ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
28 APR, 2024 | 12:12 PM சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
28 APR, 2024 | 01:29 PM உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார். தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 34) ஆவார். உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இம்மரணம் தொடர்பில் நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதனையடுத…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்று…
-
-
- 3 replies
- 427 views
- 1 follower
-
-
ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்…
-
- 2 replies
- 432 views
- 1 follower
-
-
நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதி…
-
- 0 replies
- 297 views
-
-
இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் …
-
-
- 11 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பல்வேறு வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில் கிழக்கை மீட்பவர்கள் என்று கூறுபவர்கள் வாயளவில் பேசி அரசியலை செய்து தங்களுடைய பைகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று (26.04.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பேரினவாதம் மேலும் தெரிவிக்கையில், “75 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது (ITAK) அசைக்க முடியாத சக்தியாக நிற்கின்றது. தமிழரசு கட்சியை அழிப்பதற்காக கடந்த காலத்தில் பேரின…
-
- 0 replies
- 252 views
-
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1380064
-
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் மறுசீரமைப்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
27 APR, 2024 | 01:51 PM காணாணல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை இன்று சனிக்கிழமை (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது . கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இ…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
27 APR, 2024 | 12:41 PM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஊடகவியலாளரான…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
நாட்டின் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோய் தொற்றா நோயாகக் காணப்பட்ட போதிலும், பரம்பரை ரீதியாக, அல்லது நீண்ட கால அடிப்படையில் இந்த நோய் உருவாகலாம். இலகுவான மற்றும் சிக்கல்கள் அற்ற மருந்துகளின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டால், ஆஸ்துமா நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போகின…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
27 APR, 2024 | 11:36 AM சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் . ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு காலத்தில் தே…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா April 27, 2024 ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது…
-
- 0 replies
- 161 views
-
-
வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன் April 27, 2024 வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் ப…
-
- 0 replies
- 194 views
-
-
27 APR, 2024 | 10:21 AM வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அ…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இ…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
26 APR, 2024 | 07:19 PM கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டடத்தை நிர்மாணித்துத…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
26 APR, 2024 | 05:13 PM சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் …
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது. ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ர…
-
- 0 replies
- 243 views
-
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்! தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்…
-
-
- 2 replies
- 716 views
-
-
26 APR, 2024 | 03:25 PM உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு …
-
- 1 reply
- 473 views
- 1 follower
-
-
26 APR, 2024 | 01:25 PM கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர். பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி தி…
-
-
- 1 reply
- 412 views
- 1 follower
-