ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க சொல்ஹெய்மிடம் சரணடைந்தது சிறிலங்கா Friday, October 21, 2011, 9:45 சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்பு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஒஸ்லோ சென்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மையும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜெனாஸ…
-
- 0 replies
- 734 views
-
-
முடியாதென்ற ஆவணம் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் : 21 அக்டோபர் 2011 ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணத்தை, சில்வாவின் சட்டத்தரணிகள் நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளனர். வியன்னா இணக்கப்பாடுகளுக்கு அமைய தூதரக அதிகாரிகளுக்கு உள்ள சிறப்புரிமையின் கீழ், சவேந்திர சில்வா அடங்குவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் ரமேஷின் மனைவியான வத்சலாதேவி என்பவர், சவேந்திர சில்வாவுக்கு எதிராக…
-
- 0 replies
- 554 views
-
-
சிறுநீரக நோயாளியாகிய தமிழ் அரசியல் கைதியின் உடல் நிலை மோசம் Friday, October 21, 2011, 9:49 சிறுநீரக நோய்க்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த இராஜேந்திரம் ஜெகதீஸ்வரனின் (32 வயது) உடல் நிலை மோசமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜெகதீஸ்வரனின் குடும்பத்தினர் இந்தத் தகலை வெளியிட்டுள்ளனர். யுத்தத்தின்போது காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரனின் சிறு நீரகங்கள் இரண்டும் பின்னர் பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிறைச்õலை வைத்தி யசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து இவர் கொழும்பு தேசிய வைத்…
-
- 0 replies
- 422 views
-
-
விடுதலைப்புலிகள் இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் - ரொட் வென்ரயிட் 21 அக்டோபர் 2011 இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நிதி சேகரித்தல், கப்பம் பெறுதல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணபறிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் 5 செயற்பாட்;டாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணைகளின் பின்னரே, யூரோபோல் தலைவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. http:…
-
- 0 replies
- 1.4k views
-
-
அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்சீன கடற்பரப்பு மற்றும் அந்தமான் கடற்பரப்பு குறித்த விவகாரங்கள் உலக அரங்கின் கவனயீர்ப்பு மிக்க நிலையை எட்டியிருக்கிறன. பல்வேறு மேற்கு நாடுகளின் இராஜதந்திர வெளிவிவகார நிலைமைகள் குறித்தும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டிருக்கிறது. அத்துடன் அப்பிராந்திய நாடுகளிலும் கடற்பரப்புகளிலும் அண்மைக்காலங்களில் இடம் பெற்று வரும் பதட்டநிலை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு உலக அரங்கில் நிலை எடுத்துள்ளது. மேலும் இனிவரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மிக கொதிநிலையில் இருக்க கூடிய பிரதேசமாக தென்கிழக்காசிய பகுதி அமெரிக்க நோக்குநர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியிலான உலக வர்த்தகத்தில் உற்பத்தி செலவுகளால் தாக்கு பிட…
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். குழந்தைப் பிள்ளைகளைக் கொண்ட குடும் பங் கள், நுளம்பாலும், மழைக் குளிராலும் தம்மைப் பாது காத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து இருக்கும் மக்கள் மழை தொடர…
-
- 1 reply
- 754 views
-
-
கொக்கிளாய் பகுதியில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது காணி பலவந்தமாகப் பறிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தமிழ்நெட் இணையத்தளம் குறிப்பிடுகிறது. அந்தப் பகுதியில் இரண்டாவது விகாரை ஒன்றைக் கட்டுவதற்குக் காணியை வழங்க மறுத்த தமிழர் கடுமையாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவேளை, அங்கு அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டாரெனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காப் படைகளின் முழு ஆதரவுடன் அங்கு செயற்படும் பௌத்த பிக்கு ஒருவரிடம் இந்தத் தமிழரின் காணி விகாரையை அமைப்பதற்கென வழங்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் கொலைக்களம் டிவிடிக்கள் அமெரிக்காவில் விநியோகம் Thursday, October 20, 2011, 11:20 சனல்4 தொலைக்கட்சியினால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளியின் டிவிடிக்கள் அமெரிக்காவில்பல இடங்களிலும் வினியோகிக்கப்பட்டுவருகின்றது. தற்போது அடல்பி பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் சிறிலங்கா தொடர்பான கலந்துரையாடலிலும் இந்த டிவிடிக்களை தமிழரல்லாத மனித உரிமை வாதிகள் விரிவுரையாளர்கள் மூலம் வி நியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பின் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகின்றது. இந்த கலந்துரையாடலில் சிறிலங்காவின் ஐ. நா.விற்கானதூதுவர் பாலித கேகன்ன உரையாற்றவிருக்கின்றார்.சனல்4 தொலைக்கட்சியினால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளி…
-
- 2 replies
- 988 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரிலான யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வட- இந்தியர்களும் தற்போது குரல் கொடுத்து வருவதானது சிறிலங்காத் தமிழர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பழம்பெரும் சமூகத் தலைவரான றாம் விலாஸ் பஸ்வனிடமிருந்து [Ram Vilas Paswan] தற்போது சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பான புதிய நம்பிக்கைக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமை தொட…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் 134 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 14 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ளவர்கள் தவிர்ந்த ஏனையோர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியிலுள்ள வீடுகளில் அத்துமீறிச் செல்லுதல், பொருட்களை திருடிச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது, 1. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணிப் பதிவு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 2. வெலிஓயா சிங்களக் குடியேற்றம் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். 3. மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். 4. வலி.வடக்கு, சம்பூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்…
-
- 4 replies
- 979 views
-
-
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஓர் அரசியல்வாதியல்ல, நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் என குறிப்பிட்டுள்ளார். சில அரசியல்வாதிகள் பற்றி ஜனாதிபதிக்கே கூடுதலான அறிமுகம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாரேனும் விழாக்களுக்கு அழைத்தால் பாதுகாப்புச் செயலாளர் விழாக்களில் கலந்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். துமிந்தவிற்கு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிந்திருக்க வா…
-
- 2 replies
- 937 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இப்பொழுது மேலும் ஒரு புதிய பெயர் அறிகமாகியுள்ளது. ரஞ்சன் மாத்தாய். பதவி நிலையில் புதிதில்லை என்றாலும் ஆள் புதிது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மாத்தாய் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல சந்திப்புகளைச் செய்திருக்கிறார். மாத்தாயைச் சந்தித்ததில் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சிலர் பெருமைப்பட்டிருக்கிறார்கள். சிலர் அதை ஒரு அங்கீகாரமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். மாத்தாயும் இந்தச் சந்திப்புகளைப் பற்றி எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை. கடுமையான அறிவிப்புகளையோ மனத்தாங்கலுக்குரிய சங்கதிகளையோ அவர் வெளிப்படுத்தவுமில்லை. முன்னர் இருந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர்களை விடவும் தான் சற்று வேறானவர் என்று காட்டுவதற்கு அவர…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 5 இலங்கை தமிழர்கள் சம்பந்தமாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்பட உள்ளது. நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளன. சர்வதேச குற்றம், பயங்கரவாத அமைப்பின் குற்றங்களுக்கும், குண்டு தாக்குதல், நபர்களை கொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கு உதவியதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களுக்கு தலா ஒரு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும். நெதர்லாந்தில் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்…
-
- 3 replies
- 991 views
-
-
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் சிறிலங்காவின் நெருங்கிய நண்பர்களாக சிலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் Heath Shuler, D-Waynesville இவர் சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவிற்கு சென்றிருந்தார். இதுதான் முதற் தடவை அல்ல இவருக்கு, கடந்த இரு வருடங்களுக்குள் இரண்டு தடவை சென்றுள்ளார்.இவருடன் வேறும் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் (Congressman Jack Kingston, (R-Ga.) and Congressman Ben Chandler, (D-Ky)சென்றிருந்தனர். இவர்களுக்கான பயண செலவுகள் அடங்கலாக ஒரு ஆடம்பர செலவுப்பொதிகளை சிறிலங்காவே வழங்கியுள்ளது. இந்த முறையும் முழுச்செலவுகளையும் சிறிலங்காவே வழங்கியுள்ளது.. இந்த முறை இன்னும் விசேடம் என்னவென்றால் இவர்களுடன் அமெரிக்காவில் வதியும் சிங்கள நண்பர்களும் ஏன் அமெரிக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
கொமன்வெல்த் மாநாட்டிற்கு முன்பாக சிறீலங்கா குறித்து அவுஸ்திரேலியாவில் மாநாடு: [Thursday, 2011-10-20 10:55:26] ஒக்டோபர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆதாவது அடுத்த வாரம் அவுஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22வது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 20ஆம் நாள் வியாழக்கிழமை இன்று உலகத்தமிழ் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த பாரிய மாநாடு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் சிறீலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் இம்மாநாடு முக்கியம் வாய்ததாக கருதப்படுகின்றது. சிறீலங்கா சனா…
-
- 1 reply
- 761 views
-
-
கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக வழக்கு : 20 அக்டோபர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற…
-
- 1 reply
- 872 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத் தரப்பிற்கும் இடையிலான மற்றுமொருச் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, வட மாகாணத்தில் இடம்பெறும் காணி பதிவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரச தரப்புடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது. http://akkinikkunchu.com/new…
-
- 0 replies
- 932 views
-
-
நாகை மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்கள் பிடித்த மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேதாரண்யத்தை அடுத்து புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 50 விசை படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றதாகவும் நாகை அருகே நடுக்கடலில் அவர்கள் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 5 படகுகளில் வந்த சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளதோடு அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாக தமிழக மீனவர்கள் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மேலும் மீனவர்கள…
-
- 1 reply
- 861 views
-
-
அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆழ அவதானிக்கப்பட்டு வருவதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
[Thursday, 2011-10-20 11:30:06] இலங்கை அரசை சர்வதேச பிடிக்குள் சிக்கவைப்பதற்கும், வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது தமக்கு உள்நாட்டில் பாரிய பிரச்சினை உள்ளது போன்றதொரு மாயையைத் தோற்றுவிப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியாவில் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினர் என தேசப்பற்றுள்ள தேசிய இயங்கம் விமர்சித்தள்ளது. பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்கும் நோக்குடன் அரசியலுக்கு பிரவேசித்துள்ளவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அரசு தனக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அவற்றை வடக்கு, கிழக்கில் துணிகரமாக முன்னெடுக்க வேண்டும். தெற்கில் காணி இல்லாமல் தவிக்கும் எம்மவர்களை அரசு வன்னியில் குடியமர்த்த வேண்டும். அதற்கான உரிமையும் எமக்குண்டு என …
-
- 0 replies
- 512 views
-
-
நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடு…
-
- 0 replies
- 825 views
-
-
கடற்படை வழங்கும் விசேட அடையாள அட்டையுடனேயே குடாக்கடலில் கடற்றொழில் செய்யமுடியும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்க ளுக்கு முன்னர் இந்த நடைமுறை கடற்படையினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் குருநகர், பாஷை யூர், நாவாந்துறை, காக்கைதீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீனவர் தொழில் செய்வதாயின் கடற்படையினால் வழங்கப் படும் விசேட அடையாள அட் டையைப் பெற்றிருக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. குடாக்கடலில் பல இடங் கள் இராணுவத்தின் வசமி ருந்து தற்போது கடற்படை யின் கட்டுப்பாட்டின் கீழ் கைமாறியதை அடுத்தே கடற் படையினர் இந்தப் புதிய நடை முறையை அமுல்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த காலங்களில் கடற் தொழில் செய்வதற்கு இராணுவத் தின் “பாஸ்” அனு…
-
- 2 replies
- 607 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது – CPJ 20 அக்டோபர் 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஜே என்னும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த இணைய தளத்தின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பக்கங்களை உள்நாட்டில் பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லங்கா ஈ நியூஸ் ஊடகம் அரசாங்கத்திற்கு எதிரான வகையிலான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிராக லங்கா ஈ நியூஸ் குற்றம் சுமத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மக்களுக்கு உரிய உழவு இயந்திரங்கள் வெலிஓயாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது:- 20 அக்டோபர் 2011 போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் பத்து உழவு இயந்திரங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதற்கான உத்தரவை முல்லை மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இச்த உழவு இயந்திரங்கள் வெலிஓயா பிரதேச செயலக பிரிவு சம்பத்த நுவரவுக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவ…
-
- 0 replies
- 508 views
-