ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி! புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) …
-
- 0 replies
- 130 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள…
-
- 2 replies
- 265 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரக…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
28 MAR, 2024 | 09:33 PM இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை (28) காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் . இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார். குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரி…
-
-
- 32 replies
- 2.9k views
- 2 followers
-
-
Simrith / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0 - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத…
-
- 1 reply
- 369 views
-
-
28 MAR, 2024 | 09:36 PM யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையா…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்பட…
-
- 0 replies
- 332 views
-
-
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 297 views
-
-
ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள் (செல்வன்) ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு போராடத் தயாராகும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,…
-
- 1 reply
- 597 views
- 1 follower
-
-
திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் Vhg மார்ச் 28, 2024 திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4…
-
- 1 reply
- 476 views
-
-
தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும். March 26, 2024 ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம். இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ்பாறூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. இலங்கையில் வைத்தியர்களுக்கு போதுமான ஊதியம் பாதுகாப்பின்மை காரணமாக பலர் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் . இந்த சூழலில் திருக்கோவிலில் கடந்த 11ஆம் திகதி இடம…
-
- 2 replies
- 619 views
- 1 follower
-
-
முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு March 28, 2024 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும்…
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் March 28, 2024 உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்க…
-
- 0 replies
- 611 views
-
-
28 MAR, 2024 | 09:56 AM வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (மார்ச் 27) திறந்து வைக்கப்படவுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள் மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டது , அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பி. விமலசேன தெரிவித்துள்ளார். இதற்காக ஜேர்மன் அரசாங்கம் இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் வைத்தி…
-
- 4 replies
- 592 views
- 1 follower
-
-
27 MAR, 2024 | 08:59 PM வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மருத்து…
-
-
- 2 replies
- 507 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3. 27 MAR, 2024 | 03:25 PM முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை (27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இராணுவ படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் இராணுவ தளபதியை தற்…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
27 MAR, 2024 | 03:26 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொ…
-
- 1 reply
- 386 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 MAR, 2024 | 08:26 PM இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/179779
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த பிர…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. Fishermen Care என்ற தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
27 MAR, 2024 | 10:44 AM பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப் பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்பட்ட பல உணவுகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்கள் மருத்துவ பதிவுகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179798
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
27 MAR, 2024 | 11:01 AM இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட "எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதியை, வைத்தியசாலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட கல்லீரல் சத்திர சிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும். இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாட்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
22 MAR, 2024 | 07:16 AM கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk
-
-
- 47 replies
- 9.7k views
-