ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
யாழ் கோப்பாயில் இன்று 12.12.12 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடமாக தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம்... 11 டிசம்பர் 2012 உறுதிப்படுத்த முடியவில்லை இலங்கை நேரம் இன்று 12.12.1212 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடங்களிற்குமேல் தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கோப்பாய்ப் பக்கத்திலிருந்து கேட்கிறது சரியாக கணிக்க முடியவில்லை. இடையிடையே குண்டுச்சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து.. எதிர்பாருங்கள் ... என எமது யாழ் வாசகர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த தகவலைத் தந்தவர் முன்பும் உண்மையான பல தகவல்களை அங்கிருந்து உடனுக்குடன் பரிமாறியவர். அந்த வகையில் வாசகர்களுக்கு இந்த தகவலை மக்களின் தகவல் பரிம…
-
- 0 replies
- 628 views
-
-
President says ready to reconsider impeachment [Tuesday, 2012-12-11 21:40:27] President Mahinda Rajapaksa said today (Dec. 11) that he was prepared to appoint an independent committee to reconsider the impeachment motion against the chief justice. He referred to the issue during a speech at the opening of a building complex for the Sri Lanka Institute of Chartered Accountants in Colombo. The president said he was sorry and was not much in agreement with the impeachment motion submitted by a group of ruling MP's, adding that as a lawyer himself, he disagreed with any action that demeans the judiciary. He went onto say that any offence should not be made publ…
-
- 2 replies
- 447 views
-
-
எமது அப்பாவி மாணவர்களை சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் சிறைகளில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. அக்கொடும் சிறைகளின் கோரங்களை நானும் அனுபவித்தவன் என்பதால் அம்மாணவர்களின் நிலைமை என்னைக் கலங்க வைக்கின்றது. அவர்களை எப்படியாவது அக்கொடும் சிறைகளிலிருந்து உடனடியாக விடுவித்தாக வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வாழும் நீங்கள்தான் இதனைச் செய்யமுடியும். நீங்கள் வாழும் நாட்டின் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சிறீலங்கா அரசின் கபடத்தனங்களைப் புரியவைத்து எம் மாணவர்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க உடனடியாக ஆவன செய்யுங்கள். பெருமளவில் கவனயீர்ப்புகளைச் செய்யுங்கள!;. வீதிகளில் இறங்கிப் போராடுங்கள! ;.எம் இளம் சந்ததியைக் காப்பாற்றுங்கள்! …
-
- 1 reply
- 481 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 14 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானப் பயணிகளின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கௌதாரிமுனைக் கடற்கரையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பயணிகளின் சடலங்களைத் தோண்டும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து அப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இந்நிலையில், தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ஆய்வு ரீதியில் மூன்றாம் கட்டமாக இந்த சடலங்களைத் தோண்டுப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் கூ…
-
- 0 replies
- 359 views
-
-
சிங்களப் பேரினவாத அரசானது அப்பாவி மாணவர்களை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்வதாகக் கூறி தனது கொடுஞ்சிறைகளில் அடைத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. கைது செய்தவர்களை நாளொரு சிறைக்கூடங்களுக்கு மாற்றிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சிங்கள அரசின் கபடத்தனங்களை நன்கு அறிந்த தமிழ் மக்கள் அம்மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மாணவர்களைப் பாதுகாக்கவும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து எம் மக்களைக் காக்கவும் புலம் பெயர் நாடுகளில் நடாத்தப்படும் மக்கள் போராட்டங்களில்; பெருமளவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம். சர்வதேச நாடுகளுக்கு நாம் கொடுக்கும் பெருமளவான அழுத்தங்கள்…
-
- 0 replies
- 271 views
-
-
எனது மொபைலில் கிளிக்கியவை..
-
- 10 replies
- 766 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி - முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள நபருடன், முருகன் தொலைபேசியில் பேசியதாக வந்த முறைப்பாடு தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். தம்பதியர் இருவரும், 15 நாட்களுக்கு, ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர். பல ஆண்டுகளாக, இவர்கள் சந்திப்பு நடந்து வந்தது. கடந்த மாதம், சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார், வே…
-
- 2 replies
- 612 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாண ஆட்சி மன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் இவ்வேளையில், ஸ்காபுறோ கில்வூட் தேர்தல் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களின் நண்பனும், கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும், பிரபல வீடு விற்பனை முகவரும் காப்புறுதி ஆலோசகருமான திரு கென் கிருபா என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்படி கில்வூட் தொகுதிக்கான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யும் உள்ளகத் தேர்தல் திங்கட்கிழமை 10ம் திகதி மாலை நடைபெற்றது. திரு கென் கிருபாவை எதிர்த்து போட்டியிட்ட கறுப்பினப் பெண்மணி ஒருவர் மிகக் க…
-
- 0 replies
- 615 views
-
-
13 ஆவது திருத்தத்துக்கான அமைச்சர்களின் ஆதரவு சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்: ஐ.தே.க. அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பதிமூன்றாவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கத்தின் புதிய நாடக அரங்கேற்றமாகும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்;மன் கிரியெல்ல தெரிவித்தார். மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிப்பதற்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இம் மகஜரில் கையெழுத்திட்டுள்ளமையானது அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 13ஆவது திருத்தத்தை ஆதரித்து ஆளுந்தரப்பில் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மகஜர் தயார் செய்து ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தமத…
-
- 0 replies
- 641 views
-
-
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் தமிழர்களுக்கான அதிகாரத்தை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 09.12.2012 அன்றைய லங்காதீப ஞாயிறு பத்திரிகைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்…
-
- 2 replies
- 487 views
-
-
கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞான பீட மாணவன் எஸ்.சொலமன் ஆகிய நால்வருமே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வவுனியா அலுவலகத்தில் இருந்து வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. "நேற்றுக் காலை நாம் வவுனியாவுக்குச் சென்றபோது அங்கு அவர்கள் இல்லை. வெலிக்கந்தைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுவிட்டார்…
-
- 1 reply
- 486 views
-
-
திவுலபிட்டிய, ரஞ்சாபொல, எத்திலியபொல பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த பன்றிப் பண்ணையொன்றை இழுத்து மூடியுள்ளார் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. மேற்படி பன்றிப் பண்ணையால் பிரதேசவாசிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள் என்று தனக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த பண்ணையை தான் மூடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஒருவர் செய்யும் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் இன, மத, குலம் என்று பாராமல் அவ்விடத்தில் நான் நிற்பேன். அந்தவகையிலேயே இந்த பன்றிப் பண்ணை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக இங்கு வந்துள்ளேன். பன்றிப் பண்ணைக…
-
- 0 replies
- 403 views
-
-
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் எதிர்வரும் 14ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் வர்த்தக, சுற்றுலா உறவுகளை மேம்படுத்துவது ஆட்கமத்தலை கட்டுப்படுத்துவதும் இவரது விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக தெற்காசிய வலயத்திற்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார், இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் இலங்கை 69 ஆட்கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அதன்மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையவிருந்த 2900 பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவுஸ்திரேலிய வெளிவிவகா…
-
- 0 replies
- 280 views
-
-
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு தொடர்பில் தாம் பெருமை கொள்வதாகவும், இந்த உறவின் வெளிப்பாடாக இரு தரப்பு வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள விரும்புவதாகவும் பாகிஸ்தானுக்கான சிறிலங்காவின் உயர் ஆணையாளரான ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜெயலத் வீரக்கொடி வெள்ளியன்று தெரிவித்துள்ளார். தென்னாசிய நாடுகளில் சிறிலங்காவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாடாக பாகிஸ்தான் காணப்படுவதுடன், சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேற்கொள்ளும் முதலாவது நாடாகவும் இது காணப்படுவதாக இஸ்லாமபாத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் பெண்கள் சம்மேளனத்தின் நிறுவுனரான சமீனா பசாலின் தலைமையிலான பிரதிநிதிகளுடன் உரையாடும் போதே ஜெயலத் வீரக்கொடி இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானு…
-
- 1 reply
- 431 views
-
-
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு குறுகிய மற்றும் நீண்ட கால இராணுவ பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி குறிப்பிட்டுள்ளார். லோக் சபா உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் நேற்று இதனை தெரிவித்தார். தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் தவிர்ந்த பயிற்சிகள் இதனடிப்படையில் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்குவதாக, லோக்சபாவுக்கு அவர் எழுத்து மூலம் அறிவித்தார். இலங்கை உள்ளிட்ட ஏனைய அயல் நாடுகளுக்கு இவ்வாறான இராணுவ உதவிகள் வழங்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோனி குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=71812&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 367 views
-
-
By General 2012-12-11 11:28:34 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கெதிராக லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டம் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். http://www.virakesari.lk/article/local.php?vid=2043
-
- 0 replies
- 228 views
-
-
By General 2012-12-11 11:09:27 Vinoth ஹம்பாந்தோட்டை வீரஹெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டை புத்த பிக்குகளே ஆளும் தரப்பினராக எடுத்துக்காட்டுவதாகவும் குறித்த தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஹம்பாந்தோட்டை …
-
- 0 replies
- 291 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிவதற்காக செல்வோருக்கு விசேட தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு விசேட தொலைபேசி இணைப்பு ஒன்றையும் வழங்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதல் கட்டத்தில், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்வோருக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்வோர் குடும்ப உறவினர்களுடன் தொடர்பினை வைத்திருப்பதற்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தமது உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த புதிய திட்டம் வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 235 views
-
-
(எஸ்.ரூபன், கிரிசன்) நாய்க்கு நஞ்சூட்டி கொன்று விட்டு வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து சுமார் 10 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிகாலை வேளையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த நகைகள், மற்றும் கையடக்கத் தொலைபேசிகள், சிறுதொகைப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டுக்கு திருடச்சென்ற திருடர்கள் வீட்டிலிருந்த நாய்க்கு கருவா…
-
- 0 replies
- 287 views
-
-
வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை அத்துடன் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்வையிடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. வீட்டுக்கு வீடு சென்ற தமிழ் பெண்கள் பலவந்தாமக இராணுவத்தில் இணைத்துக் கொண்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனதன்னார்வ அடிப்படையில் பெண்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக இராணுவத்தில் இணைந்து கொள்ளப்பட்ட தமிழ் பெண்களை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறிய…
-
- 0 replies
- 368 views
-
-
பாடசாலை நிகழ்வுகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்படவேண்டும் – இராணுவத்தினர் மிரட்டல். சிறீலங்கா | ADMIN | DECEMBER 8, 2012 AT 13:03 முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தினர் அழைக்கப்படவேண்டும் என இராணுவத்தினர் பாடசாலை அதிபர்களுக்கு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவ்வாறு அழைத்துக்கொள்ளாத அதிபர்கள் மீது இராணுவத்தினர் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதற்கு இராணுவத்தினர் அழைக்கப்படவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு வந்த இராணுவத்தினர் இங்கே என்ன நடக்கிறது? ஏன் …
-
- 2 replies
- 349 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு இலங்கை ராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது இதுவரை மொத்தம் 10 மா…
-
- 0 replies
- 299 views
-
-
நாட்டில் கைதுகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள், நீதித்துறை சுதந்திரம், ஊடக சுதந்திரம், மீள்குடியேற்றம் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் கவலைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதுடன் நீதித்துறை சுதந்திரம் கடந்த 10 மாதங்களில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. என்று புத்திஜீவிகளுக்கான மனித உரிமைகள் (ஐஎவ்எச்ஆர்) அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித உரிமைகள் நிலவரம் சட்டத்தின் ஆட்சி, தனிநபர் சுதந்திரம் ஒரு முன்னோடியில்லாத நிலைமையில் சென்றுக்கொண்டிருக்கின்றது நீதித்துறை சுதந்திரமானது முதல் 10 மாதங்களில் ஒரு பெரும் பின்னடைவை சந…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி எலும்புத்துண்டுக்கு ஆசைபடும் ஒட்டுக்குழுவால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி புலனாய்வாளர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு சாகனத்தில் வந்த கும்பல் ஒன்றினால் உடைக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. திலீபன் நினைவாக இந்த தூபி அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சமாதான காலத்தில் நிறுவப்பட்டது. இன்று வரை இந்த தூவி எதுவித சேதங்களும் இன்றி காணப்பட்டு வந்துள்ளது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாத…
-
- 4 replies
- 510 views
-
-
கிளிநொச்சியில் இறுதியாக ஐ.நா அதிகாரியாகப் பணியாற்றிய பென்ஜமின் டிக்ஸ், Reflections of the rippling effects of conflict on a Sri Lankan family என்ற பெயரில், சிறிலங்கா போரின் தாக்கங்களை வெளிப்படுத்தும் ஓவிய நாவல் ஒன்றை வெளியிடவுள்ளார். அதுபற்றிய அவரது குறிப்பு. 2008 செப்ரெம்பர் 12ம் நாள், விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகமான கிளிநொச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று நான் கேட்கப்பட்டிருந்தேன். சிறிலங்கா இராணுவம் தெற்கே சில கி.மீ தொலைவில் இருந்து, ஏற்கனவே நகரின் மீது எறிகணைகளை வீசிய போது, ஐ.நா வளாகமும் தாக்கப்பட்டது. எனது ஐ.நா பணியகத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் போது, குண்டுச்சிதறல்கள் எமது முற்றத்தில்…
-
- 2 replies
- 533 views
-