ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
நான்கு புனர்வாழ்வு நிலையங்கள் மூடப்படமாட்டா படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு முடிவடையும் தறுவாயில் உள்ளதாயினும் நான்கு புனர்வாழ்வு நிலையங்களை இன்னும் சில காலங்களுக்கு வைத்திருக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. நீதிமன்றங்கள் மூலம் புனர்வாழ்வளிக்குமாறு அனுப்பப்படும் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக இந்த நிலையங்களை வைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 11,000 தமிழீழ விடுதலைப் புலிகள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 400 பேர் மாத்திரமே அவர்களின் குடும்பங்களுடன் இணையாது உள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதவிடத்து, …
-
- 0 replies
- 499 views
-
-
ஈழத்தமிழர்களின் உணர்வினை கவனத்தில் எடுத்து, எமது கொள்கையிலும் முன்னுரிமை கொடுத்துள்ளோம் - கிருஷ்ணா தமிழ் பேசும் சிறுபான்மை சிறிலங்காத் தமிழர்களிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளிற்கு இறுதி அரசியற் தீர்வொன்று பெறப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். "சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதென்பது சிறிலங்காத் தீவு மீது கொண்டுள்ள நலன் சார்ந்ததாகும்" என திங்களன்று சிறிலங்காவிற்கான தனது நான்கு நாள் சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முதல்நாள் ஞாயிறன்று கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார். சிற…
-
- 1 reply
- 683 views
-
-
யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-16 10:13:47| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியி ட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான துறைகளில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முதலீடு செய்து அதன்மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் பெறப்படும் இலாபம் புலிகளின் நிதிக் கட்டமைப்பைச் சென்றடைவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான வர்த்தகர் ஒருவருக்கு புலிகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாட்டு தூதுவர்களுக்கு எச்சரிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்களைக் கொண்டு முத்திரைகள் வெளியிட அண்மையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. அதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் பிரிவினரின் செயற்பாடுகள் புலப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது. பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விடுதலைப் புலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பாக அணைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நேற்று 100 பக்கங்களில் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் முன்னுரையில், " இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைகளை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது. …
-
- 0 replies
- 387 views
-
-
சீனாவின் நிதி மற்றும் கட்டுமான உதவியுடன் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தாமரைத் தடாக மகிந்த ராஜபக்ச கலையரங்கு சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கலாசார அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவின் நிதியுதவியுடன் கலாசார அமைச்சினால் கட்டப்பட்ட இந்த கலையரங்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரங்கின் நிர்வாகத்தை சிறிலங்கா இராணுவமே மேற்கொண்டு வருகிறது. இந்தக் கலையரங்கின் பிரதான அரங்கில் 1288 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு 8 இலட்சம் ரூபா அறிவிடப்படவுள்ளது. http://www.puthinapp...?20120116105379
-
- 0 replies
- 645 views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறு அறிக்கை தொடர்பிலான தங்களது பதிலறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிக்கையின் தொகுப்புகள் : http://naathamnews.com/2012/01/15/llrc-tn/
-
- 2 replies
- 839 views
-
-
வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் அநாதரவான 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்னயின் கொடூரமான போரில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவர்களின் தொகை அதிகரித்துள்ளது. வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை என சிறுவர் பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகூடிய சிறுவர் இல்லங்கள் இயங்கும் பிரதேசமாகவும் வடபகுதியே உள்ளது. 91 சிறுவர் இல்லங்கள் இங்கு இயங்குகின்றன. முறைப்படியான அனுமதி பெற்றுப் பதிவு செய்யப்படாத 44 இல்லங்களும் காணப்படுகின்றன. சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 729 பேர் தாய், தந்தை…
-
- 1 reply
- 656 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு: தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனம் இலங்கைப் போருக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது. போர்க்கால குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் முயற்சியாகவே இந்த விசாரணை அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது. எனவே, இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டுமானால் சர்வதேச மட்டத்தில…
-
- 1 reply
- 722 views
-
-
பொதுசன உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பிலான விடயங்கள் முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார். அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ள களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலராலும் அண்மையில் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. களனி தொகுதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கப்பம் கோரல் அச்சுறுத்தல் உள்ளிட்ட தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து அந்த முறைப்பாட்டின் மூலம் பிரதேச சபை உறுப்பினர்கள…
-
- 4 replies
- 743 views
-
-
'தைப்பொங்கல் தினத்தன்று கைதிகளைப் பார்க்க அனுமதியில்லை' இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தைப்பொங்கல் பண்டிகையன்று சென்று பார்வையிட சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க வில்லை என கைதிகளின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். பண்டிகைத் தினங்களில் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு வழமையாக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், இம்முறைத் தைப்பொங்கல் தினத்தன்று இந்த அனுமதி மறுக்கப்பட்டதனால், தாங்கள் கொழும்பு போன்ற தூர இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு சென்று அலைய நேரிட்டதாகவும் வீணாகப் பணம் செலவு செய்ய வேண்டியேற்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கொழும்பில் உள்ள மகசின் சிறைச்சாலைக்கு மாத்திரம் நாட்டின் வடக்கு க…
-
- 1 reply
- 347 views
-
-
மகாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோராவர். இவர்களுள் பீமனுடைய மகனான கடோத்கஜன் என்ற நாற்பது அடி உயரம் கொண்டவன் உன்மையில் இருந்திருக்கின்றான் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? நம்பாவிட்டால் இந்தப் பதிவைப் படித்தபிறகு நிச்சயம் நம்புவீர்கள். 40 அடி என்றால் மொத்தமாக 12 மீற்றர் என வைத்துக்கொள்ளலாம். நினைத்துப்பாருங்கள் அவன் எவ்வளவு உயரமாக இருந்திருப்பான் என்று..! இந் நிலையில் பீமனுடைய மகனான கடோத்கஜனுடைய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் இந்தியாவின் சிறிய பாலைவனப்பிரதேசம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இங்கு செல்வதற்கு வெளிஆட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த எலும்புக்கூடுகள் …
-
- 4 replies
- 5.5k views
-
-
வலிகாமம் வடக்கில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கிறது:- குளோபல் தமிழச் செய்தியாளர்:- 15 ஜனவரி 2012 மக்கள் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கின்றது. வலி வடக்கு சேந்தாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அப்பகுதி மக்களால் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்திருந்த பற்றைகள் வெட்டி தீயூட்டப்பட்டிருந்தது. அதுவரை இவற்றை பார்த்துக் கொண்டிருந்த கடற்படையினர் திடீரென அப்பகுதிக்கு சென்று அங்கு கூடியிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்று அதிகாலை முதல் சேந்தாங்குளம் பகுதியில் கடற்படையினரும் வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதி…
-
- 2 replies
- 832 views
-
-
கிருஷ்ணா இன்று வருகை – கிளிநொச்சி யாழ்ப்பாணத்திற்கு புதனன்று விஜயம்! நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (16) திங்கட்கிழமை இலங்கை வருகிறார். இலங்கை வரும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதுதவிர, இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்க் கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, எதிர்வர…
-
- 2 replies
- 572 views
-
-
தமிழர் விடுதலை குரல் தை பொங்கலை கொண்டாடும் தமிழா தை பொங்கல் எப்படி வந்தது என்பதினை தெரிந்து கொள் தமிழா! __________________________________________ தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘ இன்று ஒடுக பட்டு இருக்கும் மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும். முற் காலத்தில் உழவர்களுக்கு ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆதி தமிழரில் இருந்து வந்ததுதான் தை பொங்கல் அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்க…
-
- 5 replies
- 4.9k views
-
-
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் காலாவதியாகி விட்டது. எமது சமூகம் தற்போது மாற்றமடைந்து வருகின்றது. நெருக்கமாக இருந்த சமூகக் கட்டமைப்பு உடைக்கப்பட்டதனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகப் பலராலும் கருத்துக் கூறப்பட்டு வருகின்றது. அதாவது இளவயதுக் கர்ப்பம், இளைஞர்களின் மதுபானப் பாவனை, ரவுடித்தனம் என்பன யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் அதிஉச்ச நிலை கண்டுள்ளது. அதேநேரம் இளவயதுத் திருமணங்கள். இத் திருமணங்களினால் குழந்தைகளுடன் நடுத்தெருவில் விடப்படும் இளம் குடும்பப் பெண்கள் என நீண்டு செல்கின்றது எமது கலாசாரத்தின் சோகம். தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் நாதியற்றவர்களாக நடுவீதியில் இருக்கின்றது தமிழினம். இவ்வாறான சம்பவங்களை விட யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கலாசாரம் உரு…
-
- 23 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளா…
-
- 4 replies
- 808 views
-
-
போர்க் குற்றங்களோடு இராஜதந்திர நகர்வுகளையும் செய்யவேண்டும் – வவுனியா தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் மாவை! போர்க் குற்றங்களை முன்னிலைப்படுத்தி செயற்றட்டால் மட்டும் அரசியல் தீர்வு கிடைத்து விடும் என எண்ணி விட முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இதற்காக வேண்டி பல்வேறு வகையான இராஜதந்திர நகர்வுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழரசு கட்சியின் வன்னி பிரதேச கிளை கூட்டம் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,ஜனநாயக அரசாக சொல்லப்படும் அரசாங்கமானது போர…
-
- 2 replies
- 503 views
-
-
தமிழ்த் தேசமும் சர்வதேசமும் சந்திக்க வேண்டிய பொதுப் புள்ளி!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசத்தை சிங்கள பௌத்த தேசமாக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசு செயற்படுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ.நா சபையின் 1948 ஆம் ஆண்டு பிரகடனத்தின் இரண்டாவது சரத்து பின்வருமாறு கூறுகின்றது. ஒரு தேசம், ஒரு இனம், சாதி, மதக்குழு என்பவற்றை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செயற்படுதல் இனப்படுகொலையாகும் எனக் கூறுகின்றது. அதாவது மேற் குறிப்பிட்ட தரப்புக்களை : கொலை செய்தல், உட…
-
- 1 reply
- 633 views
-
-
வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவம், கடற்படை கூட்டு நடவடிக்கை! மக்கள் பதட்டம்! வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்று காலை பெருமளவு இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டு சோதனைக் கெடுபிடி மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேந்தாங்குளத்தை அண்டிபகுதியிலேயே இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டிருப்பதாகவும் நேற்று வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் உட்பட்டவர்கள் மீதான தாக்குலை அடுத்து இந்நடவடிகையில் படைத்தரப்பு ஈடுபட்டிருப்பதால் தமக்கும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தாம் அஞ்சுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். குறித்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் அனைத…
-
- 0 replies
- 595 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை பேச்சு நடக்கும்; அதனை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். நாளை இலங்கை வரும் கிருஷ்ணாவின் நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இது குறித்துக் கேட்டபோது, “எம்முடனான சந்திப்பை இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது” என்றார் சுரேஷ். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அல்லது வெளி இடம் ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிவித்த அவர், நிகழ்ச்சி நிரலில் இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படாததற்கான காரணம் தனக்குத் தெரியாது என்றார். கிருஷ்ணாவுடனான சந்த…
-
- 1 reply
- 560 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எசச்ரிக்கை விடுத்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறிப்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்செயற்படும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீளவும், முன்னாள் போராளிகளை கைது செய்யநேரிடும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்விததடையும் கிடையாது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் …
-
- 1 reply
- 834 views
-
-
தன் மகளை விற்று அரசியல் பிளைப்பு நடத்தும் அமைச்சர் கெஹெலிய! ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் கெஹெலிய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர் மௌனம் காப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்ட குறித்த அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது மனக் குறையைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சரின் தலையைத் தடவிய ஜனாதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
தைப்பொங்கல் திருநாளில் உறுதி செய்து கொள்வோம் தை மகளின் பிறப்பு இன்று. கூடவே பொங்கல் திருநாளும். சூரிய பகவான் பூமியின் கண் விளைவிக் கின்ற அத்தனை வேளாண் செய்கைக்கும் உறுதுணையாக இருப்பதால்,கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக தைப்பொங்கல் அமைகின்றது.பகலவனுக்காக பொங்கல் செய்தாலும் அதனை தைப் பொங்கல் என்று அழைப்பதே மரபு. மாதங்களில் இனிமையான-உழுது பயிரிட்ட விவசாயிகள் விளை வைப் பெறுகின்ற புனித மாதமாக தை இருப்பதால் சூரியப் பொங் கலை தைப்பொங்கல் என்று கூறிக் கொண்டோம். தைப்பொங்கல், சூரியப் பொங்கல் என்றெல் லாம் கூறினாலும், தமிழ்ப்பொங்கல் என்று கூறுவதே பொருத்துடையது. சூரியனைக் கண்கண்ட தெய்வமாக வழிபடும் தமிழ் மக்கள் சூரிய பகவானின் இயங்கு சக்தியை உணர்ந்து இயற்கைக்கு நன…
-
- 0 replies
- 505 views
-
-
மேற்கு ஆபிரிக்க நாடுகளை வசப்படுத்த இலங்கை முயற்சி ஜனாதிபதியின் கடிதத்துடன் பீரிஸ் சுற்றுப் பயணம் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடரில் அரபு நாடுகள் பலவும் இலங்கை அரசைக் கைவிடலாம் எனச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அர சாங்கம் தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை நாடிச் சென் றுள்ளது. இதனொரு அங் கமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புக்கமைய வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு அவசர அரசியல் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ‘ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கதொரு உறவுள்ளது’ என்ற வார்த்தையுடன், செனகல் நாட்டில் முதலில் கால் பதித்த வெளி விவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு ஜ…
-
- 0 replies
- 1k views
-