ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
31 Oct, 2025 | 04:47 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப ந…
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு! இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது. புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். எனவே பயணிகள் அக்டோபர் 15 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ht…
-
- 0 replies
- 93 views
-
-
31 Oct, 2025 | 03:36 PM “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர…
-
- 0 replies
- 49 views
- 1 follower
-
-
Published By: Priyatharshan 31 Oct, 2025 | 03:52 PM ( வீ.பிரியதர்சன் ) வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நட…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்க…
-
- 0 replies
- 108 views
-
-
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,…
-
- 0 replies
- 102 views
-
-
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மா…
-
- 0 replies
- 93 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்…
-
- 0 replies
- 79 views
-
-
தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாத…
-
- 0 replies
- 106 views
-
-
30 Oct, 2025 | 05:10 PM இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதி…
-
-
- 14 replies
- 577 views
- 2 followers
-
-
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது! adminOctober 31, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள் , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/…
-
- 0 replies
- 45 views
-
-
2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது! இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும். மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக…
-
- 0 replies
- 74 views
-
-
30 Oct, 2025 | 05:06 PM போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும். https://www.virakesari.lk/article/229074
-
-
- 1 reply
- 147 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு! இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக,…
-
- 1 reply
- 170 views
-
-
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம். அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும்…
-
- 0 replies
- 143 views
-
-
30 Oct, 2025 | 05:52 PM ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை நீதிபதிகள் பெயரிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார். விரைவில் அந்தப் பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்க…
-
- 0 replies
- 104 views
-
-
30 Oct, 2025 | 05:07 PM ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றைய தினம் (30) குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 94 views
-
-
NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..? Thursday, October 30, 2025 கட்டுரை - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஆக்டொபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000 முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் 1990 ஜூலை 12 அன்று குருக்கள்மடம் ஊடாக சென்ற 72 ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது, 1990 ஆகஸ்ட் 3 அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147 பேரை படுகொலை செய்தது , 1990 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி காலை வரை ஏறாவூர் கிரா…
-
- 0 replies
- 83 views
-
-
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உய…
-
- 2 replies
- 204 views
-
-
29 Oct, 2025 | 06:48 PM (நா.தனுஜா) சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து 'புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது' எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 1949ஆம் ஆண்டு மக்கள் சீனக்குடியரசு ஸ்த…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்…
-
- 2 replies
- 169 views
-
-
சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதா…
-
- 0 replies
- 95 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி! அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்…
-
- 0 replies
- 79 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை சந்தித்து கலந்துரையாடினார், நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்…
-
- 0 replies
- 92 views
-
-
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது adminOctober 29, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் ,…
-
- 0 replies
- 87 views
-