Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கட்சி உறுப்பினர்கள் நாளை நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லை - திஸ்ஸ பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேணை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த கட்சி உறுப்பினர்கள் நாளை நீதிமன்றில் ஆஜராகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு ஐ.தே.கவிடம் உரிய காரணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த காரணத்தினை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் http://youtu.be/kBd5BcdqzAU http://www.newsfirst.lk/news1st-tamil/node/18181

    • 0 replies
    • 234 views
  2. மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் நீதி அமைச்சு கவனம் குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதி அமைச்சு ஆயுட்கால அல்லது நீண்ட கால தண்டனையாக குறைக்கவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சின் சிபாரிசுகளின் அடிப்படையிலேயே தண்டனை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300க்கும் கூடுதலான மரண தண்டனை கைதிகள் தற்போது உள்ளனர். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுகின்ற போதிலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை. கடைசியாக 1976ஆம் ஆண்டு ஒரு குற்றவாளி தூக்கிலிடப்பட்டார். தனது அமைச்சு தெரிவு செய்யப்பட்ட கைதிகளின் மரண தண்டனையை அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் சந்திரசி…

    • 0 replies
    • 236 views
  3. பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தடுப்பிலுள்ள யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் சர்வதேச சமூதாயத்திற்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்த இடமில்லாமல் செய்யமுடியும். என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. இந்த மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை. அவர்கள் முன்னர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கவும் இல்லை. எனவே, இவர்களை விடுதலைச்செய்து பல்கலைகழகங்களை இயங்க வழிசெய்யவேண்டும். என்று அந்த சம்மேளனத்தின் பேச்சாளர் டாக்டர் மஹிந்த மென்டிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் இலங்கையை கேளிக்கூத்;தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச…

  4. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தேசிய டிப்ளோமா தொழில்நுட்பப் பீடங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்கழுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்தே இப்பீடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/56019-2013-01-02-04-55-41.html

  5. முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிய தமிழினம் மெல்ல மெல்ல தலைதூக்கி விடுதலைக்கான பாதையில் நடைபோட்டுவரும் இக்காலகட்டத்தில் அந்த விடுதலை உணர்வையும் வேட்கையினையும் சிதைப்பதற்கு சிங்களமும் அதனுடன் தமிழர்களது விடுதலையை குழிதோண்டி புதைக்க நினைக்கும் சக்திகளும் பெரும் முனைப்புடன் செயலாற்றி வருகையில் எமக்குள்ளேயும் அவ்வாறான துரோக சக்திகள் தலைதூக்கியுள்ளமை தமிழினத்தின் தூரதிட்டமாக தொடர்கின்றது. தமிழ் இணையங்களில் பல பொறுப்பற்ற தனமாக செய்திகளை வெளியிட்டு வருவது பரபரப்பிற்காக மாத்திரமே தவிர வேறொன்றும் இல்லை. துன்பச் சகதிக்குள் துவண்டுபோயுள்ள தமிழினத்தை விடுதலை உணர்வூட்டி வழிநடாத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ் இணையங்கள் தத்தமது குறுகிய ஆதாயங்களை கருத்தில் கொண்டு இவ்வாறான துரோக செயற்பா…

    • 4 replies
    • 1.1k views
  6. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சாட்சியாளர்களாக புலி ஆதரவு அமைப்புக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=73130&categor…

  7. இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த செக் குடியரசுப் பிரஜை ஒருவர் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 60 வயதான செக் குடியரசுப் பிரஜை தனது விடுமுறையை கழிப்பதற்காக கடந்த டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஹிக்கடுவைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://tamil.dailymirror.lk/crime-news/56013-2013-…

    • 3 replies
    • 443 views
  8. யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தின் தலைப்புள்ளி என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர் நேற்று நண்பகல் கைதுசெய்யப்படும்போது விநியோகதிற்காக கொண்டுவந்திருந்த 200மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் இவருடைய பெயர், விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருக்கும் முக்கிய போதைப்பொருள் கொள்வனவாளர்களை கைது செய்ய பொலிஸ்பிரிவொன்று களமிறக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. http://www…

    • 5 replies
    • 896 views
  9. இந்த ஆண்டின் இலங்கைப் பொருளாதாரம்? தொடர்பான எதிர்பார்ப்புக்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன் படி, நாட்டின் பணவீக்கம், வர்த்தக நிலுவை, நடைமுறை கணக்கு நிலுவை மற்றும் வரவு செலவுத்திட்டப் பற்றாக் குறையினை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் மேலும் ஒரு படி குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தித் திறனை தொடர்ந்து அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 7.5 சதவீதமாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம் இன்று தெரிவித்துள்ளது. குறிகாட்டி 2011 2012 2013 பணவீக்கம் (CCPI) 6.7% 7.6% 5 - 6% வர்த்தகப் பற்றாக்குறை (% of GDP) 18% 15.1% 14.4% நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை (% of GDP) 5.…

  10. (சுமித்தி) யாழ். மாநகர சபை எல்லைக்குள் இந்திய வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அத்துடன் நடை பாதை வியாபாரமும் யாழ். மேயரினால் தடைசெய்யப்பட்டுள்ளது என யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் இன்று தெரிவித்தார். யாழ். வணிகர் கழகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "நடைபாதை மற்றும் இந்திய வியாபாரிகளினால் யாழ். மாவட்ட வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வணிகர் கழகத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பிரச்சினைகள் பற்றி வணிகர் கழகம் யாழ். மேயர் மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆ…

    • 2 replies
    • 966 views
  11. உலகதமிழர்கள் ஒரே அணியில் இணையாவிட்டால் அனைவருக்கும் ஈழத்தமிழரின் அவலம்தான்! Published on January 2, 2013-3:30 pm · உலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஞாயிறு மாலை மலேசியா கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான ‘தமிழ் தேசியத்தின் இன்றை நிலைப்பாடு’ குறித்த கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சிலாங்கூர் நடவடிக்கை குழு மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் நாடு கடந்த தமிழீழ அரசின் ஒஸ்ரேலிய பிரதிநிதி க.மா…

    • 0 replies
    • 561 views
  12. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை நாளை 3 ஆம் திகதி நடைபெறுகின்றபோது நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நான் ஆஜராகுவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56033-2013-01-02-08-15-19.html

    • 4 replies
    • 539 views
  13. யுத்தத்தால் அனைத்தையும் இழந்த மீனவர்கள் தவிப்பு - நல்லிணக்க வாதிகளுக்கு சமர்ப்பணம் முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் நாளாந்தம் நானூறுக்கு மேற்பட்ட தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருதால் தங்களின் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்சங்கங்களின் சமாசம் தெரிவிக்கிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் சிறிது காலம் முல்லைத்தீவு மாவடச்சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்து ஆனால் அக்காலப்பகுதியில் தென்னில்ங்கை மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்தனர், இதனை தொ…

  14. சிங்கள - முஸ்லிம் மக்களிடையே மீண்டுமொரு கலவரத்தை தூண்ட ஒரு சிறு குழுவினர் முற்படுகின்றனர் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வர்த்தகத்தை மையமாக கொண்டு கம்பளையில் கலவரம் அன்று தூண்டப்பட்டது போன்று இன்றும் வர்த்தகத்தை மையமாக கொண்டே கலவரத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த செயல்களுக்கு எதிராக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மறைந்த கலாநிதி டி.பி.ஜாயாவின் 123ஆவது நினைவுப் பேருரை முஸ்லிம் மகளிர் கல்வி சங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கலாநிதி டி.பி.ஜாயா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீத…

  15. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணததினாலும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் எமது கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப்பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்ததாகவும் குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'முசலி பிரதேசத்திற்கு 35 படகுகள் மூலம் உலர் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் போது மன்னார் மாவட்டத்தினால் எமக்கு தெரிவிக்கப…

    • 4 replies
    • 669 views
  16. By M.D.Lucias 2013-01-01 13:17:13 பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது. இலங்கையில் பல வரலாற்று தளங்கள், இயற்கை அழகுகள் மற்றும் விருந்தோபலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே இலங்கைக்கு முதலிலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது 2016 ஆண்டிற்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2344

    • 5 replies
    • 592 views
  17. By General 2013-01-02 15:04:40 இன்று நாட்டில் இருப்பது ஒரு புதுமையான அரசாங்கம் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றி கேட்டால்,இந்த மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பி கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி சொல்லும் அரசு, தமிழ் மக்கள் தொடர்ந்து கோரி வரும் அரசியல் தீர்வை தர மறுக்கிறது. ஒரே நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு வாழ்வோம் என நாம் கேட்பதை தர மறுக்கிறது. இன்றைய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற 13 ம் திருத்ததையும், மாகாணசபையையும் கூட வடக்குக்கு தர மறுக்கிறது. தமிழர்கள் தமிழ் மொழியில் தங்கள் கருமங்களை ஆற்றிகொள்ளும் உரிமையை தர…

  18. அனைத்துலகப் போட்டிகளில் இருந்து சிறிலங்கா துடுப்பாட்ட அணியை விலக்கி வைக்க வேண்டும் எனக் கோரி, சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு வெளியே எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த தமிழ் போராட்டக்காரர்கள் ஏற்பாடுகளை செய்து வருவதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலிய - சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியின் தொடக்க நாளான நாளை காலை 9.30 மணியளவில் இந்த எதிர்ப்புப் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்த எதிர்ப்புப் போராட்டம், தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தமிழ் இளையோர் அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது. சிறிலங்காவுக்கான எதிர்கால சுற்றுப்பயணங்களையும், போட்டிகளையும் நிறுத்துமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தையும்…

  19. சர்வதேச சமூகத்தால் மட்டுமே அரசியல் தீர்வை வழங்க முடியும் - சுரேஷ் சர்வதேச சமூகத்தால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முடியும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்;கை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில், சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிரும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது முடியாத காரியமாகும். சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தை…

    • 0 replies
    • 451 views
  20. இவ்வருடம் பொலிஸார் காட்டில் மழை! பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது 4500 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவருக்கு அவர் பணி புரியும் பிரதேச தரத்திற்கு அமைய 2500 ரூபா தொடக்கம் 6000 ரூபா வரை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 2013 வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கு அமைய இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. (அத தெரண - தமிழ்)

  21. தமிழர் பிரச்சினைக்கு நிலையான ஒரு தீர்வு; 13 இற்குப் 13 இல் புத்துயிர் என்கிறார் ராஜித "மலர்ந்திருக்கும் 2013ஆம் ஆண்டில் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கமைய தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் நிலையான தீர்வு எட்டப்படும். அதற்குத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுவருகின்றோம்.'' இவ்வாறு மீன்பிடித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பரிந்துரையின் பிரகாரமும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கமையவ…

  22. பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாட்டுக்கு விரோதமாக செயற்படுகின்றார்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு இலவசக் கல்வியினை கற்றவர்கள் நாட்டுக்கு விரோதமாக செயற்படுகின்றனர் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் உதவியினால் கல்வி கற்ற பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தற்போது நாட்டுக்கு விரோதமாக செயற்படுகின்றார். பிரதம நீதியரசர், சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரண பாடசாலைகளில் கல்வி பயின்று கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவர் தான் பிரதம நீதியரசர். அதனையடுத்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உதவியினால், பிரதம நீதியரசருக்கு கலாநிதி பட்டம் கிடைக்கப் பெற்றது . இவ்வாறான ஓர் நிலைமை…

  23. இன்று பிறக்கும் இப்புத்தாண்டில் எமது தாய் நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களை காணும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த ஒரு நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். அதே போன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இந்த புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். எனவே, இன்று பிறக்கும் இப்புத்தா…

  24. ரிஆர்ரி வானொலியின் சமூகப்பணியும் சுயநல அரசியல் நோக்கங்களும் புறக்கணிக்கப்படும் மக்களும்! Published on December 30, 2012-6:58 pm · பிரான்ஸில் உள்ள ரிஆரி வானொலியின் சமுகப்பணியின் கீழ் மனிதாபிமான உள்ளம் கொண்ட நேயர்களின் நிதி உதவியுடன் குழந்தைகளுக்கான பால்மா பிஸ்கற் வகைகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்டது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவின் கீPழ் உள்ள நேரியகுளம் கந்தசாமிகுளம் கிறிஸ்தவகுளம் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னப்பண்டிவிரிச்சான் பெரியபண்டிவிரிச்சான்; பரப்புக்கடந்தான் ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கினார். ரிஆர்ர…

  25. இன்று மலரும் 2013 ஆம் புதிய ஆண்டினை உலகம் நம்பிக்கையுடன் வரவேற்றுக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும்வாழ் தமிழ் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். கடந்த வருடம் 2012 ஆண்டு மலர்ந்த போது நான் விடுத்திருந்த செய்தியில் 2012 ஆம் ஆண்டு நமக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையும் எனத் தெரிவித்திருந்தேன். நடந்து முடிந்த 2012ம் ஆண்டு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க ஆரம்பித்த ஆண்டாக அமைந்திருக்கிறது. 2012 மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் அமெரிக்காவின் முன்னெடுப்பில் இ…

    • 2 replies
    • 417 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.