Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு அருகாமையில் குடிபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தவிர்க்க சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியொகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72681&category=TamilNews&language=tamil

  2. மனித மனங்களை வெல்லும்படியான தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சு எதுவும் காணப்படவில்லை. மீளக் குடியமர்த்தலும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் மனித மனங்களை வெல்லும்படியான தீர்வுத்திட்டம் எதுவும் இலங்கையில் முன்வைக்கப்பட்டு இருக்கவில்லை என யாழ்.ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தோலிக்க இணையமொன்றிற்கு வழங்கிய தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையினில் 'எம்மைச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர் மற்றும் அரசஅதிகாரிகள் அனைவரிடமும் இதனை நாம் மிகத்தெளிவாகத் தெரிவித்துள்ளோம.; ஒருவித செயற்பாடும் …

  3. தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர். பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க ம…

  4. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நேர்மையான, தியாகமான அரசியலுக்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் உள்நாட்டுவாதிகளும் வெளிநாட்டு விஷமிகளும் அவருக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வது அர்த்தமற்ற செயலாகும் என யாழ் மாவட்ட பா.உ. சுமந்திரன் தெரிவித்தார். இரா.சம்பந்தன் இராணுவப் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும், மற்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூறியுள்ளார், கூறிவருகின்றார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை உள்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு சேறு பூசும் ஒரு விடயமாகும். அவரின் தியாகத்தனமான அரசியல் போக்கை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.…

    • 18 replies
    • 1.2k views
  5. மார்கழி 24, 2012 பலாத்காரமாக யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பித்து அதன் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை இராணுவ தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த மாதம் மாணவர்கள் மீதான் வெறியாட்டம் இது குறித்த விரிவான செய்தித் தகவல்கள் வருமாறு பாதுகாப்புச்செயலளர் கோத்தபாயவின் கடுமையான பணிப்புரைக்கமைய யாழ் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிக்குமாறும் மீண்டும் அது தமிழ் தேசிய எழுச்சிக்கான தளமாக இருக்கக்கூடாது எனவும் யாழ் படைத்தளபதி மற்றும் யாழில் செயற்படும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கும் செயலில் இறங்கியுள்ளனர்.அண்மையில் யாழ் படைத்தளபதியை பல்கலை சமூகம் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரும் மாணவர் விடுதலை குறித்து மன்றாடிய போதும் படைத்தளபதி அதனை…

    • 5 replies
    • 869 views
  6. செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக் கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோறாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். துறைசார் வல்லுநர்களுக்கான ஆய்வரங்கம், தமிழ்கணினி குறித்த…

    • 5 replies
    • 892 views
  7. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது (2011) இந்த ஆண்டு, இலங்கையில் வியாபாரம் மிகவும் மந்தம் அடைந்துள்ளதாக சிங்கர் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் அசோக் பிரிஸ் த ஐலன்ட் பத்திரிகை இனையத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில், (1).மிகவும் தேய்வு கண்ட ரூபாவின் வெளி நாட்டுப் பெறுமதி, (2).மின் கட்டண உயர்வு மற்றும் (3).எரி பொருள் விலையேற்றம் ஆகியன காரணமாக அமைந்ததுடன், இந்த ஆண்டு முழுவதும் (4).அதிகரித்து வந்த வட்டி வீதங்கள், (5).உலகலாவிய பொருளாதார மந்தம் என்பன எல்லாம் சேர்ந்து இந்த ஆண்டிற்கான வியாபார நடவடிக்கைகளை பாதித்துள்ளன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக தொடரும் காலநிலை வரட்சியானது (6).மின்சாரம் மற்றும் (7).விவசாய உற்பத்திகள…

    • 3 replies
    • 943 views
  8. ததேகூ ஆட்சி நடக்கும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ம் ஆண்டுக்காக வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை சபையின் அமர்வில் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர். இவ் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் சபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச பொது நூலக கேட்போர் கூடத்தில் தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. சபையமர்வில் தவிசாளர், உபதவிசாளர் …

  9. புனர்வாழ்வு பெற்ற 313 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 313 பேர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் போராளிகளில் 313 பேர் தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ஆம் திகதி சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சுமார் ஒரு வருட கால புனர்வாழ்வு பயிற்சியினை முடித்துக் கொண்டவர்களுள் மேற்படி 313 ஆண்களே தமது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. இதன்படி, மருதமடு புனர்வாழ்வு நிலையத்திலிரு…

    • 2 replies
    • 405 views
  10. ஈழத்தமிழர்களுகெதிரான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினர் நிறுத்திக்கொள்ளாவிடின் அதற்கெதிராக போராட்டத்தில் குதிக்கப்போவதாக சீமானின் நாம் தமிழர் கட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐயத்தின் போரிலும், ஈழத்திற்கு மண்ணெண்ணை, இரத்தம் கடத்தினார்கள் என்ற பெயரிலும் பல ஈழத் தமிழ் சொந்தங்கள் …

  11. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான பிரசாரங்கள் தொடர்பில் ஆராயப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனோடு திவிநெகும சட்டமூலம், 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் இதன்போது விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாக உத்தியோகத்தர்களை அறிவிக்க இருப்பதுடன், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப்புக்கு விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற உள்ளது. கட்சியின் தவிசாளர் தலைமையில் நடைபெற இருக்கும் இப்பேராளர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா…

  12. சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் 5 மாத இடைவெளிக்குள் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் கொல்லப்பட்டபோது உலகம் கண்களை மூடிக்கொண்டிருந்ததாக, பிரான்செஸ் ஹரிசனின் “மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன” நூல், கூறுகிறது. விடுதலைப் புலிகளை இறுதியாக அழித்த போரில், 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக, பின்னர் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, நடுங்க வைக்கும் எண்ணிக்கை என்று 259 பக்கங்களைக் க…

  13. விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று சிறிபுர, முதுன்கம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும் மேற்படி சந்தேகநபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ள சந்தேகநபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வ…

  14. மார்கழி 25, 2012 இலங்கை இராணுவத்தின் பெண்கள் படையணியில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களின் பெற்றோர்தினக் கொண்டாட்டம் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.23) கொண்டாடப்பட்டது . கலைநிகழ்சியில் கலையாடும் பெண் தமிழ் இராணுவத்தினர் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டலைத் தளபதி கலந்து கொண்டதுடன் இராணுவத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது இவ் யுவதிகள் தமது ஒரு மாத பயிற்சிக் காலத்துக்கான கொடுப்பனவுடனான வங்கி வைப்புப் புத்தகத்தையும் பெற்றுக் கொண்டனர். .http://urumal.com/archives/கிளி-படைத்தலைமையகத்தில்

    • 0 replies
    • 784 views
  15. 12 மணித்தியாலங்களில் 382 விபத்துக்கள்; ஊடகவியலாளர் உட்பட மூவர் பலி செவ்வாய்க்கிழமை, 25 டிசெம்பர் 2012 13:24 0 COMMENTS இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியுடன் முடிவடைந்த 12 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 382 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ரொஸ்மிட் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் அமிலா விஜேசிங்க மெண்டிஸ் என்ற ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த கெப் ரக வாகனம், மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, விபத்துச் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ராகமை, …

  16. சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி செவ்வாய், 25 டிசம்பர் 2012( 11:19 IST ) செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐயத்தின் பேரிலும், ஈழத்திற்கு மண்ணெண்ணை, இரத்தம் கடத்தினார்கள் என்ற பெயரிலும் பல ஈழத் தமிழ் சொந்தங்கள் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் பிணைய விடுதலை பெற்ற நிலையிலும் விடுவிக்கப்பட…

  17. அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அறிக்கை தாக்கலாகும்: கூட்டமைப்பு அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ. நாவின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தங்கள் வசமுள்ள அறிக்கை ஒன்றினை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான அறிக்கைகளை அரசியல் கட்சிகளினால் மனித உரிமைப் பேரவையில் நேரடியாக முன்வைக்க முடியாது. அவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை பேரவையில் சுட்டிக் காட்டுவதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம். அத்துடன் மனித உரிமைப் பேரவை அமர்வில் த…

  18. Published on Dec 23, 2012 Truth Behind Tamil Genocide in Sri Lanka காணொளி நன்றி TAMILTAMILARGAL தமிழர்கள் இனப்படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்கள் இனப்படுகொலை மற்றும் அதன் விடயத்தை சுற்றிய....................... http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wQDa25EKNRc&noredirect=1#!

  19. இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, தேர்தல் தொகுதிகளை மறுசீரமைக்கின்ற ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவொன்றை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமித்துள்ளார். இதன்படி, நாடுமுழுவதிலும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் மாவட்ட மட்ட குழுக்களும் அமைக்கப்படுகின்றன. தொகுதி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவுக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ள மாவட்ட குழுக்களில் அரச அதிகாரிகள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள். அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் திணைக்களம், நில அளவை திணைக்களம், சனத்தொகை புள்ளிவிபர திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளே மாவட்ட குழுக்களில் அங்கம் வகிப…

    • 0 replies
    • 411 views
  20. Please support "The Vanni" - a multimedia interactive cartoon project by Benjamin Dix and Lindsay Pollock. This project will go a long way in establishing what happened to Eelam Tamils is a Genocide. Please visit (or revisit): http://www.kickstarter.com/projects/651360878/the-vanni and make a kind donation using your credit card to this worthy effort. வன்னி சித்திரக்கதை வன்னி எனப்படும் சித்திரக்கதையை உருவாக்கி உலகளாவிய ரீதியில் பிற்காலச் சமுதாயத்திற்கு வழங்குமுகமாக முன்னெடுத்து இருக்கும் திட்டத்திற்கு முக்கியமாக தமிழர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.கீழுள்ள இணைப்பை அழுத்தி விபரங்களை பார்வையிடலாம் http://www.kickstarter.com/projects/651360878/the-vanni

  21. பௌத்த குழுவினரால் தாக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரிகள் வாராந்த சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு முஸ்லிம் வியாபாரிகள் கடும்போக்கு பௌத்த குழுவொன்றினால் தாக்கப்பட்ட சம்பவமொன்று எம்பிலிபிட்டிய நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. முட்டை வியாபாரி ஒருவருமே இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2224

  22. யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் மகிந்த ஹத்துருசிங்க அவர்களுக்கு அன்பு வணக்கம். யாழ்ப்பாணப் பத்திரிகைகள் தொடர்பில் தாங் கள் எதிர்மறையான கருத்துக்களைக் கொண் டிருந்தாலும் ஒரு பத்திரிகை தனது பணியை செம்மையாகச் செய்ய வேண்டும் என்பது நமது திண்ணம். அதேநேரம் பத்திரிகையில் வரும் செய்திகள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது பத்திரிகைத் தர்மம். அந்தத் தர்மத்திலிருந்து வலம்புரி பத்திரிகை ஒருபோதும் விலகியது கிடையாது. இதற்கு பலாலி கட்டளைப் பணியகத்தால் அவ்வப்போது அனுப்பப்பட்ட மறுப்பு செய்திகளை வலம்புரி பிரசுரித்தமை சான்றாகும். எனினும் குடாநாட்டு பத்திரிகைகள் என்றால் எங்களுக்கு எதிரான செய்திகளைத்தான் ப…

    • 0 replies
    • 401 views
  23. நாட்டிலே பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாக தீர்வொன்று வராமலிருக்கிற சூழலிலே வன்முறையற்ற, அகிம்சை வழியிலே போராட்டங்களை மேற்கொள்ளவும், அரசோடு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் நாம் இப்போது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான அனுசரணையை சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்டும் இருக்கிறோம். இலங்கை அரசு தொடர்ந்து மறுத்துவரும் உரிமைகளைப் பெறுவதற்கு எமக்கு வேறு வழியில்லை. இனி வீதியில் இறங்கிப் போராடவேண்டும். எங்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறையற்ற சாத்வீக வழியிலான போராட்டங்களை புதிய வருடத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம். அண்மையில், நோர்வே தமிழர் கற்கை மையம் ஒழுங்குசெய்திருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக நோர்…

  24. இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உச்சத்தில் இருப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பெருமளவிலான சிறிலங்கா படை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட, சிறிலங்கா ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்தியா பரந்தளவிலான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒருவரை மற்றவர் உணர்ந்து கொள்வதற்கான சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையும் ஏற்ப…

  25. ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற மனித உரிமை மாநாட்டின்போது தமிழர்களின் அவல நிலை முன்னிலைப்படுத்தப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சியினால் எவ்விதமான சமர்ப்புகளையும் முன்வைக்க முடியாது எனினும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அவல நிலையை வெளிக்கொண்டுவருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எங்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகப்பட்சம் பயன்படுத்த முடியும் என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55480-2012-12-24-11-52-01.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.