் பெய்ஸ்லி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை வைத்து வானுக்கும் பூமிக்கும் எம்பி எம்பிக் குதிக்கிறார்கள். சம்பந்தரை சிலுவையில் அறைய ஆணி, சுத்தியலோடு வெளிக்கிட்டுள்ளார்கள். முதலில் அயன் பெய்ஸ்லி எப்போது? எங்கே? சம்பந்தரை கண்டு பேசினார் என்பதைக் கூறவில்லை. ஒரு வாதத்திற்கு அவர் சொன்னதை தெய்வ வாக்காகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் அயன் பெய்ஸ்லி அவர்களது பின்புலம் என்ன? அயன் பெய்ஸ்லி சிறீலங்கா அரசின் தீவிர ஆதரவாளர். ஏன் அதன் முகவர், பரப்புரையாளர் என்று கூடச் சொல்லல…
-
- 0 replies
- 442 views
-
-
கேப்பாபுலவு - இன்னொரு மெனிக்பாம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் கேப்பாபுலவை பார்த்த பொழுது அந்தக் குடியிருப்பு இன்னொரு மெனிக்பாம் முகாமைப்போலவே தெரிந்தது. தடுப்பு முகாங்களில் வாழ்வது என்பது மாபெரும் சித்திரவதையாகும். இன்று சொந்த நிலமே தடுப்புமுகாம் கோலத்திற்கு மாறியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு மெனிக்பாமைபோல இருக்கிறது கேப்பாபுலவு கிராமம். இந்தக் கிராமத்தை ஒரு மாதிரி கிராமம் என்று பெயர்பலகை நட்;டு அடையாளப்படுத்தி இருந்தாலும் அந்தக் கிராமத்தை பார்க்கும் பொழுது ஒரு முகாமாகவே தெரிகிறது. முல்லைத்தீவில் இராணுவத்தின் கோட்டையாக மாறிய ஒரு நிலப்பகுதியில் இராணுவங்களிற்குள் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இயல்பும் மகிழ்ச்சியுமற…
-
- 1 reply
- 504 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக தெரியவருகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=73606&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா தமது கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், நீதித்துறை மீதான நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக் குறித்து தகவல் வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது. ஏனெனில், ரிசானா நபீக் குறித…
-
- 0 replies
- 336 views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஐ.நா கிளை நிறுவனங்கள் மூடப்பட உள்ளன 09 ஜனவரி 2013 யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்கள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில கிளை நிறுவனங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயங்கி வரும் சகல கிளை நிறுவனங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. திட்டங்களுக்கு உரிய முறையில் நிதி உதவிகள் கிடைக்காத காரணத்தினால் கிளை நிறுவனங்களை மூடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நிலக்கண்ணி வெடி அகற்றல், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்கள் ஈடு…
-
- 1 reply
- 389 views
-
-
திவிநெகும சட்டமூலத்தை அவசர அவசரமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றிய அரசாங்கம், ஏன் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதிகார பரவலாக்கலை வழங்க பின்னிற்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.குகவரதன், அதிகாரத்தை வழங்காது வடபகுதியை இராணுவ மயமாக்கும் திட்டத்தையே முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சட்டம் பொது விடயங்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவருமான எஸ்.குகவரதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... திவிநெகும சட்டமூலத்தால் மாகாண சபை அதிகாரங்கள் பறி…
-
- 0 replies
- 395 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் இராணுவத்தினரின் குடும்பத்தினரும், சிங்கள குடும்பத்தினரும் குடியேறுவதற்கு அரச, தனியார் காணிகளை அரச கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் முயன்றுவருவதாக கூறப்படுகின்றது. மாவட்டத்தின் நகர் பகுதியை அண்மித்துள்ள, கரடிப்போக்கு சந்தி, சிவநகர், உருத்திரபுரம், டீ8 போன்ற இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரசாங்கத்தினருக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த கட்சியின் ஆதரவாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. பின்னர் அந்த நிலத்தில் இராணுவத்தினரின் குடும்பங்களையும், சிங்கள குடும்பத்தினரையும் தென்னிலங்கையிலிருந்து அழைத்துவந்து இவர்கள் குடியேற்றி வருவதாக பகிரங்கமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் தனியார் நிலமொன்றை சிங்கள குடும்பமொன்…
-
- 1 reply
- 410 views
-
-
-மேனகா மூக்காண்டி 'முன்னேஸ்வரம் சென்று நான்கு கால் மிருகங்களைக் பாதுகாக்க முயன்றவர்கள், தங்களது பிரதேசங்களிலேயே உள்ள இரண்டு கால் மனிதர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டனர்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நாளை உச்சகட்டத்தை அடையவுள்ளது. நீதியரசர் விடயத்தில் அரசாங்கம் விட்டுள்ள தவறினை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் அதற்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்காதுள்ளது. நாட்டின் சட்டம் தொடர்பில் நன்றாகத் தெரிந்திருந்தே இந்த அ…
-
- 5 replies
- 524 views
-
-
குடாநாட்டுக்குள் நுழையும் வாகனங்கள் நாளைமுதல் நிறைச் சோதனைக்கு யாழ். குடாநாட்டுக்குள் பொருள்களுடன் நுழையும் வாகனங்கள் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் நிறை நிர்ணயம் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு வகை வாகனங்களிலும் அவற்றின் கொள்ளவுக்கு ஏற்ப பொருள்களின் நிறை ஏற்றப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொலிஸாரும் இணைந்து இந்த நடைமுறையைக் கொண்டுவரவுள்ளனர். பலகோடி ரூபாக்கள் செலவில் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளமையால் அவற்றை நீண்ட காலத்துக்குப் பேணும் வகையில் இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஓமந்தை மற்றும் பரந்தன் ஆகிய இடங்களில் வாகனங்களின் நிறை சோதனைக்கு உட்படுத…
-
- 0 replies
- 668 views
-
-
இலங்கை வர விரும்பாத நவிப்பிள்ளை - கவலையுறும் இலங்கை அரசு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பயணம் கேள்விக்குறியாகவே இருப்பது குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் 22வது கூட்டத் தொடருக்கு முன்னதாக, இலங்கை நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளதாக ஏற்கனவே நவநீதம்பிள்ளை அறிவித்திருந்தார். எனினும் அவர் இலங்கைக்கான பயணத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “போருக்குப் பின்னரான நிலைமைகளை மதிப்பிடுவதற்கு இலங்கை வருமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனார் அதற்கு இன்னமும் எந்தப் பதிலும் அவரால் வழங…
-
- 0 replies
- 855 views
-
-
ரிசானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த சவுதி தனவந்தர் 2013-01-10 12:22:08 சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார். பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பழல் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச…
-
- 0 replies
- 557 views
-
-
ஆர்ப்பாட்டப் பேரணி இடைமறிப்பு; கொழும்பில் பதற்றம் வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 11:07 குற்றப் பிரேரணைக்கு எதிராக கொழும்பு, புதுக்கடைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அங்கு வந்த குழுவொன்று இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் காயமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டவுரைஞர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், புதுக்கடைப் பகுதிக்கு இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 776 views
-