Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது. இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. 34 அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, தி…

  2. 23 MAR, 2024 | 02:04 PM பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பி…

  3. 23 MAR, 2024 | 02:17 PM (எம்.நியூட்டன்) பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார். தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண…

  4. 23 MAR, 2024 | 10:44 AM சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோர…

  5. 23 MAR, 2024 | 10:42 AM பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. …

  6. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 08:58 AM நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். https:…

  7. 22 MAR, 2024 | 08:49 PM இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத…

  8. இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை! இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற உறுமய சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக 408 காணி உறுதிகள் கையளிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்…

    • 3 replies
    • 703 views
  9. 22 MAR, 2024 | 06:05 PM இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது. சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது. இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள…

  10. குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க…

  11. 22 MAR, 2024 | 07:05 AM மட்டக்களப்பில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளரான சிறிபாலு வியாழக்கிழமை (21) செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். செங்கலடி, கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு வயது (54) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் பலியாகியுள்ளார் . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்ப…

      • Sad
    • 1 reply
    • 752 views
  12. 22 MAR, 2024 | 07:16 AM கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk

  13. 22 MAR, 2024 | 12:36 PM வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, பாலியல் …

  14. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் …

  15. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு, பெரிய வெங்காயம் 100 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபா. சிவப்பு கௌபி 52 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபா. வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபா. பாஸ்மதி அரிசி 20 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 650 ரூபா. பெரிய வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய வி…

  16. நாட்டில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறி. அதிக வியர்வை மற்றும் ஈரளிப்பான இடங்களில் இந்த நோய் வேகமாக பரவும். தொழில் செய்யும் இடங்களிலும் வீட்டில் உள்ளவர்களிடையேயும் ஒரே உடையை மாற்றி அணிபவர்களிடையேயும் இத்தொற்று வேகமாக பரவக்கூடும். இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் எவைும் நோய் நிலைமை குறைவடையாத பட்சத்தில், வைத்தியசாலைக்கு சென்று, இதுவரை எடுத்…

  17. வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். “ஜப்பானிடம் இருந்து இலங்கை கற்க வேண்டிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கல் பாடங்கள்” என்ற தலைப்பில் “Geopolitical Cartographer” சர்வதேச ஆராய்ச்சி அமைப்பினால் ஜனாதிபதி தலைமையில் நேற்று (21) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜப்பானிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டார். “ஜப்பானின் நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாகத்திற்கு கற்க வேண்டிய பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு…

  18. மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்பு March 22, 2024 தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில், இன்று நிகழ்ந்த இந்த சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ. ஜதீந்திரா, எஸ்.எஸ். குகநாதன், எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது, எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரத…

  19. ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி March 22, 2024 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு”வின் தலைவராக தெரிவிக்கப்படும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை அறிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே செயற்பட்டு வருகின்றார். அருண் சித்தார்த்தின் நியமனம் குறித்து விஜயகலா மகேஸ்வரனு…

  20. சிரமதான விவகாரம்: அதிபருக்கு எதிராக விசாரணை எம்.றொசாந்த் யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. போட்டி நாட்களில் மாணவர்கள் உற்சாகமாக வீதிகளில் பாண்ட் வாத்தியம் இசைத்து ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் போது அயலில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்து , அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிபர் , பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து, ப…

  21. Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 11:23 AM இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிசார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிச…

  22. யாழை சென்றடைந்தார் ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 10:59 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார். …

  23. இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.

  24. 21 MAR, 2024 | 05:30 PM (நா.தனுஜா) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக உத்தரவாதமளித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அம்முயற்சிகளில் பலனேதுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழ் சமூகம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றார்களே தவிர, அவர்களுக்கு வெறும் வார்த்தைகள் தேவையில்லை. செயற்திறன்மிக்க சர்வதேச விசாரணைப்பொறிமுறை மற்றும் தண்டனை அளித்தல் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள நீதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தமுடியும். அதன்மூலமே கறைபடிந்த இந்தக் கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எலி…

  25. 21 MAR, 2024 | 08:15 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சபாநாயகர் மஹிந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.