ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143426 topics in this forum
-
[size=2] [size=4]இறுதிப் போரின் போது காணமற் போனவர்கள் தொடர்பான சுமார் 20 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் இயங்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.[/size][/size] [size=2] [size=4]கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையின் அலுவலகத்தில் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.[/size][/size] [size=2] [size=4]கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின…
-
- 0 replies
- 344 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. பராக் ஒபாமா வெற்றிபெற்றமையால், இலங்கைக்கு அமெரிக்கா கொடுத்து வரும் அழுத்தங்கள் மேலும் வலுவானதாக அமையுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவு செய்துள்ளனர்.பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விடயத்திலும், அனைத்து மக்களும் சு…
-
- 1 reply
- 270 views
-
-
[size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size][/size] மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்னர் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பர் என கூறப்பட்டபோதும் பலகைகளினால் செய்யப்பட்ட ஆயுதங்களையே புலிகள் கீழே வைத்தனர். இந்த 13ஆவது திருத்தமே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்று தேசிய சுந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். [size=2][size=4]தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் பெறுபேராக இந்தியாவின்…
-
- 0 replies
- 402 views
-
-
[size=3][size=4]ஐனாதிபதியின் பிறந்தநாளையொட்டி எதிர்வரும் 12ஆம் திகதியில் இருந்து 19 ஆம் திகதி வரை ஒவ்வவொரு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள கோவில்களில் வழிபாடுகளை ஏற்பாடு செய்யுமாறு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றி பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். 19 ஆம் திகதி ஒரு விசேட பூசை வழிபாட்டை மேற்கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=4]http://www.sarithamnews.com/?p=175[/size]
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வுகாண, தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! இலங்கையில் அரசியல் தீர்வுகாண அங்குள்ள தமிழர்களின் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். லண்டனில் இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் உலக தமிழர் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அழைப்பின் பேரில் தி.மு.க.சார்பில் அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க.வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற ஸ்டாலின் பேசும்போது, டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறோம். இலங்…
-
- 0 replies
- 430 views
-
-
[size=5]13ஆவது திருத்தம் இன்றேல் அமெரிக்காவே இருக்காது: அரசாங்கம்[/size] [size=4]மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 13ஆவது திருத்தமே கசக்கிறது அவ்வாறானதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இருக்காவிட்டால் அமெரிக்கா பல இராஜ்ஜியங்களாக பிரிந்திருக்கும் என அரசாங்கம் தெளிவுப்படுத்தியது.[/size] [size=4]ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து, மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெ…
-
- 3 replies
- 522 views
-
-
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தும் முடிவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. திவிநெகும சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால், அது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. முன்னதாக, உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தாலும், கருத்து வாக்கெடுப்பை நடத்தி திவநெகும சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால், திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. சிறிலங்க…
-
- 1 reply
- 364 views
-
-
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும், பாதுகாப்புச் செயலாளரும் இடம்பெயர் மக்களை சந்திக்க உள்ளனர் 08 நவம்பர் 2012 அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் இடம்பெயர் மக்களை சந்திக்க உள்ளனர். எதிர்வரும் நாட்களில் மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பிரதேச மக்களை பாதுகாப்புச் செயலாளரும், கர்தினாலும் சந்திக்க உள்ளனர். இடம்பெயர் மக்களின் சுக நலன்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. இடம்பெயர் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்காலிக இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மீளவும் தங்களது சொந்த கிராமங்களுக்கு…
-
- 0 replies
- 215 views
-
-
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேணையைக் கொண்டு வந்துள்ளது. சிறிலங்காவின் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சமர்ப்பித்துள்ள இந்தப் பிரேரணை நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை அமைக்கக் கோரும் வகையில் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகளை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது, சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை, 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகளை …
-
- 1 reply
- 479 views
-
-
வடமாகாண சபை தேர்தலை அனுமதியோம்: சம்பிக்க, விமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாது வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர். இன்று கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 13ஆவது திருத்தச் சட்டமானது நாட்டின் அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணானது. எனவே இதனைத் தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மையைப் பயன்படுத்தி காலதாமதம் இன்றி 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். (படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்) http://www.virakesari.lk/article/local.…
-
- 2 replies
- 545 views
-
-
எச்.ஐ.வி தொற்று நோய் 5 சதவீதத்தால் அதிகரிப்பு நாட்டில் எச்.ஐ.வி தொற்று நோயானது கடந்த வருடத்திலும் பார்க்க 5 சதவீதம் அதிகரித்துள்ளது என தெற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நிமல் எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த வருடத்தில் 129 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயிக்கு ஆளாகியிருந்தனர். ஆனால் இவ்வருடத்தில் முதல் 10 மாத காலப்பகுதியில் மாத்திரம் 140 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/local.php?vid=1499
-
- 1 reply
- 722 views
-
-
ஜே.வி.பிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோருக்கும் ஜனநாயக அரசியலுக்கு வர முடியுமாயின் கே.பிக்கு ஏன் வர முடியாது என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கே.பியிடம் இருந்து அரசாங்கம் பணத்தை பெற்றதாம், கறுப்பு பணம் நாட்டில் இருக்கின்றதாம் என மங்கள சமரவீர கூறுகிறார். முடிந்தால் அதனை உறுதிப்படுத்தி காட்டுங்கள். மனித உரிமைகளை மீறியதாக கூறுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அதனை செயற்படுத்தி காட்டுங்கள். போரை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில், பாதுகாப்புச் செ…
-
- 2 replies
- 416 views
-
-
ஜனவரி மாதமளவில் இலங்கை விஜயம் செய்வதாக நவநீதம் பிள்ளை, மு.க ஸ்டாலினிடம் உறுதிமொழி 07 நவம்பர் 2012 எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உறுதி மொழி வழங்கியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க முக்கிய உறுப்பினர்களான ஸ்டாலின் மற்றும் பாலு ஆகியோர் அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்து, நவனீதம்பிள்ளையை சந்தித்திருந்தனர். இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து நவனீதம்பிள்ளையிடம் திமுக உறுப்பினர்கள் விளக்கியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் நீடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பே…
-
- 2 replies
- 546 views
-
-
[size=5]இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளை வடக்கின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்? - சுமந்திரன் கேள்வி![/size] 'இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்வது ஏன்?' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு என்ன இலாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: 'அமைச்சர…
-
- 0 replies
- 657 views
-
-
தமிழ் மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து காணப்படுகின்றது - சுரேஷ் 07 நவம்பர் 2012 தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பது தொடர்ந்தும் தாமதமாகி வருவதாலும், நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமைகளில் உக்கிரமடைந்து வரும் பிரச்சினைகள் காரணமாக நாளையோ, நாளை மறுதினமே, 5 வருடங்களிலோ அல்லது 10 வருடங்களின் பின்னரோ, அந்த மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கம், தாம் கூறுவது அனைத்துமே சட்டம் என நினைத்து செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்க…
-
- 0 replies
- 558 views
-
-
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது! [Wednesday, 2012-11-07 20:11:09] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நொச்சிமுனை ஆறாம்குறிச்சி பகுதியில் வைத்து குறித்த காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக அவர் தலைமறைவாகியிருந்துள்ளார். பால்குடியன் அல்லது கிளியரசன் என்ற இயக்கப் பெய…
-
- 0 replies
- 631 views
-
-
[size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size] [size=4]மக்களின் ஆணையை கொள்ளையடித்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13ஆவது திருத்தம் உயர்நீதிமன்றத்தின் முரண்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தினால் 62,000 பேர் பலியெடுக்கப்பட்டனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையினால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சமாதானமாக பேசு…
-
- 0 replies
- 477 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி தொலைபேசியில் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு அருகாமையிலுள்ள தேநீர்க் கடையொன்றில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தெரிய…
-
- 0 replies
- 565 views
-
-
முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்த முயன்ற சிறிலங்கா படையினனை தடுத்த சிறுமியின் தாயார் கொடுரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அம்பலவன் பொக்கணை என்னும் இடத்திலேயே சிறிலங்கா படையின்; கொலை வேறியாட்டம் அரங்கேறியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. அம்பலவன் பொக்கணைப் பகுதியில் ஆண் துணையின்றி தாயாரும் அவரது 15 வயது மகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள ஆலடிப் பிள்ளையார் ஆலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா படை முகாமில் உள்ள 2 படையினர் வந்துள்ளனர். மேற்படி படையினர் அந்த வீட்டில் வசிக்கும் 15 வயதுச் சிறும…
-
- 0 replies
- 433 views
-
-
ஈழத் தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களைப் பற்றி மனு கொடுப்பதற்கே சிரமப்படத்தான் வேண்டி இருக்கிறது. சென்னையில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுத் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் அவையில் கொடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்றபோது அமெரிக்காவே புயலில் சிக்கி இருந்தது! தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு எனப்படும் ‘டெசோ’ அமைப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் உருவாக்கினார். அது தொடர்பாக சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்தத் தீர்மானத்தின் நகலை தி.மு.க. எம்.பி-க்கள் அனைவரும் ஒருசேரப் போய்க் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, ‘ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தத் தீர்மானத்தைக் கொடுப்போம்’ என்றும் கருணாநிதி அறிவித்தார். இத…
-
- 0 replies
- 377 views
-
-
புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதை போன்று தான் கே.பிக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது: கருணா விளக்கம் [Wednesday, 2012-11-07 09:20:51] குமரன் பத்மநாதனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் 12000 போராளிகள் சரணடைந்தார்கள்.இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதுடன், பலருக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குமரன் பத்மநாதனுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து ஆயுதங்களை வழங்கியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரத்திற்கு நே…
-
- 1 reply
- 336 views
-
-
'பிரபாகரனின் மகனைக் கொன்றது தவறு' By General 2012-11-07 10:30:02 இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுசார்பற்ற நிறுவனங்களைத் தடை செய்யும் அரசாங்கம் கே.பி.க்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். “ஆசியாவின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கையில் இன்று அரசியல் மோகம் பிடித்தவர்களால் நீதியின் கிரீட…
-
- 2 replies
- 930 views
-
-
13 ஆவது திருத்தம் நேரக்குண்டு: விமல் புதன்கிழமை, 07 நவம்பர் 2012 11:25 0 COMMENTS 'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதனை தொடரந்து முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தானது. அது ஒரு நேரக்குண்டு' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52127-13-.html
-
- 0 replies
- 375 views
-
-
தமிழீழத்தில் இராணுவப் புலனாய்வாளர் எனக்கூறி மக்களை அச்சுறுத்தும் பேர்வழிகள் November 7, 2012, 7:22 am[views: 108] கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வாளர்களெனத் தெரிவிக்கும் சிலர் விவரங்களைச் சேகரித்து வருவதால் மக்களிடையே பதற்றமானதொரு சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டாவளை பிரதேசத்திலுள்ள புன்னைநீராவி, விசுவமடு, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை ஆகிய இடங்களிலுள்ள குறிப்பிட்ட சில வீடுகளுக்கு கடந்த மூன்று நாள்களாகச் சென்று வரும் சிலர் இராணுவப் புலனாய்வாளர்கள் எனக் கூறிக்கொண்டு அந்தப் பகுதிகளிலுள்ள இளம் குடும்பத்தர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருகின்றனர். அத்துடன் கடந்த போரின் போது உடல் அவயவங்களை இழந…
-
- 0 replies
- 438 views
-
-
மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன – ஐரோப்பிய ஒன்றியம் 07 நவம்பர் 2012 மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை குறித்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றுவது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதவான் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்…
-
- 0 replies
- 306 views
-