ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142811 topics in this forum
-
Published By: VISHNU 23 FEB, 2024 | 12:51 AM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, கொழும்பில் (India House) புதன்கிழமை (21) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட…
-
-
- 4 replies
- 759 views
- 1 follower
-
-
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் - யாழில் சம்பவம் 22 FEB, 2024 | 11:58 AM வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
22 FEB, 2024 | 11:58 AM யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதனால் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்து…
-
-
- 6 replies
- 765 views
-
-
ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் PrashahiniFebruary 22, 2024 ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இது…
-
- 0 replies
- 367 views
-
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று! ஆதவன்) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது. அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 326 views
-
-
21 FEB, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) சட்டமூலம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் புதிய திருத்த யோசனைகளை முன்வைப்பது சட்ட உருவாக்க வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது,ஆகவே இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சட்டமொன்று இயற்றப்படும் போது அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட வர…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். ஆளுநர் நியமனம் நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது. ஜனாத…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை! ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1370800
-
- 0 replies
- 230 views
-
-
நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரீம் வகைகள் பெண்களின் தோலைப் பளபளக்க வைப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இ…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம். அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்…
-
- 6 replies
- 576 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 FEB, 2024 | 05:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்…
-
-
- 11 replies
- 936 views
- 1 follower
-
-
21 FEB, 2024 | 07:39 PM 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் க…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரை…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுத…
-
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை- இந்திய கடல் போக்குவரத்தை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்…
-
- 0 replies
- 287 views
-
-
21 FEB, 2024 | 12:45 PM கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இத…
-
- 1 reply
- 486 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 12:26 PM உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர். இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது ந…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 11:24 AM தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான வரைப்படத்தை உருவாக்க இந்த குழு சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் என தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளின் அதிகரித்துள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சிக…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
21 FEB, 2024 | 01:13 PM மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில்…
-
- 3 replies
- 433 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 4 மணி நேரம் முன் யாழில் விபத்து; பல்கலை மாணவன் சாவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் - நீா்வேலியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ஆம் வருட கலைப்பிாிவு மாணவன் உயிாிழந்துள்ளாா். விபத்தில் மானிப்பாய் - வேம்படியைச் சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே உயிாிழந்துள்ளாா். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். சம…
-
- 2 replies
- 329 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 09:28 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம…
-
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
20 FEB, 2024 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை எந்தளவுக்கு நியாயமானது. சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்க…
-
- 9 replies
- 700 views
- 1 follower
-