ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அரச ஊடகங்களில் எனது குடும்பம் தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்பில் அதிகளவான பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடக அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாமும், தமது தாயாரும், சகோதரர்களும் அண்மையில் இவ்வாறு ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தி ஒன்றை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளை வரிசைக் கிரமமாக அரசாங்க ஊடகமொன்றில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 942 views
-
-
ஒரு வருடத்திற்கு முன்னர் பிரித்தானியாவில் கிங்ஸ்ரன் எனும் இடத்தில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.பிரித்தானியாவில் CCTV எனப்படும் பாதுகாப்பு கமராவில் பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த போது அப்பிள்ளையின் தந்தையான தர்மசீலனை நான்கு நபர்கள் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த நால்வருக்குமே ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் தனது சொந்த வர்த்தக நிலையில் வைத்து 48 வயதுடைய சுப்பையா தர்மசீலன் என்ற நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ம் திகதி நால்வர் கொண்ட குழுவால் அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யப்பட்டார்…
-
- 0 replies
- 790 views
-
-
வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்கூறி சர்வதேச நாடுகளால் ஏட்டிக்கு பேட்டியாக கொடுக்கப்படும் நிதியுதவிகளில் 70 வீதமானவை கொழும்பையும் அதனையண்டிய நகரங்களையும் மேம்படுத்தவே பாவிக்கப்படுவதாக சிங்கள நடுநிலை ஊடகமொன்று தனது ஆசிரியர் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கலையறங்கு இம்மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட உள்ளது. சீன அரசாங்த்தின் 300 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம் திறந்து வைக்கப்படும் அன்றைய தினம் கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பொது நூலக வீதிக்கு நெலும் பொக்குன வீதி என பெயரிடப்படவும் உள்ளது. http://www.seithy.co...&lang…
-
- 0 replies
- 842 views
-
-
தாய்நாட்டுக்காக தனது உயிரைக்கூட தியாகம்செய்யும் குணவியல்பு கொண்ட எனது கணவர், தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தாய்நாட்டுக்கோ அல்லது இராணுவத்துக்கோ ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டார்.சர்வதேசத்திற்குச் சென்றாலும் தாய்நாட்டுக்காகச் செல்வாரே தவிர, தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவர் அங்கு செல்லமாட்டார். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொன்சேகாவை விடுதலை செய்தால், இலங்கை யில் யுத்தக்குற்றம் இடம்பெற் றது என்று சர்வதேசத்திடம் கூறி ஒரு சாட்சியாக அவர் மாறுவார் என அனோமா பொன்சேகாவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக் குப் பதிலளிக்கும்போத…
-
- 0 replies
- 631 views
-
-
பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு' பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு …
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறைக் கைதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறீலங்காவிற்கான தலைமை அதிகாரி வேண்டுகோளை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுவதன் காரணமாக கைதிகளும், தடுத்து வைக்கப்பட்டிருப்போரும் அசௌகரியங்களுக்கு ஆளாக நேரிடுவதால் அவர்களுக்கு போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இடவசதியும், போதிய காற்றோட்டமும் கொண்ட அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்திய செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரி, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் சிறீலங்கா அரசாங்கத்தோடு இணைந்…
-
- 1 reply
- 611 views
-
-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படாத பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அடுத்த ஆண்டு முற்பகுதியில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுவதாக உதவி அரசாங்க அதிபர் பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இன்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. நாகர்கோவில் கிழக்கு, நாகர் கோவில் தெற்கு ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளன. மருதங்கேணிக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதை மட்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கட்டைக்காடு, மருதங்கேணி ஆகிய பகு…
-
- 1 reply
- 477 views
-
-
மரக்கறி மற்றும் பழங்கள் ஏற்றிச் செல்லும்போது அவற்றிக்கு பிளாஸ்டிக் பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும்; என்ற அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தம்புள்ளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரிகள் மீது சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து தம்புள்ளை நகரில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொலிஸாரை நோக்கி கற்களை வீசி எரிந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன. கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தினால் தம்புள்ளை வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தம்புளை நகர் போர்க்களம் போன…
-
- 2 replies
- 2.4k views
-
-
தீபாவளித் திருநாள் நரகாசுரனை ஆரியன் அழித்த நாளை உலகத் தமிழர் எல்லாருமே போற்றி கொண்டாடும் ஒரு பெருநாள். தமிழர் போராட்டத்தை அழித்ததாக சிங்களம் கொக்கரித்து நிற்கும் வேளை இந்த வருடத்து தமிழர் தீபத்திருநாளை சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து கொண்டாடி விடுவதென புலம் பெயர் நாடுகளில் சில தன்மானத் தமிழர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி யெர்மனியிலும் இங்கிலாந்திலும் இந்த நிகழ்வானது பெருவெற்றியாக முடிந்திருக்கின்றது. இங்கிலாந்தில் இலங்கைத் தூதரகத்தில் நடந்த விழாவிற்கு தீரத் தமிழர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமென நானும் புகுந்திருந்தேன். வாசலில் வரவேற்றது கோலம். அது மாக் கோலமா பூக்கோலமா என அடையாளமே தெரியாதளவிற்கு மிகப்பெரும் அலங்கோலம் ஒன்றினை …
-
- 13 replies
- 3.1k views
-
-
தமிழ் அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதை அவுஸ்ரேலிய உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதேவேளை, மற்றொரு தமிழ் அகதியை இன்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எமில் என்ற தமிழ் அகதியின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து நேற்று சிறலங்காவுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்படவிருந்தார். சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு கடத்துவதை இடைநிறுத்தக் கோரி சட்டவாளர்கள் சமர்ப்பித்த அவசர மனுவொன்றை அடுத்தே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் இரு தமிழ் அகதிகளினது நாடு கடத்தலுக்கு எதிரான சமஸ்டி மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் நிர…
-
- 0 replies
- 740 views
-
-
சீன படைத்தரப்பின் உயர்மட்ட குழு சிறிலங்கா படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடன் சந்திப்பு! இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன படைத்தரப்பின் உயர்மட்டக் குழு சிறிலங்காவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சிறிலங்காவின் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சீன படைத்தரப்பின் அதிகாரிகளுக்கான பிரதித் தலைவர் ஜெனரல் Ma Xiaotian தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழு கலந்து கொண்டுள்ளது. சிறிலங்காவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையிலேயே சீனப் படைத்தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள் அவரைச் சந்தித்துள்ளனர். சிறிலங்கா…
-
- 0 replies
- 474 views
-
-
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது பெய்ஜிங், டிச.12 (டிஎன்எஸ்) சீனா தனது கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய வசதிக்காக தனது முதல் ராணுவ தளத்தை இந்திய பெருங்கடலில் ஷெசல்ஸ் தீவில் அமைக்கபோவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது. இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அ…
-
- 9 replies
- 1.9k views
-
-
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்: அமைச்சர் டக்ளஸ் வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளரொருவர் அமைச்சர் டக்ளஸிடம் வினவியதற்கு, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என கூறினார். இந்த முதலமைச்சர் பதவியின் ஊடாக தமிழ் சமூகத்திற்கு இன்னும் பல சேவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
திரு பிறயன் ரொப் (Brian Topp) திரு யக் லேய்ட்டன் (Jack Layton) இயற்கை எய்தியதை அடுத்து புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைமைக்குப் போட்டியிடும் முன்னணித் தலைவர்களில் ஒருவராவர். கடந்த காலத்தில் இவரே புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் தந்திரியாகச் செயல்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அய்யன்னாவின் உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் விடுக்கப்பட்ட 64 ஆவது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி அவர் விடுத்துள்ள ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் இதுவாகும். அய்யன்னாவின் உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் விடுக்கப்பட்ட 64 ஆவது ஆண்டு நிறைவு நாளில் மனிதர்களது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முறைகேடுகள் இன்னமும் பயங்கர பொது இயல்பாக இருக்கின்றன. கனடாவில் வாழும் நாங்கள் உலகுமுழுதும் அச…
-
- 0 replies
- 476 views
-
-
-
- 0 replies
- 671 views
-
-
தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன – சிறிதரன் 12 டிசம்பர் 2011 இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கணப்படகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். வடக்கின் சில பகுதில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ரீதியான சான்றுகள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்…
-
- 9 replies
- 2k views
-
-
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் அரசியல் தீர்வு பற்றிய எந்த சமிக்ஞையையும் காண முடியவில்லை என்று பிரித்தானிய நாளேடான ‘இன்டிபென்டன்ட்‘டில் இன்று வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில், 1995 தொடக்கம் போரின் இறுதிக்கட்டம் வரை- போர் சாராத பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியதாக ‘இன்டிபென்டன்ட்‘ நாளேடு கூறியுள்ளது. தனது பெயரையோ, செவ்வி வழங்கிய இடத்தையோ குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் வகித்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார். “அரசியல் தீர்…
-
- 4 replies
- 602 views
-
-
“உயிரைக் கொடுத்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும்”, “வித்துடலை விதைக்க வேண்டும்” , “7ஆம் அறிவு பார்;த்து வீர ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்”, “தாகம் வடியாது – புதிய பிரபாகரன் பிறப்பான்” என்ற குரல்களை இன்றும் கேட்க நேரும் துர்ப்பாக்கியத்தை என்ன சொல்ல? போரால் நசுங்கிய இந்த மக்கள் வாழ்வுக்குப் படும் அல்லல்களைப் பார்த்தபடியே இவ்வாறான முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதன் கொடுமையை – அபத்தத்தை உங்கள் யாருக்கேனும் உணர முடிகிறதா? நமது மக்கள் எவ்வளவு இழிநிலையில் அரைபட்டுக் கிடந்தாலும், ‘நமக்கு மற்றவர்கள் சமதையானவர்கள் இல்லை’ என்ற சிந்தனையிலிருப்பவர்களே இந்த மக்களின் அரசியல் குரலாக மேலோங்கியிருப்பது தமிழ்வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்தான்! நமது ‘சரி’கள் பற்றியே எப்போதும் நம் நினைவி…
-
- 11 replies
- 1.8k views
-
-
"பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை விடுதலை செய்" சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் யாழில் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை உடன் விடுதலை, கடத்தியவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பா…
-
- 2 replies
- 836 views
-
-
சரித்திர முக்கியத்துவம் மிக்க மானிப்பாய் மருதடி வினாயகர் ஆலயம் சீரழிப்பு Monday, December 12, 2011, 20:17 யாழ் மாவட்டத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, யாழ் அரசாங்க அதிபர் விசாரணைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆலயத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தினர் ஆலயத்தைப் பல்வேறு வழிகளில் சீரழித்துள்ளதாக, நிர்வாகத்தினருக்கு எதிராக முறையிடப்பட்டிருக்கின்றது. எனவே, பின்வரும் விடயங்களில் நிர்வாகத்தினரிடமிருந்து விளக்கம் கோரியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும் எனவும் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நிர்வாகத்தினருக்கு …
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்துரையாடல் ஆவணத்தை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “மூன்று விடயங்களில் சில பிரச்சினைகள் உள்ளதாக மட்டுமே சிறிலங்கா அரசதரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,கிழக்கை இணைப்பது அதில் ஒன்று. காவல்துறை அதிகாரங்களை பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக காவல்துறை பற்றி அவர்கள் பரிந்துரைத்தனர். சமூக காவல்துறையை உருவாக்குவது பற்றிய அவர்களின் எண்ணப்பாடு குறித்து நாம் கலந்துரையாட வேண்டியுள்ளது. காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. …
-
- 2 replies
- 930 views
-
-
பெங்களூரை சேர்ந்த தமிழர்கள் இவர்கள் ராஜேஷ் மற்றும் பத்மநாபன் இலங்கையில் நடந்த இனபடுகொலை செய்தியை கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் முதல் கட்டமாக புனித ஜோசப் கல்லூரியில் இலங்கையின் கொலைக் களம் காணொளியை மாணவர்களுக்கு காட்டினார்கள் . இதன் மூலம் பல மாணவர்கள் முதல் முறையாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளை பற்றி தெரிந்து கொண்டனர் . இவர்கள் மேலும் பல கல்லோரிகளுக்கு இத காணொளியை காட்ட இருந்கின்றனர். அவர்கள் சொன்னது “பெங்களூரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் “Sri Lanka’s Killing Fields” என்கிற ஆவணபத்தை திரையிட்டு ஈழத்தின் துயரத்தை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறுவோம் என்று நானும் தோழர் சே பத்மநாபன் இருவரும் முடிவு எடுத்தோம்.. அதில்…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு மேலும் சாட்சியம் வழங்குவதாக அமைந்துள்ளன. இவ்வாறு The Independent [Friday, 9 December 2011] என்னும் பிரித்தானிய நாளேட்டில் Rachael Cloughton எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது ஒளிப்படமானது மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியுள்ளது. அதேவேளையில், முன்னர் யுத்த ஆவணத்திலிருந்து ஒளிப்படமானது கிட்டத்தட்ட நீக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒளிப்படக் கருவிகளின் பாவனை தற்போது அதிகரித்துக் காணப்படுவதால் ஒளிப்படத்தை காட்சிப் பதிவாக்கும் ஒளிப்படப் பதிவாளருக்கும் யுத்த நடவடிக்கைகள…
-
- 0 replies
- 625 views
-
-
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் அரசியல் தீர்வு பற்றிய எந்த சமிக்ஞையையும் காண முடியவில்லை என்று பிரித்தானிய நாளேடான ‘இன்டிபென்டன்ட்‘டில் இன்று வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில், 1995 தொடக்கம் போரின் இறுதிக்கட்டம் வரை- போர் சாராத பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியதாக ‘இன்டிபென்டன்ட்‘ நாளேடு கூறியுள்ளது. தனது பெயரையோ, செவ்வி வழங்கிய இடத்தையோ குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் வகித்த பங்கு காரணமாக அடுத்த ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார். “அரசியல் தீர்…
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது. இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தினை கடந்த பத்தியில் விளக்கியிருந்தேன். அப் பத்தியில் தத்தம் நலன் சார் நடவடிக்கைகளை மையப்படுத்தி இயங்குகின்ற நாடுகள், இலங்கைத்தீவின் ஆட்சியினை தமக்குச் சார்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். தமிழ்த் தேசத்தின் சமகால வாய்…
-
- 0 replies
- 347 views
-