Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார்: ஜனாதிபதி 2012-12-14 09:33:05 தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2073

  2. கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இனி புலிகளைப் பற்றி பேசக்கூடாது. மீறிப் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க பிரிவு ஒன்று எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், புலிகள் தங்களாகவே தங்களை அழித்துக் கொண்டார்கள் என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்திருந்தார். இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில், சம்பந்தனை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் கடந்த வாரம், துரோகிகள் பட்டியலிலும் சம்பந்தன் இணைக்கப்பட்டார். …

    • 0 replies
    • 857 views
  3. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை! _11-நக்கீரன் பறிபோய்விட்ட திருகோணமலை - கோணேசுவரர் ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாசலில் பிரட்றிக் கோட்டை இருக்கிறது. சற்றுத் தள்ளி உட்புறமாகப் புத்தரின் பெரிய உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோணேசுவரர் ஆலயத்துக்குப் போவோர்கள் இந்தப் புத்தர் சிலையைக் கடந்தே செல்ல வேண்டும். புத்தரின் சிலைகள் சிங்கள – பவுத்த ஆக்கிரமிப்பின் சின்னமாக திருகோணமலை மாவட்டம் முழுதும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பிரட்றிக் கோட்டை வாசலில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும். கடந்த ஆண்டு சிங்கள இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட சம்பூரில் இருபது ஆண்டுகள் கழித்துப் போயா நாள் கொண்டாடப்பட்டதாக கொழும்பு நாளேடு ஒன்று பெருமிதத்தோடு செய…

  4. அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கை பற்றிய காணொளி.

  5. யாழில் கடந்த வாரத்தில் மட்டும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ்.மாவட்ட சிரேஸ்த பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜப்ரி தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். அடித்துக் காயப்படுத்தியது தொடர்பில் 39 பேர், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் பொலிஸாரிடம் அகப்படாமலும் தலைமறைவாக இருந்த 37 பேர், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற 2 பேர், அரச சாராயத்தினை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் விற்றனை நோக்கில் தம்வசம் வைத்திருந்த 8 பேர், பொது இடத்தி…

  6. (எஸ்.கே.பிரசாத், சுமித்தி) 'இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் விடுதலைப் புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம்' என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா தெரிவித்துள்ளார். இன்று யாழில் நடைபெற்ற புதிய ஐஸ் தொழிற்சாலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, 'இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பெடரல் முறை வேண்டாம் என்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட விரும்பவதாக தெரிவித்திருந்தனர். 1958ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஒரு நாட்டுக்குள் இரண்டு மொழிகள் வேண்டும் என்…

  7. அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரியும், வடக்கில் நடைபெறும் ஜனநாயக விரோதச் செயல்களைக் கைவிடக்கோரியும் அன்றாடம் வடக்கு-கிழக்கில் இடம்பெறும் காணாமல்போகச் செய்தல் மற்றும் கடத்தல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதுடன் கடத்தப்பட்டோரையும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்கக்கோரியும் வடக்கு-கிழக்கில் ஜனநாயகச் செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரியும் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இன்றுகாலை (14.12.2012) 11மணி முதல் பிற்;பகல் 1 மணிவரை வவுனியா இலுப்பையடியில் தொடங்கிய கவனயீர்ப்புப் போராட்டம் பின்னர் வவுனியா காய்கறி மொத்த விற்பனை சந்தை வளாக முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது அமைப்புக்களு…

  8. சிறீலங்காவின் கடல்வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் கேரள மாநில அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிறீலங்கா கடல் பகுதியில் தனியாக ஒரு மர்ம படகு நின்றிருந்தது. அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மர்ம படகை சுற்றி வளைத்து பிடித்தனர். குறித்த படகில் இருந்த 6 பேரிடம் சிறீலங்கா படையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் இந்தியாவிற்குள் கேரள மாநில கடல் வழியாக ஊடுருவ வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மற்றொரு குழுவினலும் வந்திருப்பதாக கைது செய்யப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் பயங்க…

  9. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் அரசால் நடத்தப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரில் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணிவரா ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்மைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பு சார்பாக மாவை சேனாதிராசா,சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்கி ஆனந்தன்,ஆகியோரும்,தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார்,கஜேந்திரன் ஆகியோரும்,புளொட் சித்தார்த்தன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி,ஜனநாயக மக்கள்முன்னணியின் பாஸ்கரா,புதிய மாக்ஸிச லெனினிய கட்சியின் செந்தி வேல்…

  10. இலங்கையில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, லெபனானில், ஐக்கிய நாடுகள் போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமையை தடுப்பதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உரியமுறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில், தமது அதிகாரிகள் மேற்கொள்ளும் மீளாய்வு 2013ம் ஆண்டு முதல் கால்பகுதியில் நிறைவடைந்து விடும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அதேநேரம், இலங்கையில் போர்க்குற்றம்…

  11. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதீத கரிசனை தருகிறது: - கனடியப்பாராளுமன்ற உறுப்பினர் கைல் சீபாக்ஸ் [Friday, 2012-12-14 11:39:38] பிரம்டன் மேற்கு ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் கைல் சீபாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதீத கரிசனை தருவதாக தெரிவித்துள்ளார். சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவது ஒன்று கூடுவது சுதந்திரமான நீதித்துறை என்பன எந்த ஒரு சனநாயத்தின் தூண்கள் இவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்துவது போல் சமீபத்தில் சிறீலங்காவில் நடந்துவரும் சம்பவங்கள் எனக்கும் எனது தொகுதியில் உள்ள சிறீலங்காவில் இருந்து வந்தவர்களுக்கும் அதீத கரிசனையை ஏற்படுத்தியுள்ளது எ…

  12. இணுவில் சந்தியில் தாய் மற்றும் சகோதரியுடன் ஆட்டோவில் வந்த இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லும் படி கூறியதுடன் இராணுவத்தினரால் எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2078

  13. ஐ.நாவில் மீண்டும் சிறிலங்காவின் போர்க்குற்றவாளி December 13, 2012, 11:25 am|views: 293 தென்னாபிரிக்க நாட்டின் பிரதித் தூதுவராக போர்க்குற்றவாளி சவேந்திரா சில்வாவை நியமிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் சிறிலங்காவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கான பதவியை பெற்றுக் கொடுப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிகளில் இறங்கியுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக இவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இவரை ஏற்றுக் கொள்ள வேண்டாமென கண்டனங்கள் எழுந்தன. சவேந்திரா சில்வாவின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாமென புலம்பெயர் தமிழர்களால் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மகஜர்கள…

  14. மீளாய்வு 2013ஆம் ஆண்டு நடுபகுதியிலேயே நிறைவு செய்யப்படும்: ஐ.நா வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012 08:48 இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறுகளை ஆராய்வதற்கான மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில்; இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா இழைத்த தவறுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட சாள்ஸ் பெட்றியின் அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான குழு நியமிக்கப்படும் என்று பான் கீ மூன் அறிவித்திருந்தார். இந்த மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்ட…

  15. இனங்களுக்கு இடையிலான குரோத உணர்வு நீடிக்க இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது மிகப் பெரிய பாவச் செயலாகும். 30 ஆண்டுகால போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் மனங்களிலிருந்து குரோத உணர்வுகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். வேறு வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைவரும் சமமானதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற இந்து ஆலய மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள…

    • 10 replies
    • 678 views
  16. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ் தொழில்நுட்க கல்லூரி மாணவர்கள், சமூக பொதுநலன்களில் அக்கறையுடன் செயற்படும் இளைஞர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களில் காவல்துறையினராலும் புலனாய்வு பிரிவினராலும் விசாரிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் உட்பட அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுவீர்கள் என்றும் அரச எதிர்ப்பில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பபடுவீர்கள் என எச்சரிக்கப்பட்டனர் என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சாவகச்சேரி காவல்நிலையத்திற்கு தென்மராட்சியை சேர்ந்த பல்கலைக்கழக…

  17. போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே இருந்துகொண்டிருப்பதாக ‘த டிப்ளொமெற்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (Women's Action Network) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவம் விதிமுறைக்கு புறம்பாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை தெரிவித்துள்ளது. 2009ன் பின் தொடர்ந்து ஸ்ரீலங்கா சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடி இன ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழ்க்கட்சிகளின் அனுசரணையுடன் வெவ்வேறு வடிவங்களில் ஈழதேசத்தில் உருவெடுத்து பெருகிக்கொண்டே இருக்கின…

  18. படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார். இது குறித்து தெரியவருவதாவது: சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ். அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ …

  19. நியூசீலாந்து கிரீன் கட்சித் தலைவர் ஜேன் லோகி ஆக்லாந்தில் மக்கள் மன்றம் என்ற அமைப்பால் கூட்டப்பட்டு நடைபெற்ற உலக மனித உரிமைதின கடைப்பிடிப்பின் போது 21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிக மோசமான மனித அழிவு, நாகரிக உலகின் மீதான தாக்குதல் மீது முழுமையான, பொருத்தமான விசாரணை மேற்க்கொள்ளப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். ஐ.நா. போரில் தனது கடைமையை ஆற்றுவதில் தோல்வியடைந்தது தெளிவாக உள்ளதென்றும் தெரிவித்தார். சிறிலங்கா அரசானது விடுதலைப் புலிகளின் தற்காப்புப் போரை கேவலப்படுத்தி, அரச பயங்கரவாதத்தை நியாயப் படுத்த முயல்கிறது என்றும் ஜேன் லோகி கூறினார். நியூசீலாந்தைச் சேர்ந்த ஜான் மின்டோ என்ற ஒரு மதிப்புமிகு மனித உரிமைப் போராளி வருமாண்டு தொடக்கத்தில் நியூசீலாந்து மக்கள் போராட்டம் மேற்கொண்டு ந…

  20. சிறிலங்காவின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்? - கனேடிய எழுத்தாளர் கேள்வி [ புதன்கிழமை, 12 டிசெம்பர் 2012, 10:12 GMT ] [ நித்தியபாரதி ] உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனேடிய எழுத்தாளர் Elizabeth Haq தனது மன ஆதங்கத்தை கனேடிய National Post ஊடகத்தில் பதிவு செய்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இட…

  21. நாடெங்குமுள்ள இந்துக்கோயில்களைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 740 கோயில்களை புனரமைப்பதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.750 இலட்சம் நிதியுதவி வழங்குவதற்காக இந்துக் கோயில்களுக்குப் பொறுப்பான ஆலய நிருவாக சபை உறுப்பினர்களுடனும் இந்துக் குருமார்களுடனும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் 2012 -12- 10இல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 2005 - 2012 வரை இந்து தர்மாசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது. புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 500க்கு மேற்பட்ட இந்து தர்மாசிரியர்களுக்கு ஜனா…

  22. அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணியுடனான கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன. தமிழ் அகதிகளுக்கான சபை மற்றும் விக்டோரியாவின் அகதிகளுக்கான கூட்டு என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட போது, அவுஸ்திரேலியா அந்த நாட்டுடன் விளையாட்டுத் தடையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கொள்கையை இலங்கையின் மனித உரிமை மீறல் விடயத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று குறித்த அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்தக் கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன. எனினும் நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நடவடிக்கையே இது என்று இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் திஸ்ஸர சமரசிங்க குறிப்பிட்…

  23. ஐநாவின் மோசமான தோல்வி பிரான்ஸெஸ் ஹாரிசன் தமிழில்: கண்ணன், ஷாலினி 13 டிசம்பர் 2012 ஒரு போரில் 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக/காயம்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு யுத்தகளத்திலிருந்து கிடைத்திருப்பதாக, ஐநா சபை இன்று அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் அதைக் கவனித்திருக்காதா? படுகொலையைத் தடுக்க முனைந்திருக்காதா? இலங்கைப் போர் பற்றி 2009ஆம் ஆண்டே ஐநா அமைப்பிடம் இத்தகவல் இருந்தது என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை அமுக்கிவிட்டார்கள். இப்போது ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒரு உள் ஆய்வுக்கு உத்தரவிட்டதால் இத்தகவல் தெரிய வந்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் ஐநாவின் செயல்பாடு ‘மோசமான தோல்வி’, இ…

  24. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பயங்ரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த நான்கு மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்…

    • 0 replies
    • 655 views
  25. வடகொரியா தனது ரொக்கட்டை ஏவியமை தமக்கு பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட் ஒன்றை ஏவியுள்ளமை கவலையளிக்கின்றது. இந்த செயற்பாடானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானமான 1874 யை மீறுகின்ற செயலாகும். 'இந்த சூழ்நிலையில் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பே கட்டாயம் தேவைப்படுகின்றது என்பதை தாம் அறிந்திருப்பதால் இந்த செயற்பாடு கவலையளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடகொரியா ரொக்கட்டை ஏவியமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.