Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு! சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்” வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்…

  2. Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 03:58 PM இலங்கை தனக்கு கடன்வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவதும் அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. எனினும…

  3. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான் Vhg ஜனவரி 18, 2024 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற …

      • Haha
      • Thanks
      • Like
    • 12 replies
    • 1.6k views
  4. ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா? சண்முகம் தவசீலன் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் இன மத நல்லிணக்கம் எனும் பெயரில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர்மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும் , பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது 2018 ம் ஆண்டு முதல் குந்…

    • 1 reply
    • 453 views
  5. வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் பல்கலையில் மாநாடு! adminJanuary 19, 2024 வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணிவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ் பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில் இம் மாநாடு நடாத்தப்படவுள்ளது. உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மற்றும் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பல வெற்றிபெற்ற த…

  6. தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியவரும், விற்றவரும் விடுதலை! adminJanuary 19, 2024 மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 53 நாட்களின் பின்பு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக்கிழமை (18.01.24) வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார். கடந்த வருடம் நவம்பர் 26ம் திகதி பட்டிப்பளை கொக்கட்டிச்சோலையை சேர்ந்தவரும் காத்தான்குடி கா…

  7. Published By: VISHNU 18 JAN, 2024 | 08:47 PM ஊடக நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், ஜனநாயகத்திற்காக செயற்படும் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற தரப்பினர் எதிர்க்கட்சியின் பல பிரதான கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெளிவான முடிவை எட்டியுள்ளனர். இதன் பிரகாரம், அரசாங்கம் முன்வைத்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை தானும் தனது குழுவினரும் முற்றாக நிராகரித்து இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (1…

  8. 18 JAN, 2024 | 08:38 PM இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (18) ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்து உயர்ஸ்தானிகரிடம் இரு நாடுகளுக்கிடையில் கடந்த காலத்திலிருந்து நிலவும் நட்புறவு மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து அவர்கள் தெரிவித்தனர். இங்கு இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கும் முன்னர் இந்திய அரசியல் தலைமைத்துவம் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை செய்யுமாறு தமக்கு அறிவித்ததாக தூதுவர் பிரமுகர்களிடம் தெரிவித்தார். பல நூற்ற…

  9. 1700 ரூபா சம்பளம் சாத்தியமற்றது : முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவிப்பு : பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது Published By: VISHNU 18 JAN, 2024 | 08:45 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் ஆகக்குறைந்தது 1700 ரூபா சம்பள அதிகரிப்புடன் உற்பத்தித்திறன் கொடுப்புனவும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கே. மாரிமுத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கு…

  10. 18 JAN, 2024 | 07:19 PM கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரி…

  11. “யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்! யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்…

  12. Published By: VISHNU 18 JAN, 2024 | 03:48 PM சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (18) முற்பகல் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது குறித்த கலந்துரையாடலில் சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும், வங…

  13. Published By: VISHNU 18 JAN, 2024 | 12:34 PM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலராலும் வியாழக்கிழமை (18) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர். இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்களா முன்னாள்வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் …

  14. மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி. மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் ஜயசிறி விக்கிரமாரச்சி தெரிவித்தார். இதனிடையே கடந்த 15ம் திகதி மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1366367

  15. Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும்…

  16. Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 09:47 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக 224 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு நாட்டு மக்கள் தேர்தல் ஊடாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தினர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சி…

  17. யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு 64 ஆயிரம் பார்வையாளர்களை எதிர்பார்கிறோம் - யாழ் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் Published By: VISHNU 17 JAN, 2024 | 08:51 PM லங்கா எக்கிபிஷன் நிறுவனம், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகவுள்ளது என யாழ் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இது தொடர்பாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் இவ்வாறு தெரிவ…

  18. Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 04:31 PM 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 அரசியல் கைதிகளே உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அ…

  19. உண்மையை கண்டறிவதற்கு புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கு முன்னர் கடந்த கால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு கடிதம் Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 04:39 PM இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்தகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உண்மை ஐக்கியம் நல்லிணக்கம குறித்த ஆணைக்குழு சட்ட மூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. …

  20. மார்ச் மாதம் ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை தீவிரம் - பிரிட்டனுடன் ரணில் பேச்சுவார்த்தை Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 10:48 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 19வத…

  21. துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. துமிந்த சில்வா, மேலும் நால்வருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு அரசியல்வாதி பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமைக்காக 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உறுதி செய்தது. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச எதிர்பாராதவிதமாக துமிந்த சில…

  22. குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்! ”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மாத்தளை மாவட்டத்தில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். குரங்குகளின் அதிகரிப்பால் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில்…

  23. Published By: VISHNU 16 JAN, 2024 | 05:14 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மத கோட்பாடுகளை திரிபுபடுத்தி, பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுக…

  24. Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 04:52 PM இந்திய கோடீஸ்வரர் முகேஸ்அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தின் ஊடாக தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது. சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்காக அதிகாரிகள்…

  25. கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம். கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன, மற்றவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பேரா குளம், மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி பல சட்டவிரோத கட்டுமான வீடுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.